sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists Tools Help

Blog


    February 24

    ஸ்ரீவசன பூசண சூத்திரம் - எடுத்துக்காட்டு

    ஆச்சார்யனும் தன் ஆச்சார்யனுக்கு பரதந்திரன். இதை பிள்ளை லோகாச்சார்யர் தன்னுடைய ஸ்ரீவசனபூஷணத்தில ரொம்ப ஆச்சர்யமாய் தெரிவிக்கிறார். ஆச்சார்யன் தன்னை ஆச்சார்யனா தன் சிஷ்யனுக்கு நினைச்சுக்க கூடாதாம். இந்த சிஷ்யனைத் தன் சிஷ்யன்னு நினைச்சுக்க கூடாதாம். தன்னை இவனுக்கு ஆச்சார்யன்னும் நினைச்சுக்க கூடாதாம். ஸ்வாமி, அப்ப ஆச்சார்யன் என்னதான் நினைச்சுப்பர்? இதனாலதான் யார் வசனபூஷணத்தின் ஆழ்பொருளெல்லாம் அறிவர்ன்னு சாதிக்கிறார். சூத்திரம் ரொம்ப சின்னதா இருக்கும், சுழலிதமா இருக்கும். ஆனா அவர் என்ன சொல்றார்ங்கிறதை எத்தனை பண்ணி வாசித்தாலும் கிடைக்காது. ரெண்டு மகனீயர்கள் வ்யாக்யானம் பண்ணா, திருநாராயணபுரத்து ஆய் ஜனன்யாச்சார்ய ஸ்வாமி, இந்த ஸ்வாமி ஒரு வ்யாக்யானம் அனுக்கிரகித்தார். விபதவாக் சிகாமணிகளான மணவாள மாமுனிகள் விபுலமான வ்யாக்யானம் அனுக்கிரகித்தார். வ்யாக்யானத்தை எத்தனை தடவை வாசிச்சாலும் வாசிச்சிண்டெ இருக்க வேண்டியதுதான். ரெண்டு க்ரந்தம், ஒன்னு ஸ்ரீபாஷ்யத்தை ஒரு கையில வச்சுக்கனும், மத்தொன்னு ஸ்ரீவசனபூஷணத்தை இன்னொரு கையில வச்சுக்கனும். ஆயுசு முழுக்கப் படிச்சாலும் படிச்சிண்டே இருக்க வேண்டியதுதான். திரும்பத் திரும்ப எத்தனை தடவை படித்தாலும், ‘முடிச்சுட்டோம்’ என்று சொல்லுவதற்கு வாய்ப்பே இல்லை. படிச்சிண்டிருக்கேன், படிச்சிண்டிருக்கேன், படிச்சிண்டிருக்கேன்னு சொல்லலாமே தவிர, ஏதோ ஆச்சார்ய அனுக்கிரகத்தால ரெண்டு எழுத்து புரிஞ்சுண்டிருக்கேன்னு, பத்தாம் தரம் வாசிச்சாலும் சொல்லணும். எத்தனை தடவை காலக்ஷேபம் பண்ணாலும் அதான், கேட்டாலும் அதான், வாசிச்சாலும் அதான். முடித்துவிட்டோம்ங்கிற எண்ணம் மட்டும் அதிலே கிடையவே கிடையாது.

    ஆர் வசன பூடனத்தின் * ஆழ்பொருள் எல்லாம் அறிவார் *
    ஆரது சொல் நேரில் அனுட்டிப்பார் * ஓர் ஒருவர்
    உண்டாகில் * அத்தனை காண் உள்ளமே * எல்லார்க்கும்
    அண்டாததன்றோ அது.

    (உபதேச ரத்ன மாலை – 55வது பாசுரம்)

    ஆச்சார்யன் தன்னைப்பத்தி நினைக்கறச்சே தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யன்னு நினைச்சுக்கனும். தன்னை ஆச்சார்யன்னு நினைச்சுடக்கூடாது. இந்த சிஷ்யனையும் என் ஆச்சார்யனுக்கு சிஷ்யன்னு நினைச்சுக்கணும். தன் சிஷ்யன்னு நினைச்சுக்கவே கூடாது. அதனாலதான் ஒரு வழக்கம் உண்டு, ஆச்சார்யனிடத்தில ஸ்ரீபாததீர்த்தம் சேர்த்துக்கறோம் பாருங்கோ, அந்த ஸ்ரீபாததீர்த்தம் சேர்த்துக்கறச்சே ஆச்சார்யன் தன் ஆச்சார்யன் தனியனைச் சொல்லிடுவர். இவா ஸ்ரீபாததீர்த்தம் தன்கிட்ட சேர்க்கறதா அவர் சொல்லவே மாட்டார். தன் ஆச்சார்யனுக்குத்தான் இவன் ஸ்ரீபாததீர்த்தம் சேர்க்கிறான், அதனால ‘தான்’ங்கிர ஒரு வ்யக்தியே இல்லாதா போலேதான் ஆச்சார்யன் நினைச்சுக்கறார். இது ஒரு சூத்திரம்.  புரியறதுக்கு சிரமமா இருக்கு பாருங்கோ. மேலும் புரிஞ்சாலும் நடைமுறையில வரணுமே. யாரால இப்படி நினைச்சுக்க முடியும் இப்போ?

    ’சிஷ்யன் தன்னுடைய சொத்தைக் கொண்டு போய் ஆச்சார்யனிடத்திலே கொடுக்கக்கூடாது. ஆச்சார்யன் சிஷ்யனுடைய சொத்தை வாங்கிக்கக்கூடாது. சிஷ்யன் எல்லா சொத்தையும் ஆச்சார்யனிடத்தில சமர்ப்பிச்சுடனும்’. இது ஒரு சூத்திரம். ஸ்வாமி இப்போ என்னை என்ன பண்ண சொல்றீர் இப்போ? குடுக்கணும்ன்னு சொல்றீரா, வேண்டாம்ன்னு சொல்றீரா, என்ன பண்ண சொல்றீர்ன்னு சந்தேகம் வந்துருமோல்லையோ இப்போ? மணவாள மாமுனிகள் ரொம்ப ஆச்சர்யமா அபிப்ராயம் காட்டினார். எல்லாத்தையும் கொண்டு போய் ஆச்சார்யனிடத்தில, சிஷ்யன் சமர்ப்பிச்சுடனும்ங்கிறது உண்மை. ஆனால் அதை ‘என்னுது’ங்கிற எண்ணத்தோடே சமர்ப்பிக்கக்கூடாது. ’இது அவருடையது, அதை ஏதோ கொஞ்சநாள் விட்டு வைச்சிருந்தார். அவரிடத்திலேயே திரும்ப ஒப்படைச்சுட்டோம்’, அப்படிங்கற எண்ணத்தோட செய்யணுமே தவிர, ’இது என்னுது. நான் கொண்டுபோய் ஆச்சார்யனுக்கு கொடுக்கறேன்’ங்கிற எண்ணம் இருக்கக்கூடாது. அந்த எண்ணத்தோட குடுத்தான்னா, அதனாலதான் ‘சிஷ்யன் தன் சொத்தைக் குடுக்கக்கடவனல்லன்’ - தன்னுடையதை சிஷ்யன் கொடுக்கக்கூடாது. ஆச்சார்யன், சிஷ்யன் தன்னதுன்னு நினைச்சதை வாங்கிக்கக்கூடாது. ஆச்சார்யனுடையதுன்னு நினைச்சிண்டு சிஷ்யன் எதைக் குடுக்கிறானோ, அதை ஆச்சார்யன் வாங்கிக் கொள்ள வேண்டும். சிஷ்யன் ஆச்சார்யனுடையதத்தான் ஆச்சார்யனுக்கு கொண்டு போய் குடுக்க வேண்டும். ஒருவேளை மாத்தி நினைச்சுண்டுட்டான்னா, சிஷ்யன் தன்னுதுன்னு நினைச்சுண்டு ஆச்சார்யனிடத்தில போய் குடுத்திட்டா என்ன ஆகும்?

    வாங்கிண்டா என்ன ஆகும்ன்னா, ‘கொடுக்கில் கள்ளனாம், கொள்ளில் மிடியனாம்’. கொடுக்கில் கள்ளன் – இப்ப நாம கொண்டு போய் என்னுதுன்னு நினைச்சிண்டதை ஆச்சார்யனிடத்திலே போய் குடுத்துட்டேன்னு வச்சுக்கங்கோ, என்ன ஆகும்? என்னதில்லையே அது, அது அவருதோல்லையோ? அப்ப அவருதையே களவாடி, அவர்கிட்டயே குடுத்திட்டேனோல்லையோ? அப்ப நாந்தான் கள்ளன். நான் திருடந்தானே, இன்னொருத்தரோடத வாங்கி அவரிடத்தில குடுக்கறது எனக்கென்ன இப்போ? கொள்ளில் மிடியனாம் – அவனது நினைச்சிண்டு குடுத்தா வாங்கக்கூடாதுன்னு தர்ம சாஸ்திரம் சொல்லச்சே, அப்படின்னு நினைச்சிண்டு குடுத்தாக்கூட ஒரு ஆச்சார்யன் வாங்கிண்டார்ன்னு வச்சுக்கங்கோ, மிடியன் – தரித்திரன்னு அர்த்தம். ’ஒண்ணுமில்லாததுன்னால வாங்கிட்டார்ன்னா, இல்லேன்ன கையேந்திருக்க மாட்டார்’. ஆக ‘கொடுக்கில் கள்ளனாம், கொள்ளில் மிடியனாம்’. ’கொள், கொடை மாறாடில்’, இந்த கொடுக்கறதோ, கொள்றதோ மாறாடிட்டுத்துன்னால், ‘இருவருக்கும் ஸ்வரூபம் குலையும்’, ஆச்சார்ய ஸ்வரூபமும் குலைஞ்சு போய்டும், சிஷ்ய ஸ்வரூபமும் குலைஞ்சு போய்டும்.

    சில சூத்திரங்கள் ஆச்சார்யனைப்பத்தி. சிஷ்யனைப்பத்தி நிறைய சூத்திரங்கள். மணவாள மாமுனிகள் சாதித்தார், ‘இதென்ன ஆச்சார்யனுக்கு 14 சூத்திரம்தான், சிஷ்யனுக்கு இவ்வளவு சூத்திரம் இருக்கே’ன்னா, ஆச்சார்யர்களெல்லாம் ஒழுங்கா இருந்துருவா, நமக்குத்தான் தெரியாது. அதனாலதான் சிஷ்யனுக்கு இத்தனை சூத்திரங்களையும் அமைத்தார். ஆச்சார்ய ப்ரதிபக்தியே நமக்கு உபாயம். பக்தியில் அசக்தனுக்கு ப்ரபத்தி, ப்ரபத்தியில் அசக்தனுக்கு இது. ஆச்சார்ய அபிமானம்தான் ஒரே உபாயம்ன்னு, ‘பஞ்சமோபாயநிஷ்டை’ன்னு சொல்லுவர்கள், ‘சரம பர்வ நிஷ்டை’ன்னு சொல்லுவர்கள். அந்த நிஷ்டையைத்தான் ஸ்ரீவசனபூஷணத்திலே லோகாச்சார்யர் வெளியிட்டார்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – உபதேச ரத்தின மாலை உபந்நியாசம் – WA-DC)

    பிள்ளை லோகாச்சார்யாரின் க்ரந்தங்கள்

    பிள்ளை லோகாச்சார்யர் எழுதி வைத்தது, ‘அஷ்டாதச இரகஸிய க்ரந்தங்கள்’.  பதினெட்டு இரகசியங்கள் என்ன பேசின? இதை சுலபமா ஞாபகம் வச்சுக்கனும்ன்னா, மூன்றாக பிரிச்சுக்கங்கோ. அதாவது,

    1. இரகஸ்யத்ரேயத்த விளக்கறதுக்காக 8 க்ரந்தம்.
    2. தத்வத்ரேய அர்த்த பஞ்சகத்த விளக்கறதுக்காக 5 க்ரந்தம்.
    3. சம்பிரதாய அர்த்தத்தை விளக்கறதுக்காக இன்னொரு 5 க்ரந்தம்.

    இரகஸ்யத்ரேயம்னா, திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகமோல்லையோ? அத விளக்குவதற்காக,

    1. முமுஷுப்படி
    2. வ்யாதிரிச்சிகப்படி
    3. ஸ்ரீயப்பதிப்படி
    4. பரந்தபடி
    5. தனிப்பிரணவம்
    6. தனித்வயம்
    7. தனிசரமம்
    8. ஸாரசங்க்ரஹம்

    இந்த எட்டு க்ரந்தங்களும் இரகஸ்யத்ரேய விவரணம். அதிலே இன்னொரு ஆச்சர்யம் என்னன்னா, தனித்தனியா திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகத்துக்காக ஓரொரு இரகஸ்யம். தனிப்பிரணவம்ங்கிறது திருமந்திரத்த மட்டும் விளக்கும். தனித்வயம்ங்கிறது த்வயத்தை மட்டும் விளக்கும். தனிசரமம்ங்கிறது சரம ஸ்லோகத்தை மட்டும் விளக்கும். ஆனா இந்த படி, படின்னு வருது பாருங்கோ, முமுஷூப்படி, வ்யாதிரிச்சிகப்படி, ஸ்ரீயப்பதிப்படி, பரந்தபடி, இதெல்லாம் இந்த மூனு இரகசியத்தையும் விளக்கும். இந்த ஒரோரு க்ரந்தத்திலயும் திருமந்திரப் பிரகரணம், த்வயப் ப்ரகரணம், சரம ஸ்லோகப் ப்ரகரணம்ன்னு மூன்று, முன்று பிரகரணங்கள் இருக்கும். பின்னே எதுக்கு ஸ்வாமி நாலு புஸ்தகம்? வ்யாதிரிச்சிகப்படி சட்டுன்னு எழுதினாராம், அது ரொம்ப சுருக்கமா போச்சு. ஸ்ரீயப்பதிப்படி ஒரே சம்ஸ்க்ருத பகுளமாப் போச்சு. பரந்தபடி, பரந்து போச்சு. எல்லாத்தையும் சுருக்கி, முமுஷுப்படி. முமுஷு இருக்க வேண்டியதெப்படி? முமுஷுவுக்கு அறிய வேண்டிய இரகஸியங்கள் மூன்று. திருமந்திரம், த்வயம், சரம் ஸ்லோகத்தை அறிந்தால்தான் முமுஷுவுக்கு மோட்ஷமே, என்று தொடங்கித்தான் முமுஷுப்படி சாதித்தார். இதையெல்லாம் சேர்த்து எழுதிட்டோ, இவைகளைத் தனித்தனியே சொல்லணும் என்றுதான் தனிப்பிரணவம், தனித்வயம், தனிசரமம். எல்லாத்தையும்விட ஆச்சர்யமான ஒரு க்ரந்தம், ஸாரசங்க்ரஹம், த்வயார்த்தம் திருவாய்மொழியில் உள்ளது, ஆழ்வார் பத்துப் பத்துக்களை பாடினதே த்வயத்தினுடைய அர்த்தத்தை விளக்குவதற்காகத்தான், என்று இன்னென்ன பத்திலே த்வாயார்த்தம் எங்கெங்க இருக்கு அப்படின்னு ஸாரசங்க்ரஹத்திலே பாடிட்டுட்டார். இந்த எட்டுமே இரகஸ்யத்ரேயத்தை விவரிச்சது.

    தத்வத்ரேயத்துக்காக என்ன பாடினார்ன்னா,

    1. தத்வத்ரேயம்
    2. தத்வசேகரம்
    3. ப்ரமேய சேகரம்
    4. அர்த்த பஞ்சகம்
    5. அர்ச்சிராதி

    - என்று 5 க்ரந்தங்களைச் சாதித்தார்.

    தத்வத்ரேயம்ங்கிறது சிது, அசிது, ஈஸ்வரர்கள் இந்த மூன்று தத்வங்களைப் பற்றிச் சொல்லும். தத்வசேகரம்ங்கிறது பரஸ்வரூப, ஜீவஸ்வரூப, உபாயஸ்வரூப, ப்ராப்ய ஸ்வரூப, விரோதி ஸ்வரூபம், இந்த ஐந்துக்கும் என்ன ஆட்சேபங்கள் இருக்க முடியுமோ, அத்தனைக்கும் சமாதானங்கள் சொல்லி நிர்த்தாரணம் பண்ணினது. இதில ப்ரஸ்வரூப நிர்ணய ப்ரகரணம், ஜீவஸ்ரூப நிர்ணய ப்ரகரணம், உபாயஸ்வரூப நிர்ணய ப்ரகரணம், என்று தனித்தனியா இருக்கும்.

