| sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists | Help |
|
March 27 திருமழிசை ஆழ்வார்திருமழிசை ஆழ்வார் ரொம்ப நாள் உலகத்திலிருந்த ஆழ்வார். ’நம்புவியில் நாலாயிரத்து எழுநூறு இருந்தான் வாழியே’. பூலோகத்தில நாலாயிரத்து எழுநூறு வருஷங்கள் இருந்திருக்கார். திருமழிசை ஆழ்வார் பிறக்கும் போது பிராமணராகப் பிறந்தார். ஆனால் பிரம்பறுத்து ஜீவிப்பவன் ஒருத்தன்தான் அவரை வளர்த்தான். திருவாளன் என்று அவனுக்குப் பெயர். திருமழிசை ஆழ்வாருக்கு ‘பக்திசாரன்’ அப்படின்னு பரமசிவனாரே பெயர் சூட்டினார். திருமாலுடைய பக்தியில சிறந்திருந்த படியால், ‘பக்திசாரன்’னு பெயர். திருமழிசைங்கிற திவ்ய தேசத்திலே, தை மாசத்தில், மக நட்சத்திரத்தில், சக்ராம்சமாக அவதரித்திருந்த படியால், திருமழிசை ஆழ்வார் அப்படிங்கற பேர் ஏற்பட்டது. சென்னைப் பட்டணத்துக்கு பக்கத்திலே ஸ்ரீபெரும்புதூர் போகிற வழியில் திருமழிசைன்னு இருக்கு. அந்த திருமழிசையிலதான் இந்த ஆழ்வார் அவதரித்திருந்தார். இவர் பாடினது இரண்டு திவ்யப் பிரபந்தங்கள். ‘நான்முகன் திருவந்தாதி’, ‘திருச்சந்த விருத்தம்’. ‘எழில் சந்த விருத்தம் நூத்தி இருபதும்தான் வாழியே’. திருச்சந்த விருத்தம் 120 பாசுரங்கள். நான்முகன் திருவந்தாதி 96 பாசுரங்கள். இத்தோடேகூட திருமழிசைப் பிரானுடைய அற்புதமான பிரபந்தம். அந்த ஆழ்வார் திருக்குடந்தை ஆராவமுதப் பெருமானுடன் ரொம்பவே காதல் படைத்தவர். திருக்குடந்தைன்னு சொல்லிட்டா திருமழிசையாழ்வார்தான். திருமழிசை ஆழ்வார்ன்னுட்டா திருக்குடந்தைதான். கும்பகோணத்தைத்தான் திருக்குடந்தைன்னு சொல்லுவர்கள். இதிலே இவ்வாழ்வார்க்கு ஏற்பட்ட ஒரு சிறப்புப் பெயர், அதை மட்டும் சொல்றேன். ‘திருமழிசைப்பிரான்’ அப்படின்னு சொல்லுவா. எல்லாருக்கும் ‘ஆழ்வார், ஆழ்வார்’ன்னு பெயரோல்லையோ? ஆனா திருமழிசையாழ்வாருக்கு மட்டும் திருமழிசைப்பிரான்னு பேர். இதே இன்னொரு பக்கம் பாருங்கோ. ‘ஆராவமுதப்பிரான்’, திருக்குடந்தையில பெருமான் ஆராவமுதர். ஆறாத அமுதர், எத்தனை தரம் (நாம்) அனுபவிச்சாலும் போறுங்கற என்னமே வராதாம். இன்னும் இன்னும் அனுபவிச்சுண்டே இருக்க வேண்டியதுதான்.
- (திருவாய்மொழி – 5-8-1) எம்மானே எம்பிள்ளை மூர்த்தி என்னை ஆழ்வானே, என்று நம்மாழ்வார் பத்து பாசுரங்களாலே கதறினார்.
- (திருவாய்மொழி – 5-8-3) - உன் திருவடிகளை என்றைக்குப் பற்றுவேனோ தெரியவில்லை. பற்றின பிற்பாடு எனக்கு மறுபடியும் சம்சாரத்தைக் குடுக்காதே, என்று ஆராவமுதனிடத்தே அழுது அரற்றுகிறார். எல்லா ஊர்லயும் பகவானுக்கு ‘பிரான்’னு பெயர். ‘பிரான்’னா, உபகாரகன், நமக்கு நன்மை புரிந்தவன்னு அர்த்தம். ’பொலிந்த நின்ன பிரான்’ – திருக்குறுகூர், ஆழ்வார் திருநகரி சேவிக்கப் போனேள்னா, ‘ஆதிப்பிரான்’, ‘பொலிந்த நின்ன பிரான்’ அப்படின்னு சொல்லுவர்கள். அதனாலே இவர் ‘ஆராவமுதப்பிரானா’ இருந்துருக்கனுமோல்லையோ? ஆனா இவருக்கு மட்டும் ‘ஆராவமுத ஆழ்வார்’ன்னு பேர். ‘திருமழிசை ஆழ்வாரா’ இருக்கனுமோல்லையோ? அவருக்கு மட்டும் ‘திருமழிசைப் பிரான்’னு பேர். அது என்னமா ஸ்வாமி இது? அவருக்கு இருக்க வேண்டிய பேர், பாதி இவர்கிட்டே இருக்கு, இவருக்கு இருக்க வேண்டிய பேர் அவர்கிட்டே இருக்கு? இந்தப் பேர் எங்க மாறித்துன்னு சந்தேகம் வரும். மாறித்து. அவா ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கம். அதனாலதான் பாதிப்பேரை ஒருத்தருக்கொருத்தர் மாத்தினுட்டா. ரெண்டு பேர் ரொம்ப நண்பர்களா இருக்கான்னு வச்சுக்கங்கோ, அவாவா எங்கேயோ வேலை பார்த்துண்டிருந்தா, இப்ப ஒரு இடத்துலே, ஒரே ஊர்ல தங்கிண்டு படிக்கிறா, இல்லை வேலை பார்க்கிறா. அப்படின்னா ரொம்ப நெருக்கம் தொடரதுன்னா, ஒரு தட்டுல சாப்பிடணும், அவருடைய உடுப்பு, துணிமணி இவர் போட்டுக்கனும், இவருத அவர் போட்டுக்கணும்ன்னு அர்த்தம். இது ஆரம்பிச்சாச்சுன்னா, ரொம்ப நெருக்கம் வந்துடுத்து, அப்படின்னு வச்சுக்கணும். அதப்போல திருமழிசை ஆழ்வாருக்கும், ஆராவமுதப்பிரானுக்கும் நெருக்கம். அதனால இவர் பேருல பாதி அவர்கிட்ட போச்சு, அவர் பேரில பாதி இவர்கிட்ட வந்துச்சு. எப்படி வந்ததுன்னு சொல்றேன். பிரம்பறுத்து ஜீவிக்கும் ஒருத்தந்தான் திருமழிசை ஆழ்வாரை வளர்த்தார்ன்னு பார்த்தோம். திருமழிசை ஆழ்வார் திருக்குடந்தையை நோக்கி பிரயாணமா வந்துண்டிருக்கார். வரச்சே திண்ணைல பத்து பிராமணர்கள் உட்கார்ந்துண்டு வேதத்தை ‘ஹோ’ன்னு சொல்லிண்டுருக்கா. இவர் கிட்டக்க வரச்சே, இவர் காதிலே வேதம் படவே கூடாதுன்னு, அவா சட்டுன்னு வேதம் சொல்றதை நிறுத்திட்டா. இவர், சரி நாம கேட்கக்கூடாதுன்னு நிறுத்திட்டத புரிஞ்சுக்கிட்டு, உள்ளுக்குள்ள சிரிச்சுக்கிட்டுத் தாண்டிப் போய்ட்டார். அவர் ப்ரம்ம ஞானி, இதுவுமல்ல, அதுவுமல்ல. அவர் தாண்டிப் போய்ட்டார். தாண்டிப் போன உடனே, இவர்கள் விட்ட இடத்திலேர்ந்து சொல்லணுமோல்லையோ? ஞாபகமே வரலை. எப்படிச் சொல்றது, எப்படிச் சொல்றதுன்னு யோசிக்கிறா. தாண்டின திருமழிசையாழ்வார் திரும்பினார். கீழே கறுப்பு நெல்லு மணி கிடந்தது. அந்த கறுப்பு நெல்லை எடுத்து, தன் நகத்தாலே ரெண்டா கிழிச்சு கீழ போட்டார். இவாளுக்கு விட்ட இடம் ஞாபகம் வந்துடுத்து. ’க்ருஷ்ணானாம் ப்ரீகீனாம் நகநிர்ப்பின்னம் நகநிர்ப்பின்னம்’. ’க்ருஷ்ணப் ப்ரீகீ’-ங்கிறது கறுப்பு நெல். நகநிர்ப்பின்னம் – நகத்தாலே பிளத்தல். கறுப்பு நெல்லை நகத்தாலே பிளத்தல்ங்கிற இடத்தை வேதத்தாலே இவா சொல்லிண்டு இருக்கா. அந்த சொன்ன இடம்தான் இவாளுக்கு விட்டுப்போச்சு. விட்டுப் போனத ஞாபகப்படுத்தறதுக்காகத்தான் அவர் கறுப்பு நெல்லை எடுத்து கிழிச்சுப் போட்டார். உடனே விட்ட இடம் ஞாபக வந்துடுத்து. மேற்கொண்டு சொன்னார்கள்ங்கிறது சரித்திரம். திருமழிசை ஆழ்வார் திருக்குடந்தைக்குள்ள போனார். பெருமாள் சன்னிதியைப் பிரதட்சணமா வந்துண்டிருக்கார். அவருக்கு யாரும் மரியாதை செலுத்தறதா இல்லை. யாரோ, எங்கு பிறந்தவர், எங்கு வளர்ந்தவர், அப்படின்னு எல்லாரும் துச்சமா மதிச்சிண்டு இருக்கா. ஆழ்வார் கோவிலுக்கு வெளியே பிரதட்சணமா வந்துண்டிருக்காரோல்லையோ, அவர் தெற்கு பக்கமா வரச்சே, ஆராவமுதன், சாரங்கபாணிப் பெருமாள் தெற்கு நோக்கித் திரும்பினுட்டாராம். அவர் மேலப்பக்கம் வரச்சே, மேற்குப்பக்கம் திரும்பிட்டார். வடக்குப் பக்கம் வரச்சே, வடக்குப்பக்கம் திரும்பிட்டார். எந்தெந்த பக்கத்தில் திருமழிசை ஆழ்வார் போயிருப்பரோ, அந்தந்த பக்கத்தில் பெருமான் திரும்பினான். அர்ச்சகர்களுக்கு ஆச்சர்யம், என்னமோ நடக்கறது, என்ன நடக்கறதுன்னு நமக்குத் தெரியலே. யாருக்காகவும் இந்தப் பெருமாள் திரும்ப மாட்டாரே, எதற்காகப் போய் யாரையோ பார்த்துத் திரும்புகிறார்? கடைசியிலே ஆழ்வாரும் கோவில் வாசலுக்கு வந்தார். அப்போது பெரும்புலியூர் அடிகள்ன்னு ஒருத்தர் இருந்தார். அவர் பேசினார், இவருக்குத்தான் முதல் பூஜை குடுக்கணும், முதல் மரியாதை பண்ணனும், மகா ஞானி, பரம பக்தர், இவருக்கு பண்ணனும்ன்னு பேசினார். மத்தப்பேரெல்லாம் ஏத்துக்கறதா இல்லே. அவர் யாரோ, அவருக்கெல்லாம் குடுக்கக்கூடாதுன்னுட்டு, எல்லாரும் ஏசறதுக்கும், பரிகாசம் பண்றதுக்கும் ஆரம்பிச்சா. அப்போது திருமழிசையாழ்வார் தன் உள்ளத்துக்குள்ள இருக்கிற பெருமாளிடத்தில ப்ரார்த்தித்தார்,
- இந்த சடங்கர்களெல்லாம் இப்படி பேசுகிறார்களே, என்னைப் பேசட்டும், எனக்கு அதைப்பத்தி கவலையில்லே. இந்த சரீரத்தைப் பேசிட்டு போறா. ஆத்மாவைப் பேச முடியாது. ஆனால் உன்னுடைய தொண்டனான என்னை இவர்கள் இப்படிப் பேசினால், அப்போ உன்னை ஏசுகிறார்கள் என்று அர்த்தமே தவிர, என்னை ஏசுகிறார்கள்ன்னு அர்த்தமல்ல. நீதான் அவர்களுக்கு யார்ன்னு காட்டனும்னு சொல்ல, பெருமாள் பிராட்டிமார்களோடே, திருமழிசை ஆழ்வாரின் நெஞ்சகத்திலேர்ந்து வெளியே தோன்றி, தானே இவ்வுள்ளத்திலே இருக்கிறோம், அப்படின்னு அத்தனை பேருக்கும் காட்டிக் கொடுத்தானாம். இது முக்கியச் சரித்திரம். உள்ளுக்குள்ள ஆழ்வார் போறார், பெருமாளைச் சேவிக்கனும், ஆழ்வாராமுத ஆழ்வார் சயனிச்சிண்டு இருக்காரோல்லையோ? நன்னாத்தான் சயனிச்சிண்டிருந்தார். இன்னிக்கு பாதி சயனிச்சிண்டு இருக்கார் அவர், திருக்குடந்தை சேவிக்க போனேள்ன்னா, முழு சயனத்திலயும் இருக்க மாட்டார், அமர்ந்த திருக்கோலத்திலேயும் இருக்க மாட்டார். பாதி சயனமா, அர்த்த சயனம், உத்யோக சயனம், பாதி எழுந்திருந்த சயனம். அன்னைக்கு அவர் ஒழுங்காத்தான் படுத்திண்டுருந்தார். திருமழிசை ஆழ்வார் போனார். போனா பெருமாள் எழுந்திருந்து தன்கிட்டே பேசப் போறார்ன்னு இவர் நினைச்சிண்டுட்டார். அர்ச்சாவதாரம், விக்கிரகப் பெருமாள்லாம் பேசுவரா? இராமனோ, கண்ணனோ வேணா பேசுவாளே தவிர, இன்னைக்கு விக்கிரக ரூபத்திலே இருக்கிற பெருமாளெல்லாம் பேச மாட்டா. ஆனா அவருக்கு அதெல்லாம் தெரியாது, பக்தனுக்கு அது புரியாது. அவனுக்கு கலக்கம், கிட்டக்க போனவுடனே பெருமாள் பேசணும். அள்ளி எடுத்துக்கணும், அணைச்சுக்கணும், உச்சி மோந்து பார்க்கணும், ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கணும், இதுதான் அவனுடைய ஆசை. ஆழ்வார் கிட்டக்க வந்தார், பெருமாள் அப்படியே சயனிச்சிண்டிருக்கார். இவர் எழுப்பி எழுப்பிப் பார்த்தார், எழுந்திருக்கலே. இவருக்கு உடனே தோணித்து, ‘ரொம்ப ஆயாசம் போலிருக்கு. அதனாலதான் பெருமாள் படுத்துணுட்டார்ன்னு நினைக்கிறேன்.’. ஓய்வு தேவைப்பட்டிருக்கு. ஏன் ஓய்வு? ரொம்ப உழைச்சுருந்தோம்ன்னு வச்சுக்கங்கோ, அடிச்சுப்போட்டாப்ல படுத்திண்டிருக்கா, அப்படின்னு சொல்றோமோல்லையோ? அதப்போல இவர் ஏதோ ரொம்ப உழைச்சிருக்கார், அதனாலதான் ஓய்வுக்காக படுத்துண்டிருக்கார். என்ன உழைச்சிருப்பர்ங்கிறத தானே பாட்டில சொல்றார்.
- (திருச்சந்த விருத்தம் – 61) -என்று ஒரு பாசுரத்திலே தெரிவித்தார். நடந்த கால்கள் நொந்தவோ – அயோத்தியிலிருந்து இலங்கை வரைக்கும் நடந்தியாமே? கால் வலி கண்டு போச்சோ? எவ்வளவு தூரம்? இதென்ன கிட்டக்க, தொட்டக்கயா இருக்கு? நாம வண்டில ஏறிண்டு போய்ட்டு வரதுக்குள்ள உன்னப்பாடு, என்னப்பாடா இருக்கு. இதுக்குப் போய் இராமன் தனித்து, ‘நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை என் இராமாவோ?’ என்று ஆழ்வார் தெரிவித்தார். முன்னாடியெல்லாம் இராமன் எங்கு தெரியுமா சயனிச்சிப்பர்?
