sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists Tools Help

Blog


    September 17

    திருநெடுந்தாண்டகம்

    ஆழ்வார்களிலே கடைசியாக அவதரித்தவர் திருமங்கையாழ்வார்.  ’கலியன்’ என்பது அவருடைய இயற்பெயர்.  ’நீலன்’, அப்படிங்கறது தாயார், தகப்பனார் வைத்த பெயர்.  ஆனால் பகவானாலே கலியன் என்று, மிடுக்குப் படைத்தவர், சக்தி படைத்தவர் என்று பெயர் சூட்டப்பட்டார்.  இவர் பாடிய திவ்யப்ரபந்தங்கள் ஆறுகார்த்திகை மாசம், கார்த்திகை நட்சத்திரத்திலே திருமங்கையாழ்வார் சீர்காழிக்கு அருகிலே திருக்குறையலூர்ங்கிற திவ்யதேசத்தில் அவதரித்தார்.  இவர் நம்மாழ்வாருடைய நான்கு பிரபந்தங்களுக்கு அங்கங்களாக ஆறு பிரபந்தங்களைப் பாடினார்.  வேதங்கள் நாலு, ரிக், யஜுஸ், சாம, அதர்வங்கள்.  இந்த நான்கு வேதங்களுக்குச் சமமாக நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்களைப் பாடினார், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.  வேதங்களுக்கு அங்கங்கள் ஆறு.  शिक्षा (சிக்‌ஷா), व्याकरणं (வ்யாகரணம்), चन्थ: (சந்தஹா), निरुक्थं (நிருக்தம்), जोथिषं (ஜோதிஷம்), कल्पं (கல்பம்). என்று அந்த ஆறு அங்கங்களுக்குப் பேர்.  இந்த ஒன்றொன்றும் நமக்கு ஓரொரு படிப்பு சொல்லிக் கொடுக்கும்.  இந்த ஆறு அங்கங்களுக்குச் சமமாகத்தான் ஆறு பிரபந்தங்களை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.  அப்போ அங்கிகளான வேதங்களாக நம்மாழ்வாரும், வேத அங்கங்களான ஆறை திருமங்கையாழ்வாரும், இப்படி அங்கம், அங்கிங்கற பாவத்திலே பாடியுள்ளார்கள்.  திருமங்கையாழ்வார் பாடிய பிரபந்தங்களிலே முதல்ல பாடப்பட்டது ‘பெரிய திருமொழி’அடுத்துப் பாடப்பட்டது, திருக்குறுந்தாண்டகம்.  மேலே, திருஎழுகூற்றிருக்கை பாடினார்.  அடுத்து சிறிய திருமடல், பெரிய திருமடல்கடைசியாக திருநெடுந்தாண்டகம் பாடினார்.  இந்த வரிசையில்தான் திருமங்கையாழ்வார் பாடியிருக்கார்.  அப்போ ஆழ்வார்களிலே கடைசி, திருமங்கையாழ்வார்.  அவர் பாடின பிரபந்தங்களிலே கடைசி, திருநெடுந்தாண்டகம்.  அப்போ நாலாயிரம் திவ்யப் பிரப்ந்தங்களிலே காலக்கிரமத்தில் கடைசி பிரபந்தம் என்று பார்த்தால் திருநெடுந்தாண்டகம்தான்.  எது முதல்வதாக இருக்கும்? பொய்கையாழ்வாருடைய ’முதல் திருவந்தாதி’தான் முதல்.

    திருமங்கையார் பாடின திருநெடுந்தாண்டகம் 30 பாசுரங்கள் கொண்டது.  இதில் மிகவும் ஈடுபட்டிருந்தவர் ‘ஸ்ரீபராசர பட்டர்’.  கூரத்தாழ்வானுடைய திருக்குமாரராய், பகவானே திரும்பப் பிறந்தான் என்று சொல்லுமளவுக்கு வைபவம் உடையவராய், பகவத் இராமானுஜர் நானேதான் பட்டராகப் பிறந்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டவராய், பராசர பட்டருக்குப் பெருமை.