    அடுத்து ப்ரமேய சேகரம். ப்ரமேயமெது? பகவானைப் போய் அடையறதுதானே. ப்ரமேய சேகரம்ன்னால், இங்க நாம படற கஷ்டத்திலேர்ந்து படிக்கட்டு ஏத்தினார். சுமார் ஒரு நூறு படிக்கட்டு இருக்கு. இது ஒரு பெரிய ஏணியைக் கொண்டு வந்து வைத்தார். வச்சுட்டு, நான் சம்சாரத்திலே துன்பப்படறது கீழ்ப்படிக்கட்டுன்னார். ஒவ்வொரு படியா மாறி (ஏறி) மேல போனுமோல்லையோ? இவை மொத்தத்தையும் படிக்கட்டுகளாக வைத்தார். இதைத்தான் ப்ரமேய சேகரத்தாலே சாதித்தார்.

    அர்த்த பஞ்சகம். அர்த்த பஞ்சகம்தான், மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்கநெறியும் தடையாகி தொக்கியலும் ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குறுகையர் கோன் யாழிநிசை வேதத்தியல், அப்படிங்கறது அர்த்த பஞ்சகம். அந்த ஐந்தையும் விளக்கினார் அர்த்த பஞ்சகத்தாலே.

    அர்ச்சிராதி. அர்ச்சிராதி மார்க்கத்திலே நாம புறப்பட்டு போவோமோல்லையோ? அதை நாலு ப்ரகரணமாகப் பிரித்து, நாம போற வழியிலெல்லாம் என்னென்ன நல்லதெல்லாம் நடக்கும், அங்க போன பிற்பாடு எப்படி வைகுண்டநாதனை நாம அனுபவிக்கிறோம், இதெல்லாம் ரொம்ப நன்னா விளக்கினார். இது அர்ச்சிராதியில பண்ணினது

    கடைசி ஐந்து, சம்ப்ரதாய அர்த்தங்கள் நிறைய எழுதினார். அதிலே, ப்ரபன்ன பரித்ராநம், அதே போல பெருமானுடைய வைபவத்தைச் சொல்றதுக்காகவே ஏற்பட்ட நவவித சம்பந்தம், நவரத்ன மாலை, இதெல்லாம் அதிலே இருக்ககூடியது.

    ப்ரபன்ன பரித்ராநம், ஈஸ்வரன்தான் நமக்கு எப்போதும் இரட்சகன், மற்ற யாரும் எப்போதும் இரட்சகர்கள் ஆக மாட்டார்கள், அப்படிங்கறதுக்காக ப்ரபன்ன பரித்ராநம். அடுத்து சம்சார சாம்ராஜ்யம்ன்னு ஒரு க்ரந்தம். இந்த சம்சாரத்தை சாம்ராஜ்யமா நினைச்சு நாம வாழ்ந்துண்டு இருக்கோமாம், அப்படியில்லே, இது சாம்ராஜ்யமேயில்லே. இது வெறும் நரகம். அதத் தெரிஞ்சுக்காம நீங்க சம்சாரத்தை சாம்ராஜ்யமா நினைச்சிண்டிருக்கீள். இந்த உலகத்தில் இருக்கற எல்லாத்தையும் இதிலே விளக்கினார். அது ஒன்னொன்னும் எங்கெங்க கொண்டு போய் விடப்போறதுங்கறதையும் சொன்னார். இதத்தாண்டி நாம எப்படி மோட்சம் போகனும், பகவான் அதுக்கு எப்படி அனுக்கிரகிக்கிறான்ங்கிறதையும் சொல்லிட்டார்.

    நவவித சம்பந்தம், பகவானுக்கும் நமக்குமுண்டான ஒன்பது சம்பந்தங்களை விளக்கினார்.

    பிதாச ரக்ஸஹஸேஷி பர்தாக்ஞேயோ ரமாபதிஹி
    ஸ்வாம்யாதாரோ மமாத்மாச போக்தாசாத்யம் அனூதிதஹா

    - என்கிற ஒன்பது சம்பந்தங்கள், அதை விளக்கினார்.

    நவரத்ன மாலை, இதிலே என்ன சொல்றார்ன்னா, நம்முடைய தேகம், நம்முடைய பந்துக்கள், ஆசார்யர்கள், பிராட்டி, பெருமாள், தேவதாந்திர்ங்கள், ஸ்ரீவைஷ்ணவர்கள், அவைஷ்ணவர்கள், இதைப் போல ஒன்பது பேரிடத்தில நான் எப்படி நடந்துக்கனும், அப்படிங்கறதை சொல்றார்.

    கடைசி, ஸ்ரீவசன பூஷணம். ஆறு ப்ரகரணங்கள். சகலார்த்தங்களையும் சுருக்கிப் பிடித்து ஆறு ப்ரகரணங்களாலே தெரிவித்தார்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – உபதேச ரத்தின மாலை உபந்நியாசம் – WA-DC)

    February 23

    பிள்ளை லோகாச்சார்யர் அவதாரம்

    முதலாழ்வார்கள் அவதரித்த மாசத்திலேயே அவதரித்தவர்தான், வடக்குத் திருவீதி பிள்ளையின் திருக்குமாரரான, ஜேஷ்ட குமாரரான பிள்ளை லோகாச்சார்யர். அவர் கருத்து வேறல்ல, முதல் ஆழ்வார்கள் எக்கருத்தை வெளியிட்டு அருளினார்களோ, அதையேதான் தானும் கருத்தாக வெளியிட்டருளினார். முதலாழ்வார்கள் மூவரும் சொன்னதென்ன? பகவானே ப்ராபகம், அவனே ப்ராப்யம். அவனேதான் புருஷார்த்தம், அவனேதான் உபாயம். இந்த கருத்தை நன்னாச் சொல்றதுக்குன்னே பிள்ளை லோகாச்சார்யர் திருவவதாரம் பண்ணினார். அவரும் ஐப்பசி மாசத்திலே, திருவோண நட்சத்திரத்திலே இப்பூவுலகத்திலே திருவவதாரம் பண்ணினார். பிள்ளை லோகாச்சார்யர் அவதரித்தது 1205ம் ஆண்டு.  ஐப்பசியில ஓணம்ன்னாலே அது ‘முப்புரியூட்டிய திருநட்சத்திரம்’. சில சில நட்சத்திரங்களுக்குத்தான் அந்தப் பெருமையே உண்டு. அதாவது, பெருமாளும் பிறந்திருப்பர், ஒரு ஆழ்வாரும் அவதாரம் பண்ணியிருப்பர், ஒரு ஆச்சார்யனும் அவதாரம் பண்ணியிருப்பர். இப்ப இந்த திருவோணம்ன்னு எடுத்துட்டீள்ன்னா, ஓணம்ங்கிறது ஷிரவணம், விஷ்ணு நட்சத்திரம். அதனாலே திருவோண நட்சத்திரம் பகவானது. ஆழ்வார் அவதரித்தாரா? பொய்கையாழ்வார் திருவவதாரம் பண்ணியிருக்கார். ஆச்சார்யர்கள்? பிள்ளை லோகாச்சார்யரே திருவவதாரம் பண்ணினார். புரட்டாசி ஷிரவணத்திலே வேதாந்த தேசிகன் திருவவதாரம் பண்ணினார். அப்போ லோகாச்சார்யர் அவதாரத்தாலே, ஐப்பசி திருவோண நட்சத்திரம் முப்புரியூட்டிய நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது.

    லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸுநவே
    சம்சார போகி சந்தஷ்ட ஜீவஜீவாதவே நமஹ.

    அவர் எதற்காக திருவவதாரம் பண்ணினார்?

    நைஷ்டிக ப்ரம்மச்சாரி அவர்.  ரெண்டு குமாரர்கள் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு. இராமானுசர், அவருடைய சிஷ்யர் எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை. நம்பிள்ளைங்கறவருக்கு ‘நம்பூர் வரதாச்சார்ய ஸ்வாமி’ என்பது திருநாமம். நம்பூர் வரதரும், காஞ்சீ வரதருமாக இருவருடைய அனுக்கிரகத்தால அவதரித்தவர்தான் ’பிள்ளை லோகாச்சார்யார்’. நம்பிள்ளையும் அனுக்கிரகிச்சார், காஞ்சீ வரதராஜப் பெருமாளே திரும்ப வந்து பிள்ளை லோகாச்சார்யராக அவதரிச்சார். அதனாலே ரெண்டு வரதன். அதனாலே வரம் தரும் மாமணிவண்ணனான எம்பெருமான் அவனே பிள்ளை லோகாச்சார்யனாக அவதரிக்கிறான். நம்பிள்ளை – ஈடு முப்பதாறாயிரப்படி பண்ணினவர். நம்பிள்ளைக்கு சத்சிஷ்யர் வடக்குத் திருவீதிப்பிள்ளை. அவருக்கு வெகுநாட்களாக புத்திர பாக்கியம் இல்லை. ஆனால் அவருக்கு இல்லறத்திலே ஈடுபாடே இல்லை. ஈடுபாடு இருந்தான்னா புத்திர பாக்கியத்துக்கு. அவருடைய திருத்தாயார் பார்த்தார். ஓ! வடக்குத் திருவீதிப் பிள்ளையினடத்திலே எத்தனை சொத்து இருக்கு? கோடில்லாம் இல்லை. வடக்குத் திருவீதிப் பிள்ளையினடத்திலே நம்பிள்ளை சாதித்த காலட்க்ஷேபம அத்தனையும் இருக்கோல்லையோ? அந்த சொத்தை இவர் யாரினடத்திலயாவது கொடுத்தாகனுமே, அதற்கு புத்திர பாக்கியமில்லையேன்னு அவளுக்கு வருத்தம். போய் ஆச்சார்யனான நம்பிள்ளையினடத்திலே ப்ராத்திக்கிறார். நம்பிள்ளை அனுக்கிரகித்தார், ‘கவலை வேண்டாம், நம் சம்ப்ரதாயத்துக்காக ஒரு பிள்ளை ஜனிப்பான்.’, என்று அவர் அனுகிரகிக்க அந்த அனுக்கிரகம் வழியாகவே லோகாச்சார்யன் திருவவதாரம் பண்ணினார். இந்த சரித்திரத்த ஒரு மூணு பாசுரங்களாலே மணவாள மாமுனிகள் உபதேச இரத்தின மாலைல சாதிக்கிறார்.

    இந்த சரித்திரமெல்லாம் 50வது பாட்டிலேர்ந்து சொல்ல ஆரம்பிக்கிறார். உபதேச இரத்தின மாலை அவதரிச்சதே ஸ்ரீவசன பூஷண வைபவம் சொல்றதுக்குத்தான். முதல் பாசுரத்திலேர்ந்து 49வது பாசுரம் வரைக்கும் ஆழ்வார், ஆச்சார்யர்கள் மொத்தப் பேருடைய சரித்திரத்தையும் சொல்லி முடிச்சுட்டார். 50ம் பாட்டிலதான் முன்னுரை முடியறது. இனிதான் சொல்லவந்த விஷயத்தையே ஆரம்பிக்கிறார். 50, 51, 52 இந்த மூன்று பாசுரங்களாலே, பிள்ளை லோகாச்சார்யருக்கு இந்த திருநாமம் ஏன் ஏற்பட்டதுன்னு சொல்லிட்டார். 53-59, இந்த ஏழு பாசுரங்களாலே ஸ்ரீவசனபூஷணத்தினுடைய மாகாத்மியத்த தெரிவித்தார். 60-70, பதினொரு பாசுரங்களாலே ஸ்ரீவசனபூஷணத்தின் தாத்பர்யத்தை வெளியிட்டார். அதனாலே 21 பாட்டுக்கள் ஸ்ரீவசனபூஷணத்துக்காகவே பாடினார். 70க்குள்ள 21ன்னை ஒருத்தருக்கு வச்சுடனும்னா, அப்போ அதுக்குத்தானே அத பாட வந்துருக்கனும்? மற்றதெல்லாம் முன்னுரை, கொஞ்ச நீள முன்னுரை.

    இப்ப கண்ணன் மட்டும் என்ன பண்ணார். 18 அத்தியாயம் 65வது ஸ்லோகம் வரைக்கும் முன்னுரை. ஒரே ஸ்லோகம் முக்கியக் கருத்து. ‘ஸர்வதர்மான் பரித்யச்ஜ மாமேகம் சரணம் வ்ரஜ’ன்னு. இத முதல்லயே சொல்லிட்டு போயிருக்கலாமோல்லையோ? அத விட்டுட்டு எத்தனையோ, 699 ஸ்லோகத்த சொல்லிட்டு, ஒரே ஸ்லோகத்தால இதான் சாரார்த்தம்னால், அர்ஜுனனுக்கு அதனாலதான் அது சரியா மனசில புரிபடவே இல்லை. லோகாச்சர்யரே தெரிவித்தார், ‘புறம்பு சொன்னவையெல்லாம் இவன் நெஞ்சை சோதிப்பதற்காக’. முன்னாடி கர்ம, ஞான, பக்தி யோகங்களெல்லாம் எதுக்குச் சொன்னார்னா, ‘இவன் முதல்ல பரிபக்குவமா ஆகிறானான்னு பார்ப்போம். சட்டுன்னு சரணாகதி சொன்னா இவன் ஏத்துக்கப் போறதே இல்லை.’ அப்படிங்கறதுக்காத்தான் சோதித்து சொன்னார், அப்படியும் ஏத்துக்கலை. அதனாலதான் கண்ணன் பார்த்தார். கீதையை உபதேசம் பண்ணி முடிச்சுப்புட்டு, இனிமே நாம வாயைத் திறக்கறதில்லேங்கற முடிவுக்கு வந்துட்டார் அவர். சொன்னாலும் சொன்னோம், இனிமே பீஷ்மரே பேசட்டும்ன்னு சஹஸ்ரநாமத்துக்கு உட்கார்ந்துட்டார். ஏன்னா, அந்த சஹஸ்ரநாமத்தையும் இவரே சொல்லியிருக்கலாமோல்லையோ, சொன்னது யுத்தத்தினுடைய ஆரம்பத்தில கீதையைச் சொல்லிட்டு, தர்மபுத்திரன பார்த்து ’நீ போய் பீஷ்மரிடத்தில நல்லது கேட்டுக்கோ’ன்னார். ’நீ இத்தனை நாழி சொன்னியே, அப்ப அதெல்லாம் என்னது?’ன்னு தர்மபுத்திரர் கேட்கறார். ‘இல்லேல்லே, இனிமே அவர்தான் சொல்லணும், நான் பேசறதாயில்லே. ஆச்சார்யார்கள் பேசினாதான் நல்லாயிருக்கே தவிர, நான் பேசினா நல்லாயில்லே. அதனால அவரிடத்திலே கேட்டுக்கோ’ன்னு பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொன்னார் அப்படின்னு சரித்திரம்.

    பிள்ளை லோகாச்சார்யர் – பெயர் காரணம்

    உபதேச ரத்தின மாலைல, 50-52, மூனே மூணு பாட்டுல என்ன சொல்லியிருக்கார்ன்னு சுருக்கமா பார்ப்போம். அதுல 50வது பாசுரத்தாலே,

    நம்பெருமாள் நம்மாழ்வார் * நஞ்சீயர் நம்பிள்ளை
    என்பர் * அவரவர் தம் ஏற்றத்தால் * அன்புடையோர்
    சாத்து திருநாமங்கள் * தான் என்று நன்னெஞ்சே!
    ஏத்ததனைச் சொல்லு நீ இன்று.

    (உபதேச ரத்ன மாலை – 50வது பாசுரம்)

    - அன்பால் இருக்கக்கூடியவர்கள் பேர் வச்சுருக்கா. ‘நம்பெருமாள்’ – பெருமாள்களுக்குள்ள நம் பெருமாள். ‘நம்மாழ்வார்’ – ஆழ்வார்களுக்குள்ள நம் ஆழ்வார். நம்பிள்ளை – பிள்ளைகள்ள நம் பிள்ளை. நஞ்சீயர் – சீயர்கள்ள நம் சீயர். அப்படின்னு தெரிஞ்சு ‘நெஞ்சே ஏத்ததனை சொல்லு நீ இன்று’ – இன்னிக்கு அந்தந்த திருநாமத்தை நன்னா நீ சொல்லு, என்று மணவாளமாமுனிகள் தன்னுடைய நெஞ்சுக்கு உபதேசிக்கிறார். அப்ப நம்பெருமாள், நம்மாழ்வார் சொல்றச்சே குறுக்க நம்பிள்ளைன்னு இப்பத்தான் அறிமுகப்படுத்துகிறார். இந்த அறிமுகத்திலர்ந்து ஸ்ரீவசனபூஷணமே தொடக்கம். நம்பிள்ளைங்கற ஆச்சார்யார் பெயரிடப்பட்டார்ன்னு சொல்லிட்டு, இந்த நம்பிள்ளைங்கற பேர் எப்படி வந்தது? அவர் வரதர்ன்னா பேர் வச்சிருந்தார்? நம்பூர் வரதாச்சார்யர்ன்னு பேர் இருந்தவருக்கு ’நம் பிள்ளை’ன்னு பேர் எப்படி வந்தது? அடுத்த பாட்டிலே சொன்னார்.