- (பெருமாள் திருமொழி) - என்று குலசேகரருடைய பாசுரம். நேற்று வரைக்கும் மெல்லணையில், சப்பர மஞ்சத்தில், ஹம்ச தூளிகா மஞ்சத்தில் கிடந்தாய். எத்தனை பேர் கவரி வீசினார்கள், எத்தனை பேர் உன் திருவடி வருடி விட்டார்கள். இப்படி இருக்கிற நீ போய் மொத்த மெல்லணையையும் மறந்து, கல்லணை மேல் கண் துயிலக் கற்றணையோ காகுத்தா கரியகோவே – ஒரு கல்லையே தனக்கு அணையாக வைத்துக்கொண்டு, எங்கெங்கே, வியன் காணும் மரத்தின் நீழல் – இலையிருந்து நிழல் இருக்கிற மரத்துக்குக்கீழே பெருமாள் படுத்துக்க மாட்டாராம். இலை உதிர்ந்து நிழலே இல்லாத மரத்துக்குக்கீழே பெருமான் சயனிச்சிப்பராம். எதுக்குன்னா, ‘நான் நிழல் இருக்கிற இடத்தைத் தேடிட்டு போனா, போகத்தை தேடிட்டு போனேன்னு கைகேயி சொல்லிட்டாள்ன்னா? போகத்தையே தேட மாட்டேன்னு பிரதிக்ஞை பண்ணிக் குடுத்துட்டு வந்திருக்கேனே. அதனாலே நான் ஒன்னும் மரத்தின் நிழல்ல கூட படுத்துக்க மாட்டேன்.’, என்று கல்லணை மேல் கண் துயில கற்றணையோ காகுத்தா கரிய கோவே-ன்னு கேட்டார். திருமழிசையாழ்வார் அதேபோல, ’ஓ, நீர் இப்படித்தான் ரொம்ப ஆயாசப்பட்டு போய்ட்டீரோ? நடந்த கால்கள் நொந்தவோ’. அப்புறம் மாத்திண்ட்டார், ‘நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ’ – பெரிய வராக அவதாரம் எடுத்து, பூமிப்பிராட்டி சமுத்திரத்துக்குள்ள இருக்க, அவளை இடர்ந்தெடுத்துத் தூக்கி உன் மடியில் வைத்துக் கொண்டாயாமே? அது ரொம்ப ஆயாசம் போலிருக்கு. இலங்கு மால் வரைச் சுரம் கடந்த கால் பரந்த காவிரிக் கரை குடந்தையுள் – காவிர்க்கரையிலே இருக்கிற குடந்தையுள், எழுந்திருந்து பேசு கேசனே கிடந்தவாறு – எவ்வளவு நாளா கிடக்கப் போகிறாய்? நீ முன்னும் பின்னும் அசையாமல் இப்படியே படுத்திருந்தியானா முதுகிலே ரணம் கண்டு போய்டாதா? ஒரே மாதிரி படுத்திருந்தா முதுகில புண் வந்திருமோல்லையோ? ஆழ்வார் தெரிவித்தார், கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசைய – இப்படியே எத்தனை காலம் படுத்திண்டிருக்கப்போறே, உடம்பை அப்படியிப்படி ஒருக்களிச்சுப் படுக்க வேண்டாமா? கொஞ்சம் திருப்பிப்படுத்தாதானே முதுகில புண் வராது இருக்கும்? இப்படியே சயனிச்சிண்டிருக்கியே, என்று ஆழ்வார் கேட்கிறார். ஒன்னும் அவர் நகர்றதாவே இல்லே. அதனால பாசுரத்த முடிக்கப் போறார் ஆழ்வார் கோபத்தோடே. ‘எழுந்திருந்து பேசு வாழி கேசனே - நீ இத்தனை நாழி கிடந்ததெல்லாம் போறும். இவ்வளவு பெரிய ஆழ்வார் நான் வந்திருக்கேன், பரம பக்தன், என்ன மரியாதை இல்லாமல் படுத்திண்டிருக்கறது?’. பெருமாள் பார்த்தார், ‘ஓ, இது இத்தனை நாள் வரைக்கும் நான் கேள்வியே பட்டது கிடையாது. யார் வந்து சேவிச்சாலும் என் சயனத்திருக்கோலத்தை சேவிச்சுட்டுப் போய்த்தான் பார்த்திருக்கேன். அது என்ன மரியாதை இல்லாது படுத்திண்டுருக்கறதுங்கிறார் இவர். நம்ம என்ன பண்றதுன்னு தெரியலையே’, அப்படின்னு பெருமாள் அப்படியே படுத்திண்டிருந்தார். எழுந்திருந்து பேசு கேசனே – எழுந்திரு, நான் வந்திருக்கேன்னா எனக்கு வரவேற்பு குடு. வரவேற்புக் குடுத்துட்டு எழுந்திருந்து பேசுன்னார். சரின்னு பெருமாள் படுத்துண்டே பேச ஆரம்பிச்சார். பேசுன்னா நான் சொன்னேன், எழுந்திருந்து பேசுன்னு சொன்னேனோல்லையோ? எழுந்திருன்னார். பெருமாள் எழுந்திருக்க ஆரம்பிச்சுட்டார். ஆழ்வார் பார்த்தார், இந்தக் கேவலன், நீசன் சொன்னேங்கறதுக்காக நீர் எழுந்திருக்கறதா? மாத்தினுட்டார். இத்தனை நாழி எழுந்திரு, எழுந்திருன்னாரோல்லையோ? பெருமாள் எழுந்திருக்க ஆரம்பிச்ச உடனே, இந்தத் தாழ்ந்தவன் சொல்லுக்கு நீ எழுந்திருக்கக் கூடாது. ‘எழுந்திருந்தவாறு பேசு வாழி கேசனே’ – போறும், எது வரைக்கும் எழுந்தியோ அப்படியே இருன்னார். பெருமாள் பார்த்தார், ‘இது புது திருக்கோலமா இருக்கு இப்போ, ஒன்னு நான் உட்கார்ந்துண்டு சேவை சாதிக்கணும், இல்லே சயனிச்சிண்டு சேவை சாதிக்கணும். படுத்திருந்தா எழுந்திருங்கறீர். எழுந்தா போறுங்கறீர். என்னைப் படுக்கச் சொல்றீரா, எழுந்திருக்கச் சொல்றீரா, என்ன பண்ண சொல்றீர்ன்னா, இந்தத் திருக்கோலம் இன்னும் புதுசா இருக்கு, இப்படியே இருந்துரு, என்று திருமழிசை ஆழ்வார் சொல்ல, இன்னைக்கு வரைக்கும் பாதி சயனத் திருக்கோலத்தில திருக்குடந்தைப் பெருமான் இருக்கார். இந்தத் திருமழிசை ஆழ்வாருடைய சொல்லுக்கு இணங்கத்தான் எழுந்திருந்தான் எம்பெருமான். ஆகையாலதான் இவர் பேர்ல பாதி அவருக்குப் போச்சு, அவர் பேர்ல பாதி இவருக்கு வந்தது. இவர் திருமழிசைப்பிரான் ஆனார், அவன் ஆராவமுத ஆழ்வார் ஆனான். இருவருக்கும் உண்டான நெருக்கம், இவர் சொன்ன சொற்படிக்குப் பெருமான் கேட்டு எழுந்துட்டானோல்லையோ? இந்தப் பெருமாள் மட்டுமில்லே, இன்னொருத்தரும் இருக்கார். இப்ப நாம பார்த்தது தஞ்சாவூர், காவிரிப்பக்கம் பார்த்திருக்கோம். இதே தொண்டை நாட்டுக்குப் பக்கத்திலே திருவெஃகா என்ற இடத்தில் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ன்னு இருக்கிறார். அவர் இந்தத் திருமழிசை ஆழ்வார் சொன்ன வண்ணமே செய்தார். யதோப்தகாரின்னு அவருக்குப் பேர். திருமழிசை ஆழ்வார் என்ன சொன்னாரோ, அதன்படியே செய்துட்டார். ஆழ்வார் வாழ்ந்திருந்த காலம். இவருக்கு ஒரு சிஷ்யன் இருந்தான், ‘கணிகண்ணன்’னு அவருக்குப் பேர். அவர் அத்யந்த சீடன். ஆச்சார்யனைப் பத்தி மட்டும்தான் பேசுவர். அந்த ஊர்ல ஒரு பேச்சு அடிபட்டது, இந்த திருமழிசை ஆழ்வார் அனுக்கிரகம் இருந்தா வயசே ஆகாதாம் அவாளுக்கு. இதை ராஜாவிடத்திலே போய் ராணி சொல்லிட்டா, ‘முடிஞ்சதுன்னா உங்க பேர்லே திருமழிசை ஆழ்வாரை விட்டு ஒரு பாட்டு பாடி வைக்க முடியுமா?, அப்படின்னா உங்களுக்கு நீண்ட ஆயுசு’ன்னு ராஜாகிட்ட சொல்லிட்டா. நேரா திருமழிசை ஆழ்வாரிடத்திலே வந்தார், என் பேருலே பாட்டு பாடுன்னார். அவர் சொன்னார், இந்த மனுஷ்ய பாட்டெல்லாம் நான் பாடறது கிடையாது. தெய்வத்தை மட்டும்தான் நான் பாடுவேனே தவிர, இதென்ன இல்லாததைச் சொல்லணும். மனுஷ்யனைப் பத்தி நாம கொண்டாடனும்னாலே, இல்லாததைத்தான் சொல்லிக் கொண்டாடனும். இருக்கறது ஒண்ணும் இருக்கப் போறதில்லே அவனுக்கு. என்ன சொல்லலாம்ன்னா, ‘போர் முகத்தறியானைப் புலியே என்றேன்’, போர் எந்தத் திசைலேன்னே அவனுக்குத் தெரியாது. ஆனா அவனை ‘புலி, புலி’ன்னு புலவர்களெல்லாம் கொண்டாடுவாளாம். ‘கல்லாத ஒருவனைக் கற்றாய் என்றேன்’, பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லே, ’நீ படிச்ச படிப்பு யார் படிப்பா’ன்னு சொல்லுவாளாம். ’இப்படியெல்லாம் இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய்’, ஒருத்தன் வந்து ஒரு வீட்டுல போய் ரொம்ப புகழ்ந்துண்டிருந்தான். முப்பது நாளும், தினப்படி காத்தால ஒரு மணி நாழி ஸ்தோத்திரம் பண்ணுவான். ஏதோ குடுக்கப்போறா, குடுக்கப்போறான்னு நினைச்சிருப்பான். கடைசிலே முப்பத்தியோராவது நாள் வந்தது, ‘ஒண்ணுமில்லை’, அப்படினுட்டான் வீட்டுக்காரன். இவனுக்கு வெளியே வந்து நல்ல சந்தோஷம், உத்தரீயத்தை எடுத்தான், மேல போட்டான், கூத்தாட ஆரம்பிச்சான். பக்கத்துல இருந்தவன் கேட்டான், ‘ஒண்ணும் இல்லேன்னுட்டான், அதுக்கு எதுக்கு நீ இவ்வளவு சந்தோஷப்படறே’ன்னான். இவன் திரும்பச் சொன்னான், ‘இதை இன்னும் முப்பது நாள் கழிச்சு சொல்லாம இப்பவாவது சொன்னானே, அதுவரைக்கும் எனக்குத் திருப்தி. அதைவிடத் திருப்தி என்ன தெரியுமோ, நான் அவன்கிட்ட இருக்கிறத எதையாவது பாடியிருந்தேன்னா, ‘இருக்கு’ன்னு குடுத்திருப்பான். நான் இல்லாததைத்தான பாடினேன், எனக்கும் இல்லேன்னுட்டான். ஏன்னா அவனுக்கு இருக்கற குணத்தை நான் பாடலையே, இல்லாத குணத்தைத்தானே இருக்கு, இருக்குன்னு சொன்னேன். ‘பாரிலோர் பற்றையை பச்சைப் பசும்பொய் பேசி திரிவன்’னு சாதித்தார். நாம லோகத்துலே இருக்கறவாளைப் பாடறதெல்லாம் பச்சைப் பசும்பொய். பேச்சென்றால் பெருமானைத்தான் பேச வேண்டும். ஸ்தோத்திரம் என்றால் ஏற்றுக்கொள்ளும் வலு, இயல்போ, சக்தியோ பெருமான் ஒருத்தனுக்குத்தான் உண்டு. சொற்கள் போய் ஒருத்தனை அடையனும்ன்னா, அந்தப் பெருமை வேண்டாமா? ஒருத்தனைப் போய் ‘புண்டரீகாட்சன்’னு சொல்றோம்னா, யாரைச் சொல்றது? புண்டரீகாட்சனைத்தான் சொல்ல முடியுமே தவிர, கமலக் கண்ணன்னு சொல்லுகிறோம், தாமரைக்கண்ணன்னு சொல்லுகிறோம், மேகவண்ணன்னு சொல்லுகிறோம், முகில் வண்ணன் சொல்றோம், என்னென்னமோ சொல்றோம். இப்படி சொல்லுவதை யாரால் ஏற்க முடியும், அவனைத் தவிர? அதனாலே பகவானை ஸ்தோத்திரம் பண்ணுபவர்கள் மற்றொருத்தனை ஸ்தோத்திரம் பண்ண மாட்டா. திருமழிசையாழ்வார் முடியாதுன்னுட்டார். சரின்னு ராஜா சிஷ்யன்கிட்ட போனான். ‘உங்க ஆச்சார்யன் முடியாதுன்னுட்டார் கணிகண்ணா, நீயாவது பாடு’ன்னார். ‘எங்க ஆச்சார்யன் பெருமாளைத் தவிர பாடமாட்டார், நான் எங்க ஆச்சார்யனைத் தவிர பாடமாட்டேன்’, அப்படின்னு அவன் மறுத்துட்டான். இதென்ன ரெண்டு பேருமே பாட மாட்டேங்கறாளேன்னு ராஜாவுக்குக் கோபம், நாடு கடத்திட்டான். நீங்க எப்போ என்னைப் பாடலையோ, நீங்க இனிமே இந்த நாட்டிலே இருக்க வேண்டாம், நாட்டை விட்டுப் போங்கோன்னு நாடு கடத்திட்டான். சரின்னு மூனு பேரும் புறப்பட்டுட்டா. முதல்லே கணிகண்ணன் நடக்கிறான். அவனைத்தான் வெளியேற்றினது, அதனால, ‘கணிகண்ணன் போகுன்னான்’. அதற்கு அடுத்தாப்போலே, கணிகண்ணனுக்குப் பின்னாலயே திருமழிசை ஆழ்வார் புறப்பட்டுட்டார். எப்படியும் நம்ம சிஷ்யன், அவனே போறார்ன்னா, நமக்கு இனிமே இந்த ஊர்லே என்ன வேலை, அப்படின்னு திருமழிசை ஆழ்வாரும் பின்னாடி போனார். பெருமாள் பார்த்தார், கணிகண்ணனும் போயாச்சு, திருமழிசை ஆழ்வாரும் போயாச்சு, இனிமேல் நாம இந்த ஊர்ல யாருக்காக இருக்கணும்? வேண்டவே வேண்டாம், நானும் கிளம்பறேன்னு பெருமாள் தயாரா இருந்தார், ஆனா ஆழ்வார் சொன்னாத்தான் கிளம்புவர். அவர் எப்போது யாராவது சொன்னாத்தான் பெருமாள் செய்வரே தவிர, தானா ஒரு காரியம் செஞ்சுரவே மாட்டார். திருமழிசை ஆழ்வார் புறப்படுறவர் திரும்பிப் பார்த்துச் சொன்னார்,
- கணிகண்ணன் புறப்பட்டு போய்ட்டான், துணிவு உடைய செந்நாப்புலவன் நானும் புறப்பட்டுப் போறேன், உனக்கென்ன இனிமே இங்க வேலை? காமருபூங் கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – இனி நீ இங்க படுத்துண்டிருக்க வேண்டாம், நீயும் உன் பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள் – உன்னுடைய நாகப்பாம்பைச் சேர்த்து சுருட்டிக்கோன்னார் ஆழ்வார். பெருமாள் சத்தமே காட்டலே, உடனே சுருட்டிட்டார். நாகப்பாம்பு பையையும் சுருட்டிண்டு, சுருட்டின பையையும் தானே கையில வைச்சுண்டு, திருமழிசை ஆழ்வார் பின்னாடி போறார். முன்னாடி கணிகண்ணன், நடுவிலே திருமழிசை ஆழ்வார், பின்னாடி பெருமாள். காஞ்சீபுரம் திருவெஃகா, அது நடுவிலே இருக்கு, அங்க இருந்து கிளம்பி, ‘ஓர் இரவு இருக்கை’, ஓரிக்கைன்னு இப்போ சொல்றா. ஆனா அன்னைக்கு ‘ஓர் இரவு இருக்கை’ன்னு அந்த இடத்துக்குப் பேர். இவா மூனு பேரும் அங்க போய் இருந்தார்கள். பெருமாள் வெளில போய்ட்டா நாடே சோபையிழந்து போய்டுமோல்லையோ? உடனே மந்திரிகள்லாம் வந்து, ‘இராஜன்னு, ஏதோ தப்புப் பண்ணியிருக்கே, போய் திரும்பக் கூட்டிண்டு வா அந்தப் பெருமாளை’ன்னு சொல்ல, சரின்னு இராஜா வந்து பெருமாள் கால்ல விழுந்தான், ’நீ திரும்பி வா’ன்னுட்டு. அவர் சொன்னார், ‘நீ எதுக்கு எங்கிட்டே வரே இப்போ? நான் மூனாவதா நடந்தவன், எனக்கு முன்னாடி நடந்தவர்கிட்டே போய் நீ கேட்கணுமே தவிர, என்கிட்ட எதுக்கு வரே?’. சரின்னு திருமழிசை ஆழ்வார்கிட்டே வந்தான். அவர் சொன்னார், ‘நான் இரண்டாவதா நடந்தவன். முதல்லே நடந்தவனைப் போய்க் கேளு, என்னைக் கேட்காதே’ன்னார். சரின்னு இராஜா கணிகண்ணன் கால்லே விழுந்து நீயும் திரும்ப நாட்டுக்கு வரணும்னவுடனே, கணிகண்ணனும் நாட்டுக்குக் கிளம்பிட்டான். திருமழிசை ஆழ்வாரும் கிளம்பிட்டார். பெருமாள் படுத்திண்டே இருக்கார். அப்பதான் ஆழ்வார் பார்த்தார், ‘இன்னும் என்ன இங்கே படுக்கை?’ அப்படின்னு பெருமாளைப் பார்த்துக் கேட்டார். ‘நீர் வான்னு சொன்னீர், வந்துட்டேன். போன்னு சொன்னா போலாம்’. சொன்னாப் போகலாம்ன்னு பெருமாள் சொன்னார். திரும்பச் சொன்னார் ஆழ்வார்.