    श्रीपरासर पत्तार्य: श्रीरङेस प्रोकित: ।
    श्रीवत्शाङ्ग सुतश्रीमान् श्रेयशे मेस्तु बुयसे ।

    [ ஸ்ரீபராசர பட்டார்யஹா ஸ்ரீரங்கேச புரோகிதஹா
    ஸ்ரீவத்ஸாங்க ஸுதஸ்ரீமான் ஸ்ரேயஸே மேஸ்து பூயஸே ]

    - என்று அவரைப் பத்தின தனியன்.  ஸ்ரீபராசர பட்டார்யஹா ஸ்ரீரங்கேச புரோகிதஹா – திருவரங்கத்தானுடைய ஆஸ்தானத்துக்கு பௌரோகித்ய கைங்கர்யம், புரோகிதராக பட்டர்தான் இருந்திருந்தார்.  ஸ்ரீவத்ஸாங்க ஸுதஹா – ஸ்ரீவத்ஸாங்கர், கூரத்தாழ்வான்.  ஸ்ரீவத்ஸன்னு அவர் திருநாமம்.  அவருடைய ஸுதஹ, அவருடைய திருக்குமாரர்.  ஸ்ரீமான் – நல்ல ஸ்ரீ சம்பத்து படைத்தவர்.  ஸ்ரேயஸே மேஸ்து பூயஸே – அவர் நம்மை அனுக்கிரகிக்கட்டும்ன்னு இந்தத் தனியன் சொல்லுகிறது.

    இந்த 30 பாசுரங்களை எல்லா பாவத்திலேயும் ஆழ்வார் பாடியிருக்கார்.  அதாவது, ஞானத்தோடே ஆண் பாவனையிலேயும், பிரேமத்திலே தாய் மற்றும் மகள் பாசுரமாயும் பாடுகிறார்.  இந்த 30 பாசுரங்களை மூன்று பத்துப் பத்து பாசுரங்களாக பிரித்துக் கொண்டுவிட வேண்டும்.  முதல் பத்துப் பாசுரங்களும் ஆண் பாவனையில் பாசுரம்.  அடுத்த இருபது பாசுரங்களூம் பெண் பாவனையோடே நாயகி பாவத்தில் பாடினது.  அந்த இருபது பாசுரங்களை மேலும் பிரித்துக் கொண்டோம்னால், 11வது பாசுரத்திலிருந்து 20வது பாசுரம் வரை, தாய் பாவனையில் பாடினது.  21லிருந்து 30வது பாசுரம் வரை மகள் பாவனையில் பாடினது.  முதல் பத்துப் பாசுரங்கள் ஆண் பாவனை, நிறைய வேதாந்த அர்த்தங்கள் இருக்கும்.  ஞானத்தில் தன் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு.  அடுத்த இருபது பாசுரங்கள் நேர்மார்.  முதல் பத்துப் பாசுரத்திலெ எவ்வளவு கஷ்டப்படுத்தினாரோ அது ஒன்னுமே அடுத்த இருவது பாசுரத்திலே இருக்காது.  ஆனா முதல் பத்துப் பாசுரம் புரிஞ்சாலும் புரிஞ்சுடும்.  அடுத்த இருவது பாசுரம் சுலபத்திலே புரியவே புரியாது.  ஏன்னா அந்த நிலை நமக்குப் புரிஞ்சான்னா, அந்த பாட்டு என்னன்னு புரியறதுக்கு.  ஆக மூன்று பிரிவுகளையும் சேர்த்துப் பார்த்தால், தானான தன்மை, தாயான தன்மை, மகளான தன்மை.

    இதிலே என்ன அர்த்தம் சொல்றார்ன்னா,

    मच्चित्ता मद्गतप्राणा बोधयन्त: परस्परम् ।
    कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ॥

    [ மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம் |

    கதயந்தஸ்ச மாம் நித்யம் துஸ்யந்தி ச ரமந்தி ச ]

    (பகவத்கீதை – 10.9)