    துன்னு புகழ்க் கந்தாடைத் * தோழப்பர் தம் உகப்பால் *
    என்ன உலகாரியனோ என்றுரைக்க * பின்னை
    உலகாரியன் என்னும் பேர் * நம்பிள்ளைக்கு ஓங்கி *
    விலகாமல் நின்றதென்றும் மேல்.

    (உபதேச ரத்ன மாலை – 51வது பாசுரம்)

    -இவர்தான் உலகாரியன், லோகாச்சார்யன் அப்படிங்கற பேர் வைக்கிறார்.  நம்பூர் வரதராயிருந்தவர் ஆச்சார்யார்களால் ’நமக்குப் பிள்ளை’ அப்படின்னு அபிமானிக்கப்பட்டு, ‘நம்பிள்ளை’ ஆனார். அந்த நம்பிள்ளைக்கு துன்னுபுகழ் கந்தாடை தோழப்பர் ஒரு திருநாமம் சாத்தறார். உலகார்யன், நீதான் லோகாச்சார்யன் அப்படிங்கற பட்டத்தை அவருக்கு கொடுக்கறார். அதென்ன ‘துன்னுபுகழ் கந்தாடை தோழப்பன்’? அவ்வளவு புகழ் இருக்காம் அவருக்கு. பிள்ளை லோகம் ஜீயர் வ்யாக்யானத்திலே தெரிவிக்கிறார், ‘முதலியாண்டானுடைய திருப்பேரனாராய், கந்தாடையாண்டானுடைய திருக்குமாரனாராய், இருக்கக்கூடிய கந்தாடை தோழப்பர்.’

    அப்போ நம்பிள்ளைக்கு லோகாச்சார்யன் அப்படிங்கற பேர் இருக்கோல்லையோ? நம்பிள்ளை லோகாச்சார்யன் அப்படின்னு அந்தகாலத்திலே பிரசித்தமா இருந்துருக்கு. நம்பிள்ளையினுடைய அனுக்கிரகத்தினால அவருடைய சிஷ்யரான வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு பிறந்த மூத்த குமாரருக்கு பெயர் வைக்கும் போது வடக்குத் திருவீதிப் பிள்ளை ஆச்சார்யன் பெயரையே வைக்க நினைக்கிறார். ஆச்சார்யன் பெயரை அப்படியே வைத்தால் கூப்பிடறதுக்கு கஷ்டமாக இருக்கும் என்பதால், அவர் லோகாச்சார்யர், அவர் அனுக்கிரகிச்சு நமக்குப் பிள்ளை, அப்ப இது லோகாச்சார்யர் பிள்ளை, திருப்ப ‘பிள்ளை லோகாச்சார்யர்’.

    வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு இரு குமாரர்கள். மூத்தவர் பிள்ளை லோகாச்சார்யர். அடுத்தவர் நம்பெருமாளின் அனுக்கிரகத்தினால் பிறந்தவர், ‘அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்’. சற்றேறக்குறைய இப்போது 800 ஆண்டுகளாகிறது நாயனார் திருவவதாரம் பண்ணி. பிள்ளை லோகாச்சார்யர் அவதரித்தது 1205ம் ஆண்டு. சுமார் 120 சம்வஸ்த்ரங்கள் இருந்து 1325வாக்கில், சரியாகத் தெரியாது, ஏன்னா நம்பெருமாளை இரட்சிக்கறதுக்காக போறச்சே அவர் பொடிக்குளத்திலே ப்ராணனை நீத்தார். அதனாலே நமக்கு சரியா வருஷம் தெரிய வாய்ப்பில்லை. யதீந்த்ர ப்ரவணப்ரபாவத்திலே இவ்வளவுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால சுமாரா கணக்குப் போட்டு பார்த்தோம்னா 120 வருஷங்கள் அவர் இருந்திருக்கலாம். ஏன்னா படையெடுப்பு நாளை வச்சு இதை கண்டுபிடிக்கப் பார்த்தால் 120ன்னு நமக்குத் தேறும். அடுத்தவர் நாயனார், 2 வருஷம் கழிச்சு அவதரித்தார். ஆனா பிள்ளை லோகாச்சார்யர் பரமபதத்துக்கு போறதுக்கு 2 வருஷம் முன்னாடி புறப்பட்டுட்டார் அவர். அவருக்கு ஏன் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரென்று பெயரென்னால், அழகிய மணவாளன் நம்பெருமாள், அவருடைய அனுக்கிரகத்தினால் பிறந்தவராதலால், ‘அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்’.

    பிள்ளை லோகாச்சார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் - பெருமை

    இவா ரெண்டு பேரும் நைஷ்டிகப் ப்ரம்மச்சாரிகள். முதல்ல இருந்து கடைசி வரைக்கும் இவர்களுக்கு என்ன பெருமை இருந்ததுன்னா, அந்தப் பெருமை இராமானுசருக்கோ, மணவாள மாமுனிகளுக்கோ, வேதாந்த தேசிகனுக்கோ, அவர்களுக்குக்கூட இல்லைன்னு சொல்லிடலாம். ஏன்னா இந்த ஒரு சூத்திரம் எழுதியிருக்கார், ஸ்ரீவசனபூஷணத்திலே, அந்த சூத்திரம் அவர் மட்டுமேதான் எழுத முடியும். அதாவது, ‘விகிதவிஷய நிவிர்த்தி தன்னேற்றம்’, அப்படிங்கற சூத்திரம். விகிதவிஷய நிவிர்த்தின்னால், எந்தவிதமான காமத்தொடர்பும் இல்லை. தன்னேற்றம் – அது ஸ்ரீவைஷ்ணவனுக்குத் தனிச்சிறப்புன்னு சொல்லி வைத்தார். மற்ற எல்லாருமே க்ரஹஸ்தர்களாக இருந்து சந்நியாசிகளாக ஆனவாதான். ஆனா இவர்கள் இரண்டு பேரும் மட்டும்தான், என்று அவதரித்தார்களோ, அன்னேலேர்ந்து இரகசியத்ரேயத்துக்குன்னே வாழ்ந்தார்களே தவிர, அதத்தவிர மற்றொன்று, இப்ப பெருமாளைக் குறித்து நாலு ஸ்தோத்திரம் பாடறேன், தெரியாது. பண்ணதேயில்லே. மத்த ஆச்சார்யர்களெல்லாம் நெறய ஸ்தோத்திரமெல்லாம் பண்ணியிருக்கலாம், ஆனா பிள்ளை லோகாச்சார்யரோ, நாயனாரோ பண்ணதில்லை. தமிழ்ல பாசுரம் பாடறேன், பண்ணமாட்டா. வ்யாக்யானம் எழுதறதுக்குத்தான் அவர்களுக்குத் தெரியும். வ்யாக்யானத்திலேயே நிரந்தர்களயாய், சம்சாரிகள் உஜ்ஜீவனம் அடைவதற்கே வழிவகுத்தவர்களாய், எல்லாத்தவிட எதுல அவர்களுக்குக் குறிக்கோள்ன்னா, ஈஸ்வரனுடைய க்ருபை. அதுதான் லோகத்த இரட்சிக்குமே தவிர, அத்தவிர மத்த எதுவும் ஜகத்தினுடைய உஜ்ஜீவனத்துக்கு ஹேதுவாகாது. பகவத்க்ருபா ஒன்னே நமக்குப் புகல் என்பதை, எத்தனை விதமாகத் தர்க்க ரீதியா ஸ்தாபிக்க வேண்டுமோ, அதை ஸ்தாபிப்பதற்கென்றே இவ்விரு குமாரர்களுடையை திருவவதாரம் நடந்தது.

    அன்ன புகழ் முடும்பை * அண்ணல் உலகாசிரியன் *
    இன்னருளால் செய்த கலை யாவையிலும் * உன்னில்
    திகழ் வசன பூடனத்தின் சீர்மை * ஒன்றுக்கில்லை *
    புகழல்ல இவ்வார்த்தை மெய் இப்போது.

    (உபதேச ரத்ன மாலை – 53வது பாசுரம்)

    பிள்ளை லோகாச்சர்யர் முடும்ப வம்சத்திலே பிறந்தார். ‘அன்ன புகழ் முடும்பை அன்னல் உலகாசிரியன்’, அன்ன புகழ் முடும்பை – எத்தனை புகழ்ன்னு எங்களுக்குச் சொல்லத் தெரியாது, அவ்வளவு புகழ். அவர் என்ன பண்ணிவைத்தார்ன்னால், இந்த உலகத்திலே நிறைய திவ்யப்ரபந்தங்களைப் படித்தவர், இரகஸ்யங்களையெல்லாம் கற்றிருக்கிறவர், அவர் எழுதி வைத்தது, ‘அஷ்டாதச இரகஸிய க்ரந்தங்கள்’. ’அதற்குள் உன்னில் திகழ் வசனபூடணத்தின் சீர்மை ஒன்னுக்கில்லை. புகழல்ல இவ்வார்த்தை மெய்யிப்போது’ – பதினெட்டு இரகஸிய க்ரந்தங்களை பிள்ளை லோகாச்சார்யர் சாதித்தார். அது அத்தனையும் சீர் தூக்கிப் பார்த்தால், ‘திகழ் வசனபூடணத்தின் சீர்மை’ – ஸ்ரீவசனபூஷணம்ங்கிற உயர்ந்த க்ரந்தம், இரகஸ்ய க்ரந்தம். அந்த இரகஸ்ய க்ரந்தம்தான் தனிச்சிறப்பு படைத்ததுன்னு சாதிக்கிறார்.

    அவர் எழுதிய க்ரந்தங்கள் ‘அஷ்டா தசம்’ன்னு பெயர் பெற்றிருக்கின்றன. அது எதுக்குன்னால், சம்சாரம் என்னும் பாம்பு நம்மளக் கடிக்கிறதாம். அந்த பாம்பு கடிச்சதுக்கு மருந்து நம்மளுக்கு வேணும். அதுக்கு அமிர்தம் குடுத்தாத்தான் உயிர் தரிக்கும். இந்த உயிர் இல்லே. சம்சாரம் என்னும் பாம்பால கடிபட்டால், ஆத்ம சேஷத்துவம்ங்கிற ஸ்வரூபம் பட்டுப்போகிறதோல்லையோ? அந்த ஸ்வரூபம் போகாதிருக்கறதுக்கு ஒரு மருந்து. ஒரு அழகிய அமிருதம் வேணும். அந்த அமிர்தம்தான் அஷ்டாதச ரகஸியங்கள்.

    லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய சூணவே – க்ருஷ்ணபாதர் – வடக்குத் திருவீதிப் பிள்ளை, க்ருஷ்ணபாதஸ்ய சூணு – க்ருஷ்ணபாதருடைய திருக்குமாரர், இவர்தான் பிள்ளை லோகாச்சார்யர். சம்சாரபோகி சந்தஸ்ட – சம்சாரம் என்னும் பாம்பாலே கடிபட்டவர்களுக்கெல்லாம், ஜீவ ஜீவாது – ஜீவாது அப்படின்னா ஒரு அமிர்தம், மருந்து போல இருக்கற அமிர்தம். ஜீவஜீவாதவே நமஹ – நமக்கு மருந்தான அமுதமாகிற பதினெட்டு இரகஸ்ய க்ரந்தங்களையும் கொடுத்தார். இது லோகாச்சார்யாருக்கு உண்டான வைபவம்.

    -(நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – உபதேச ரத்தின மாலை உபந்நியாசம் – WA-DC)

    February 13

    முதலாழ்வார்கள்

    முதலாழ்வார்கள் - பொற்காலிட்ட பிரான்னு சொல்லுவர்கள். பொய்கையார், பூதத்தார் ,பேயார்.  முதலாழ்வார்கள் மூவரும் திருவடியை வைத்தார்களோ, மேலே மற்றய ஆழ்வார்களுடைய திருவவதாரம்.

    முதலாழ்வார்களை எவ்வளவு தூரத்துக்கு ஒன்று என்று பார்க்கணும்ன்னால், கணக்கிலே ‘ஒன்று’ என்று எண்ணலாம். மூனுன்னு எண்ணனுமோல்லையோ, பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மூன்று பேர்ன்னு எண்ணனுமோல்லையோ? எண்ண வேண்டாம்னுட்டார் மணவாள மாமுனிகள். அவருடைய பாசுரத்தில அப்படின்னே சொல்றார்.

    அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் * ஆழ்வார்கள்
    தம்செயலை * விஞ்சி நிற்கும் தன்மையளாய் * பிஞ்சாய்
    பழுத்தாளை ஆண்டாளைப் * பத்தியுடன் நாளும் *
    வழுத்தாய் மனமே! மகிழ்ந்து.

    - (உபதேச ரத்தின மாலை – 24வது பாசுரம்)

    -ன்னு உபதேச ரத்தின மாலைல சாதிக்கிறார். அங்க ஆண்டளைப்பத்தி கொண்டாடச்சே, ‘அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய்’, அஞ்சுகுடி, அதுக்கு ஒரு சந்ததி.  இன்னும் கேட்டா ஆழ்வார்கள் அத்தனை பேருக்கும் ஒரே பெண் குழந்தைதான். குலசேகர ஆழ்வாருக்கு ஒரு சேரகுலவல்லி நாச்சியார் இருந்தாலும், அவள் ஆழ்வாரகலையே? அவள் போய் பெருமாளை திருக்கல்யாணம் பண்ணிட்டா. இது அவள் செய்தது.  ஆனால் ஆண்டாளுக்குத்தான் ’பெண் ஆழ்வார்’ங்கிற பெருமை ஏற்பட்டது. அதனால ஒரே பெண், பத்துப் பேர் தாதாக்கள். மொத்தப் பேருக்கும் நிறைய சொத்து இருக்கு. குழந்தையே இல்லே. ஒருத்தரே ஒருத்தருக்கு ஒரு குழந்தை பிறக்குதுன்னு வச்சுக்கொங்கோ, அப்ப மொத்த சொத்தும் அந்த குழந்தைக்குத்தான போய் சேரும் அப்போ? அதுவும் ஒரு பெண் குழந்தையா பிறந்துடுத்தோ, ஸ்திரீ தனம், கேட்கவே வேண்டாம். கோடிக்கோடியான சொத்து அதுக்குத்தான். நம்ம ஆண்டாளுக்கு இப்ப எத்தனை கோடி கிடைச்சுருக்கும்? ஞானமும், பக்தியும், வைராக்கியமும், இவைதான் ஆண்டாளுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. அந்த வாரிசு எத்தனாவதா பிறந்திருக்கா? பெரியாழ்வாருக்கு குமாரத்தியாகப் பிறந்தாள். பெரியாழ்வாரோட சேர்த்து முன்னாடி எத்தனை ஆழ்வார்கள்? பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார். ஏழு பேரோல்லையோ? அப்ப ஏழு குடிக்கொரு சந்ததியாய்ன்னு சொல்லணுமா? இல்ல அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய்ன்னு சொல்லனுமா?

    உபதேச ரத்தின மாலைக்கு பிள்ளை லோகம் ஜீயர், ரொம்ப ஆச்சரியாமான ஒரு வியாக்யானம் அனுக்கிரகிக்கிறார். ’அஞ்சு என்று சொல்லக் காரணம், முதலாழ்வார்களை மணவாள மாமுனிகள், ஒன்று, என்று எண்ணினார்.’

    மற்றொரு அர்த்தமும் உண்டு. அஞ்சுகுடி = அஞ்சும் குடி. பகவானுக்கு என்ன வந்துடுமோ என்று அஞ்சும் குடி. மங்களாசாசனத்திலேயே தத்பரனர்களாக இருந்து, ஓ! அவனுக்கு என்ன வந்துருமோன்னு பயப்பட்டு பாடறாளோல்லையோ? அதனாலதான் அஞ்சும் குடி.  இதிலே முதல்ல அவதரித்தவர்கள், முதலாழ்வார்கள். இவர்கள் பரதத்வத்திலே மண்டிக் கிடப்பர்கள்.  பெரியவாச்சான் பிள்ளை என்னென்ன ஆழ்வார்கள், யாராரிடத்திலே ஊற்றத்தோட பாடுவார்ன்னு சாதிக்கிறார்.

    முதலாழ்வார்களுக்கு பரவாசுதேவனைப் பாடுவதிலே ஆசை. பரவாசுதேவனுக்கு பிரதிநிதின்னா, விபவத்துக்குள்ளே திரிவிக்கிரமா அவதாரம். அதனாலதான் அடிக்கடி அவா திரிவிக்கிரமன பத்தித்தான் பாடுவர்கள். அதே திரிவிக்கிரமன் சன்னிதியிலதான் அவா சந்திச்சிண்டதே. ஆக எங்க திவ்யப் பிரபந்தம் ஆரம்பிச்சதுன்னு கேட்டால், திருக்கோவலூர் இடைகழி ஆயனுடைய சன்னிதியிலதான் ஆரம்பிச்சது. இந்த மூணு ஆழ்வார்களுக்கும் பெருமை, தங்கள் ஊரையும், பெயரையும் திவ்யப் பிரபந்தத்தில் சொல்லிக் கொண்டதில்லை. தங்கள் ஊரும் சொல்லலே, பேரும் சொல்லலே, என்ன பலஸ்ருதிங்கிறத வ்யக்தமாக சொல்லவில்லை. ஆனால் பாடினார்கள். இவர்கள் பெய்தது, மழை மேகம் ஆங்காங்கு சென்று மழை பொழிந்தார்ப்போலே பெய்தார்கள்.