- இனிமே இங்கே இருக்க வேண்டாம், வா, என்று சொன்னவுடனே பெருமாள் திரும்ப வந்து அதே இடத்தில் கிடந்தான். கிடந்தபடியால் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’. ஆழ்வார் சொன்ன வண்ணம் செய்தவரோல்லையோ? இந்த எம்பெருமானுக்கென்றே திருமழிசை ஆழ்வார் வாழ்ந்தார் என்று சொல்லுவர்கள். ஆக நான்காவது ஆழ்வார், பெருமானைக்கூட தான் சொன்ன சொல்படி நடக்க வைத்தாரோ இல்லையோ? அது பக்தியின் மகாத்மியம். பெருமான் தன் பக்தனுக்கு பராதீனப்பட்டு இருக்கிறான். அவன் ஒண்ணும் பக்தர்களுக்கு அடங்காதவனே அல்லன். பக்தர்களுக்கு ரொம்ப அடங்கக்கூடியவர்தான். ஆனா பக்தனா இருக்கணும், அதான் முக்கியமே தவிர, கண்டபேருக்கு அடங்கிடுவரா? மற்றப்பேரா இருந்தா அடக்கிடுவர். ஆனால் பகவான் தன் பக்தனா இருந்தால் அவர்களுக்கே அடங்கிப் போகிறான். ‘அகம்து பக்த பராதீனஹா’ன்னு சொல்லுவர்கள். ஆகவே திருமழிசை ஆழ்வார் விஷயத்தில் பெருமான் அவர் சொல்படி கேட்டான். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஆழ்வார்கள் அறநெறி உபந்நியாசம் – Toronto) March 20 தமர் உகந்ததெவ்வுருவம்முதலாழ்வார்கள் மூவரும் ஒரு கருத்து சொல்லியிருக்கா. அர்த்தம் புரிஞ்சுக்க முடியுமான்னு பார்ப்போம்.
- (முதல் திருவந்தாதி – 44) -இது முதல் ஆழ்வாருடைய பாசுரம். தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே – பகவானை இன்ன உருவம்ன்னு நினைச்சுக்க வேண்டாம். அடியார்கள் எந்த உருவத்தோடே சேவிக்கனும்ன்னு ஆசைப்படுகிறார்களோ, அந்த உருவத்தோடே பெருமான் சேவை சாதிக்கிறான். தமர் – அடியார்கள், உகந்தது – ஆசைப்பட்டது, எவ்வுருவம் – எந்த உருவத்தையோ, அவ்வுருவம் – அந்த உருவத்தை, தானே – தான் எடுத்துக் கொள்கிறான். இன்னதுதான், வராகம்தான், நரசிம்மம்தான், வாமனன்தான் என்றில்லை, நான் எப்படி சேவிக்கனும்ன்னு ஆசைப்படுவனோ, அப்படி இருப்பராம். இதைக் கண்ணன் கீதைல சொல்றார்.
- நான் எப்படி இருக்கிறேனோ அர்ஜுனா, என் அன்பன், என் பக்தன், அதைத் தான் இஷ்டத்துக்கு அனுபவித்து அதையேதான் நினைக்கிறான். மம வர்த்மானு வர்த்தந்த – நான் என்ன பேசுறேனோ, நினைக்கிறேனோ, நிற்கிறேனோ, சிரிக்கிறேனோ, அழறேனோ, இந்த ஒன்றொன்றையும் நினைச்சு அவன் சிரிக்கிறான், அழறான், பேசறான், பாடறான், ஆடறான். அதாவது பக்தன்னு ஒருத்தன் இருந்துட்டால், அவனுக்குத் தன் ஆண்டானான பகவானை அனுபவிக்கிறது தவிர, வேற ஒண்ணுலயுமே புத்தி போகவே போகாதாம். அதனாலதான் இந்த இடத்தில கண்ணன் சொல்றார், ஏ எதாமாம் ப்ரபத்யந்தே, ஏ – யார் யார், எதா – எப்படி, மாம் – என்னை, ப்ரபத்யந்தே – சேவிக்க ஆசைப்படுகிறார்களோ, தாம்ஸ்ததவைவ பஜாம்யஹம் – அவரவர்களை அப்படியே நான் அனுகுகிறேன். அவன் ஆசைப்பட்ட திருக்கோலத்தையெல்லாம் அவனுக்குக் காட்டுகிறேன். அதனால நாம் பெருமானை ‘எப்படி’ அப்படின்னு நினைச்சுக் கவலைப்பட வேண்டாம். எப்படி வேணா அவனை அடைவதற்கு நாம் ஆசைப்படலாமாம். எங்கே கண்டோம்ன்னா, ஒரு சரித்திரம். ஸ்ரீரங்கத்திலே நடந்த ஒரு அழகான சரித்திரம். அதைத்தான் இந்த பாசுரத்துக்கே அர்த்தமாகச் சொல்லுவர்கள். இப்ப நான் சொல்லப்போற கதையெல்லாம் அந்த நாள்லே நடந்தது. அவற்றையெல்லாம், ‘குருபரம்பரை ப்ரபாவம்’, ‘வார்த்தாமாலை’ என்ற புத்தகங்களிலே எழுதி வைத்துள்ளார்கள். ஸ்ரீரங்கத்திலே ஒரு உத்ஸவம். நீங்க அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீள், ’அன்னக்கூட்ட உத்ஸவம்’ன்னு பண்றாளோல்லையோ? அதுக்கு ஸ்ரீரங்கத்துலே ‘பெரிய திருப்பாவாடை உத்ஸவம்’ன்னு பேர். அந்த ஊரே பெரிய கோவில், திருவரங்கத்தை ’பெரிய கோவில்’ன்னு சொல்லுவர்கள். பெருமாளுக்கு ’பெரிய பெருமாள்’ன்னு பேர். பிராட்டிக்கு ’பெரிய பிராட்டியார்’ன்னு பேர். உத்ஸவத்துக்கு ‘பெரிய திருநாள்’ன்னு பேர். தளிகை சமர்ப்பிக்கிறதுக்கு ‘பெரிய அவசரம் தளிகை’ன்னு பேர். எல்லாமே பெரிசு. சுமார் 64லிருந்து 72 சன்னிதிகள் ஸ்ரீரங்கத்துக் கோவிலுக்குள்ளே இருக்கு. எத்தனையோ மண்டபம், எத்தனையோ பிரகாரம், எத்தனையோ கோபுரங்கள், அத்தனையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிற ஸ்ரீரங்கம். அந்த கோவிலுக்குள்ளே இந்த உத்ஸவம் நடக்கிறது. பெரிய திருப்பாவாடை உத்ஸவமும், பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேக உத்ஸவமும் அடுத்தடுத்த நாள் நடக்கும். இந்த கவசத்தை அன்னிக்குத்தான் களைஞ்சு திருமஞ்சனம் பண்ணுவா. மத்த எல்லா நாளும் கவசம் சாத்திண்டு இருக்கும். அதுக்கு ஜேஷ்டாபிஷேகம்ன்னு பேர். இந்த பெரிய திருப்பாவடைங்கிறது, பட்டணம் படி 108 படி அரிசிச் சோறு சமைப்பர்கள். அதுக்குக்கூட பண்ணவேண்டிய வெஞ்சனம் எல்லாம் பண்ணுவா. பண்ணி பெருமாளுக்கு முன்னாடி மொத்தத்தையும் பரப்பி, ’உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே’னு அவனுக்குக் கண்டருளப்பண்ணி, அந்த பிரசாதத்தை அடியார்களெல்லாம் எடுத்துப்பா. இந்த உத்ஸவம் ‘கோவர்த்தனோத்தரன’ காலத்துல நடந்தது. அன்னிக்கு இந்திரனுக்காக நிறையா படைக்கறதுக்குப் போனா, கண்ணன் குறுக்கப் பூந்து தடுத்துட்டார். ‘இது எதுக்கு நீங்களெல்லாம் இந்திரனுக்கு குடுத்துண்டிடுர்க்கீள், வேண்டாம். கோவர்த்தன மலைதான் நமக்கு ரொம்ப வேண்டிய மலை. அதுனால அதுக்குக் குடுப்போம்ன்னு கிளப்பி விட்டுட்டார். சரின்னு குழந்தைகளெல்லாம் ஒத்துனுட்டா, கோவர்த்தனத்துக்கே குடுப்போம்னுட்டு. இந்திரனுக்கு பசிக்கோபம் வந்து கல்லு மழையா பொழிந்தான். கண்ணன் பார்த்தார், ‘கவலை வேண்டாம், கோவர்த்தனம் காப்பாத்தும்ன்னு நான் சொன்னேனோல்லையோ, இப்ப காப்பத்தப் போறது பாருங்கோ.’, அப்படின்னு கோவர்த்தனத்தையே தூக்கிட்டார். இவர் காப்பாற்றினார்ன்னு சொல்லிக்கவே இல்லை கண்ணன். குழந்தைகளுக்கெல்லாம் திருப்தி ஏற்பட்டது, ‘ஓ, கோவர்த்தனம்தான் நம்மளை ரட்சித்தது.’ அன்னிக்கு நடந்தது இது ‘அட்டுக்குவி சோத்துப் பருப்பதம்’ன்னு பெரியாழ்வார் பாடினபடி, மொத்தமா இப்படி அகழி கட்டுனாப்போலே சாதத்தைப் போட்டு, அதுக்கு நடுவுல குழி வெட்டி குழம்பு முழுக்க அதுலே குத்தி, அதைச்சுத்தி நிறைய வெஞ்சனம். ‘பாஷாகூபம், குடாகூபம்’. ‘பாஷாகூபம்’ன்னா உளுந்துவடை, ‘குடாகூபம்’ன்னா அப்பம். ‘அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலும் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன்’ என்று ஆழ்வார் சொன்னாப்போலே, இது இத்தனையும் வைத்தால் பெருமான் அங்கு அமுது செய்வர். இப்படி பெரிய பெருமாளுக்கு உத்ஸவம் நடந்துண்டிருக்கு கோவிலுக்குள்ளே. என்னைக்குமே கோவில்ல நடக்கிற உத்ஸவத்தை சின்னக் குழந்தைகள்லாம் தாங்கள் விளையாடிப் பார்க்கும். கோவிலுக்குள்ள விளையாட விடமாட்டா, ஆனா வெளியில காவிரிக்கரைக்குப் போய்டும். காவிரிக்கரைக்குப் போய் அங்க இதே மாதிரி பொம்மையைப் பண்ணி வச்சுண்டு, தாங்களும் அதே உத்ஸவம் பண்றது. பத்து பசங்க சேர்ந்துட்டா. சேர்ந்துண்டு அந்த உத்ஸவத்தைக் கொண்டாடிட்டு இருக்கான். எப்படி கொண்டாடறது? பெரிய பெருமாள் வேணும், நம்பெருமாள் வேணும், பெரிய பிராட்டி வேணும், ஸ்ரீரங்கநாச்சியார் வேணும், இத்தனை பேர் வேணுமோல்லையோ? அவன் எங்க போறது விக்கிரகத்துக்கெல்லாம்? பசங்க விளையாடறதுக்குத்தான வந்துருக்கா. எல்லாப் பிள்ளைகளும் வந்து சேர்ந்தா. சேர்ந்துட்டு ஒருத்தன் என்ன பண்ணினான், நீளமா ஒரு கம்பைக் கொண்டு வந்தான். கம்பைக் கொண்டு வந்து, இப்படி ஒரு கோடு, இதுதான் பெருமாள் தலை. இப்படி ஒரு கோடு கிழிச்சான், இதுதான் அவர் திருமேனி. இப்படி ரெண்டு கோடு கிழிச்சான், இதுதான் அவர் திருவடி. பெரிய பெருமாள் சயனிச்சிண்டு இருக்கார். கோட்டாலயே காவிரில கிழிச்சு முடிச்சுட்டான். அடுத்து பிரசாதம் வேணுமோல்லையோ, 108 படி? கவலையில்லே, காவிரி ஆறு முழுக்க மணல்தான், அந்த மணல்தான் பிரசாதம்னுட்டான். மொத்தப் பேரும மணலைக் கொண்டு வந்து குமிச்சுட்டா. கோடு கிழிச்ச பெருமாள், பக்கத்துல மணல் பிரசாதம், அர்ச்சகராட்டம் ஒரு பிள்ளை நின்னுண்டான், பரிசாரகனாட்டம் இன்னொரு பிள்ளை நின்னுண்டான், பாசுரம் சேவிக்கறவளாட்டம் இன்னும் பத்து பிள்ளை நின்னுண்டான். பாட்டு எல்லாத்தையும் சொன்னான். அர்ச்சகர் இப்படி கை காட்ற மாதிரி, ‘இந்தா பெருமாளே எல்லாத்தையும் சாப்பிடு’னுட்டு, அதே மணல் சோற்றை பெருமாளுக்கும் கண்டருளப் பண்ணிட்டான். இதெல்லாம்கூட ஆச்சரியமில்லே. அது இராமானுசர் வாழ்ந்திருந்த காலம். அப்போ கோவில்ல முதல் தீர்த்தம் அவருக்குத்தான். கோவில்ன்னாலே முதல் தீர்த்தம், மரியாதைகளெல்லாம் இருக்குமோல்லையோ? இராமானுஜர்தான் அந்தக் கோவில்ல முதல் தீர்த்த மரியாதை பெற்றுக் கொண்டிருந்தார். எப்பவும் அங்க ‘ஸ்தானீககர்கள்’ன்னு இருப்பா. அவா அருளப்பாடு சொல்லணும். யார் வந்து முதல் மரியாதை வாங்கிக்கணுமோ, அவர்களைக் கூப்பிடணும். பெருமான் அவர்களைக் கூப்பிடறாப்பல அர்த்தம். ‘ஜீயோ’, அப்படின்னா ஜீயர் வந்து பிரசாதத்தை வாங்கிண்டு போகனும்ன்னு அர்த்தம். இதை நடிச்சுண்டு இருக்கானோல்லையோ இந்த பிள்ளைகளெல்லாம், அதனாலே யார் ஒருத்தன் அங்க ஸ்தானீகரா நின்னிண்டு இருந்தானோ, அவன் ‘ஜீயோ’ அப்படின்னு, இந்த மணல் பிரசாதத்தைக் கொடுக்கறதுக்குச் சொல்றான். சொன்னவுடனே ஒரு பிள்ளை இராமானுஜரா வரணும். ஆனால் ஏதோ நிமித்தமாக இராமானுஜரே காவிரிக்கரைக்கு அப்போ வந்திருந்தார். வந்தவர் இங்க என்ன நடக்கறதுன்னு பார்த்தார். ஒரு பிள்ளை ‘ஜீயோ’ன்னு கூப்பிட்டானோல்லையோ, தானே அங்க நேர போய் நின்னுண்டார். தன்னுடைய மேலாடையைக் கழட்டினார். அவன் குடுத்த மணல் பிரசாதத்தை வாங்கிண்டார். தலைல ஒத்திண்டார், கண்ல ஒத்திண்டார், விழுந்து சேவிச்சுட்டு கிளம்பிப் போய்ட்டார். நடந்துண்டு இருந்ததெல்லாம் வெறும் பொம்மைக் கல்யாணம். நடக்கறதே பொம்மை உத்ஸவம். ஆனா அதுக்கு இராமானுசர் நேர வந்து வாங்கிண்டு போனார். பக்கத்துல இருக்கற சிஷ்யாளுக்கெல்லாம் ஆச்சர்யம். ‘இது என்ன ஏதோ நாலு பிள்ளைகள் சேர்ந்து விளையாடிண்டு இருந்தான். கோடு கிழிச்சு வச்சிருக்கான் பெருமாள்ன்னு பேர் வைச்சு. அதுக்குப் போய் நீர் என்னமோ இவ்வளவு தூரம் போய் வாங்கிக்கிறீரே’, என்று இராமானுசரைக் கேட்கறா. அவர் திருப்பிச் சொன்னாராம், ‘உங்களுக்கெல்லாம் பாசுரத்தில நம்பிக்கை கிடையாதா? கீதைல நம்பிக்கை கிடையாதா? கண்ணன் சொன்னதையும், ஆழ்வார் சொன்னதையும் யோசிச்சுப் பாருங்கோ. தமர் உகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே, தன் அடியார்கள் எந்த உருவத்தை உகக்கிறார்களோ, அதுலே பெருமான் இருக்கிறான்கிறது திண்ணம். இந்த குழந்தை கோடு கிழிச்சதுன்னா, அந்த கோட்டிலே பெருமான் இருப்பரே தவிர, இல்லேன்னு நினைச்சிண்டு நான் நகர்ந்து போயிருந்தேன்னா, அப்ப ஆழ்வார் பாசுரத்திலே நம்பிக்கை இல்லேன்னு அர்த்தம். எனக்கு அதிலே நம்பிக்கை இருக்கு. அதனாலே இந்த கிழிச்ச கோட்டிலே பெருமாள் இருக்கார். அதனாலதான் இந்த பிரசாதத்தையே நான் வாங்கிண்டு போனேன்’ன்னு ஸ்வாமி சொல்லியிருக்கனும்ன்னால், அப்போ ஆழ்வார்களுடைய பக்தியை அங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். எங்கோ இருக்கிறான் பகவான்ங்கிறது அல்ல, நமக்கு அருகிலே எங்கும் இருப்பான், எப்படியும் இருப்பான். இது நமக்குத் தகுந்தாப்போல இருக்கிறார்.