    இந்த ஸ்லோகத்திலே கண்ணன் மூன்று சப்தங்களைச் சொல்றார்.  மச்சித்தாஹ, மத்கதப்ராநாஹா, போதயந்தப் பரஸ்பரம்.  இந்த மூன்று சொற்களுடைய பொருளைத்தான் முதல் பத்துப் பாசுரங்கள், இரண்டாம் பத்துப் பாசுரங்கள், மூன்றாம் பத்துப் பாசுரங்கள்.  இந்த மூன்று சப்தத்துக்கு உண்டான அர்த்தத்துக்குத்தான் இவ்வளவு தூரம் விரிச்சுட்டார் திருநெடுந்தாண்டகத்திலே.  ஸ்வாமி, மூன்று சொல்லுக்கு முப்பது பாட்டான்னா, முந்நூறு பாடினாலும் தகும்.  மச்சித்தாஹா – என்னிடத்திலேயே நெஞ்சு லயித்தவர்களாய், மத்கதப்ராநாஹா – என்னை விட்டால் பிராணன் தரிக்காதவர்களாய், போதயந்தப் பரஸ்பரம் – என்னைப்பற்றி மற்ற பக்தர்களிடத்திலே பேசிப்பேசி திருப்திப்படுபவர்களாய், என் பக்தர்கள் இருக்கிறார்கள்.  பக்தர்களுக்கு கண்ணன் அடையாளம் சொல்லிண்டிருக்கார் இப்போ.  ஒரு பக்தன் எப்படி இருப்பன்னா, நெஞ்சு என்கிட்டதான் இருக்கும்.  முதல் அடையாளம்.  மற்றதைப் பத்தி அவன் நினைக்க மாட்டான்.  ரெண்டாவது, என்னோட கூடி இருந்தா உயிர் இருக்கும்.  இல்லேன்னா உயிர் போய்டும்.  மூனாவது, என் கதையையே ஒருத்தருக்கொருத்தர் பேசிப் பேசி ஆனந்தப்படுகிறான்.  கதயந்தஸ்ச – என் கதையையே, ஒருத்தருக்கொருத்தர் பேசிப் பேசி, துஸ்யந்திச – ஆனந்தப்படுகிறார்கள், திருப்திப்படுகிறார்கள்.  இப்படி இருக்கறவந்தான் அர்ஜுனா என் பக்தன், என்று கண்ணன் அடையாளம் காட்டறார்.  அந்த மூன்று சப்தங்களையும் மூன்று பத்துப் பாசுரங்களாலே பாடிட்டார்.

    இல்லே இன்னொரு விதமாகப் பிரிக்கலாமா?  ஓம் நமோ நாராயணாய என்கிற திருமந்திரத்தில் மூன்று பதங்கள் இருக்கோல்லையோ?  அதிலே ஓம் என்கிற பிரணவத்தின் அர்த்தத்தை முதல் பத்துப் பாசுரங்களாலேயும், நமஹ என்னும் இரண்டாவது பதத்தின் அர்த்தத்தை இரண்டாவது பத்துப் பாசுரங்களாலேயும், நாராயணாய என்னும் மூன்றாவது பதத்தின் அர்த்தத்தை மூன்றாவது பத்துப் பாசுரங்களாலும், இப்படி ஓம், நமஹா, நாராயணாய இந்த மூன்று சப்தங்களின் அர்த்தத்தைச் சொல்றதுக்காகவே பாடினார் என்றும் கொள்ளலாம்.

    அல்லது ஓம்காரத்தையே எடுத்துண்டோம்னால், ’அ’ ’உ’ ’ம’ என்று மூன்று எழுத்துக்கள்.  அதிலே ’அ’காரமான பகவானைச் சொல்லுவதற்காக முதல் பத்துப் பாசுரங்கள்.  ‘உ’காரத்தினுடைய அர்த்தத்தைச் சொல்றதுக்காக இரண்டாவது பத்துப் பாசுரங்கள்.  ‘ம’கார அர்த்தம் சொல்றதுக்காக மூன்றாவது பத்துப் பாசுரங்கள் என்றும் கொள்ளலாம்.

    அப்படியும் இல்லேன்னா, திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம்ன்னு மூன்று இருக்கோல்லையோ?  அதிலே திருமந்திரத்தின் அர்த்தத்தைச் சொல்றதுக்காக ஒரு பத்துப் பாசுரம்.  அடுத்தது சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தைச் சொல்றதுக்காக பத்துப் பாசுரம்.  த்வயத்தின் அர்த்தத்தைச் சொல்றதுக்காக பத்துப் பாசுரம், என்றும் அர்த்தம் கொள்ளலாம்.  இப்படி பலவிதங்களிலும் இந்தப் பாசுரங்களுக்கு பூர்வர்கள் வ்யாக்யானம் பண்ணியிருக்கா.  என்ன சொல்லியிருக்கான்னு பார்ப்போம்.