    ஐப்பசியில் ஓணம் * அவிட்டம் சதயம் இவை *
    ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் * எப்புவியும்
    பேசு புகழ் * பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் *
    தேசுடனே நின்று தோன்றப்பால்.

    - (உபதேச ரத்தின மாலை – 6ம் பாசுரம்)

    திருவோணம், அவிட்டம், சதயம். மூனு திருநட்சத்திரத்திலே அவதரித்து, பக்தியினுடைய மூன்று நிலைகளிலே அவர்கள் பிரதிநிதியா இருந்திருக்கா.  பரபக்தி, பரஞானம், பரமபக்தி-ங்கிற மூனு நிலை.

    பரபக்தி – பகவானோடே சம்ஸ்கிலேசித்தால் சுகம், பகவானொடே விஸ்லேசித்தால் துக்கம், அப்படிங்கற ஞானம் ஏற்பட்டுடுத்துன்னா அதுக்கு பரபக்தின்னு பேர்.

    பரஞானம் – பகவானோடே சம்ஸ்கிலேசிப்பதற்கு உண்டான முயற்சிகளை எடுத்து, அவனை தரிசன சமானகாரமான க்ஷாட்ஷாத்காரத்தாலே கண்டுவிடுவது.

    பரமபக்தி – நேரேயே பகவானோடே சேர்ந்து அனுபவிக்கிறதுக்குண்டான நிலை.

    இந்த மூனு நிலையிலதான் ஆழ்வார்கள் இருந்தார்கள். இது ஒன்னொன்னும் அடுத்தடுத்த நிலை. ஆனால் மூன்று ஆழ்வார்களுக்கும் மூன்று நிலைகளும் உண்டு. ஆனால் இந்த மூன்று நிலைகளும் நமக்குப் புரியணும்ங்கிறதுக்காக, ஓரொரு ஆழ்வாரும் ஓரொரு நிலையிலே அமைத்துப் பாடினார்கள்ன்னு வச்சுக்கணும்.

    முதலாழ்வார்கள் அவதாரம் பண்ணினது, துவாபரயுகத்தினுடைய கடைசியிலே. துவாபரயுகம் பிறந்து 8,62,901-வது வருஷம். ரொம்ப பெருசு துவாபரயுகம், மொத்தம் 8,64,000 வருஷம்.  901வது வருஷம்தான் பொய்கையாழ்வார் அவதரித்தார். மூனு பேரும் அதே வருஷம், அதே மாசம், அடுத்தடுத்த நாளிலே அவதரித்தார்கள், வெவ்வேற ஊரிலே. ஒருத்தர் காஞ்சீபுரத்திலே திருவவதாரம் பண்ணினார். மற்றொருவர் திருக்கடல்மல்லையிலே திருவவதாரம் பண்ணினார், அடுத்தவர் (பேயாழ்வார்) மயிலாப்பூரிலே திருவவதாரம் பண்ணினார்.

    இந்த ஆழ்வார்கள் மூனு பேரும் நமக்கு சொல்லிக் கொடுத்த அர்த்தம் என்ன?

    உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்னும் உளன் கண்டாய்
    உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்.

    - (முதல் திருவந்தாதி - 99, நான்முகன் திருவந்தாதி – 86)

    - திரும்பத் திரும்ப இந்தப் பாட்டு வரும். இந்தப் பாட்ட மட்டும் அடிக்கடி எல்லா ஆழ்வார்களும் சொல்லிண்டே இருப்பா. என்ன ஸ்வாமி, பேசி வச்சிண்டு திரும்பத்திரும்ப அதே பாட்ட பாடறாளேன்னா, அர்த்தம் அவ்வளவு ஒசத்தியா இருக்கவே அதே பாட்ட பாடறா.

    உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் - யாருடைய ஹ்ருதய கமலத்திலே பகவான் இருப்பன்னா, இருக்கனும்ன்னு ஆசைப்படறவனோட ஹ்ருதயத்திலே இருக்கான். யாருக்குப் பிடித்தமில்லையோ, அவரிடத்திலே போறதில்லே. எல்லாரிடத்திலயும் சர்வ வ்யாபகனாக இருப்பன், அதுல குறைவு கிடையாது. அது எப்படியுமே இருப்பர். அது பொருளுக்குள்ளயும் இருப்பர், ஆத்மாவுக்குள்ளயும் இருப்பர், எதுலயும் இருப்பர். ஆனா அவர் இருக்கார்ங்கிறத நான் உணர்ந்துண்டாதானே பெருமை. ஆத்மா ஞானமுடையவர்ன்னு சொல்றதலே, அப்படி அவன் இருக்கறதை புரிஞ்சுக்கணுமோல்லையோ? அப்படி தெரிஞ்சுக்கறதைத்தான் ஆழ்வார்கள் இந்த இடத்திலே, ‘உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்’ அப்படின்னு பாடுகிறார்கள்.

    உத்தமன் என்னும் உளன் கண்டாய் – அவன் ஏன் தெரியுமா உத்தமன்? இந்த நெஞ்சுக்குள்ளும் வந்து இருக்கான் பார், அவன் உத்தமனாகத்தான் இருக்க வேண்டும். இல்லேன்னா உன் நெஞ்சுக்குள்ள அவன் வரப்போறானா? இது வெறும் ஏழை, ஏதலன், கீழ்மகனோட நெஞ்சு.  எப்போதும் நம்மகிட்ட இருக்கறது, ரத்தம், சீழ், சதை, மலம், மூத்திரம், மாமிசம், எலும்பு, மஜ்ஜை.  ’உள்ளது வெளியதானால் காக்கை ஓட்டக் காலம் போறாது’. இதத்தான் ஆழ்வாரும்,

    மரம் சுவர் மதிலெடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
    புறம் சுவர் ஓட்டமாடம் பொருளும்போதறிய மாட்டீர்

    -ன்னு சாதித்தார். இப்படி இருக்கக்கூடிய சரீரத்துக்குள்ள, நெஞ்சுக்குள்ள பகவான் வந்து இருக்கிறார்ன்னு சொன்னால், அவருக்கு என்ன தேவை? இந்த கேவலத்தப் போய் அவன் பொறுத்துக்கணுமா?

    தனிக்கடலே தனிஉலகே தனிச்சுடரே
    என்னென் உனக்கு இடமாய் இருக்க
    என்னை உனக்குரித்தாக்கினியே.

    - சூரிய மண்டலத்தை விட்டுட்டு, வைகுண்டத்த விட்டுட்டு, ஸ்ரீராப்தியை விட்டுட்டு இங்கயா வரணும்? ஆனா பகவான் வந்துருக்காரோல்லையோ?  நன்னெஞ்சே உளன் கண்டாய் - நன்னெஞ்சே அப்போ புரிஞ்சுக்கோ, அவன் எவ்வளவு வாத்ஸல்யத்தோட வந்திருக்கான்னு தெரிந்து கொள்.

    அதனலே பகவானைத் தியானிக்கறதுங்கறது ஒண்ணும் கஷ்டமானதே அல்ல. ரொம்ப சுலபம்.

    மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்தெவ்வுயிர்க்கும்.
    சிற்றவேண்டா சிந்திப்பே அமையும்.

    -ன்னு ஆழ்வார் சாதித்தார். ஒண்ணும் அங்கயிங்கன்னு தேடிட்டு ஓடாதீங்கோ. சுருங்கச் சொன்னோம் – சுருக்கமா சொல்றேன் கேட்டுக்கோங்கோன்னார். மாநிலத்து எவ்வுயிர்க்கும் – யாருக்கும் பொது, இன்னார், இனியார்ன்னு வாசியெல்லாம் கிடையாது. சிற்றவேண்டா சிந்திப்பே அமையும் – நினைத்தால் போதாதா. ’நினைமின் நெடியானை’ன்னு ஆழ்வார் பாசுரம். நினைத்தோம்னா பகவான் இருந்துட்டுப் போறான், அவ்வளவு சுலபனாச்சே, என்று முதலாழ்வார்கள் நமக்குன்னு காட்டிக் கொடுத்தார்கள்.

    (நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – உபதேச ரத்தின மாலை உபந்நியாசம் – WA-DC)

    இராம, பரத, லக்ஷ்மண, சத்ருக்கனன் - ஒற்றுமை

    இராமன், பரதன், லக்ஷ்மணன், சத்துருக்கனன், நாலு பேரும் பிறந்து நாலு பேருக்கும் தொட்டிலிட்டுட்டா. குழந்தைகளுக்கு ஒரே அழுகை. ஏன் அழுகிறதுன்னு புரியலே கெளசல்யைக்கு. வசிஷ்டர் வந்து ஞானக்கண்ணாலே பார்த்தார். ‘தப்பான வரிசைலே தொட்டில்ல போட்டிருக்கே கெளசல்யை, மாத்து. இராம, பரத, லக்ஷ்மண, சத்துருக்கனன்னு போடாதே. இராம, லக்ஷ்மண, பரத, சத்துருக்கனன்னு மாத்திப் போடு. மாத்திப் போட்டாச்சு. லக்ஷ்மணஹா லக்ஷ்மிவர்த்தனஹா.

    பால்யா ப்ரவர்த்தி ஸுஸ்மித்மஹா லக்ஷ்மனோ லக்ஷ்மிவர்த்தனஹா.

    எப்ப பிறந்தானோ லக்ஷ்மணன், அது தொடக்கமாகவே இராம பக்தி. திருத்துழாய் அங்குரிக்கும் போதே பரிமளிக்குமாப் போலே. திருத்துழாய் பூமியைப் பிளந்துண்டு வெளியே வருதுன்னா, அது வெளியே வரச்சேவே மணத்தோடதான் வரும். எப்ப லக்ஷ்மணன் அவதரித்தானோ, அப்பவே இராம பக்தி.

    அதனாலே குழந்தைகள் அழுகை தாங்கலே, வரிசையை மாத்திட்டா. இராமன், லக்ஷ்மணன், பரதன், சத்துருக்கணன். பாதி அழுகைதான் நின்னுது. இதென்ன இன்னும் குழந்தைகள் பாதி அழறதே, ஏன் அழறதுன்னு வசிஷ்டர் ஊன்றிப் பார்த்தவர், ‘ரெண்டு தொட்டில எடுத்துரு கெளசல்யை, ரெண்டே தொட்டில் போறும், இராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும் ஒரு தொட்டில். பரதனுக்கும், சத்துருக்கனனுக்கும் ஒரு தொட்டில்.’. இந்த ரெண்டாம் தொட்டில்ல போறதுகூட லக்ஷ்மணனுக்கு பிடித்தமில்லே. அத்தனை தூரம் நெருக்கமா இருக்கணும்ன்னு ஆசைப்பட்டானோல்லையோ? சகஜ பக்தியோடவே பிறந்தவன்.

    பரதன் புறப்பட்டு போனா, அப்ப சத்துருக்கனனும் கூடவே போய்டுவர்.  காண்டத்தோட ஆரம்பத்திலேயே ஸ்லோகம்.

    கச்சதாம் மாதுலகுலம் பரதேநததா அநகா
    சத்துருக்கனஹா நித்ய சத்துருக்கனஹா நீதப்ப்ரீதி புனஸ்க்ருதஹா

    - பரதன் கிளம்பி மாமன் வீட்டுக்குப் போறார். அப்ப கூடவே சத்துருக்கனனும் புறப்படறார். வால்மீஹி பகவான் கேட்டுக்கறார், ‘பரதனுடைய நட்சத்திரத்துக்கு நாள் நன்னா இருக்கான்னு வசிஷ்டர் பார்க்கறார். ஆனா சத்துருக்கனனுடைய நட்சத்திரத்துக்கு அந்த நாள் ஒத்துப்போறதான்னு அவர் பார்க்கவே இல்லை.’ அவன் இராஜகுமாரன்னா ரெண்டு பேருக்கும் பார்க்கனுமோல்லையோ? பரதனும் இராஜகுமாரன்தான், சத்துருக்கனனும் இராஜகுமாரன்தான். அனா பரதனுக்கு நாள் பார்த்தா, புஷ்ய நட்சத்திரம் பரதனுக்கு, ஆஸிலேஷா நட்சத்திரம் சத்துருக்கனனுக்கு. ரெண்டு பேர் நட்சத்திரக்கும் நாள் பார்க்கலே. பரதனோட நட்சத்திரத்துக்குத்தான் பார்த்தா. இதை வியாக்யானத்திலே பெரியவாச்சான் பிள்ளை ரொம்ப ஆச்சர்யமாய் சாதிக்கிறார். ‘ஒருத்தன் புறப்பட்டுப் போனால், அவனுக்கு நட்சத்திரம் பார்ப்பர்களே தவிர, அவன் நிழலுக்கும், உடைவாளுக்கும் பார்க்க மாட்டார்கள்’ன்னு எழுதினார். அப்படின்னா என்ன அர்த்தம்? சத்துருக்கனன், பரதனுக்கு சாயையைப் போலே. அவனுடையை நிழலைப் போல பின்தொடர்ந்தான்.

    (நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – உபதேச ரத்தின மாலை உபந்நியாசம் – WA-DC)

    மாதங்கள் – ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம்

    ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திலே மாசத்தை எண்ணுன்னு சொன்னா, சித்திரைன்னு ஆரம்பிக்ககூடாது. ஐப்பசின்னு ஆரம்பிக்கனும். மாசத்தை முடிச்சுருன்னு சொன்னா கார்த்திகைன்னு முடிக்கனும். ஏன்னா கார்த்திகைலதான் திருமங்கை ஆழ்வார் திருவவதாரம் பண்ணினார். நட்சத்திரத்த எண்ணுன்னா, அஸ்வினின்னு எண்ணக்கூடாது, திருவோண நட்சத்திரத்திலேர்ந்துதான் எண்ண ஆரம்பிக்கனும். கடைசி நட்சத்திரம் கார்த்திகை.

    (நன்றி – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் – உபதேச ரத்தின மாலை உபந்நியாசம் – WA-DC)

    February 04

    ஸ்ரீஇராமானுஜ வைபவம் – ஆறு வார்த்தைகள்


    ஒருதடவை காஞ்சீபுரம் தேவப் பெருமாளிடத்துல போய், எனக்கு இன்னென்ன சந்தேகங்களெல்லாம் உள்ளன, அதுக்கு பதில் தெரிஞ்சுக்கனும்ன்னு இராமானுசர் ஆசைப்பட்டார். அந்தக் கருத்துக்களை அடிப்படையா வச்சுண்டுதான் மேற்கொண்டு சம்ப்ரதாயத்தை வளர்க்க வேண்டும். யார்கிட்ட போய் சந்தேகம் கேட்கறது? கேட்கலாம்ன்னா, ஆளவந்தார்கிட்ட கேட்கலாம்ன்னு போறதுக்குள்ளே அவர் பரமபதிச்சுட்டார். இனிமே யாரிடத்தில போய் கேட்க, பெருமாளிடத்திலயே போய் கேட்டுருவோம். அவரிடத்தில கேட்டா அவர் அர்த்தம் சொல்லிடப்போறார், அப்படிங்கறதுக்காக பெருமாளிடத்தில கேட்கலாம்ன்னா, அவர் என்னைக்கு யாருக்கு பதில் சொல்லியிருக்கார்? நேர போய் நிற்போம், கேட்போம், அதே சிரிச்சிண்டே இருக்கார். அதுக்கு மேல கேட்டா என்ன சொல்லுவர்? ‘நாந்தான் எல்லாத்தையும் புஸ்தகத்துல எழுதி வச்சுட்டனே, திரும்பத் திரும்ப எங்கிட்டயே வந்து கேட்டுட்டிருந்தியானா’. நாம அப்பப்ப ரொம்ப சந்தேகம் வந்து இப்படி பண்ணலாமா, அப்படிப் பண்ணலாமான்னு கேட்டுண்டே இருக்கோமோல்லையோ, இது எதுக்கும் வழி இல்லாமலே இல்லே, எல்லாத்தையும் எழுதி வச்சுட்டார். ஆனா நாம ஏன் தெரியுமா கேட்கறோம், அந்த எழுதி வச்சதன்படி பண்றதுக்கு நம்மாள முடியலே, அதுனாலதான் போய்ப்போய் அவரிடத்திலே கேட்டுண்டு இருக்கோமே தவிர, எழுதி வச்சுட்டார், வச்சத்தின் படி நாம நடக்க வேண்டும். அது முடியறதில்லே, ஒருவேளை போய்க்கேட்டா மாத்திக் குடுப்பரோ, அப்படிங்கற ஆசையினாலே நாம போய் கேட்டுண்டு இருக்கோமே தவிர. அதெல்லாம் அவர் பண்ணமாட்டார். ஏற்கனவே என்ன சாஸ்திரத்தில சொல்லி இருக்கோ, அதன்படிதான் நடக்க வேண்டும். இராமானுசர் அதற்கு நல்ல யுக்தி கையாண்டார்.