- (நான்முகன் திருவந்தாதி – 71) -ன்னு திருமழிசை ஆழ்வார் தெரிவிக்கிறார். பெருமானுக்கு நாம் அருகிலிருந்து, எப்படியெல்லாம் ஆசைப்படுகிறோமோ, அப்பப்படியெல்லாம் சேவை சாதிப்பர். எத்தனை ஆயிரம் திருநாமம் சஹஸ்ரநாமம் சூட்டியிருக்கு? அவர் அதுக்குன்னு அந்த நாமங்களை மட்டும்தான் தனக்குப் பேரா வச்சுப்பேன்னு பிடிவாதம் பிடிக்கவே மாட்டார். எனக்குப் பிடிக்கறது நான் ஒரு பேர் வைக்கிறேன்னா, ஏத்துப்பர். உமக்குப் பிடிக்கிறது, ஒரு பேர் வைக்கிறீரா, ஏத்துப்பர். ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்ல, அதை எப்பவாவது வாய்ப்புக் கிடைத்தால் ஓலைச்சுவடில யாராவது ஒரு ரிஷியை வைச்சு எழுத வேற வச்சுடுவர். இப்ப ஏதேதோ பேர் இருக்கோல்லையோ? திடீர்ன்னு ஒருநாள் யோசிச்சார், ’பீஷ்மர் இதெல்லாத்தையும் சொல்லட்டும், நாம வியாசரை வைச்சு எழுதிடுவோம்’ அப்படிங்கறதுக்காக மஹாபாரதத்துல சஹஸ்ரநாமம்ன்னு எழுதிட்டார். இப்படி எப்பெப்போ யாரார் சாத்தறாளோ, அந்த பேர்களையெல்லாம் உகக்கிறானாம். அதைத்தான் ஆழ்வார் ரெண்டாவது வரி சொன்னார். தமர் உகந்ததெப்பேர் மற்றப்பேர் – அடியார்கள் எந்தப் பேரை உகக்கிறார்களோ, அந்தப் பெயர் தன்னது என்று ஏற்றுக் கொள்ளுகிறான் எம்பெருமான். இதுக்கு ஒரு சரித்திரம் சொல்றேன். நஞ்சீயர்ன்னு ஒரு ஆச்சார்யர் இருந்தார். இராமானுசர், அவர் சிஷ்யர் எம்பார், அவர் சிஷ்யர் பட்டர், அவர் சிஷ்யர் நஞ்சீயர். மாதவாச்சார்யர்ன்னு திருநாமம். மேலக்கோட்டை திருநாராயணபுரத்திலே இருந்தவர். அவரைத் திருத்தி பராசர பட்டர், சம்ப்ரதாயத்துக்காக ஆக்கிக் கூட்டிண்டு வந்திருந்தார். மகா வித்வான் அவர். அந்த நஞ்சீயர் ஒரு சின்ன கண்ணன் விக்கிரகத்தை எழுந்தருளப் பண்ணியிருந்தார். அவர் ’வெண்ணைக்கு ஆடும் பிள்ளை’. அப்படின்னா, இப்படி தூக்கின கைல வெண்ணை வைச்சுண்டு இருப்பர், ஒரு கால் கீழ இருக்கும், ஒரு கால் தூக்கிண்டு இருக்கும். ஆடிக் காண்பிச்சாதான் வெண்ணெய் குடுப்பேன்னு அந்த கோபிகை சொல்லுவோ, சரி, சரின்னு ஆடிக் காண்பிச்சுட்டு, வெண்ணெய் குடு, வெண்ணெய் குடுன்னு கேட்பர். ஒருதரம் ஆடி முடிச்சவுடனே, ஒரு துளி வெண்ணெய் குடுத்துட்டு, இன்னொரு தரம் ஆடுனா இன்னும் கொஞ்சம் தரேன், அப்படின்னு அந்த கோபிகை சொல்லுவோ. அதுக்காக இன்னொரு தரம் ஆடிண்டு இருப்பர். அதனால ஒரு கால் கீழே, ஒரு கால் மேலே. இதை ஒரு வடக்கத்திக் கவிஞன் சொல்லி வைத்தார், ’சேஷ மகேஷ சுரேஷ கணேஷ’. எல்லாருமே சேஷன், மகேசன், சுரேசன், கணேசன், இவா இத்தனை பேரும் ரமேஷனான பெருமாள் முன்னாடி ஆடிண்டு இருக்கா. அந்தப் பெருமாள் என்னடான்னா கோகுலத்துல போய் யாரோ ஒருத்தி முன்னாடி ஆடிண்டு இருக்கார். பகவானுக்கு முன்னாடி எப்ப மோட்சம் குடுப்பீர்ன்னு இந்த ஈசர்களெல்லாம் ஆடிண்டு இருக்காளாம், ஆனா இவரே போய் இன்னொரு பெண் முன்னாடி, மோட்சத்துக்கு இல்லே, வெண்ணெய்க்காக. வெண்ணெய் கிடைக்குமாங்கிறதுக்காக இவர் போய் ஆடிண்டு இருக்காரேன்னா, அத்தனை சுலபன் எம்பெருமான். இந்தப் பெருமானுடைய விக்கிரகத்தைத்தான் நஞ்சீயர் எழுந்தருளப் பண்ணிண்டு இருந்தார். யாரோ பெரிய தணிகன், வடக்கத்தி தேசத்திலேர்ந்து வந்திருக்கா. வந்தவர் நஞ்சீயரைச் சேவிச்சு, ஏதோ பெருமாளை ஏளப்பண்ணிண்டு இருக்காராமே, இந்தாரும், அந்தப் பெருமாளுக்கு ஏதானும் பண்ணி சமர்ப்பியும், அப்படின்னு கொஞ்சம் தங்கம் குடுத்துட்டு போனா. அவர் என்ன பண்ணுவர்? அவாளுக்கெல்லாம் ஒன்னுலயும் ஆசை கிடையாது, பற்று கிடையாது. சொர்ணத்தை எடுத்து பொற்கொல்லனைக் கூப்பிட்டு, இந்த பெருமானுடைய தூக்கின திருவடி பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா இருந்ததாம். அதுக்கு ஒரு சதங்கை பண்ணிப் போடுவோம் அப்படினுட்டு பொற்கொல்லனைக் கூப்பிட்டு சதங்கை பண்ணினார். அவன் அந்த ஒரு கழஞ்சு பொன்னிலே சதங்கை பண்ணிக் குடுத்துட்டான், போட்டுப் பார்த்தார். ரொம்ப நன்னாயிருந்தது. பாத்த உடனே இவருக்குத் தோணித்தாம், ஒரு பேரு இவருக்கு சட்டுன்னு மனசிலே வந்தது, ‘சதங்கை அழகியார்’ அப்படின்னு பேர். சதங்கை போட்டுண்டு இருக்கிற கால் ரொம்ப நன்னாயிருந்ததோல்லையோ. அதனால அதையே வைச்சுப் பேர் வச்சுட்டார். சதங்கை அழகியார்ன்னு பேர் வைச்சார், அன்னைக்கு ராத்திரி முடிஞ்சு போச்சு. தூங்கப் போயாச்சு எல்லாரும். மறுநாள் காத்தால அஞ்சு மணி, பத்து வீட்டுக்கு அந்தண்டை இருந்து ஒருத்தர் வந்தார். நஞ்சீயர் வீட்டு வாசக்கதவைத் தட்டினார். ’அஞ்சு மணிக்கு யாரோ வந்து கூப்பிடுறாளே, என்ன’. அப்படின்னு அவர் போய் கதவைத் திறந்தார். ’யாரோ உம்ம வீட்ல ஒரு பிள்ளை இருக்காராமே, அவர் நேத்து ராத்திரி என் வீட்டுக்கு வந்து ரொம்ப தொந்தரவு பண்ணினார்.’, அப்படின்னு அந்த பத்து வீட்டுக்கு அந்தண்டை இருக்கறவன் சொன்னான். ‘என் வீட்ல ஒருத்தருமே கிடையாது. நானே சந்நியாசி. நீர் என்ன என் வீட்ல யார் இருக்கான்னு வந்து கேட்கறீர் இப்போ?’. ‘இல்லே, என் கனவுல ஒருத்தர் வந்தார், எனக்கு நாகப்பழம் கொண்டா, நாகப்பழம் கொண்டான்னு ரொம்ப தொந்தரவு பண்ணினார். நீர் யார்ன்னு கேட்டேன். உம்ம வீட்ல இருக்கறதாதான் அவர் சொன்னார்’. அவருக்கு அப்படியும் புரியலே, ‘என் வீட்ல எந்தப் பிள்ளையும் கிடையாது. அதுவும் யார் கனவுல போய் நாகப்பழம் கேட்கப் போறா இப்போ?’, அப்படின்னு இவர் அவரைப் பார்த்துக் கேட்டார். ‘கேட்டேனே, அந்தப் பிள்ளையை உன் பேரென்னன்னு நான் கேட்டேன். வெறும நஞ்சீயர் வீட்ல இருக்கேன்னு சொல்லாதே, உன் பேரென்னனு கேட்டேன், அந்தப் பிள்ளை ரொம்ப இனிமையாச் சொல்லித்து. என் பெயர், ‘சதங்கை அழகியார்’. அப்படின்னு அந்தப் பிள்ளை சொல்லித்து.’ அப்படின்னார். நஞ்சீயர் இதைக்கேட்டு மயக்கமா கீழே சரிஞ்சுட்டார். என்னன்னு அவரைத் தண்ணீர் தெளித்து எழுப்பி உட்கார்த்தினா, ‘என்ன உமக்கு மயக்கம்?’ன்னார். சாஸ்திரம் அத்தனையும், பராத்பரன்னென்னும், கேசவனென்னும், மாதவனென்னும், நாராயணனென்னும், ரிஷிகேசன்னும் கொண்டாடிண்டு இருக்கச்சே, ஒன்னுமில்லாத அல்ப ஞானத்த வச்சிண்டு, ஒரு சின்ன கழஞ்சு தங்கத்தால ஒரு சதங்கையைப் பண்ணிட்டு, எனக்கு இருக்கிற புத்தியில சதங்கை அழகியார்ன்னு ஒரு பேர் சொன்னா, இதை நீ முதல்ல ஏத்துண்டே இருக்கக்கூடாது. ஏத்துண்டது ஆச்சர்யமில்லே, இதைப் போய் பத்து வீட்டுக்கு அந்தண்டை நீ அறிமுகம் வேற படுத்திண்டிருக்க பார், உன்னுடைய சௌலப்யத்தை நான் என்ன என்று சொல்லுவேன்? என்று நஞ்சீயர் ஆழ்ந்து போனார்ன்னு சரித்திரம். அதனாலே ‘தமர் உகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே, தமர் உகந்ததெப்பேர் மற்றப்பேர்’. அடியார்கள் எந்த உருவத்தை உகக்கிறார்களோ, அது உருவமாய், அடியார்கள் எந்தப் பேரை உகக்கிறார்களோ அது பேராய், அவ்வளவு நெருங்கினவனாக, சுலபனாக பெருமான் இருக்கிறான். இது முதலார்வகளுடைய நிரூபணம். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – ஆழ்வார்கள் அறநெறி உபந்நியாசம் – Toronto) March 19 தனியன்
- (மணவாள மாமுனிகள் தனியன் – அழகிய மணவாளன் அருளியது)
- (குருபரம்பரைப் பொது தனியன் – கூரத்தாழ்வான் அருளியது)
- (எம்பெருமானார் தனியன் – கூரத்தாழ்வான் அருளியது)
- (நம்மாழ்வார் தனியன் – ஆளவந்தார் அருளியது)
- (ஆழ்வார்கள் உடையவர் தனியன் – ஸ்ரீ பராசர பட்டர் அருளியது)
- (பிள்ளை உலகாசிரியன் தனியன்) -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – உபதேச ரத்தின மாலை உபந்நியாசம் – WA-DC) மணவாள மாமுனிகள் தனியன் – விளக்கம்.