    முதல் பாசுரத்தாலே மூன்று தத்வங்களைப் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கிறார்.  சிது, அசிது, ஈஸ்வரர்கள்.  எந்த சாஸ்திரமா இருந்தாலும், அது சமஸ்கிருதமோ, தமிழோ முதல்ல இதைத்தான் தெளிவு படுத்துவா.  தத்வங்கள் எத்தனை?  தத்வம் ஏக தத்வம் அல்ல, தத்வத்ரேயம்.  மூன்று தத்வங்களுக்கும் ஆழ்வார் பெயர் குடுக்கிறார்,  ‘மின் உரு’, ‘பின் உரு’, ‘பொன் உரு’.  மின் உருன்னு சொன்னால் மின்னலைப் போல அஸ்திரமாக இருக்கக்கூடிய அசிதுன்னு அர்த்தம்.  மின்னலைப் போலே, ஸ்திரமா இல்லாமல், மாறிக்கொண்டே இருக்கக்கூடியது அசிது.  பின் உரு – அந்த அசித் தத்வத்துக்குள்ளேயேதானே ஜீவாத்மா மறைஞ்சு இருக்கார்.  இப்படி அசிதுக்குள்ளே ஜீவாத்மா இருப்பதாலே, மின் உருவான அசித்துக்குள் பின்னாடி இருக்கக்கூடிய உரு, ஜீவாத்மா, ‘பின் உரு’.  ஆக முன் உருன்னு சொன்னதுதான் ‘மின் உரு’.  முன்னாடி இருக்கக்கூடிய உருவம்தான் அசிது.  அது மின்னலைப் போலே அஸ்திரமாக இருக்கும்.  அந்த மின் உருவுக்குப் பின்னாடி இருக்கக்கூடியதுதான் பின் உரு.  அது நித்யமாக இருக்கும்.  ஆனால் இந்த ரெண்டு பேருக்கும் உள்ளே இருந்து ஆட்சி செலுத்தக்கூடியது ‘பொன் உரு’.  பொன் உருங்கிறது பரமாத்மாவைச் சொல்லும்.

    மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்காய் *
             விளக்கொளியில் முளைத்தெழுந்த திங்கள் தானாய் *
    பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பில்லாப் *
             பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது * எண்ணும்
    பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய்ப் *
             புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி *
    தன் உருவாய் என் உருவில் நின்ற எந்தை *
             தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே

    (திருநெடுந்தாண்டகம் – 1)

    பாசுரத்தில் சாதிக்கிறார், பகவன்னு நீ எப்படி தெரியுமா இருக்கிறாய்?  எனக்கு முதமுதல்ல உயர்ந்த அர்த்தத்தைக் காட்டிக் குடுத்தாய்.  தத்வத்ரேய விவேக ஞானத்தை எனக்கு ஏற்படுத்திக் குடுத்தாய்.  நான் நினைச்சிருந்தது ஆத்மாவும், தேகமும் ஒன்று என்று.  ஆனால் நீதான் பிரித்துக் காட்டினாய் எனக்கு.  எம்பெருமானேதான் நெஞ்சகத்தில் நிற்கிறான்.  நின்றவன் என்ன காட்டிக் குடுத்தானென்றால், இதுதான் மின் உரு, அஸ்திரம், நிற்காது.  பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பிலாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது – மின் உருவில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் எதுவும் பின் உருவுக்குக் கிடையாது.  இறக்காது.  அசிது இறக்கும், ஆனால் ஜீவாத்ம தத்வம் இறக்கவே இறக்காதோல்லையோ?  அப்போ அசித் தத்வத்துக்கு மாறுபாடு உண்டு.  ஆத்ம தத்வத்துக்கு மாறுபாடு கிடையாது.  பிணி, மூப்பு எல்லாம் ஆத்மாவுக்குக் கிடையாது.  இறப்பில்லை, பிறப்பில்லை, பிணி இல்லை, மூப்பு இல்லை, இது எதுவும் மிக உயர்ந்த உருவமான ஆத்ம தத்வத்துக்குக் கிடையாது.  ஆனால் அதுக்கும் மேலே பகவானுக்கு என்ன ஏற்றம்ன்னு பார்த்தால், எண்ணும் பொன் உருவாய் – இதுவாவது (ஜீவாத்மா) சரீரத்தை எடுத்துண்டு பிறந்திருக்கபடியால் கஷ்ட நஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கு.  அதுவும் பரமாத்மாவுக்குக் கிடையாது. சாஸ்திரம் சொன்னபடிக்கு,