    தேவப்பெருமாள்கிட்டப் போய் கேட்கணும், அவர் ஆனா நேரக் கேட்டா எதையும் சொல்ல மாட்டார். தேவப்பெருமாள் நித்யப்படி பேசிண்டிருக்கவர் ஒரு வ்யக்தி இருந்தார். அர்ச்சாவதரமாக, விக்கிரஹ ரூபத்திலேயே தேவாதிராஜன் இருந்தாலும், அப்படியே ஒருத்தரிடத்தில அவர் பேசிக்கொண்டிருந்தார். திருக்கச்சி நம்பிகள் அப்படின்னு அவருக்குப் பேர்.  காஞ்சீபூர்ணர் என்று திருநாமம், அதாவது, இப்ப ஸ்ரீபெரும்புதூர் போறோம், அதுக்குப் போற வழியிலே பூந்தமல்லின்னு வருதோ இல்லையோ, பூவிருந்தவல்லி, அந்தப் பூவிருந்தவல்லியிலே, மாசி மாசம் மிருகசீரிஷ நட்சத்திரத்திலே, அவர் அவதரித்தவர். அவர் நித்யப்படி பெருமாளுக்கு விசிறுகிற கைங்கர்யம் பண்ணுவராம். திருஆளவட்டம் வீசுதல் அப்படின்னு அதற்குப் பேர். அந்த ஸ்வாமி கைல ஒரு விசிறி எடுத்துண்டார், அவருக்கு விசிற கைங்கர்யம் ரொம்பப் பிடிச்சுருந்தது. நேர ஸ்ரீரங்கத்துக்குப் போனார், ‘பெருமாளே உனக்கு விசிறட்டுமா’ன்னார், ‘ரெண்டு பக்கம் காவேரி, நடுங்கறது, எனக்கெல்லாம் விசிற வேண்டாம், நான் நல்லா திருப்தியாத்தான் இருக்கேன், திருவேங்கடமுடையானப் போய் கேளும்’ன்னார். சரின்னு அவர் திருவேங்கடத்துக்குப் போனார், ‘வருஷத்துக்கு ரெண்டு மாசம்தான் வெய்யிலே இங்கே, எப்பவுமே குளிரது, நீர் எதுக்கு எனக்கு இப்போ விசிற போறீர்? வேண்டாம், ப்ரம்மா வளர்த்த ஹோம குண்டம், அக்னி மத்யத்தில தோன்றினவர் தேவப்பெருமாள், தேவாதிராஜனைச் சேவித்தால் இந்த திருமேனி கன்னத்திலயெல்லாம் வடு இருக்கு பாருங்கோ, என்ன காரணம்ன்னால், அவர் அக்னி மத்யத்திலேர்ந்து தோன்றியவர், அதான் காரணம். அதனாலே அந்த பெருமாளுக்கு கைங்கர்யம் பண்றதுதான் ஏற்புடையாத இருக்கும். நேர காஞ்சீபுரம் வந்தார், பண்ணட்டுமான்னார். ‘ரெண்டு பேர் சொல்லி அனுப்பிச்சுட்டா, இனிமே நானும் மாட்டேன்னுட்டா நீர் எங்க போவீர், சரி கைங்கர்யமே பண்ணும்’, அப்படின்னு தேவப்பெருமாள் ஏத்துண்டார். இன்னைக்கும் கச்சிக்கு வாய்த்தான் மண்டபம்ன்னு காஞ்சீபுரத்துல இருக்கு. ரொம்ப முக்கியமான மண்டபம். பெருமாளோட ஹஸ்திகிரி மலைக்கு மேலே ஏறிப்போனோம்ன்னா, இன்னும் சட்டுன்னு உங்களுக்கு புரியனும்ன்னா, பல்லி இருக்கோல்லையோ, அதுக்கும் சம்ப்ரதாயத்துக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஊர் முழுக்கப் போய் பார்த்துட்டு வராளே தவிர, பல்லிக்கும் நமக்கும் ஒண்ணுமில்லே. ஏதோ எதற்காகவோ பெருமாள சேவிச்சிண்டிருக்கிற லட்சோபலட்சம் பேருக்குள்ள அவாளும் ஒருத்தர்ன்னு வச்சுக்கங்கோ. அதனாலே அந்த பல்லி இருக்கற இடத்துக்கு வெளிலே, நாலு கால் மண்டபம், கச்சிக்கு வாய்த்தான் மண்டபம்ன்னுட்டு. அந்த மண்டபத்துக்கு நித்யம் சாயங்காலத்துலே தேவப்பெருமாள் வருவர், இவர் கொஞ்ச நாழி திருவாலவட்டம் விசிறுவர், அவரோட பேசிண்டிருப்பர். பெருமாளுக்கும் பேசறதுக்கு ஆள் வேணும்ன்னு வச்சுக்கங்கோ. அதனால இவரப் பிடிச்சிண்டார். பேசிட்டு, அப்படியே நாட்டு நடப்பெல்லாம் பேசிட்டு அனுப்பிச்சு விட்டுடுவர் போலருக்கு. திரும்பப்போய் மறுநாள் காத்தால கைங்கர்யத்துக்கு வருவர்.

    அப்படி திருக்கச்சி நம்பிகள் இருக்கார்ன்னு இராமனுசர் தெரிஞ்சிண்டு, அவருடைய திருவடிகள்ல விழுந்தார். விழுந்தார்ன்னா அங்க ஒரு கருத்து முக்கியம். திருக்கச்சி நம்பிகள் ப்ராமணராக பிறந்தவர் அல்லர். அவர் தாச குலத்திலே பிறந்தவர். இருப்பினும் பெருமானுக்கு அடியவராகிய அவருடைய கைங்கர்யத்துலே இருந்துட்டார்ன்னா, அவர் யாராக இருந்தாலும் நமக்கு உத்தேஷ்யம். இதுதான் ஆழ்வார்களுடைய சம்ப்ரதாயம், இதுதான் இராமனுசரும் வளர்த்துக் கொடுத்தது. இதத்தான் பலபேரும் தழுவிக் கொண்டு, ஓ, அத்தனை பேரும் பக்தர்கள்ன்னு வந்துட்டா சமம். அவர்களுக்குள்ள உயர்வு, தாழ்வு நாம் பார்க்கக்கூடாது. எப்படியும் வர்ணாஸ்ரம தர்மத்தை அவனவன் அனுஷ்டிக்கத்தான் போகிறான். அத விட்டுவிடப் போறதில்லே. ஆனா வர்ண தர்மத்தைப் பார்த்து உயர்ந்தவன், தாழ்ந்தவன்ங்கிற வேறுபாடு காட்டக்கூடாது. அதனாலதான் தான் பெரிய ப்ராமணரா, சாஸ்திரம் வாசிச்சவரா இருந்தாலும், அவர் போய் திருக்கச்சி நம்பிகள் திருவடிகளைப் பிடிச்சிண்டார். ’நீர்தான் என் சந்தேகத்தைத் தீர்க்கணும்’, அவர் பதறிப்போய் நகர்ந்துனுட்டார், ‘நீர் யாரு, நம்மகிட்ட வந்து கேட்கறீர் இப்போ, எனக்கு என்ன தெரியும்?’ன்னார், ‘உமக்கு என்ன தெரியுமா, உம்ம கையில பெருமாள் இருக்கார். அதவிட உமக்கு என்ன தெரிய வேணும்?’ அவர் ஆளவந்தாரோட சிஷ்யர். ஆளவந்தார் சிஷ்யராத்தான் திருக்கச்சி நம்பிகள் இருந்திருக்கார். அவரப் பிரார்த்தித்த உடனே, ‘சரி, என்ன வேணும்’ன்னார். ’எனக்கு இன்னென்ன மாதிரி சந்தேகம் இருக்கு, இதெப்போய் கேட்டுண்டு வாரும்’. ‘சரி, நாளைக்கு சாயங்காலம் போவேன், போறப்ப கேட்டுண்டு வாரேன்’ அப்படின்னு திருக்கச்சி நம்பிகள் சொல்லிட்டார். சாயங்காலம் வந்தது, கைங்கர்யம் முடிஞ்சு போச்சு, கிளம்பிப் போணுமோல்லையோ, நின்னுண்டே இருக்கார். அவர் போலே. போலேன்னா, தேவப்பெருமாள் கேட்டார், ‘என்ன, நாழியாகலையா, போகலையா, நாளைக்குத்தானே வருவீர்? கைங்கர்யம் முடிஞ்சவுடனே கிளம்பிப் போய்டுவீரே, இன்னைக்கு எதுக்கு நின்னுண்டு இருக்கீர்?’ன்னார். ‘இல்லே, ஏதோ சந்தேகங்கள்லாம் இருக்கு, அதுனாலதான் நின்னுண்டு இருக்கேன்’, ‘சந்தேகமா, இராமானுசர் கேட்டாரா’ன்னார். ‘ஆமாமா, அதுக்காகத்தான் சந்தேகம் கேட்கறதுக்காக வந்தேன்’. ‘பதில் சொல்றேன், கேட்டுக்கோ’, அப்படின்னுட்டு ஆறு வார்த்தைகளைப் பெருமான் உரைத்தான்.

    1) அஹமேவ பரந்தத்வம்

    2) தரிசனம் பேதயேவச

    3) உபாயேசு ப்ரபத்திஷ்யாத்

    4) அந்திமஸ்மிருதி வர்ஜனம்

    5) தேகாவஸானே முக்திஸ்யாத்

    6) பூர்ணாச்சார்ய சமாஸ்ரயாத்

    இது தேவப்பெருமாள் கொடுத்த ஆறு வார்த்தை. அபரிமிதமான ஆறு வார்த்தைகள். இதற்கு சமமான வேறு வார்த்தை இல்லைன்னு சொல்ற அளவுக்கு ஆறு வார்த்தைகள். இதுவே வைதிக சித்தாந்தம்ன்னு தேவப்பெருமாளே வெளியிட்ட வார்த்தை.

    1. அஹமேவ பரந்தத்வம்

    - நானே பரதேவதை.

    2. தரிசனம் பேதயேவச

    - அபேதம் சித்தாந்தமல்ல. பேதமே சித்தாந்தம். ப்ரம்மமும் ஆத்மாவும் ஒன்றல்ல. ப்ரம்மம் வேறே, ஆத்மா வேறே.

    3. உபாயேசு ப்ரபத்திஷ்யாது

    - பெருமானை அடைவிக்கக்கூடிய உபாயங்களிலே சரணாகதி மிகச்சிறந்தது, மிகச்சுலபமானது.

    4. அந்திமஸ்மிருதி வர்ஜனம்

    - யாரொருத்தன் சரணாகதி பண்ணியிருக்கிறானோ, அவன் மரணப்படுக்கையிலே இருக்கும் போது, பெருமானை நினைக்க வேண்டிய அவசியமில்லை. நினைக்காமல் போனாலும், ஏன்னா நினைவு தப்பிப்போச்சு, நினைக்கவே இல்லே. கண்ணன் கீதையிலே என்ன சொல்லிட்டார், யாரெல்லாம் என்னை பக்தியைச் சாதனமாகக் கொண்டு அடைய வேணும்ன்னு பார்க்கிறானோ, அவன்,

    தஸ்மா சர்வேஸு காலேஸு மாம் அனுஸ்மர
    யம்யம்வாதி ஸ்மரண்பாவம் கஜத்யந்தே களேபரம்
    தத்தமேவைதி கெளந்தேய ஸதாதத்பாவ பாவிதஹா

    -இதெல்லாம் ரொம்ப தங்கத்தகட்டிலே பொறிக்கப் படவேண்டிய ஸ்லோகங்கள். கண்ணன் கீதையில சொல்லியிருக்கிற எழுநூறுமே மணிதான். ஒண்ணுமே குறையில்லே. ஆனா அதுல ரொம்ப இரத்தினமான சில ஸ்லோகங்கள். அதுல சொல்றார், ’யாரொருத்தன் பக்தியைச் சாதனமாகக் கொண்டு என்னை அடைய வேண்டும் என்று பார்க்கிறானோ, அவனுக்கு, கடைசி நிமிஷம் வரை, மோட்சத்துக்கு போறவரை, என் நினைவு இருக்க வேண்டும். அந்தக் கடைசி நிமிசத்துல வேற எதையாவது நினைச்சுண்டு உயிரை விட்டான்னு வச்சுக்கோ, யம்யம்வாதி ஸ்மரண்பாவம் கஜத்யந்தே களேபரம் தம்தமேவைதி கெளந்தேய – அப்ப எதை நினைச்சிண்டு உயிரை விடறானோ அதுவாத்தான் ஆகும். மான நினைச்சிண்டு ஜடபரதர் உயிர விட்டார், மானாப் பிறந்துட்டாரோல்லையோ? அதனால அப்படியில்லே, என்னை நினைத்துக் கொண்டுதான் உயிர் விடவேண்டும். அப்பத்தான் மோட்சம் கிடைக்கிறது, க்ருஷ்ண சாயுஜ்யம் கிட்டும். உடனே ஒருத்தர் கேட்டர், ‘ஸ்வாமி நான் கண்ணன நினைச்சிண்டே உயிர விட்டேன், அடுத்த பிறவி கண்ணனா பிறப்பேனோல்லையோ’ன்னார். அவர் என்னை அடைவாய்ன்னு சொல்றாரே தவிர, அதுக்குன்னு மானை நினைச்சிண்டு உயிர் போனா மானா பிறப்பா, சிங்கத்த நினைச்சிண்டு உயிர விட்ட சிங்கமா பிறப்பா, கண்ணன நினைச்சிண்டு உயிர விட்டா கண்ணனா பிறக்க முடியுமா? அவர் பரமாத்மா, நான் ஜீவாத்மா. அவர அடையலாம், அவனுக்கு நித்ய கைங்கர்யத்தில இருக்கலாம். சம்சாரத்தில பிறந்து துன்பப்பட வேண்டிய தேவையில்லை. அதத்தான் கண்ணன் தெரிவிக்கிறார். அதனாலே பக்தி சாதனம்ன்னு வச்சிருந்தோம்ன்னா, கடைசி நிமிசத்துலே அவன் நினைவு ரொம்பத் தேவையாறது.

    இப்ப தேவப்பெருமாள் தெரிவிக்கிறார், ‘இல்லே, சித்தோபாயமான என்னையே பற்று, நானே உனக்கு வழியாக இருக்கிறேன். வேறு வழிகளெல்லாம் விட்டுடு. என்னையே வழியாகப் பற்று. அது சரணாகதிக்கு அர்த்தம். அப்படி பண்ணிட்டேன்னு வச்சுக்கோ, கடைசி நிமிசத்துலே, என்னைப் பத்தி நீ நினைக்க வேண்டிய தேவையில்லே. ஏன்னா, நீ மறந்துட்டியான்னாகூட நான் ஞாபகம் வச்சுக்கறேன். என்னிக்கோ ஒருநாள் சரணம்ன்னு சொன்னியோல்லையோ, அதற்காக, ‘அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன்’னு ஆழ்வார் சாதித்தார், என்னிக்கோ நான் எப்படி மரணப்படுக்கையில கிடக்கப்போறேன்னு தெரியாது. நினைவு இருக்குமான்னு தெரியாது, சொல்லு இருக்குமான்னு தெரியாது, மனசு இருக்குமான்னு தெரியாது. யாரார் இருக்கப்போறா, யாரார் இருக்கப் போறதில்லேன்னு தெரியாது. அந்த நிலைமைக்கு நான் என்ன ஆவேனோ. இப்ப நீ கீதையில சொல்லியிருக்கிற சட்டத்தின்படி, நான் உன்னை நினைச்சிண்டேதான் உயிர விடனும்ன்னா, நினைவே தப்பிப்போய்டப் போறதோ என்னமோ, இப்ப எத்தனை பேருக்கு உயிர் போறச்சே நினைவு இருக்கப் போறது? அதனாலதான் நமக்கு சந்தேகம் வரும்ன்னுட்டு பெருமாள் தவிர்த்துட்டார். ‘நீ கவலைப்படாதே, அந்த நினைவை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்’. இது வராகப் பெருமானுடைய திருவாக்கு.