இந்த தனியன் நம்பெருமாளாலே அருளப்பட்டது. நம்பெருமாளுக்காக, மணவாள மாமுனிகள் ஒரு வருட காலம் ஸ்ரீரங்கத்தில் திருவாய்மொழி ஈடு காலக்ஷேபம் பண்ணியவுடன், நம்பெருமாள் மனமகிழ்ந்து, அர்ச்சகர் ஒருவரின் குழந்தை உருவத்தில் வந்து, மணவாள மாமுனிகளுக்கு சமர்ப்பித்த தனியன் இது. ஸ்ரீசைலேச தயாபாத்ரம் – ஸ்ரீசைலேசர் என்னும் திருவாய்மொழிப்பிள்ளையின் தயைக்குப் பாத்திரமானவரும், தீபக்யாதி – ஞானம் நிரம்பிய பக்தி, குணார்னவம் – குணங்களையுடைய கடல், தீபக்யாதி குணார்னவம் – ஞானம், பக்தி முதலிய குணங்கள் நிரம்பிய கடலைப் போன்றவரும், யதீந்த்ர ப்ரவணம் – யதீந்தரராய் இருக்கக்கூடிய இராமானுஜரின் திருவடிகளிலே நீங்காத காதல் கொண்டவருமான, ரம்ய – அழகிய, ஜாமாதரம் – மணவாள, முநிம் – முநி(களை) வந்தே – வணங்குகிறேன். இந்த தனியன் அந்த நாள் முதல் எல்லா இடத்திலும் முதல் தனியனாக, திவ்ய பிரபந்த சேவா காலத்தில் அனுசந்திக்கப்படுகிறது. எறும்பியப்பா அருளிய மணவாள மாமுனிகள் ஸ்தோத்திரம்
என்மூலம் ஆஸ்வயுஜமாஸ் அவதாரமூலம் – இந்த லோகம் உஜ்ஜீவனத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கு எது தெரியுமோ மூலம்? அழகிய மணவாள மாமுனிக்கு எது மூலமாய் அவதார நட்சத்திரமாய் இருந்ததோ, அந்த மூல நட்சத்திரம்தான் நாம எல்லாரும் ஆத்ம உஜ்ஜீவனம் அடையறதுக்கும் மூலம். காந்தோபயந்திர்யமுன கருணைஹசிந்தோஹோ ஆஸீதஸத்ஸுகநிதஸ்ய மமாமி சக்தாமூலம் – நான் இதுவரைக்கும் ஒன்னுமில்லாத கல்லு கட்டையாட்டம் இருந்தேன், அப்படி இருந்த என்னைக்கூட பாடவைத்தாரோ இல்லையோ? என்னுடைய சக்திக்கு ஆதாரமாக இருந்தது மூல நட்சத்திரம். ததேவ ஜகதத் ஹ்ருதயைஹ மூலம் – அதுதான் என்னைக்கும் உலகமே வீறு கொண்டு விளங்குவதற்கு மூலம். (நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – மாசற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் உபந்நியாசம் – WA-DC) மணவாள மாமுனிகளின் சத்சிஷ்யர்கள்மணவாள மாமுனிகளின் சத்சிஷ்யர்கள் எட்டுப் பேர், அஷ்டதிக் கஜங்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். அதுலே
(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – மாசற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் உபந்நியாசம் – WA-DC) உபதேச ரத்தின மாலைமணவாள மாமுனிகள் அருளிச்செய்த மற்றொரு அற்புத கிரந்தம். உபதேச ரத்தின மாலைங்கிறது, பூர்வாச்சார்யர்களுடைய உபதேசங்களான ரத்தினங்களையே மாலையாகத் தொடுத்து சமைக்கப்பட்டது. பூர்வர்கள் நிறைய உபதேசம் பண்ணியிருக்கா, அவர்களைப் பற்றி நாம தெரிஞ்சுக்கணும். ஆழ்வார்கள் அவதரித்த நாள்கள், அவர்கள் அவதரித்த திவ்ய தேசங்கள், அவர்கள் பாடியிருக்கறது, இது இத்தனையும் நாம தெரிஞ்சுக்கணும்ங்கிறதுக்காக உபதேச ரத்தின மாலை பாடினார்.
- நான் வெண்பாவில வைச்சு பாசுரமா பாடுறேன். எல்லாரும் நீங்க அதை நல்லாக் கேட்டுக்குங்கோ. எந்த திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால் – ஸ்ரீசைலேசர்ங்கிற திருவாய்மொழிப்பிள்ளையின் அனுக்கிரகத்தாலேதான் பாடுகிறேன், என்று உபதேச ரத்தின மாலைப் பாசுரமும் பாடினார். ஆச்சார்யனின் அவசியம் – உபதேச ரத்தின மாலை
(உபதேச ரத்ன மாலை – 60வது பாசுரம்) ஒருவன் தன்னுடைய குருவினுடைய பாதங்களில் அன்பு வைக்காமல், நேரடியாக பகவானைப் பற்றினால், பகவான், தான் பெரிதாக நினைக்கும் ஆச்சார்யனிடத்திலே இவனுக்குப் பற்றில்லாதபடியால் தன்னுடைய விண்ணாட்டை இவனுக்கு கொடுக்க அவசியமில்லாமையால், கொடுப்பதில்லை.
(உபதேச ரத்ன மாலை – 61வது பாசுரம்) ஞானமும் அனுஷ்டானமும் நிறைந்து இருக்கக் கூடிய குருவை அடைந்து விட்டாலே போதும், பெருமான் தன்னாலேயே வைகுந்தத்தை தந்துவிடுகிறார். இங்கு காஞ்சீ ஸ்வாமிகள் தெரிவிப்பராம், ‘தானே வைகுந்தம் தரும்’ என்றால் ‘பெருமாள் கொடுக்கிறான்’ என்பதல்ல பொருள், ‘தன்னாலயே, அதுவாகவே, குடுப்பதற்குத்தானே அது இருக்கிறது என்பதாற்போல, அவ்வளவு எளிதாகக் கிட்டும்’ என்று சொல்வார். இதில் ‘தேனார் கமலத் திருமாமகள்’ன்னு பிராட்டியையும் சேர்த்துக்கறார். ஏனெனில் ஆச்சார்யன் கடக க்ருத்தியம் பண்ணி, பெருமாளையும் பிராட்டியையும் சிஷ்யனுக்குக் காட்டிக் கொடுத்து, பிராட்டியினடத்திலே சேர்க்க, பிராட்டி பெருமானின் திருவடித் தாமரைகளிலே சேர்ப்பிக்க, அவன் அனுக்கிரகித்து அவனுடைய நித்ய கைங்கர்யத்திலே ஈடுபடுகிறோம் என்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் ஆழ்ந்த பொருள். பெருமாளை நேரடியா பற்றினால் அவர் உதறினாலும் உதறிடுவர். ஏன்னா அவர் நிரங்குச சுதந்திரன். அவனை நேரடியாக பற்றுவது, ஒருவர் கையைப் பிடித்து காரியம் கொள்ளுமாப்போலே. உதறினாலும் உதறுவர். ஆனால் ஆசார்யன் பரதந்திரன். அவன் சுதந்திரனே இல்லையே. அவரைப் பற்றுவது ஒருவரது காலைப் பிடித்து காரியம் சாதிக்குமாப்போலே, உதற இயலாது. மேலும் பகவானின் திருவடிகள் வேறல்ல, ஆச்சார்யன் வேறல்ல. ஆச்சார்யனே பகவானுக்கு திருவடிகளாக இருக்கிற படியால், ஆசார்யனைப் பற்றினால் நிச்சயமாக வைகுந்தம் கிட்டும் -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – மாசற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் உபந்நியாசம் – WA-DC) திருவாய்மொழி நூற்றந்தாதிமணவாள மாமுனிகள், திருவாய்மொழியைச் சுருக்கமாக சொல்லவேண்டுமென்று, ஒரு திருவாய்மொழிக்கு ஒரு பாசுரமாய் திருவாய்மொழி நூற்றந்தாதி அப்படிங்கிற பிரபந்தம் சாதிக்கிறார்.
இது ரொம்ப ஆச்சர்யமான பிரபந்தம். நம்மாழ்வரினுடைய ஒரு திருவாய்மொழி 1102 பாட்டு. அதுக்குள்ள பத்து பத்து. ஒரு பத்துங்கிறது 100 பாட்டு. 100ன்னா 110 பாட்டு இருக்கும்ன்னு வச்சுக்கங்கோ. ஒரோரு பத்தையும், முதல் பத்து, இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து, நாலாம் பத்து,.. என்று சொல்கிறோம். இந்த பத்துக்களுக்குள்ள பத்து திருவாய்மொழி. முதல் திருவாய்மொழி, இரண்டாம் திருவாய்மொழி, மூன்றாம் திருவாய்மொழி,… என்று சொல்கிறோம். ஸ்வாமி இதென்ன திருவாய்மொழி, அதென்ன திருவாய்மொழின்னா, அது மொத்தமா ‘திருவாய்மொழி’ன்னு கிரந்தத்துக்கு பெயர். ஆனா அதற்குள்ள ஒரொரு பத்து பாசுரத்துக்கும் திருவாய்மொழின்னு பெயர். திருவாய்மொழியிலே ஒரு பாட்டுக்கு கணக்கு சொல்லணும்ன்னா, உதாரணத்துக்கு, முதல் பத்து (1), நாலாம் திருவாய்மொழி (4), இரண்டாம் பாட்டு (2), 1.4.2, அப்படின்னு சொல்லப்படும். திருவாய்மொழி நூற்றந்தாதியிலே, ஒரு திருவாய்மொழிக்கு ஒரு பாசுரம். அப்போ மொத்தம் எத்தனை இருக்கும்? 100. நூறு திருவாய்மொழிகள் (பத்து பத்து, நூறு). அதிலே சில பிரதிக்ஞைகளெல்லாம் பண்ணிக்கிட்டார். அவை, அ. ஓரொரு பாசுரத்திலயும் நம்மாழ்வார் திருநாமம் வரணும். ஏன்னா அவர்தானே இதை எழுதினதே, அதனால அவருக்கு க்ருதக்ஞதை சொல்ல வேண்டாமா? ஆ. அந்த திருவாய்மொழி என்ன கருத்தைச் சொல்லித்தோ, அந்த கருத்தை கண்டிப்பா இந்த ஒரு பாட்டுக்குள்ள சொல்லிடணும். இ. அந்த திருவாய்மொழி எந்த சொல்லில ஆரம்பிச்சுச்சோ, இந்த பாட்டு அந்த சொல்லிலதான் ஆரம்பிக்கணும். ஈ. அந்த திருவாய்மொழி எந்த சொல்லில முடிஞ்சதோ, இந்த பாட்டு அந்த சொல்லிலதான் முடியணும். உ. அந்தாதியா இருக்கணும். ஏன்னா, திருவாய்மொழி அந்தாதி. ஊ. எல்லாத்துக்கும் மேலே, பகவானைக் குறித்து நம்மாழ்வார் என்னான்னு அனுபவிச்சாரோ, அதை ஆழ்வாரைக் குறித்து நாம சொல்ல வேண்டும். இவைதான் பிரதிக்ஞைகள். சொல்றச்சே ரொம்ப சுலபமா இருக்கும். பாடிப்பார்த்தா தெரியும். அப்படின்னா அவர் கஷ்டப்பட்டு பாடினாரான்னா, ஆழ்வார்கள் ஆச்சார்யார்கள் யாருமே கஷ்டப்பட்டதில்லே. இவர்களெல்லாம் பகவத் அனுகிரகத்தாலே பாடினபடியாலே, அவா பாட்டுக்கு நினைச்சதை பாடுவர்கள். பாடினது நல்லா இருக்கும். ஒரு பாட்டு பார்ப்போம்.
உயர்வே – உயர்வற உயர்நலம் உடையவன் –னு பதிகம் ஆரம்பிச்சதோ இல்லையோ? உயர்வே-ன்னு ஆரம்பிச்சுட்டார். மாறன் – மாறன் –ங்கிறது நம்மாழ்வாருடைய பெயர், திருநாமம் வந்துடுத்து. முதல் திருவாய்மொழியினுடைய கடைசி பாசுரம் ‘வீடு’ன்னு முடியறது, இங்கேயும் ‘வீடு’ன்னு முடிச்சுட்டார். அதுக்கு மேல சொன்னது முக்கியம். பகவானுடைய திருவடிகளைப் பற்றினா மோட்சம்ன்னு நம்மாழ்வார் திருவாய்மொழில சொன்னாரோ இல்லையோ, மாறன் வேறாகவே விளையும் வீடு – நம்மாழ்வார் திருவடிகளைப் பற்றினா மோட்சம்ன்னு இவர் சொல்லிட்டார்.
-(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – மாசற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் உபந்நியாசம் – WA-DC) March 04 மாசற்ற செம்பொன் மணவாள மாமுனிகள்
- (மணவாள மாமுனிகள் தனியன் – அழகிய மணவாளன் அருளியது)
(எறும்பியப்பா அருளிய மணவாள மாமுனிகள் ஸ்தோத்திரம்) பூர்வாச்சார்யார் பரம்பரையிலே கடைசியிலே அவதரித்தவர் மணவாள மாமுனிகள். விசதவாக் சிகாமணிகள் என்றும், ஆதிசேஷனுடைய அவதாரம் என்றும், யதீந்த்ரரான இராமானுசருடைய மறுஅவதாரம் என்றும், நம்பெருமாளும் இவரிடத்தே திருவாய்மொழியின் ஈட்டு வ்யாக்யானத்தைக் கேட்க ஆசைப்பட்டான் என்றும், பெருமை பெற்று விளங்கக்கூடிய மணவாள மாமுனிகள். அவர் அவதரித்தது, ஐப்பசி மாசம், மூல நட்சத்திரம். அந்த ஸ்வாமி இப்பூவுலகத்திலே அவதரித்ததனுடைய பிரயோஜனம் என்ன? ஒவ்வொரு ஆச்சார்யரும் ஏதோ ஒரு பிரயோஜனத்திற்காக பகவானாலே சிருஷ்டிக்கப்படுகிறார். நாதமுனிகள் தொடக்கமாக, மணவாள மாமுனிகள் ஈறாக ஆச்சார்யர்கள் பூர்வாச்சார்ய பரம்பரையிலே இரத்தினம் இரத்தினமாக அவதரித்தார்கள். அவ்வாச்சார்யர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு குறிக்கோள் உண்டு. தனித்தனியான ஒரு இலட்சியமும் உண்டு. அனைவருக்கும் இருந்த குறிக்கோள், உபயவேதாந்தமாகிற சாஸ்திர பிரதிஸ்டாபனம் பண்ண வேண்டும். ஸ்ரீமத்வேதமார்க்க பிரதிஷ்டாபனாச்சார்யர்களாய் இருக்க வேண்டும். இது சம்ஸ்க்ருத வேதாந்தம், இது திராவிட வேதாந்தம். இது இரண்டினுடைய பொருள் இதுதான், அப்படிங்கறதை உலகோர் சந்தேகத்துக்கிடமில்லாமல் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய ஞானம் மலர்ந்து, பக்தியாக முதிர்ந்து, சரணாகதிக்கு ஆட்பட்டு, இராமானுஜ சம்பந்தத்தைப் பெற்று, அர்ச்சிராதியிலே சென்று, பெருமானுடைய திருவடித் தாமரைகளை அடைந்து, நித்ய கைங்கர்யத்திலே நீடூழி இருக்க வேண்டும், இதைத்தான் ஒரோரு ஆச்சார்யரும் ஆசைப்பட்டார். ஆச்சார்யர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு இலட்சியம் உண்டுன்னால், இதுதான் இலட்சியம். பகவான் தனித்து விடப்பட்டு விடக்கூடாது. ஜீவாத்மாக்களும் தனித்து விடப்பட்டு விடக்கூடாது. ஒருத்தருக்கொருத்தர் அறிந்து கொண்டு, அவனுக்கு பல்லாண்டு பாடுவதற்காக இவர்கள் இருக்க வேண்டும். இதைத் தயார் படுத்தறதுக்குத்தான் ஆச்சார்யர்கள் அவதாரம். அப்போ முன்னால் ஆழ்வார்கள் எதற்காகப் பிறந்தார்கள்? ரிஷிகள் அனைவரும் எதற்காகப் பிறந்தார்கள்? ரிஷிகள் சம்ஸ்கிருதத்திலே சாஸ்திரார்த்தத்தை விளக்குவதற்காகப் பிறந்தவர்கள். முதன்முதலில் அநாதியாய், அபெளருஷேயமாய், வேதங்களும் வேதாந்தங்களுமே உலகத்தை ஆண்டு வந்தன. வேத, வேதாந்தார்த்தத்தைக் கொண்டுதான் மக்கள் பகவானை அறிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமே நிலை. ஆனால் பகவான் பார்த்து, ’இனி கலியுகத்துக்குத் தக்காற்போலே, அவர்கள் அறிந்த தமிழ் மொழியிலே வேதாந்தார்த்தத்தைக் குடுப்போம்’, அப்படிங்கறதுக்காக ஆழ்வார்கள் அனைவரையும் பிறப்பித்தான்.