    आप्र्नकाथु शर्वएव श्वर्न: ।
    हिरण्यश्मश्रु्: हिरण्यश्केष: ॥

    [ ஆப்ரநகாத் ஸர்வஏவ ஸ்வர்நஹா |
    ஹிரண்யஸ்மஸ்ருஹு ஹிரண்யஸ்கேஸஹா ]

    ஆப்ரநகாத் ஸர்வஏவ ஸ்வர்நஹா – திருவடியிலேர்ந்து திருமுடி ஈறாக, எங்க பார்த்தாலும் ஸ்வர்ண மயமா இருப்பாராம் பகவான்.  ஹிரண்யஸ்மஸ்ருஹு – நீண்ட பொன் மயமான மீசை வச்சிண்டு இருப்பாராம்.  ஹிரண்யகேஸஹா – கேஸபாஸம் பொன்மயமாக ஓடிக்கொண்டு இருக்குமாம்.  இதைத்தான் ஆழ்வார் இப்போ பொன் உருவாய்ன்னார்.  நமக்கு சந்தேகம் வரும், பகவான் கருமை நிறத்தவன்னா கேள்விப்பட்டிருக்கோம்.  ஆழ்வார் பொன் உருங்கிறாரே?  அதுவும் தங்க வர்ணத்துல தலை மயிர் இருந்தா எப்படி இருக்கும்?  தங்க வர்ணத்துல மீசை இருந்தா எப்படி இருக்கும்?  அவர் கருப்பாத்தான் இருப்பர், எல்லாம் கருப்பாத்தான் இருக்கும்.  ஆனால் பொன் உருன்னு சொன்னது வர்ணத்துக்காக அல்ல. முதல் அர்த்தம்.  வர்ணத்துக்காக அல்லன்னா, சொல்லியிருக்காரேன்னா,  தங்கம்ன்னா श्प्र्कणीयथ्वम् (ஸ்ப்ருகணீயத்வம்).  அப்படின்னா தங்கம்ன்னு சொல்றச்சேவே ஒரு மதிப்பு நம்ம மனசிலே வர்றது பாருங்கோ. அதுக்குத்தான் தங்கம்ன்னு சொல்றாரே தவிர, தங்க வர்ணத்தவர்ங்கிறதுக்காக சொல்லப்படலே.  இல்லேன்ன இன்னொரு அர்த்தம் வச்சுக்கலாம்.  பகவான் ஓரோரு யுகத்தில் ஓரோரு வர்ணத்தில் இருக்கிறார்.  ’நிறம் வெளிது, செய்து, பசிது, கரிது; பாலின் நீர்மை, செம்பொன் நீர்மை, பாசியின் பசும்புறம் போலும் நீர்மை, பொற்புடைத்தடைத்து வண்டு விண்டுலா நீல நீர்மை’ என்று பகவானுக்கு நான்கு வர்ணங்கள் உண்டு.  வெள்ளை, சிகப்பு, கருநீலம் மாந்தளிர் பச்சை, கருப்பு, இப்படி நாலு யுகத்துக்கு நாலு வர்ணத்திலே இருக்காராம்.  அப்படி ஒரு வர்ணத்தையும் பொன் உருவாய்ன்னு சொல்லியிருக்கலாம்.  ஆக, என்னும் பொன் உருவாய். பகவான் எப்படி இருக்கிறார்?  எல்லா இடத்திலேயும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.  பூதம் ஐந்தாய் – பஞ்ச பூதங்களாகவும் அவர்தான் இருக்கிறார். அவ்வெம்பெருமானே எனக்குள்ளேயும் சேவை சாதிக்கிறான்.  இவர் எனக்குக் காட்டிக்குடுத்த அர்த்தம், தத்வத்ரேய விவேக ஞானத்தை எனக்கு ஏற்படுத்திக் குடுத்தார்.  அசிது வேறே, சிது வேறே, பரமாத்மா வேறே, என்ற ஞானத்தை எனக்கு ஏற்படுத்தினார்ன்னு சொல்லிட்டார்.  சொன்னவர் பிற்பாடு ஒவ்வொரு பாசுரங்களால் பெருமானைப் பத்தி விளக்கறதுக்கு ஆரம்பிச்சார்.  ஆண் பாவனையில ஞானத்தோடே பேசிண்டிருக்காரோல்லையோ?  அதனாலே வேதாந்த அர்த்தம் எல்லாம் பாடுவர்.