    ஸ்திதே மர்ஜுதுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நரஹா
    தாதுசாம்ய ஸ்திதேஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமயம்
    ததஸ்தம் ரியமானந்து காஷ்டபாஷான சந்நிபம்
    அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாங்கதிம்

    கடைசி நிமிசத்தில் நான் உன்னை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு மோட்சத்துக்கு அழைத்துச் செல்லுகிறேன், என்று வராகர் சொல்லியிருக்கார். அதத்தான் இந்த இடத்தில காஞ்சீ தேவப்பெருமாளும் சொல்றார், அந்திமஸ்மிருதி வர்ஜனம், கடைசியிலே நினைவு இருக்க வேண்டிய தேவையில்லை.

    5. தேகாவஸானே முக்திஸ்யாத்

    தேகம் எப்போது கீழ விழுகிறதோ அப்போது முக்தி ஏற்படும். அதாவது பக்தியைச் சாதனமாகக் கொண்டோம்ன்னா, ப்ராரப்த்த கர்மா எப்போது முடிவுக்கு வருகிறதோ, அப்பதான் முக்தி. ப்ராரப்த்த கர்மாக்களெல்லாம் தொலையணும், அது எத்தனை பிறவி ஆகும்ன்னு தெரியாது. அப்புறம் நமக்கு முக்தி கிடைக்கும். ஆனா பகவானையே சாதனமாகப் பற்றினோம்ன்னால், எந்தப் பிறவியில் அவன் சாதனம்ன்னு சித்தோபாய ஸ்வீகாரம் பண்ணுகிறோமோ, சரணாகதி அனுஷ்டிக்கிறோமோ, அந்தப் பிறவிதான் கடைசிப்பிறவி. அந்தப் பிறவியோடயே செஞ்சது கீழ விழுந்துடும். அத்தோடயே நாம மோட்சத்துக்கு போய்டறோம். அப்போ தேகத்தின் முடிவில், அந்தப் பிறவியின் முடிவில் முக்தியா, அல்லது கர்மத்தின் முடிவில் முக்தியா. இதுதான் வித்தியாசம். ப்ராரப்த்த கர்மா முடியும்போது முக்தியடையறதுன்னா, ரொம்ப பிறவிகளாகும். அதே சரீரத்தோடே கடைசில முக்தி அடையறதுன்னா, அப்பவாவது கிடைச்சுரும். அப்ப அடுத்தது தோணும், ‘ஸ்வாமி அப்ப சரணாகதி பண்ணினா உடனே முக்தி கிடைக்காதா’. நான் இப்பபோய் ஏழு வயசுல ஆச்சார்யனிடத்தில சமாஸ்ரயணம் பண்ணினுட்டேன். அவர் சரி உனக்கு உண்டு எனக்கு சொல்லிட்டார். உடனே மோட்சம் கிடைக்காதான்னு கேட்டார் ஒருத்தர். இல்லேல்லே, பிராணம் போறச்சேதான் கிடைக்கும். எப்ப உயிர் போகுமோ அப்பத்தான் கிடைக்கும். ஏன் உடனே குடுக்கக்கூடாதான்னா, அப்ப ஒருத்தனுமே ஆச்சார்ய சமாஸ்ரயணத்துக்கே வரமாட்டான். அதனாலதான் பெருமாள் அப்படி வைக்கவே இல்லே.

    6. பூர்ணாச்சார்ய சமாஸ்ரயாத்

    இது அரிச்சிண்டிருந்தது இராமனுசர் உள்ளத்தே, ‘நான் எந்த ஆச்சார்யனைப் பற்ற வேண்டும்?’, பூர்ணாச்சார்ய சமாஸ்ரயாத். ஏன்னா ஆளவந்தாரை ஆச்சார்யன்னு நினைச்சிண்டிருந்தார், அவர் பரமபதிச்சுட்டார். அடுத்தது யாரைப் பற்ற வேண்டுமென்றால், ‘பெரிய நம்பிகளையே பற்றும்’, என்று சொல்ல, ‘சரி, பெரிய நம்பிகளைப் பற்றுவோம்’, அப்படின்னு காஞ்சீபுரத்திலருந்து ஸ்ரீரங்கத்த நோக்கி இராமானுசர் பிரயாணப்படறார்.

    -- நன்றி ("இராமனுஜ வைபவம்” உபந்நியாசம்@SEATTLE - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)

    விசிடாத்வைதம் – அடிப்படை


    ஆழ்வார்கள் நமக்கு செய்து கொடுத்ததும், ‘நீ பகவானுடைய சொத்துங்கிறதை மறந்து போய்டாதே. ஆத்மா சுதந்திரன் அல்லன், ஆத்மா பரதந்திரன், ஆத்மா சேஷபூதன்’, என்று தெரிவித்தார். இராமானுசருக்கு எப்படி விசிட்டாத்வைத சம்ப்ரதாய கருத்து தெளிவாகப் புலப்பட்டு, அதை சாதித்தார்ன்னு பார்ப்போம். இது இவரா செய்ததல்ல. பராசர மகரிஷி முதல்ல எழுதி வைத்தார்.

    தத்த்வேநயஹா ச்சிதசிதிச்வர தத் ஸ்வபாவ போகாபவர்க்க ததுபாய கதிருதார:
    ஸந்தர்சயந் நிரமிமீத புராணநத்நம் தஸ்மை நமஹ முநிவராய பராசராய.

    இது ஆளவந்தாருடைய ஸ்தோத்திர ரத்தின ஸ்லோகம். தத்வங்கள் மூன்று. இது அடிப்படை. சாஸ்திரம் சொல்லிக் கொடுத்தது சிது, அசிது, ஈஸ்வரன் என்கிற தத்வம் மூன்று.  சிது – ஜீவாத்மா, ஞானமுடையவர். அசிது – ஞான சூன்யங்களான கண்ணால் காணப்படுகிற தத்வங்கள். ஈஸ்வரன் – சிது, அசிது ரெண்டையும் தன்னோடு, தனக்கு அடக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறவர். சிது, அசிதுக்குள்ளே ஈஸ்வரர் வியாபிக்கிறார். சித்தையும், அசித்தையும் நியமிக்கிறார். சித்தையும், அசித்தையும் தனக்கு சரீரமாகக் கொண்டிருக்கிறார்.

    போப்கா போக்யம் ப்ரேதிதாரஞ்ச மத்வா
    சரம் ப்ரதாநம் அமிர்தாஷரம் பரஹா
    ஸராத்மாநாம் ஈஸதேதேவயேஹா

    - உபநிஷத்து சொல்றது, உலகத்தில் கண்ணால் நீ எதெதெல்லாம் பார்க்கறீயோ, அதெல்லாம் அசிது. அதுக்கு எதுவுமே ஞானம் கிடையாது. ‘ஸ்வாமி, என்னையே பார்த்துக்கறேனே, ஞானமில்லையா’ன்னா, இல்லையோன்னமோ, என்னைக் கேட்டா தெரியாது. ஏன்னா நாம பார்த்துக்கற உடம்புக்கு நிச்சயமா ஞானம் கிடையாது. ’நான்’ங்கிற ஆத்மாக்குத்தான் ஞானமுண்டே தவிர, என்னுடையதுங்கிற உடலுக்கு ஞானம் கிடையாது. சரீரத்துக்கு ஞானமிருக்காது. மூளைக்கே ஞானம் கிடையாது. மனசுக்கு ஞானம் கிடையாது. மூளை அசிது, மனசு அசிது, புத்தி அசிது, ’நான்’ங்கிற ஆத்மா ஒருத்தர்தான் சிது. ஆத்மாவுக்குத்தான் ஞானமுண்டு.

    ‘என்ன மூளை! என்ன ஞானம்!’ங்கிறா, மூளைக்கெல்லாம் ஞானம் வராது. அது, சரீரம் கீழ கிடக்கறச்சே தட்டிப் பாருங்கோ, அந்த மூளை வேலை செய்யறதான்னுட்டு. ஆத்மா உள்ள இருக்கறவரைக்கும்தான் அந்த மூளை வேலை செய்யுமே தவிர, ம்ருத சரீரம் கீழ இருக்குன்னா அது வேலை செய்யுமா? அதனால ஆத்மாதான் சைதன்யம் படைத்தவர். இந்த ஆத்மாவும், அசிதும் பரமாத்மாவுக்கு சரீரம். அத சாஸ்திரம் சொல்றது,

    யஸ்ய ஆத்மா சரீரம் யம் ஆத்மாந வேத
    யஸ்ய ம்ருத்வீ சரீரம் யம் ம்ருத்வீந வேத
    யஸ்ய ம்ருத்வ் சரீரம் யம் ம்ருத்துவ்ந வேந
    அபத ஆத்மா விஜநஹா தேவஹா தேவஹேகஹா.

    - என்று நீங்கள் அத்தனை பேரும் பெருமானுக்கு சரீரம்தான், என்று உபநிஷத்து ஓதுகிறது. இத ஸ்வாமி பார்த்துன்னுட்டார். அப்ப ஈஸ்வரன், பகவான் ஸ்ரீமந் நாராயணன், சிது, அசிது. சித்தையும், அசித்தையும் சரீரமாகக் கொண்டவன்தான் நாராயணன். சித்தும், அசித்தும் நாராயணனை விட்டுப் பிரியாமல் இருக்கும். சேதநாசேதனங்கள் சரீரமாக, சரீரியாக ப்ரம்மம் இருக்கிறது. ப்ரம்மம் சரீரி. சித்தும், அசித்தும் சரீரம். சித்தும், அசித்தும்ன்னு தனித்துப் பார்த்தா, எண்ணிலடங்காதவைகள்தான். ஆனா சித்தும், அசித்தும் ப்ரம்மத்தோடே சேர்ந்திருக்குன்னு பார்த்தா, ஒன்றுதான். ஒருபக்கம் பார்த்தா இது அத்தனையும் சேர்ந்த ப்ரம்மம் ஒன்று, மத்தொரு பக்கம் பார்த்தா இது அத்தனையும் பல. இத எப்படி ஸ்வாமி தெரிஞ்சிண்டார்னா, கீதையிலே ரெண்டாவது அத்தியாயம், பன்னிரெண்டாவது ஸ்லோகம்.

    நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
    ந சைவந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்
    .

    - கண்ணன் தன் சித்தாந்தத்தை தெளிவாச் சொல்றார். ஆனா ரொம்பக் குழப்பிட்டார். தெளிவாச் சொல்றாப்ல இருந்ததோல்லையோ? இந்த ஸ்லோகத்தினுடைய அர்த்தம் சொல்றேன். ’இத இப்படி சுலபமா சொல்லிருக்கக்கூடாதோ ஸ்வாமி, ஏன் இப்படிச் சொல்லிட்டார்?’ன்னு தோணும். அவர் சொல்றது,

    அர்ஜுனா, நான் நேற்று இருந்தேன் அல்லேன் என்பதில்லை, நான் இன்று இருக்கிறேன் அல்லேன் என்பதில்லை. நாளை இருப்பேன் அல்லேன் என்பதில்லை. நீ நேற்று இருந்தாய் அல்லை என்பதில்லை. இன்று இருக்கிறாய் அல்லை என்பதில்லை. நாளை இருப்பாய் அல்லை என்பதில்லை. இத்தனை ராஜாக்கள் நிக்கிறா பார். இவர்களெல்லம் நேற்று இருந்தார்கள் அல்லர்கள் என்பதில்லை. இன்று இருக்கிறார்கள் அல்லர்கள் என்பதில்லை. நாளை இருப்பார்கள் அல்லர்கள் என்பதில்லை.’

    ஸ்லோகத்துக்குக் கருத்துச் சொன்னா இதுதான். ’அகம் ஜாது ந ஆசம் இதிந’. அஹம் – நான், ஜாது – முற்காலத்தில், ந ஆசம் – இருந்தேன் அல்லேன், இதிந – என்றில்லை. இது என்னத்துக்கு, இப்ப சொல்றது என்ன இப்போ? ’நான், நீ, இவா எல்லாரும், முக்காலத்திலும் உண்டு’. இதத்தான் இந்தப் பாடுபடுத்திட்டார் இப்போ. நானும் சரி, நீயும் சரி, இவர்களும் சரி, இவா எல்லாருமே நேத்திக்கு உண்டு, இன்னைக்கு உண்டு, நாளைக்கு உண்டு. ஆத்மா நித்யம். இதச்சொல்ல ஆரம்பிச்சதுக்குத்தான் இந்தப் பாடு. நீயும் நித்யம், நானும் நித்யம். இந்த இடத்துலேர்ந்து நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்ன? எப்ப ’நீ’ என்று பிரித்து, ‘நான்’ என்று பிரித்தாரோ, நான் வேறே, நீ வேறேங்கறது ஆயிடுத்து. நானும் நீரும் வேறேன்ன அப்ப பரமாத்மாவும், ஜீவாத்மாவும் வேறேன்னு ஆயிடுத்து. முதல் பிரிவு. அதனால பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றல்ல, ரெண்டும் வெவ்வேறு. அதோடே, ‘ந த்வம் நேமே ஜநாதிபா:’ – இதோ இத்தனை பேர் இருக்கறார்களோல்லையோ, இவர்கள் எல்லாரும் நித்யர்கள்’ன்னார். அப்போ ’இவர்கள் எல்லாரும்’ என்று சொன்னால், ஆத்மா ஒன்றல்ல, பல-ன்னு ஆயிடுத்தோல்லையோ? ந த்வம் ந இமே ஜநாதிபா: – இமேங்கறது பகுவசனம், இவன்னு சொல்லலே, இவர்கள், இவர்கள் நித்யர்கள் அப்படின்னு சொல்லிட்டால், ஆத்மாக்கள் பலர், பரமாத்மா நான் வேறே, ஜீவாத்மா நீ வேறே. இப்ப இந்த ஸ்லோகத்திலேர்ந்து நாம் தெரிஞ்சுக்க வேண்டியது, பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு, ஜீவாத்மாக்கள் ஒருத்தருக்கொருத்தர் பலர், ஒன்றல்லர். அப்ப ஆத்மாக்கள் பலர்ன்னு தெரிஞ்சுக்கணும். ஆத்ம பரமாத்மா பின்னம், ரெண்டும் வெவ்வேறுன்னு தெரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அடிப்படை. விசிடாத்வைதத்த தொடங்கி வைத்தவரே கண்ணன்தான். பன்னெண்டாம் அத்தியாயத்திலேர்ந்து இதத்தான் நாம் பார்க்கப் போறோம், நான் வேறே, நீ வேறே, இவர்கள்லெல்லாம் வேறே. அதனாலே பேதமே சித்தாந்தம், அபேதம் சித்தாந்தமல்ல.