- (உபதேச ரத்தின மாலை – 4வது பாசுரம்) -என்று பத்து ஆழ்வார்கள் அவதரித்தார்கள். அவரவர்கள் பகவானை அனுபவித்து நூறு நூறு பாசுரங்களாய், பத்துப் பத்து பாசுரங்களாய், ஆயிரமாயிரமாகப் பாடிப்போந்தார்கள். அதுகொண்டு சாஸ்திரத்தின் அர்த்தங்களையெல்லாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆயினும் ஆழ்வார்கள் பாசுரமே மூலமாய் செந்தமிழிலே இருந்துவிட்டபடியால், அதனுடைய சாரார்த்தங்கள் எவை, அதற்கு என்னென்ன திருவுள்ளத்திலே வச்சுண்டு ஆழ்வார்கள் இதை எழுதியிருப்பர்கள், என்று நமக்குத் தெரிய வேண்டுமோல்லையோ? அவர்கள் காலம் என்றோ, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக. ஆனா அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு இந்தப் பாசுரங்களை எழுதி இருப்பர்கள், அதை நாம் புரிஞ்சுக்கனும்ங்கிறதுக்காகவே, பகவான் ஆச்சார்யார்கள் அனைவரையும் பிறப்பித்தான். இவர்களுடைய பணி யாது எனில், ஆழ்வார்களுடைய பாசுரங்களையும் ஒரு கையில் வைத்துக் கொள்ள வேண்டும், வேதாந்தம், இதிகாசம், புராணம் ஆகிய சம்ஸ்கிருத பிரபந்தத்தையும் ஓர் கையில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ் பாஷை ஒரு பக்கம், சம்ஸ்க்ருத பாஷை மற்றொரு பக்கம். இது ஒரு பக்கம். இன்னொன்று, பகவானுடைய நிலை யாது, அவர் எப்படி உள்ளார், ஸ்வரூபம் என்ன, ஜீவாத்மாக்களின் நிலை யாது, அவர்கள் ஸ்வரூபம் என்ன, இந்த ரெண்டையும் தெரிந்து கொண்டு, தங்கள் கையிலிருக்கிற பெரிய சாமக்கிரி, அதுதான் அவாள்ட்ட இருக்கற உபகரணம் இப்போ, சம்ஸ்க்ருத வேதாந்தம், திராவிட வேதாந்தம் இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு, ஜீவாத்மாக்களைத் திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆட்செய்வித்தல். இதுதான் ஆச்சார்யர்கள் அத்தனை பேருக்கும் பிரயோஜனம். இதற்கு அவர்கள் ஏதேனும் எதிர்பார்த்தார்களா என்றால், ‘க்யாதி லாப பூஜா அபேக்ஷயர’ செய்தார்கள். ஒரு புகழ் கிடைக்கும்ங்கிறதுக்காக செய்ததில்லை. லாபம் ஏற்படும்ங்கிறதுக்காக செய்ததில்லை. நாலு பேர் நம்மளை விழுந்து சேவித்து, பூஜிப்பார்கள், மதிப்புக் கொடுப்பார்கள்ங்கிறதுக்காக செய்தததில்லை. ஒரு புகழுக்கு, பணத்துக்கோ, மதிப்புக்கோ ஆசைப்பட்டுச் செய்யாமல், பகவானுடைய திருவடிகளை எல்லாரும் அடைய வேண்டும், இந்த ஒரே காரணத்துக்காகத்தான் பூர்வாச்சார்யர்கள் அவதரித்து, நிறைய வ்யாக்யான க்ரந்தங்களைச் சாதித்தார்கள். இதிலே முதல் ஆச்சார்யன்னு சொல்லணும்ன்னால், காட்டு மன்னார் கோவிலிலே திருவவதாரம் பண்ணின, ஸ்ரீரங்கநாதமுனி. அதைச் சுருக்கமாய், அன்போடும், மதிப்போடும் ‘நாதமுனிகள்’ என்று நாம் அழைத்துக் கொண்டு வருகிறோம். நாதமுனிகள்தான் நம்மாழ்வாரைப் ப்ரத்யட்சமாகக் கண்டு நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தத்தையும் பெற்றார். பெற்று, தம்முடைய மருமக்களான ‘மேலையகத்தாழ்வார், கீழையகத்தாழ்வார்’ மூலமாக, அதைத் தாளத்திலே அமைத்து இசை கூட்டி, இப்படி இனி உலகத்தில் அநுசந்தானம் பண்ணலாம், இது இயற்பா - இயலாகப் பாடவேண்டிய பாசுரங்கள், இது இசைப்பா - இசையோடு சேர்த்துப் பாடவேண்டிய பாசுரங்கள், சன்னிதானத்தில் இன்னென்ன பொழுதில், இன்னென்ன நாளில், இன்னென்ன ப்ரபந்தங்கள் பாடப்பட வேண்டும் என்று பண்ணிவைத்தார். அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஏனெனில் சம்ஸ்கிருத வேதாந்தம் மட்டுமே ஆண்டு கொண்டுவந்த காலம். அதுவரைக்கும் ஆழ்வார்கள் பாடினாரே தவிர, ஆழ்வார்கள் காலத்திலேயேகூட எவ்வளவு தூரம் கோயில்ல அநுசந்தானம் பண்ணியிருப்பா? நம்மாள சொல்லறதுக்கு முடியாது. பாடியிருப்பர்கள், ஏன்னா திருமங்கையாழ்வார் பத்து நாட்கள், திருவாய்மொழியைக் கேட்கணும்ன்னு நம்பெருமாளிடத்திலே பிரார்த்தித்து, நம்பெருமாள் அதுக்குன்னு உடனே நீ மண்டபம் கட்டுனுட்டார் அவரையே. அப்புறம்தான் திருமங்கையாழ்வார் ‘இராப்பத்து’ மண்டபத்தையே கட்டினார். ‘பகல் பத்து, இராப்பத்து’ங்கிறது பிற்பாடு ஏற்பட்டது. திருமங்கையாழ்வார் காலத்தில பத்துநாள் உற்சவம் மட்டும்தான் உண்டு. நம்மளே யோசிச்சுப் பார்ப்பமே, அவரே அவரோட பாட்டை கேளுன்னு கேட்டிருப்பரா, அதனால அவர் திருமொழியைப் பற்றிக் கேட்டிருக்க வாய்ப்புக் கிடையாது. அவர் திருவாய்மொழியைப் பத்தித்தான் கேட்டார். நம்பெருமாளும் அதற்கு மண்டபத்தை ஏற்படுத்திண்டு, பத்துநாள் உற்சவமா நடத்திண்டிருந்தார். அப்புறம் பிற்பட்டவர் ஏற்பட்ட பிற்பாடு, நாதமுனிகள் காலத்திலேதான் நாலாயிரத்தையும் பகவான் கேட்கட்டும், என்று இருபத்தியொரு நாட்கள் உற்சவமாக்கி, பகல் பத்து, பத்து நாளில் முதல் இரண்டாயிரங்களும், இராப்பத்து பத்து நாளில் திருவாய்மொழியும், இருபத்துயோராவது நாளில், இயற்பா முழுவதும் 1000 பாசுரங்களையும் கேட்பதாக ஏற்படுத்தி வைத்தார். எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணினவர் நாதமுனிகள்தான். எப்படி வடமொழி வேதாந்தத்தை வியாசர் பிரித்துக் கொடுத்தாரோ, அதைப்போல தென்மொழி வேதாந்தத்தை நாதமுனிகள் பிரித்துக் கொடுத்தார். ஈடு நம்பிள்ளை திருவாய்மொழிக்கு ’ஈடு முப்பத்தாறாயிரப்படி’ என்கிற மிகப்பெரிய வியாக்யானத்தைச் சாதித்தார். ஆனால் அதை அவர் எழுதவில்லை. அது அவர் பண்ணின உபந்நியாசம். இராமானுஜர் திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் எழுதவில்லை. அவர் எழுதிய அத்தனை க்ரந்தங்களும் சம்ஸ்கிருதத்தில் அமைந்தவை. ஆனால் அவரது காலக்ஷேபத்தில் திராவிட வேதாந்த கருத்துக்களையே எடுத்துச் சொல்லுவர். ‘ஸ்ரீபாஷ்யக்காரர் இது கொண்டு சூத்திர வாக்கியங்களை ஒருங்க விடுவர்’ என்று பெயர் பெற்றார். இந்த தமிழ் பாசுரங்களைக் கொண்டே ப்ரம்ம சூத்திரத்தின் சூத்திரங்களுக்கு அர்த்தம் சொல்லுவர். அவர் திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் எழுத வேண்டும் என்று பார்க்கிறார். யாரை எழுதச் சொல்வது என்று பார்க்கையில், கூரத்தாழ்வானை எழுதச் சொல்லலாம் என்றால், அவர் இருக்கட்டும், பிற மதத்தவர்களுடன் போரிட அவர்தான் வேண்டும், அப்படின்னு கூரத்தாழ்வானை வச்சுனுட்டார். கூரத்தாழ்வானுடைய திருக்குமாரர், மூத்தவர், ‘ஸ்ரீபராசர பட்டர்’.
- என்று நாம கொண்டாடற அளவுக்கு பட்டர். பட்டர்ன்னா நம்பெருமாளுடைய குமாரர்ன்னே சொல்லிடலாம், ஸ்ரீரங்கநாச்சியாரின் குமாரர்ன்னே சொல்லலாம். அந்த அளவுக்கு பட்டருக்கு உண்டான வைபவம். சரி, அவரைக் கொண்டு எழுதலாமான்னு பார்த்தா, பட்டர் ரொம்ப ஆச்சர்யமாய் ஸ்லோகம் பண்ணுவர், எத்தனையோ அர்த்தங்கள்லாம், நிர்வாஹங்களெல்லாம் சொல்லுவர். ஆனா அந்த பட்டர் என்ன விண்ணப்பம் பண்ணிட்டார்ன்னா, ‘இது நம்மால் இயலாது. நீர் நாலாயிரத்துக்கும் வ்யாக்யானம் பண்ணனும்னு பார்க்கறீர், அது யார் செய்ய வேண்டுமோ, அவர்கள் செய்ய வேண்டுமே தவிர, நான் அதற்கு ஆள் அல்லன்’. என்ன அப்படி சொல்லுகிறீர்ன்னு எல்லாரும் கேட்கிறார்கள். ‘இல்லேல்லே, அது பெண் பாவனை இருக்கறவனுக்குத்தான் எழுத வருமே தவிர, வெரும் புருஷர்களுக்கு எழுத வராது.’, என்று பட்டர் சொல்லிட்டார். புருஷனா மட்டும் ஆழ்வார் பாசுரங்களைப் படிச்சுப் பார்த்தா அர்த்தம் புரியாது. அப்ப ஸ்ரீபாஷ்யம் மட்டும்தான் படிக்கனும், இங்க படிக்க வரமுடியாது. ஆழ்வார் பாசுரத்தினுடைய அர்த்தம் புரியனும்ன்னா, அவரே நாயகி பாவத்திலே பாடுறார், அப்ப துளியாவது அந்த பக்தி, பாவனை இல்லாட்டா நம்மளால எழுத முடியுமா? அது புரியாது, புரியப் போறதில்லே. பட்டர் சொல்லிட்டார் அப்போ, ‘இது முலை எழுந்தார் படியே தவிர, மோவாய் எழுந்தார் படி அல்ல’. புருஷர்கள் எழுதக்கூடியது அல்ல, இது பெண்ணிடுடைய தன்மை இருந்தால்தான் எழுத முடியும்ன்னார். அப்பதான் இராமானுசர், அவருடைய அபிமான புத்திரர்ன்னு பெயர் பெற்ற ‘திருக்குறுகைப் பிரான் பிள்ளான்’, அந்தப் பிள்ளானுக்குத்தான் முதல் நியமனம். இராமனுசர் ‘ஏவியிட’, ஆணையினால் எழுதியது திருக்குறுகைப் பிரான் பிள்ளானின் முதல் வியாக்யானமான ‘இன்பமிது ஆறாயிரம்’. ஆறாயிரப்படி வியாக்யானம் முதல்ல பிறந்தது. ஒன்னு நல்லதாப் பிறந்துடுத்து, அப்புறம் நிறைய பிறந்துடும். அதற்கடுத்து ஒன்பதனாயிரப்படி, ‘ஏறு ஒன்பதனாயிரம்’, நஞ்ஜீயர்ங்கிற மகாச்சாரியர் சாதித்தார். அவர் யாருன்னால், இராமானுசருடைய சிஷ்யர் எம்பார், எம்பாருடைய சிஷ்யர் பட்டர், பட்டருடைய சிஷ்யர் நஞ்சீயர். நஞ்சீயரினுடைய சிஷ்யர்தான் நம்பிள்ளை. நம்பிள்ளை காலட்க்ஷேபம் சொல்லிண்டிருக்கார். நம்பிள்ளைக்கு பெரியவாச்சான் பிள்ளை அப்படிங்கற சிஷ்யர் உண்டு. நம்பிள்ளை கார்த்திகையில் கார்த்திகை நாள், பெரியவாச்சான் பிள்ளை ஆவணியில் ரோகிணி நாள். கண்ணனே பெரியவாச்சான் பிள்ளை, திருமங்கை ஆழ்வாரே நம்பிள்ளை. அதனால திருமங்கை ஆழ்வாரிடத்தில எல்லா அர்த்தங்களையும், கண்ணனே கேட்டுண்டார் அப்படின்னு வச்சுக்கணும்.
-ன்னு திருக்கண்ணமங்கையில் பாசுரம். திருக்கண்ணமங்கை பெருமானைப் பார்த்து திருமங்கையாழ்வார், ‘நான் பாடறதெல்லாம் உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன். புரியாதுன்னா என்கிட்ட பாடத்துக்கு உக்காரு. நான் சொல்லித்தரேன்’னார். கண்ணனுக்கு ரொம்ப ஆசை, ‘நீர் சொல்லி நான் கேட்கனும்ன்னு எனக்கும் ஆசைதான், ஒருதடவை கீதை சொல்லிட்டு அப்புறம் நான் வாயைத் திறக்கறதில்லேன்னு இருக்கேன். அதனால நீரே சொல்லும், நானே கேட்டுக்கறேன். ஆனா இப்ப முடியாது. இதுக்குன்னு ஒரு பிறவி எடுப்போம், அப்போது உம்மிடத்திலே கேட்டுக் கொள்வோம்’. அந்த திருக்கண்ணமங்கை கண்ணனே, இப்போது பெரியவாச்சான் பிள்ளை. அன்றிருந்த திருமங்கையாழ்வாரே, இபோது நம்பிள்ளை. நம்பிள்ளையினடத்திலே பெரியவாச்சான் பிள்ளை அர்த்தங்களையெல்லாம் கேட்டுண்டார். ’இருபத்தினாலாயிரப்படி’ங்கிற வியாக்யானத்தை அனுக்கிரகித்தார். ’பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவர்க்கும் தெரிய வியாக்யைகள் செய்வார்’. பெரியவாச்சான் பிள்ளை பின்பு உள்ளவர்களுக்கும் தெரியும்படி வியாக்யானம் பண்ணி வச்சதனாலதான், திவ்யப்பிரபந்தத்தினுடைய அர்த்தத்தை மக்களெல்லாம் புரிந்து கொண்டார்கள். இல்லேன்னா யாருக்கும் அது தெரிஞ்சிருக்காது. பெரியவாச்சான் பிள்ளை திருவாய்மொழிக்கு இருபத்தினாலாயிரப்படி சாதித்தார். நிறுத்தலே, நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்துக்கும் வியாக்யானம் பண்ணினார். அந்த ஒரு மகாச்சாரியன் மட்டும்தான் நாலாயிரத்துக்கும் வியாக்யானம் பண்ணினவர். கண்ணனே திரும்ப வந்து பிறந்ததுனாலதான் அது முடிஞ்சது. சாமான்யர்களால அது எழுதியிருக்க முடியாது.