    அந்தணர் மாட்டைந்தி வைத்த…

    அந்தணர் மாடு – பிராம்ணர்களுக்கு மாடு.  மாடுன்னா தனம்ன்னு அர்த்தம்.  பிராம்ணர்களுக்கு தனம், ब्राम्ण्णानां दनम् वेत: (ப்ராம்ணானாம் தனம் வேதஹா).  வேதந்தான் பிராமணர்களுக்குத் தனமே.  அந்தணர் மாட்டந்தி, அந்தின்னா முடிவுன்னு அர்த்தம்.  அந்தணர் மாடுன்னா வேதம், வேதத்தோட அந்தின்னா, வேதாந்தம், உபநிஷத்துன்னு அர்த்தம்.  அந்தணர் மாட்டந்தி வைத்த மந்திரத்தை – உபநிஷத்துகளுக்குள்ளே மறைத்துப் பொக்கிஷத்தைப் போலே, பொற்கிழியைப் போலே வைக்கப்பட்டிருக்கிற மந்திரத்தை, மந்திரத்தால் – மந்திரத்தாலே.  மறவாதென்னும் வாழ்தியேல் – மந்திரத்தை மந்திரத்தால மறக்காமல் ஞாபகம் வைச்சுக்கோ, வாழலாம், அப்பதான் உனக்கு உஜ்ஜீவனம்ன்னார்.  மந்திரத்தை மந்திரத்தால மறக்காம இருக்கறதா?  எந்த மந்திரத்தைக் கொண்டு போய் உபநிஷத்துக்குள்ள ஒளிச்சு வச்சிருக்குன்னா, இந்த இடத்துல முதல் மந்திரத்தைங்கிறதுக்கு ‘பகவானை’ன்னு அர்த்தம்அடுத்த ‘மந்திரத்தால்’ங்கிறதுக்கு திருமந்திரத்தால்ன்னு அர்த்தம்.  திருமந்திரத்துக்கு மந்திரம்ன்னுதான் பேர்.  பகவானுக்கே மந்திரம்ன்னுதான் பேர்.  मन्थारं त्रयतेति मन्त्र: (மந்தாரம் த்ராயதேதி மந்த்ரஹா).  தன்னை நினைப்பவனை எது ரட்சிக்கிறதோ அது மந்திரம்.  பகவானை நினைக்கிறவரை ரட்சிக்கப் போறார்.  திருமந்திரத்தைச் சொன்னவனை அது ரட்சிக்கப் போறது.  அதனால மந்திரம்ன்னா பகவானேதான்.  மந்திரம்ன்னா திருமந்திரமேதான்.  அப்போ, வேதாந்தத்தில் பொக்கிஷத்தைப் போல மறைத்துச் சொல்லப்பட்ட பகவானை, திருமந்திரத்தால், பகவத் சொரூபத்தைத் தெரிந்து கொண்டு வாழ்ந்தாயானால் வாழலாம்.  அப்பதான் உனக்கு உஜ்ஜீவனம். அப்படின்னு ஆழ்வார் நெஞ்சைப் பார்த்துச் சொன்னார்.

    11லிருந்து 20வரை தாய்ப்பாசுரங்கள். 21லிருந்து 30வரை நாயகி பாவனை பாசுரங்கள்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – திருநெடுந்தாண்டகம் உபந்நியாசம் – Houston)

    Comments

    Please wait...
    Sorry, the comment you entered is too long. Please shorten it.
    You didn't enter anything. Please try again.
    Sorry, we can't add your comment right now. Please try again later.
    To add a comment, you need permission from your parent. Ask for permission
    Your parent has turned off comments.
    Sorry, we can't delete your comment right now. Please try again later.
    You've exceeded the maximum number of comments that can be left in one day. Please try again in 24 hours.
    Your account has had the ability to leave comments disabled because our systems indicate that you may be spamming other users. If you believe that your account has been disabled in error please contact Windows Live support.
    Complete the security check below to finish leaving your comment.
    The characters you type in the security check must match the characters in the picture or audio.

    To add a comment, sign in with your Windows Live ID (if you use Hotmail, Messenger, or Xbox LIVE, you have a Windows Live ID). Sign in


    Don't have a Windows Live ID? Sign up

    Trackbacks

    The trackback URL for this entry is:
    http://kaatru.spaces.live.com/blog/cns!8A3636B33FA87F5E!800.trak
    Weblogs that reference this entry
    • None