    நம்ம சம்ப்ரதாயப்படி எல்லாமே உண்மை. பொய்ங்கறதை ஏத்துக்கறதில்லை. இப்ப இந்த இடத்துல நாம பார்க்கற அத்தனை பேருமே பொய், உக்காந்துண்டிருக்கவாள்லாம் பொய், சொல்லிண்டிருக்கவர் பொய், இது இத்தனையுமே பொய், நான்ங்கிற ப்ரம்மம் ஒன்றே உண்மை, அப்படின்னு தெரிஞ்சுகிட்டா மோட்சம்ங்கிறது அத்வைத வாதம். ஆனா அந்த வாதத்த ’மாயா வாதம்’ன்னு சொல்லுவர்கள். ஏன்னா கண்ணால பார்க்கிற அத்தனையுமே மாயம்ன்னுட்டாரோ இல்லையோ? மாயாவாதம் சம்மதிக்கக்கூடியது அல்ல, ஏன்னா, இது இத்தனையுமே பொய் அப்படின்னு வச்சுணுட்டேள்ன்னா, என்ன ஆகும் தெரியுமோ? இப்ப நான் சொல்றவன் பொய், நீங்க கேக்கறவா பொய், எல்லாருமே பொய், அப்படின்னுட்டா அதுல ஒரு பெரிய ஆபத்து வரும். இப்ப இத பொய்ன்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடிதான நாம காலக்ஷேபத்துக்கு வந்திருக்கோம்? எல்லாம் பொய்ன்னு தெரிஞ்சுக்கலே, நானே ப்ரம்மம்ங்கிற ஞானம் வரலே. அதனால சரி, காலக்ஷேபம் பண்ணி நானே ப்ரம்மம்ன்னு தெரிஞ்சுப்போம், அப்படிங்கறதுக்காக நீங்கள்ல்லாம் வந்துருக்கீள்ன்னு வச்சுப்போம். நானும் காலக்ஷேபம் சொல்லி நானே ப்ரம்மம் அப்படின்னு தெரிஞ்சுப்போம், அப்படிங்கறதுக்காக நான் வந்துருக்கேன்னு வச்சுப்போம். அப்ப நான் வந்திருக்கறதும் அபேத ஞானத்துக்காக, நீங்க வந்துருக்கதும் அபேத ஞானத்துக்காக. நமக்கு இப்ப இருக்கறது, பேத மயக்கம். எல்லாம் வெவ்வேறேங்கிற மயக்கத்துல இருக்கோம், ஆனா தெரிஞ்சுக்க வேண்டியது, எல்லாம் வெவ்வேறேயில்லே, நான் ஒன்றே, அப்படிங்கற ஞானத்துக்காகத்தான் வந்திருக்கோம். அப்ப இந்த உபந்நியாசம் முடிஞ்ச உடனே என்ன ஆகும்ன்னு சொல்லுங்கோ? நீங்க நல்ல விஷயத்த தெரிஞ்சுனுடுவீள், தெரிஞ்சுனுட்டு, எல்லாம் பொய், நானே உண்மை, அப்படின்னு நீங்க புரிஞ்சுக்கப் போறேள் இப்போ. நானும் புருஞ்சுக்கணும் ,நீங்களும் புரிஞ்சுக்கணும். நான் சொல்லிப் புரிஞ்சுக்கணும், நீங்க கேட்டுப் புரிஞ்சுக்கணும். முடிவிலே என்ன ஆகும்ன்னா, ஒன்னு இந்த கேக்கறதுக்குள்ளே யாரோ ஒருத்தர்தான் உண்மை. இல்லே, சொல்றவர்தான் உண்மை. ரெண்டாவது ஆத்மாவே கிடையாது. ஓர் ஆத்மாதான் உண்மை அப்படின்னா என்ன ஆபத்து வரும்? ஒன்னு ஒரு ஆச்சார்யன் சொல்றார், ஒரு சிஷ்யன் கேட்கறார். கண்ணன் உபதேசிக்கிறார், அர்ஜுனன் கேட்டுண்டு இருக்கார். ரெண்டு பேருல ஒருத்தர்தான் உண்மை. அத்வைதமோல்லையோ? அதனாலே ரெண்டு பேரு உண்மையா இருக்க முடியாது. இருக்கறதுல ஒருத்தர்தான் உண்மை. ஒன்னு, அர்ஜுனன் உண்மைன்னு வச்சுப்போம், அப்ப கண்ணன் பொய். பொய்யான கண்ணன் உபதேசிச்சு எப்படி மெய்யான ஞானம் கிடைக்கும்? உபதேசிக்கிறவரே பொய்ன்னுட்டா, அப்ப எனக்கு மெய்யான ஞானம் அவர்ட்ட வரவே வராது. அது ஒத்து வராது. சரி ஒரு வேளை சிஷ்யன் பொய்ன்னுட்டா, இவ்வளவு ஞானம் இருக்கற கண்ணன், பொய்யான் சிஷ்யனுக்கு உபதேசம் பண்ணிண்டிருந்தார்னா, அப்ப எனக்கு நானே உபதேசம் பண்ணிண்டா பைத்தியம்ன்னு அர்த்தம். அதனால உபதேசமே ஒட்டாது. அப்ப அர்ஜுனன் பொய்யாயிட்டா, கண்ணன் உபதேசமே பண்ணியிருந்திருக்கக்கூடாது. கண்ணனே பொய்யாக இருந்த்ததுன்னா, கண்ணன் பொய்ன்னா, அந்த பொய்யானவர் உபதேசிச்சு அர்ஜுனனுக்கு ஞானமே கிடைக்கப் போறதில்லே. அதனால இது ரெண்டுமே ஒத்துவராது. அதனாலதான் அத்வைதத்தக் காட்டிலும் விசிட்டாத்வைதம் என்று, அத்தனையும் உண்மை. கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது அத்தனையுமே உண்மைதான்ங்கிற சித்தாந்தத்த வெளியிட்டருளினார்.

    -- நன்றி ("இராமனுஜ வைபவம்” உபந்நியாசம்@SEATTLE - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)

    ஸ்ரீஇராமனுஜரின் கருணை – ஓர் நிகழ்வு


    ஓர் சமயம் அவரது ஆச்சார்யார்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளைத் திருத்தறதுக்கு முடியலே. என்னைக்கும் வாத்தியார் பிள்ளையை வாத்தியார் திருத்த மாட்டார். அதனால இராமானுஜரோட ஆச்சார்ய குமாரர்களை அவர்களாலே திருத்த முடியலயாம். அதனால இராமானுஜரிடத்திலே கொண்டு வந்து குடுத்துட்டா. அவர் திருத்தனும். அந்தப் பிள்ளைக்கு எங்கெங்கயோ சகவாசம், தூத்த கோஷ்டி சகவாசம், கண்ட சகவாசம். எப்படியோ அடிச்சுப் பிடிச்சு கொண்டு வந்து உக்காத்தி வச்சா. காலக்ஷேபம் முதநாள் நடந்தது, ரெண்டாம் நாள் நடந்தது, மூணாம் நாள் நடந்தது, நாலாம் நாள் நடந்தது, அஞ்சாம் நாள் பார்த்தா அந்தப் பிள்ளையைக் காணோம். உக்கார்ந்துண்டிருக்கற இடத்துல இருக்கணுமோல்லையோ, அவனைக் காணோம். ஸ்வாமி பார்த்தார், ‘எங்கே’ அப்படின்னு விசாரித்தார். ‘அதெல்லாம் பழைய சகவாசம் ஸ்வாமி, ஏதோ இழுத்துக் கொண்டு வந்து உக்காத்தி வச்சோம். எல்லாம் எத்தனை நாளுக்கு உக்காரும், சொல்லும்? அதனால திரும்பி அங்கேயே போயிடுத்து. விட்டுடும்’ன்னா அங்க இருந்தவா. இவர் புஸ்தகத்த மூடிட்டார். ’இன்னைக்கு காலக்ஷேபம் கிடையாது, அந்தப் பிள்ளை வந்தாதான்’ட்டார். 700 சந்நியாசிகள், 12000 ஸ்ரீவைஷ்ணவர்கள், இவா இத்தனை பேரும் ஸ்வாமி காலக்ஷேபத்துல உக்காந்துண்டிருக்கா, இவா எல்லாரும் அவருக்கு ஒரு பொருட்டாவே படலே. அந்த ஒருத்தன் காணாப் போயிட்டானே. அவனைப் போய் பிடிக்கனும்னுட்டு, திரிதண்டத்த எடுத்துக்கிட்டு நேர அந்த கோஷ்டிக்கே போய்ட்டார். அது ஏதோ ஒரு சூதாட்ட கோஷ்டி, காவிரிக்கரையிலே உக்காந்து ஆடிண்டிருந்தது. அங்க போய்ட்டார். அந்தப் பிள்ளை தூரத்துலேர்ந்து இராமானுசர் வர்றத பார்த்துட்டான். காஷாயஷோபீ கமநீய சிகாநிவேசம் தண்டத்ரயோஜலக்ரம் விமலோபவீதம், என்று காஷாயம் தரித்து, நீண்ட சிகையோடே, கையிலே த்ரிதண்டத்தோடே, நெடுநெடுவென்ற நீண்ட திருமேனியோடே, ஆதிசேசனுடைய முதுகு, இடை சுருங்கி, அவருடைய திருத்தோள் பனைத்திருக்குமாப் போலே, பருத்திருக்கிற திருத்தோள்களோடே, சிறுத்திருக்கிற இடையோடேகூட,

    பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
    பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
    முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
    முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
    எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
    காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
    எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
    இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே.

    -என்று எம்பார் சாதித்தது போலே, ஸ்வாமி வருகிறார். வந்தவுடனே அந்தப் பிள்ளை அங்கேர்ந்து பார்த்தான், ’இராமானுசரே, உம்ம நாம விட்டுட்டோம்’, அப்படின்னு அவன் சொன்னான். ‘நீர் எதுக்கு என்னைத் தேடிட்டு வர்றீர் இப்போ, நானெல்லாம் உம்ம விட்டாச்சு, வர்றாதாயில்லே’ன்னான். இவர் இங்கேர்ந்து திரும்பிச் சொன்னார், ‘நீர் நம்மை விட்டாலும் நாம் உம்மை விடுவதில்லை’. நீர் என்ன எம்மை விடுவது, நாம் உம்மை விடுவாதாயில்லையே. உம்ம திருத்தி பெருமாள் திருவடிகளுக்கு ஆட்படுத்தினாத்தான் விடுபவமே தவிர, இப்பவெல்லாம் விட மாட்டோம். பக்கத்துல இருக்கறவாளுக்கு ஆச்சரியம். எழுநூறு சந்நியாசிகளும், பன்னிரெண்டாயிரம் ஸ்ரீவைஷ்ணவ சிஷ்யாள்லாம் இருக்கோம், இவர் என்ன இந்த ஒருத்தனைத் தேடிண்டு போறாரேன்னா, அந்த ஒண்ணு கண்ணனுடைய சொத்து. அந்த ஒரு சொத்துக்கூட போய்டவே கூடாது. மொத்தம் பகவானுடைய சொத்துன்னா பிரிஞ்சு போய்டலாமா? அத்தனை பேரையும் கொண்டு வந்து பெருமாளுக்கு சேர்த்துக் கொடுத்துவிட வேண்டுமோல்லையோ? அது ஒன்னுதான் நம்ம பூர்வர்களுடைய குறிக்கோள்.

    -- நன்றி ("இராமனுஜ வைபவம்” உபந்நியாசம்@SEATTLE - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)

    ஸ்ரீஇராமானுஜ வைபவம் - நவரத்தினங்கள்

     

    பெற்றோர்

    தந்தையார்:  கேசவ சோமையாச்சியார் (அனந்தசூரி) 
    தாயார்:         காந்திமதி

    பிறந்த நாள்

    1017ம் ஆண்டு, சித்திரை மாசம், திருவாதிரை நட்சத்திரம்.

    ஸ்ரீபெரும்புதூர் திருமேனி

    - ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி முதலியாண்டான் திருக்குமாரரான கந்தாடையாண்டான் எழுந்தருளிவித்த திருமேனி. ஆச்சர்யமான திருமேனி. அந்தத் திருமேனியைத்தான் தான் உகந்த திருமேனின்னு சொல்லுவர்கள். அவரே அணைத்துக் கொண்டு, இதை எழுந்தருளப் பண்ணுங்கோள், என்று சொன்ன திருமேனி. அதனால இராமனுசரப் பார்க்க வேணும், அவரப்பத்தி தெரிஞ்சுக்கணும், அவரிடத்தில பக்தி வேணும்ன்னு நினைக்கிற யாரும் நேர ஸ்ரீபெரும்புதூர் போய்டணும். போய் அந்தத் திருமேனியைச் சேவித்தோம்னால், திருமேனியோட அழகு அவசியம் மனத்தைக் கொள்ளை கொள்ளும்.

    நவரத்தினங்கள்

    ஸ்ரீபாஷ்யம் – இருக்கறதுல நாயக ரத்தினம்

    வேதார்த்த சங்க்ரகம் – அடிப்படை க்ரந்தம். இராமனுச சித்தாந்தம் என்னன்னு சொல்வதற்காக. சுருக்கமா வேதார்த்த சங்க்ரகம் = வேதத்தின் பொருளின் தேறின திரண்ட கருத்து, வேத அர்த்த சங்க்ரகம்.

    வேதாந்த சாரம், வேதாந்த தீபம் – ப்ரம்ம சூத்திரத்திலுள்ள சூத்திரங்களுக்கு அர்த்தமென்ன அப்படிங்கறதுக்காக ஒரு புஸ்தகம், மற்றொன்று, சாஸ்திரத்தை, ப்ரமாணங்களை, உபநிஷத் வாக்கியங்களை எடுத்துத்தான் ப்ரம்ம சூத்திரங்களுக்கு அர்த்தமுண்டு. அந்த உபநிஷ்த் விஷய வாக்கியங்களுக்கெல்லாம் அர்த்தமென்ன? உபநிஷத் வாக்கியங்களுக்கு அர்த்தமென்னன்னு சொல்லுவதற்க்காக மற்றொரு க்ரந்தம்.

    கத்யத்ரேயம்

    நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதன், அவனிடத்தில் பங்குனி மாசம், உத்திர நட்சத்திரத்தில், ஸ்வாமி எழுந்தருளியிருந்த காலத்தில், பெருமாளிடத்தே சரணாகதி அனுஷ்டித்தார். அப்போது கத்யத்ரேயம்ன்னு சாதித்தார். கத்யம்ன்னு சொன்னால் உரைநடைன்னு அர்த்தம். பத்யம்ன்னு சொன்னால் செய்யுள்ன்னு அர்த்தம்.

    - சரணாகதிகத்யம்

        • எப்படி சரணாகதி செய்ய வேண்டுமோ, அதைச் சொல்லிக்கொண்டே செய்து காட்டினது.

    - ஸ்ரீரங்ககத்யம்

        • அந்த சரணாகதிய நான் பண்ணினது எங்கயோ இல்லே, ஸ்ரீரங்கநாதனிடத்திலன்னு எடுத்துரைத்தது.

    - ஸ்ரீவைகுண்டகத்யம்

        • இதைப் பண்ணினவன் மீளாத மாக வைகுண்டம் காண்பதற்கு, என் மனம் ஏக எண்ணும் என்று ஆழ்வார் சொன்னாப்போலே, தெளிவிசும்பு திருநாடாய் நவவந்தமில்லதோர் நாடாய், மிக உயர்ந்த ஸ்தானமாய் இருக்கக்கூடிய ஸ்ரீவைகுண்டம், நித்ய மண்டலம், மாக வைகுந்தம், நவ அந்தமில்லதோர் நாடு, தெளிவிசும்பு திருநாடு.

    அத்யத்காநிட தீர்த்தம் தஸ்தானம் விஷ்ணோர் மகாத்மநக
    தத்விஷ்ணோ பரமம் பதகம் சதாபஸ்யந்திசூரயஹா
    த்வீவிசக்சுராததம் தத்விப்ராஸஹா விபந்யவஹா
    ஜாதிர்வாஹம் சத்சமிம்வதே விஷ்ணோர்யப் பரமம் பதம்

    - என்று உபநிஷத்துக்கள் எந்த சாஸ்திரத்தை, எந்த நாட்டை நமக்குக் காட்டிக் கொடுத்தனவோ, அதே சாந்தோக்ய உபநிஷத்தும், ப்ரகதாரண்ய உபநிஷத்தும்,

    அஷ்மாத்சரீராது சமுத்தாய பரஞ்ஜோதி உபசம்பத்ய ஸ்வேந ரூபேந அபிநிஷ்பத்யதே

    -என்றும்,

    நசபுநராவர்த்ததே நசபுநராவர்த்ததே, யாரும் திரும்பி வருவதே கிடையாது என்றும் எழுதப்பட்ட வைகுண்டத்தை அடைவதற்கு இவன் ஆசைப்படுகிறான், அதை அடைகிறான், அந்த திவ்யதேசம் எப்பப்பிடியெல்லாம் இருக்கும், இது அத்தனையும் ஸ்ரீவைகுண்டகத்யத்திலே சாதித்தார் ஸ்வாமி. கண்ணனே தெரிவிக்கிறார்,

    ஆப்ரம்ம புவனாம் லோகாக புனாராவர்த்தினோர்ஜுன
    மாமுபேத்துத கெளந்தேய புனஜ்ஜென்மந வித்யதே