எந்த பெரியவாச்சான் பிள்ளை அனுக்கிரகம் இருந்தா ஸ்ரீதரன் சுலபமா நம்மை கடாஷித்தரனோ, அவரை வணங்குகிறோம். இது இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம். அவர் இருபத்தினாலயிரப்படி சாதிச்சுட்டார். நம்பிள்ளையினுடைய கோஷ்டியிலதான் வடக்குத் திருவீதிப் பிள்ளைங்கிற சிஷ்யர் உட்கார்ந்திட்டிருக்கார். நம்பிள்ளையினுடைய கோஷ்டியிலதான் இருபத்தினாலாயிரப்படி சாதித்த பெரியவாச்சான் பிள்ளையும் சிஷ்யராக உட்கார்ந்திட்டிருக்கார். கூட்டமா கேட்டுண்டிருக்கா. இவா கேட்கறது ஆச்சர்யமில்லே, பெரிய பெருமாளே நம்பிள்ளையை கேட்கணும்ன்னு ஆசைப்பட்டார். நம்பிள்ளை ஒரு இடத்துலே உட்கார்ந்து காலக்ஷேபம் பண்ணிண்டிருக்கார், உள்ளுக்குள்ள பெரிய பெருமாள் சயனிச்சிண்டிருக்கார். ‘எல்லாம் என்னைப் பத்தித்தான் பேசறா, என்னால கேட்கவே முடியலே.’ இது அவருக்கு ரொம்பவே வருத்தம். எப்படியாவது எழுந்து போய் கேட்டுடனும்னு. எழுந்துக்க விடுவாளா, அர்ச்சாவதாரம். இதுவே கண்ணனா இருந்தா, இராமனா இருந்தா எழுந்து போய்க் கேட்டுடுவர். பெரிய பெருமாள் சன்னிதி நாம சேவிச்சிருக்கோம். வாசல்ல ஜெய விஜயாள் துவாரம். மேற்குப் பக்கம் தலை வைத்து, கிழக்குப்பக்கம் கால் நீட்டி, தெற்க பார்த்து படுத்திருக்கார். கீழ படி இறங்கினோம்னால் நேரே விஷ்வக்ஷேனர் சந்நிதி. அந்த சந்நிதிக்கு நேரே கீழப் படிக்கு இடது புறம், நாலுகால் மண்டபம் இருக்கும். அதுலே சாய்வா இன்னைக்கும் ஒரு கல்லு திரணை போட்டு வச்சுருக்கா. அந்த திரணைல சாய்ந்து கொண்டுதான் நம்பிள்ளை காலக்ஷேபம் சாதிப்பர். அதனாலே அடுத்த தடவை ஸ்ரீரங்கத்துக்கு விடை கொள்ளும் போது அவசியம் அந்த இடத்தை சேவிச்சுட்டு வரணும். இத நாம மறந்து போய்டக்கூடாதுன்னு ஒரு வழக்கம் திருவரங்கத்திலே உண்டு. அதாவது, ஆர்யபடாள் வாசல் தாண்டி, நாழி கேட்டான் வாசல் தாண்டி உள்ள வந்துட்டால், பிரதட்சணமா எல்லாரும் போய்ட மாட்டா. அப்பிரதட்சணமா சிறிது தூரம் வந்து ஒரு பெரிய திருவேங்கடமுடையான் படம் எழுதி வச்சுருக்காளோல்லையோ, அந்த படத்துக்கு முன்பாக, நாம நேர விஷ்வக்ஷேனர் சந்நிதியைப் பார்த்து விழுந்து நமஸ்கரிப்போம். அது எதுக்குன்னா, நம்பிள்ளை காலக்ஷேபக் கோஷ்டிக்குத்தான் அந்த நமஸ்காரம். கிட்டகத்தானே பெரிய பெருமாள் சயனிச்சிண்டிருக்கார். அப்படி வெளிய வந்தால் இவர் சொல்லிண்டிருக்கற இடம் இருக்குமோல்லையோ? ஒருநாள் பார்த்து பார்த்து தாங்கலே பெரிய பெருமாளுக்கு. எழுந்து போய் கேட்டுடுவோம், அப்படின்னு நினைச்சிண்டு, பதினாறு அடி நீளத்துல சயனிச்சிண்டிருக்கறவர் எழுந்துட்டார். எழுந்து வாசப்படியைத் தாண்டனும். தாண்டி திரும்பி ஜெயவிஜயாள் துவாரத்த தாண்டி, இடதுபக்கம் போய்க் கேட்கணும். எப்போதுமே பெருமாளுக்கு அருகில் ‘திருவிளக்கு கிச்சன்’ அப்படின்னு ஒருத்தர் நிப்பர். அவர்தான் கைல விளக்கு பிடிச்சிண்டே இருப்பர். அர்ச்சகாள்லாம் காலக்ஷேபம் கேட்கப் போய்ட்டா. இவர் ஒருத்தர்தான் பெரிய பெருமாள பார்த்துண்டிருக்கார். இவர் எங்கேயாவது போய்ட்டார்ன்னா, அப்புறம் ஜகத்து என்னாகும்? அதனாலெ போகக்கூடாதேங்கறதுக்காக பார்த்துண்டிருந்தார். பெரிய பெருமாள் மெதுவே எழுந்திருந்து படிக்கட்ட தாண்டனும். அவர் திருமேனி என்ன சின்னத் திருமேனியா, கர்ப்ப கிரகத்த தாண்டிப் போறதுக்கு இப்போ? இவரோ குறுக்க நிண்டுண்டு இருக்கார். இவர் பேர்ல போய் இடிச்சார். யாரது, யாரோ நம்பள இடிக்கிறாப்ல இருக்கேன்னு திருவிளக்கு கிச்சன் திரும்பிப் பார்த்தார். அவரை விட ரெண்டு மடங்கு உசரத்துல பெரிய பெருமாள் நிண்டிண்டுருந்தார். ‘யார், எதுக்கு எழுந்து வந்தீர்?’. ‘இல்லே, நம்பிள்ளை காலக்ஷேபம் சொல்லிண்டிருக்கார். என்னைப் பத்தின திருவாய்மொழியைத்தான் அவர் சொல்லிண்டிருக்கார். நான் கேட்கணும்னு ஆசைப்பட்டேன்’ன்னார். ’அதெல்லாம் இந்த அவதாரத்தில் இல்லை, இப்ப நீர் பண்ண முடியாது, போம்’, அப்படின்னு கைல பிடிச்சிண்டிருந்ததோட போய்த் தள்ள, அன்று போய் சயனிச்சிண்டவர்தான், இன்னிவரைக்கும் அவர் எழுந்திருக்கலே. பெரிய பெருமாள் நம்பிள்ளை காலக்ஷேபத்த கேட்கணும் ஆசைப்பட்டார். ஆனா ஆசை முழுவதும் நிறைவேறலே. பெரிய பெருமாளுக்கு இல்லாத பாக்கியம் நமக்கு இருக்கு. நம்ம கேட்கலாம் பாருங்கோ? அவராலகூட கேட்க முடியலே. அந்த பாக்கியத்தை நமக்கு குடுத்திருக்கிறார் எம்பெருமான். நம்பிள்ளை ஈடு முப்பத்தாறாயிரம் சாதித்தார். அப்போ அதற்கு ’ஈடு முப்பத்தாறாயிரம்’ங்கிற பெயர் இல்லை. அவர் காலக்ஷேபம்தான் சொல்லிண்டிருக்கார். காலக்ஷேபம் சொல்லிண்டிருக்கச்சே, அவர் சிஷ்யர் வடக்குத் திருவீதிப் பிள்ளைன்னு சொன்னேனோல்லையோ, அவர் வந்து, அவர் சொன்னத எல்லாத்தையும் எழுதிக்கிறார். எழுதிக்கிறார்ன்னா, நேர எழுதினா பார்த்துருவா. அர்த்தங்களையெல்லாம் மனசில நன்னா தேக்கிக்கனும், கிரகத்துக்கு போகனும். அவர் இல்லத்துக்கு போய், ஒரு எழுத்து, ஒரு புள்ளி விடாம எழுதணும். இது ஒண்ணும் நடக்கிற வேலையாவே தெரியாது. அவர் கேட்டுண்டதை அப்படியே எழுதிற முடியுமான்னா, அவர் ஆச்சார்யன் அனுக்கிரகம் இருந்தது. முழுக்க எழுதிட்டார். பட்டோலைல நன்னா எழுதிக் கொண்டு வந்து நம்பிள்ளையினடத்திலே சமர்ப்பித்தார். வாங்கி வாசித்துப் பார்த்தார். ‘இதெப்படி என் அனுமதியில்லாமல் நீர் எழுதலாம்’ன்னு, கேட்டார். நான் அனுமதிக்கலையே உம்மை. நீர் எதுக்காக எழுதினீர் இப்போ? அப்படின்னு கேட்டுட்டு, ‘பெரியவாச்சான் பிள்ளை இருபத்தினாலயிரப்படி சாதிச்சுட்டார்ன்னு நீர் எழுதினீரோ?’ அப்படின்னு கேட்டார். ‘ஸ்வாமி, அந்த மாதிரியெல்லாம் எந்த அபிப்ராயத்தோடும் அடியேன் எழுதலே. என்னமோ ஸ்வாமி சாதித்தது நினைவில இருந்ததுனால எழுதினேன்.’ வாங்கி வாசிச்சுப் பார்த்துட்டு, அப்படியே கட்டி தன் சன்னிதியிலே வச்சிட்டு, ‘இந்த ஈடு வெளியிலே பிரச்சாரத்துக்கு இருக்காது.’ அப்படின்னு மறைச்சுட்டார் நம்பிள்ளை. அதுக்கப்புறம் அந்த ஈட்ட அவர் வெளில விடவே இல்லை. சுமார் 180 – 200 வருஷங்களுக்கு அது இல்லை. இல்லாது போய்டுத்துன்னா இப்போ என்னன்னா, அந்த முப்பத்தாறாயிரப்படி வியாக்யானத்துக்கு என்ன பெருமைன்னா, அதை வாசித்தவர்களுக்கு முக்திக்கு படிக்கட்டு ஏத்தி வச்சுரும் அது. நமக்கு கட்டி வச்சிருந்தா எவ்வளவு சுலபமா இருக்கும்? ஏறிப் போறதுக்கு. கட்டி வச்சிருந்தா இன்னொரு ஆபத்து இருக்கு. போய் பார்த்துட்டு திரும்ப வந்துருவா. ஆனா அதுக்கு வழியில்லே. ஆழ்வார் பாசுரத்தில், ‘ஏற்றி வைத்து ஏணி வாங்கி’ன்னு சாதித்தார். ஏற்றி வைச்சு – மேலே ஏத்திட்டு, ஏணியை வாங்கிடணும். ஏணியை எடுத்துட்டாத்தான் இவன் திரும்பி இறங்கி வரமாட்டானே தவிர, இந்த லோகத்துல இவனுக்கு இருக்கிற பாசமும், பந்தமும், பிணைப்பும் எப்படியா இருந்தாலும், திரும்பி வந்துரணும், திரும்பி வந்துரணும்ன்னு தோன்றதோல்லையோ? அதனாலதான் நம்பிள்ளை பார்த்தார். இது படிக்கட்டு கட்டி வைச்சதப்போல் ஆயிடும். அப்புறம் எல்லாரும் மோட்சத்துக்கு போக ஆரம்பிச்சுருவா. அது பகவானுக்கு உகந்ததாக இருக்காது. கூடாது. அப்படிங்கறதுக்காக மறைச்சுட்டார். அது வெகுநாட்கள் மறைந்துதான் இருந்தது. ‘சீரார் வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதேதார் வேதத்தின் உட்பொருளை’, வேதத்தினுடைய உட்பொருளை நம்பிள்ளை சாதிக்க, வடக்குத் திருவீதிப் பிள்ளை பட்டோலை கொண்டார். ஆனால், ‘தாருமென வாங்கி நம்பிள்ளை’, அது உம்மகிட்ட இருக்கக்கூடாது, தாரும், அப்படின்னு நம்பிள்ளை வாங்கினுட்டார். வாங்கி ஜாக்கிரதையா உள்ள வைச்சுட்டு, இனி ‘ஒருத்தர் ஒருத்தருக்கு மட்டும்தான் இந்த ஈடு கொடுக்கப்படும். மற்ற பேருக்கு அது கிடையாது’, அப்படிங்கறதுக்காக அதை மறைத்து, முதல்ல ‘ஈயுண்ணி மாதவாச்சாரிய ஸ்வாமி’ அப்படிங்கறவரிடத்திலே அதைக் குடுத்துட்டார். அந்த ஈயுண்ணி மாதவர் அதை தன்னுடைய திருக்குமாரருக்கு கொடுக்கப் போகிறார். ஆங்கவர்பால் பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை பாங்குடனே நம்மகனார் தம்கையில். ஆங்கு அவர்பால் பெற்ற – நம்பிள்ளையினடத்திலே பெற்ற சிறியாழ்வான்னு பாட்டிலே இருக்கு, உபதேச ரத்தின மாலையிலே. இதுக்கு முன்பாட்டு, ‘தாருமென வாங்கி நம்பிள்ளை, ஈயுண்ணி மாதவருக்கு’ன்னுதான் பாட்டு இருக்கு. அடுத்த பாட்டுல ஆங்கவர்பால் பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை-ன்னா, அப்ப ஈயுண்ணி மாதவாச்சாரியருக்குத்தான் ‘சிறியாழ்வான் அப்பிள்ளை’ன்னு திருநாமம். அதுக்கு வியாக்யானத்திலே பிள்ளை லோகம் ஜீயர் தெரிவிக்கிறார். ’ரொம்ப சிறியவரோன்னா, கீர்த்திலே ரொம்ப பெரியவர். மூர்த்தியிலே சிறியவர்.’ அதனாலே சிறியாழ்வான் அப்பிள்ளை அதை வாங்கிக் கொண்டார். அதை தன்னுடைய குமாரரான ‘ஈயுண்ணி பத்மநாபர்’ அப்படிங்கறவருக்கு குடுத்தார். ஈயுண்ணி பத்மநாபர் தான் வச்சிண்டிருந்தார். அப்புறம் அவருடைய சத்சிஷ்யரான ‘நாலூர்ப்பிள்ளை, ‘பாங்குடனே நாலூர்ப்பிள்ளைக்கு அவர்தான் நல்ல மகனார்க்கு அவர்தாம்’. அடுத்து நாலூர்ப்பிள்ளைக்கு வந்தது. நாலூர்ப்பிள்ளையினடத்திலேர்ந்து நாலூராச்சான் பிள்ளை. இப்படி ஒருத்தர் ஒருத்தரிடத்திலயா வந்திண்டிருக்கு நம்பிள்ளையினுடைய ஈடு. மற்ற பேருக்கு அது கிடையாது. இதெல்லாம் எந்த ஊரில நடந்தது தெரியுமா? சம்பிரதாயத்துக்கும் தேவப்பெருமாளுக்கும் தொடர்புங்கிறது இன்னது, அன்னது கிடையாது. ஸ்ரீரங்கநாதனிடத்தில ஒரு குணம். எல்லாரும் உழைக்கணும், அவர் அனுபவிக்கணும். இந்த குணம் அவருக்கு நிறையவே உண்டு. எல்லா பெருமாளும் என்னென்னவோ கஷ்டப்படணும், மெனக்கெடணும், அவருக்காக. கடைசில பலத்தை யார் அனுபவிப்பர்ன்னா, இவர் வாங்கிண்டு போய்டுவர். சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்குன்னு. காலக்ஷேபம் சாதிக்கப்பட்டதென்னவோ திருவரங்கத்தே. ஆனா இந்த ஈடு ஸுரக்ஷிதமா வைக்கப்பட்டதெங்கே? பெருமாள் கோவிலிலே. காஞ்சீபுரத்திலதான் இது ஒன்னொண்னும் ஜாக்கிரதை படுத்தப்பட்டு வந்தது. கடைசியில உலகத்துக்கு யார் மூலமா கிடைச்சது தெரியுமா? பெருமாள், நம்பெருமாள் ஒண்ணும் பண்ணலே. பண்ணினது தேவப்பெருமாள். லோகத்துக்கு ஈடு கிடைக்கணும்ங்கிறதுக்காக பிரயத்தனம் எடுத்ததே தேவப்பெருமாள்தான். இப்ப ஈடு நாலூராச்சான் பிள்ளையினிடத்திலே இருக்கு. அப்பதான் ‘திருவாய்மொழிப்பிள்ளை’ங்கிற மகாச்சாரியர், குந்தி நகரத்திலே திருவவதாரம் பண்ணி வாழ்ந்து வந்தார். ‘ஸ்ரீசைல பூர்ணர்’ என்று அந்த ஸ்வாமிக்கு திருநாமம். ஸ்ரீசைல பூர்ணர் திருவாய்மொழிப் பிள்ளை, குந்தவை நகரத்திலே இருந்தார், வாழ்ந்தார், குறுநில மன்னராகக்கூட இருந்தார். அவரே ராஜாவாக்கூட இருந்திருக்கார். அப்புறம் கூரநாராயண ஜீயராலே திருத்தப்பட்டார். சம்ப்ரதாயத்துக்காக ஆட்பட்டார். அதற்கு பிற்பாடு நடக்கப்போகிற சரித்திரம். இது ஒருபுறமிருக்க, வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு இரு குமாரர்கள் அவதரித்தார்கள். பிள்ளை லோகாச்சார்யாரும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும். பிள்ளை லோகாச்சார்யரின் சிஷ்யர் திருவாய்மொழிப் பிள்ளை. திருவாய்மொழிப் பிள்ளை காஞ்சீபுரம் தேவப் பெருமாளை மங்களாசாசனம் பண்ணுவதற்காக ஓர்முறை எழுந்தருளுகிறார். தேவப் பெருமாளை அவர் போய் சேவிச்சார். எல்லாரும் நிண்டிருக்கா. கோஷ்டி நடக்கறது. அப்போ திரை சேர்த்து, ஸ்ரீசடகோபம், தீர்த்தம் மரியாதைகள் செய்ய வேண்டும். தேவப்பெருமாள்ட்டேர்ந்து அவாவாளுக்கு தீர்த்த மரியாதைகள் போய்ண்டிருக்கு இப்போ. நாலூர்ப்பிள்ளை எழுந்தருளியிருக்கார். நாலூராச்சான்பிள்ளை எழுந்தருளியிருக்கார். திருவாய்மொழிப் பிள்ளையும் எழுந்தருளியிருக்கார். அப்போ, திருவாய்மொழிப் பிள்ளை தேவப் பெருமாளைப் பார்த்து பிரார்த்திச்சுக்கறார். ‘இவரிடத்திலே அந்த ஈடு இருக்கிறதே, அது எப்படியாவது நமக்குக் கிடைக்கணும்’னுட்டு. அதுகூட கிடைச்சுரும், கஷ்டமில்லே. ஏன்னா ஒருத்தரொருத்தருக்கு அது கிடைச்சுட்டுத்தான் இருக்கு. அது கஷ்டமில்லே இப்போ. ஆனா திருவாய்மொழிப்பிள்ளை அப்போதே தேவப் பெருமாள்கிட்ட பிரார்த்தித்தது, ‘இது மேலோர்க்கீந்தாராக ஆக வேண்டும்’. இது வெறும் ஒருத்தரோட நிற்பது கூடாது, உலகத்தார் அனைவரும் உஜ்ஜீவன அடைவதற்காக ஈடு வேண்டும், என்று தன் திருவுள்ளத்திலே நினைச்சிண்டு இருக்கார். ஸ்ரீசடகோபத்தை அர்ச்சகர் ஸ்வாமி சாதித்துக் கொண்டே வருகிறார். அப்ப, இந்த கடைசி நாலூராச்சான் பிள்ளை இருந்தாரோல்லையோ, அவரிடத்திலே சாதிக்கிறார். அப்பதான் திருவாய்மொழிப் பிள்ளை பிரார்த்திச்சிண்டிருக்கார் தேவப் பெருமாளிடத்தே. கேட்டவர்கள் கேட்டதை வரம் தரும் பெருமாள். வரம் தரும் மாமணி வண்ணன், உடனே தம் திருவுள்ளத்திலே கொண்டு, ஆச்சான் பிள்ளைக்காக உபதேசித்தார். ‘நீர் இந்த ஈடு முப்பத்தாறாயிரப்படியைக் கொடும். அதை நம்முடைய சிஷ்யரான திருவாய்மொழிப் பிள்ளையினடத்திலே கொடும்’ன்னு ஆணையிட்டார். ‘அதுக்கென்ன, அவசியம் குடுத்துடுறேன். தேவரீர் சொன்னா ஆணைக்கு மீறி நாம நடப்பமா?’ அப்படின்னு ஒத்துனுட்டார். அப்புறம் திருவாய்மொழிப் பிள்ளை ஞாபகப்படுத்தினார் மனசாலயே தேவப் பெருமாளுக்கு. ‘அது நடந்துரும் ஸ்வாமி. அடியேன் அதுக்காக பிரார்த்திக்கலே தேவரீர்கிட்டே இப்போ. அதற்குப் பிற்பாடு நடக்கறதுக்காகத்தான் பிரார்த்தித்தேன்’. ‘ஓ! அதுவா’. இன்னைக்கும் ரொம்ப பெரிய மனுசாளுக்கெல்லாம் ரொம்ப ஞாபகமிருக்காது. தேவப் பெருமாள்கிட்ட போய் ஏதோ ஒன்னு சொல்லி வைச்சோம்ன்னா, அவர் ஞாபகம் வச்சுக்க வேண்டாமா? ஞாபகம் வச்சிருந்தவரையும் ஒன்னைச் சொன்னார். இவர் நல்லவேளை, ஆனா அப்பவே ஞாபகப்படுத்திடனும். கவலைப்பட்டுண்டு, சொல்லலாமோ, கூடாதோன்னு இருந்தா காரியம் கெட்டுப் போய்டும். அதனால திருவாய்மொழிப் பிள்ளை உடனே ஞாபகப் படுத்தினார். அந்த சடாரியை எடுக்கறதுக்குள்ள தேவப் பெருமாள், ‘இதை நல்ல மகனார்க்கு அவர்தாம் ஈந்தார் மேலோர்க்கீந்தார்’ – ’இது மேற்கொண்டு பலருக்கு ஆகும்படி கொடு’, என்று ஆணையிட்டார். அப்போ பிள்ளை அவரிடத்திலே பிரார்த்திக்கிறார், ‘சரி, நீ சொன்னது. அப்போ என் ஆசார்யன் நியமனம் என்னாகும்?’ அது கூடாதுன்னு என் ஆச்சார்யன் சொல்லிக்குடுத்திருக்காரே, நீர் இன்னைக்கு குறுக்க வந்து சொல்லிட்டீர்ன்னா, அப்ப ஆச்சார்ய வாக்கியம் உள்ளந்தனம் ஆகாதா’ன்னா, ‘நாம் அத்தைச் சொல்லுவோம். சொன்னபடி செய்யும். உம் ஆச்சார்யனிடத்திலே நான் சொல்லிக்கிறேன். எத்தைச் செய்ய வேண்டுமோ நாம் சொல்லுவோம்’னு சரின்னா, பக்கத்துல இருந்த ஆச்சார்யனும் தலையசைத்தார். அப்புறம் திருவாய்மொழிப் பிள்ளைக்கு அர்த்தங்களெல்லாம் குடுக்கப்பட்டு, அவர் மேற்கொண்டு எல்லாருக்கும் குடுக்கணும்னு உறுதி கொண்டுட்டார். இப்போ ஸ்ரீசைல பூர்ணர் திருவாய்மொழிப் பிள்ளையினிடத்திலே க்ரந்தமும் வந்துடுத்து, அதற்குரிய உரிமையும் வந்துடுத்து. இதை மேற்கொண்டு எல்லாரிடத்திலும் குடுக்கலாம்ன்னு வந்தாச்சு. யாரிடத்தில குடுக்கலாம்ன்னு திருவாய்மொழிப்பிள்ளை யோசிக்கிறார். அப்போதுதான்,
- என்று திருவாய்மொழிப்பிள்ளையின் சிஷ்யராக மணவாள மாமுனிகள் திருவவதாரம் பண்ணினார். திகழகிரந்தான் திருநாவிலுடையவராம் தாதரண்ணர் அவருக்குத் திருக்குமாரராய், ஆழ்வார் திருநகரி, திருக்குறுகூர், நம்மாழ்வார் எங்கே அவதரித்தாரோ அங்கேயே மணவாள மாமுனிகள் திருவவதாரம் பண்ணினார். திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஒரு பிரபாவம் தெரியுமோ? அவருக்குத் ’திருமலை ஆழ்வான்’னு ஒரு பெயர் உண்டு. அவருடைய இயற்பெயர் அது. திருவாய்மொழிப் பிள்ளைங்கிறது பட்டப்பெயர். நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகத்திலேதான் அவரும் திருவவதாரம் பண்ணினார். திருவாய்மொழியில் அவருக்கு இருந்த ஆதரவால் அவருக்கு திருவாய்மொழிப் பிள்ளைங்கிற பெயர் ஏற்பட்டது. அந்த ஸ்வாமி பண்ணின கைங்கர்யம் ஒரு ஒப்பற்ற கைங்கர்யம். ஆழ்வார் திருநகரி முழுக்க ஒரே புல்லு மண்டிப்போச்சு. அந்த இடம் முழுக்க ஒரே இருட்டா போயி, ஒரே மண்ணு மண்டிப் போச்சு. அதை எல்லாத்தையும் புனர்நிர்மாணம் பண்ணி, ‘இராமாநுச சதுர்வேதி மங்கலம்’ங்கிற ஒரு இடத்தை அவர் ஏற்பாடு பண்ணினார். இன்னைக்கு நீங்க ‘பவிஷ்ய ஆச்சார்ய விக்கிரகம்’ன்னு ஆழ்வார் திருநகரிக்குப் போனா சேவிச்சுக்கலாம். ரொம்ப ஆச்சர்யமான சன்னிதி. இதை ஏற்பாடு பண்ணி, அந்த நாலு வீதி ஏற்பாடு பண்ணினதெல்லாம் திருவாய்மொழிப் பிள்ளை பண்ணின கைங்கர்யம். ஆழ்வாரையும் மறுபடியும் பிரதிஷ்டை பண்ணினார். இன்னைக்கும் அந்த திருவாய்மொழி வம்சத்தவர்கள் ஆழ்வார் திருநகரியிலிருந்து பெருமானுக்கு விடாமல் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு வருகிறார்கள். மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளைக்கு சிஷ்யரானார். அவரிடத்திலே எல்லா அர்த்தங்களையும் கேட்டுனுட்டார். திருவாய்மொழிப் பிள்ளை பரமபதத்துக்கு புறப்பட போறார், அப்போ அவர் மணவாள மாமுனிகள்கிட்ட ஒரு பிரதிக்ஞை வாங்கிக்கிறார். ’நமக்கு நாள் முடிந்து போய்விட்டபடியால், உம்மிடத்திலே ஒரே ஒரு பிரதிக்ஞை வாங்கிக்கறேன். நீர் சம்ஸ்கிருதத்திலே விற்பன்னர், வாஸ்தவம். ஸ்ரீபாஷ்யத்தைக் கற்கிறீர். வாஸ்தவம். ஆனால் ஒரு தடவை ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் சொல்லிட்டு, மற்ற எத்தனை தடவை முடியுமோ திருவாய்மொழியின் ஈட்டைத்தான் நீர் காலக்ஷேபம் சொல்ல வேண்டும். அதுதான் உன்னுடைய பிறவியின் பயனாகவே இருக்க வேண்டும்.’ என்று பிரதிக்ஞை வாங்கிக் கொள்ள, ‘அப்படியே, ஓம்’ என்று இசைந்தார் மணவாள மாமுனிகளும். அதனாலே மணவாள மாமுனிகளின் அவதாரத்திற்க்கு ஏது பிரயோஜனம்ன்னு பார்த்தால், நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஈட்டை ஜகத்து முழுக்க அறிந்து கொண்டு உஜ்ஜீவனம் அடைவிக்கச் செய்வது, இது மணவாள மாமுனிகளுடைய ரொம்ப உயர்ந்த பிரயோஜனம். அதனாலதான் அவரைப் பற்றி சொல்லச்சே, ‘மாசற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் வந்தினலேல், ஆற்றில் கரைந்த புளியல்லவோ தமிழ் ஆரணமே’. தமிழ் ஆரணம் – தமிழ் வேதம், தமிழ் வேதம்ங்கிறது திருவாய்மொழி. திருவாய்மொழி எங்கிருக்கிறதுன்னே தெரியாமப் போயிருக்கும். நல்லவேளை அவர் பிறந்தாரோ, ஈடு முப்பத்தாறாயிரப்படியை உலகம் முழுக்க பிரச்சாரம் பண்ணினார். இன்னைக்கும் நாம் திருவாய்மொழி கற்றுண்டு இருக்கோம். மணவாள மாமுனிகள் அவதரித்தது, ஐப்பசியில் மூல நட்சத்திரத்திலே. ஆங்கில கணக்குப்படி வருஷம், 1371. கடைசி நாள் 1443. சுமார் 73 ஆண்டுகள் இப்பூவுலகத்திலே எழுந்தருளியிருந்தார். இராமானுசர் 120 ஆண்டுகள் எழுந்தருளியிருந்தார். இராமானுசரும் ஆதிசேச அவதாரம், மணவாள மாமுனிகளும் ஆதிசேச அவதாரம். ஆனா ஒவ்வொருத்தருக்கும் மனசில ஒரு கேள்வி இருந்துண்டே இருக்கும். இராமானுசருக்கு எங்கேயும் ஆதிசேஷ பீடம் இல்லையே, ஆனா மணவாள மாமுனிகளுக்கு ஆதிசேஷ பீடம் இருக்கே. அவர் ஆதிசேஷ அவதாரம்ன்னா இருக்கறதுதான அதிலே? இவர் மட்டும்தான் ஆதிசேஷ அவதாரமா? ஏன் அந்த பீடம் இல்லேன்னு தோணும். ஆதிசேஷ அவதாரம்ங்கிறதுக்காக மணவாள மாமுனிகளுக்கு அந்த பீடம் இல்லை. அதை தன் சிஷ்யன் சமர்ப்பித்தார்ங்கிறதுக்காக அவர் வச்சிண்டு இருக்கார். சிஷ்யன் சமர்ப்பிச்சார்ன்னா, அது யார் ஸ்வாமி? தேவரீர் பீடமெல்லாம் ஆச்சார்யானுக்கு வைச்சுக் குடுக்கறாரே. அந்த சிஷ்யன் ரொம்ப பணக்கார சிஷ்யன். சாதாரண சிஷ்யனே இல்லே. அவர் சர்வக்ஞன் சிஷ்யன். எல்லாருக்குமெ அவர்தான் மயர்வற மதிநலமே அருளுவர். அந்த நம்பெருமாள்தான், மணவாள மாமுனிகளிடத்திலே, ‘நாம் இவர் வாயால் ஈடு கேட்க வேண்டும்.’ என்று ஆசைப்பட்டதாகச் சொல்லுவர்கள். அதனாலே நம்பெருமாள் சமர்ப்பிச்ச சேஷ பீடத்தைத்தான் இன்னைக்கும் மணவாள மாமுனிகள் வைச்சுண்டு இருக்கார். எதிராஜ விம்சதி, ஆர்த்தி பிரபந்தம் இதை ரெண்டையும் மணவாள மாமுனிகள் இராமனுசர் திருவடிகள் உபாயம்ன்னு சொல்றதுக்கும், அவர் திருவடிகளே ப்ராப்யம்ன்னு சொல்றதுக்கும் சாதித்தார். சரணாகதியை அனுஷ்டிக்கறதுக்காக எதிராஜ விம்சதி, கைங்கர்யத்தை பிரார்த்திக்கறதுக்காக ஆர்த்திப் பிரபந்தம். -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – மாசற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் உபந்நியாசம் – WA-DC) |
|
|