    - கண்ணன் கீதையிலே சாதிக்கிறார். ப்ரம்மாவினுடைய சத்யலோகம்வரைக்கும் அர்ஜூனா, போய்ட்டுப் போய்ட்டு திரும்ப வரணும். ஆப்ரம்ம புவனாம் லோகாக – ப்ரம்மா பதவி ரொம்ப ஒசத்தின்னு நினைச்சிண்டு ஆசப்பட்டுடாதே, ரொம்ப கஷ்டப்படுவே. கஷ்டப்பட்டு அங்க போய் சேரலாம், போய்ச்சேர்ந்தா அவருக்கு இருக்கிற பாடு யாருக்கு உண்டு சொல்லுங்கோ? வேலை முதல்ல அதிகம். அதனால ப்ரம்மாவா நாம இருந்தோம்ன்னா நிம்மதியா ஒருநாள்கூட இருந்துற முடியாது. நாம் எல்லாரையும் படைப்போம், ஆனா நாம சொன்னத ஒருத்தனும் கேட்க மாட்டான். அதனால இதக்காட்டிலும் ப்ரம்மா பதவிக்கு ஆசைப்படாம இருக்கறதுதான் நல்லது. பெருமாளுக்கு கைங்கர்யம் பண்ணிண்டு, அடியார்களுக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருந்தா பொறுப்பு அவனது, நம்மதல்ல, நிம்மதி நம்மது. அதனால, ஆப்ரம்ம புவனாம் லோகாக – சப்த லோகங்கள் அர்ஜுனா, ப்ருத்வி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசங்கள் மேல சூழ்ந்திருக்கும் நம்ம மண்டலம், புகுஹு, புவஹ, சுவஹ, மஹஹ, ஜனஹ, தபஹ, சத்யம், ஏழு மண்டலங்கள். இது இத்தனையும் தாண்டி சப்த ஆவரணங்கள் மூடியிருக்கும். அதத்தாண்டி விரஜை நதி ஓடுகிறது. விரஜையைத் தாண்டி வைகுண்டம். அதுக்கீழ வரைக்கும் ப்ரம்மாவுடைய சத்ய லோகமொல்லையோ, அதுவரைக்கும் போற யாராயிருந்தாலும், நாம நினைச்சிண்டிருப்போம், சத்ய லோகம் வைகுண்டத்துக்கு கிட்டக்க இருக்குன்னுட்டு, அதெல்லாம் இருக்காது. நம்பள பாக்கறச்சே சத்யலோகம் ரொம்ப ஒசத்தில இருக்கே தவிர, சத்யலோகத்திலேர்ந்து போவேண்டியதுதான், போவேண்டியதுதான், போவேண்டியதுதான், எங்கேயோ இருக்கு அது. வேடிக்கையா கூரத்தாழ்வான் ஒரு திருஷ்டாந்தம் சொல்லுவராம். ஒரு குழந்தைக்கு அம்மா சோறு ஊட்டிண்டு இருந்தா, அது ஏதானும் காமிச்சாதான் சாப்பிடுவேன்னது, அம்புலிமாமா சந்திரனைக் காமிச்சா, அத உனக்குப் பிடிச்சுத் தரேன், சாப்பிடுனுட்டு. சாமர்த்தியக்கார குழந்தை, ரெண்டு உருண்டை சாப்பிட்டுட்டு, இப்ப பிடிச்சுக்குடு மிச்சம் சாப்பிடுறென்னுது. அவ எங்க போவோ, அதெல்லாம் முடியாது, நீ சாப்பிடறதுக்காக சொன்னேனே தவிர, சந்திரன்ல்லாம் புடிச்சுக் கொடுக்க முடியாதுன்னா. அந்தக் குழந்தை சட்டுன்னு கேட்டது, அப்பா கோகுலாஷ்டமி பட்சணம் பண்றதுக்காக பாத்திரம் இறக்கறதுக்கு பரண் மேல ஏறிண்டிருந்தார், அவ்வளவு உசரத்துல இருந்தது பரண். அந்தக் குழந்தை கேட்டுது, அதோ பரண் மேல அப்பா இருக்காரே, அவர் கிட்டக்க இருப்பர், பிடிச்சுக் குடுக்கச் சொல்லு’ன்னு. நான் இங்க இருக்கேன், அவர் உசரத்துல இருக்காரேன்னா, அப்படித்தான் இருக்கு நான் இருக்கற லோகமும், ப்ரம்மா இருக்கற சத்ய லோகமும். நான் இருக்கறது பூமி, அவர் இருக்கறது பரண், ஏழாவது லோகம். பரண்லேர்ந்து எங்கேயோ இருக்கு பரமபதம். அதனாலே நாம கிட்டக்க இருக்குன்னு நினைச்சிண்டிட முடியாது. நம்மாழ்வார் சாதித்தார், சூழ்ந்து அகந்து ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழ், கடமின் மலர்ச்சோதி, சுழல் ஞான இன்பம், அத்தனையும் சேர்த்துப் பெருமானுடைய ஆஸ்தானம். உபநிஷத்துக்கள் அத்தனையும் போதித்தார்ப்போலே, இதிகாச புராணங்கள் அத்தனையும் சொன்னார்ப்போலே, அவ்விடத்தையே அடைய வேண்டும்,ன்னு இராமானுசர் தன்னுடைய மூணாவது கத்யத்திலே சாதித்தார்.

    கீதா பாஷ்யம்

    - கண்ணன் அருளிச் செய்த கீதைக்கு உரை.

    நித்யக்ரந்தம்

    - நித்யப்படி நாம செய்ய வேண்டிய கர்ம அனுஷ்டானங்கள் எவை, காலேலேர்ந்து இராத்திரி வரைக்கும் நாம என்னென்ன செய்ய வேண்டும், பகவத் ஆராதனம் எப்படி, நித்ய அநுசந்தானம் எப்படி, இத்தனையும் காட்டிக் கொடுப்பதற்காக ஒன்பதாவது க்ரந்தம்.

     

    -- நன்றி ("இராமனுஜ வைபவம்” உபந்நியாசம்@SEATTLE - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)

    ஸ்ரீஇராமானுஜ வைபவம் – பாகம் 7


    முந்தைய பாகம், பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6

    இராமானுசர் நம்மாழ்வாருடைய பாசுரங்களைக் கற்று, அதை உண்டுட்டார்ன்னா, யானை நடக்கற மாதிரி நடப்பராம். திருமங்கையாழ்வாரோட பாசுரங்களை நன்னா அனுபவிச்சார்ன்னா, சிங்கம் நடக்கறாப்பல நடப்பராம். அதென்ன ஸ்வாமி, யானையும் சிங்கமுமாவா நடப்பாரான்னா, நடக்கறாரே.

    பண்டொருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் விண்டிட
    எங்கள் இராமானுச முனி வேழம்

    -ன்னு பாசுரம். இராமானுசர் எப்ப வேழமா இருக்கார்? பண்டொருமாறன் பசுந்தமிழ் – மாறனுடைய பசுந்தமிழைச் சாப்பிட்டார்ன்னா வேழம். திருமங்கையாழ்வார் பாசுரம் இருக்கே.

    களிமிக்க செந்நெல் கழனிக்குறையல் கலைப்பெருமான்
    ஒளிமிக்க பாடலை உண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
    வலிமிக்க சீயம் இராமானுசன்

    - திருமங்கையாழ்வாரோட பாசுரத்த சாப்பிட்டா சிங்கம். நம்மாழ்வார் பாசுரத்த சாப்பிட்டா யானை. யானையும் சிங்கமும் கைல இருக்கறச்சே, யாரைப்பத்தி கவலைப்படணும் சொல்லுங்கோ? வேற எதுவுமே கவலைப்பட வேண்டிய தேவையே இல்லே. அதாவது இராமானுசர் தேவதாந்திரங்களை எப்படி நடத்திக்கணுமோ, அப்படி நடத்திக்கனும்ன்னார். மறந்தும் புறந்தொழா மாந்தர்களாக இருக்க வேண்டும். அதாவது எந்த விஷ்ணு ஷேத்திரமா இருந்தாக்கூட எதுத்தாப்லே பெரிய சிவன் ஷேத்திரம் ஒன்னு இருக்கும். இப்ப திருக்கண்ணபுரம்ன்னு எடுத்துங்கங்கோ, போனா திருமருகல், திருப்புகழூர் இதெல்லாம் பெரிய சிவஷேத்திரம். ஸ்ரீரங்கம்ன்னு எடுத்துகிட்டேள்ன்னா, பக்கத்துல இருக்கேல்லையோ ‘ஜம்புகேஸ்வரம்’, அது ஒரு பெரிய சிவஷேத்திரம். ஆனைக்கா, திருவானைக்கான்னு சொல்றாளோல்லையோ? ஒருதரம் பெருமாள் புறப்பாடாகி வந்துண்டிருக்கார். திருவானைக்கா ஷேத்திர வாசலுக்கு வந்துண்டிருந்தார். இராமானுசர் கூடத்தான் போயிண்டிருந்தார். போனா ஒரே மழை கொட்ட ஆரம்பிச்சுடுத்து. அந்தப் பெருமாள் ரொம்ப சுகமாரர். இது மணியக்காரர் ஸ்வாமி பார்த்துத்தான், மணியப் பார்த்து புறப்பாடு உண்டு, இல்லேன்னு சொல்லணும். திருவானைக்காவல்ல தூவறதுன்னு சொன்னா, ஸ்ரீரங்கத்துல புறப்பாடு கிடையாதுன்னுடுவர் மணியக்காரர். அந்தளவுக்கு அந்தப் பெருமாள் ரொம்ப சுகுமாரர். திடீர்ன்னு மழை கொட்ட ஆரம்பிச்சுடுத்து, திருவானைக்கா கோவிலுக்குள்ள நம்பெருமாளை ஏளப்பண்ணிட்டா. இவர் வாசல்ல நிண்டிண்டிருக்கார். இவர் போக மாட்டார் உள்ளே. அதனால இராமனுசர் வாசல்லயே நிண்டிண்டிருந்தார். அவா தீட்சிதாள்லாம் வந்தா, ‘என்ன ஸ்வாமி, உள்ள வரலாமே’ன்னா. ‘இல்லே, நான் இங்கேயே இருக்கேன்’, அப்படின்னு கொஞ்சம் ஒதுங்கினுட்டார். ‘உங்க தெய்வமே உள்ள வந்தாச்சு, உமக்கு என்ன?’ அப்படின்னு அவா கேட்டிருக்கா. ‘ஏதோ புருஷன் அப்படி இப்படி இருக்கான்கிறதுக்காக பெண்கள் அப்படி இருந்து நான் பார்த்ததில்லே. அவர் புருஷோத்தமர், எப்படி வேணா இருப்பர். நான் அவருக்குப் பத்தினி, என்னால அப்படியெல்லாம் போக முடியாது.’, அப்படின்னு அவாள்கிட்ட சொல்லிட்டார். ’ஆனை துரத்தினாலும் ஆனைக்கா நுழையாதே’ன்னு எழுதி வைத்தா. அதுக்குள்ள போறதில்லே. அதனாலே இப்ப நமக்குத் தோணும். இவ்வளவு தூரம் தேவதாந்திர சம்பந்தம் இல்லாது இருந்திருக்காளே, அப்ப எப்படி நாம இப்ப எப்படி இத எல்லாத்தையும் எடுத்து சொல்றதுன்னு தோணும். ஒரே ஒரு வழி இருக்கு. ஒரு தடவை யாரோ எங்கெங்கயோ, எந்தெந்த கோயிலோக்கோ போக வேண்டாமோ, இப்பிடிப்பிடியெல்லாம் பண்ண வேண்டாமோ, ஒரு ஸ்ரீவைஷ்ணவப் பிள்ளையும் இருந்திருக்கான் அப்படி. என்னமோ தெரியலே, அன்னைக்கு காத்தாலே ஒழுங்காப் போய் சிகை எல்லாத்தையும் வச்சிண்டு, தலை எல்லாத்தையும் முண்டனம் பண்ணிட்டு, கருப்பு வேஷ்டியை தூக்கிப் போட்டுட்டு வெள்ளை வேஷ்டியைக் கட்டிண்டு, ஒழுங்கா திருமண் காப்பு சாத்திண்டு அந்தப் பிள்ளை வந்தான். தகப்பனார் கொஞ்ச நேரம் அந்தப் பிள்ளையைப் பார்த்தார், ‘ஏது இப்படி மாறிப் போய்ட்டான் இந்தப் பிள்ளை?’, அப்படின்னு நினைச்சிண்டு அவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ‘வழில கூரத்தாழ்வானைச் சந்தித்தாயா’ன்னார். அப்படின்னா என்ன அர்த்தம்? கூரத்தாழ்வானைச் சந்தித்தாலே மொத்த நல்ல எண்ணமும் வந்துடும்ன்னு அர்த்தம். ஏற்கனவே நாம எப்படி இருந்திருக்கோம்ங்கிறது அல்ல. அப்போ ஒருத்தரிடத்தில நாம எடுத்துப் பேசணும்ன்னால், நம்ம சாஸ்திரம், சம்ப்ரதாயத்த எல்லாம் ரொம்ப தூரம் எடுத்துச் சொன்னா அவா அதெல்லாம் எடுத்துக்க மாட்டா. ஏன்னா அவா அதிலேயே ரொம்ப தூரம் ஊறிப்போய் கிடக்கறாளோல்லையோ? இன்னொன்னு, பல தடவைப் பேசிப் பார்த்ததிலே, ஏதோ தேவதாந்திரத்த பிடிச்சிண்டு இருந்திருப்பா, வேண்டாமே பெருமாளே எல்லாத்தையும் குடுப்பரே, வாங்களேன்னா, வரணும்ன்னு தோணிடும் அவாளுக்கு. ஆனா விட்டுட்டு வந்துட்டா, அந்த தேவதை என்னத்த படுத்துமோன்னு பயமாயிருக்கும். அதனால விடவே மாட்டா. ஐயோ அது ஏதானும் அடிச்சுடுத்துன்னா, பிடிச்சுடுத்துன்னா என்ன பண்றது? இத்தனை நாளும் அத்தோடதான் இருந்திருக்கோம். அடியேனுக்கு அதுல ஒரு திருப்தி. என்ன திருப்தின்னா, பெருமாளிடத்தில வராட்டாலும் அடிக்க மாட்டார்ன்னு நம்பறான். ஆனா அத விட்டுட்டு வந்துட்டா ஒதைக்கும்ன்னு நம்பறான். யார் தப்புப் பண்ணாலும் அடிக்க மாட்டா? பெத்தவ. யார் அடிச்சுருவா? மத்தவ. மத்தவளாயிருந்தா அடிதான் படணும். பெத்தவளாயிருந்தா அடிபட வேண்டாம். அப்ப மனசுக்குள்ள இவர் பெத்தவ, அவா மத்தவன்னு புரிஞ்சிண்டிருக்கானோல்லையோ? அதுவே போதும். என்னிக்கும் பகவானைப் பெற்றவன்னு தெரிஞ்சினுட்டோம்ன்னால், இன்னிக்கு இல்லாட்டாலும் நாளைக்கு வந்துடுவர்கள். ஒரே வழி, எந்த தேவதாந்திர சம்பந்தம் யாருக்கு இருந்தாலும், ஸ்ரீபெரும்புதூர் இராமானுசருடைய திருமேனி விக்கிரகத்த மட்டும் அவன் பல தடவை சேவிச்சான்னால், கண்டிப்பா உள்ளம் மாறியே போய்டும்.

    பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
    பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
    முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
    முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
    எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
    காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
    எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
    இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே

    இராமானுசருடைய வடிவழகு என் உள்ளத்திலிருக்கிறபடியால் எனக்கு எதிர் இல்லை, எதிர் இல்லை, எதிர் இல்லை, என்று எம்பார்ங்கிற மகாச்சாரியான் பண்ணிருக்கிற ரொம்ப அற்புதமான பாசுரம் இது.

    ஆகையாலே ஸ்வாமியினுடைய வைபவத்தை அத்தனை பேரும் வெளியிட்டார்கள். ஆழ்வாரே வெளியிட்டார். ஆண்டாளுக்கு பகு திருப்தி. இராமானுஜர் வந்தவுடனே, ‘நமக்கு நீர் அண்ணன்’, ‘கோதாக்ரஜன்’னே அவருக்குத் திருநாமம். அப்ப, ‘இளையாழ்வார்’, ‘ஸ்ரீபாஷ்யக்காரர்’, ‘இராமானுசர்’, ‘எம்பெருமானார்’, ‘உடையவர்’, ‘கோதாக்ரஜர்’, எத்தனை திருநாமம். இது ஒன்னொன்னுத்துக்கும் ஓரோரு சரித்திரம்தான். ஆக ஆழ்வார்களும், ஆச்சார்யார்களும், பெருமானுமாகச் சேர்த்து வெளியிட்ட இராமானுச வைபவத்தை, அவருடைய திவ்ய தேச கைங்கர்யமும், கிரந்த நிர்மாணம், சம்ப்ரதாயத்தை ஸ்தாபித்தது, அடியார்கள் அத்தனை பேருக்குமாக எப்படியும் பகவானுடைய திருவடி உண்டுன்னு ஆக்கி வைத்தது, தானே கத்யத்ரேயத்தைச் சாதித்து சரணாகதி சாஸ்திரத்தை வெளியிட்டுக் கொடுத்தது, இப்படி பல முகத்தாலயும் இராமானுசர் வீறு கொண்டு விளங்குகிறார். அவர் எழுதினவை ஒன்பது கிரந்தங்கள், நவரத்தினங்கள்ன்னு சொல்லுவர்கள். வேதார்த்த சங்க்ரகம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், ஸ்ரீபாஷ்யம், சரணாகதிகத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்டகத்யம், கீதாபாஷ்யம், நித்யக்ரந்தம், என்று ஒன்பது கிரந்தங்களைச் சுவாமி சாதித்தார். ஒன்பதுமே ஒன்பது இரத்தினங்கள்தான். இரத்தின இரத்தினமான கிரந்தங்களை, இரத்தினத்திலே நாயக இரத்தினமான இராமானுசர், இரத்தினமான, இராம இரத்தினமாய், கோபால இரத்தினமாய், ரங்க இரத்தினமாக இருக்கக்கூடிய ஸ்ரீரங்கரத்தினத்திலே எப்போதும் சேவை சாதிக்கக்கூடிய எம்பெருமானுடைய திருவடிகளுக்கு, இரத்தின ஹாரமாகவே சமர்ப்பித்தார். அந்த இரத்தினமான இராமானுசரை நாம் பற்றினோமென்னால், நாம் வெறும் கண்ணாடிக்கல்லாக இருந்தாலும், நாமும் ஸ்ரீவைஷ்ணவ இரத்தினமாக ஆக்கப்படுகிறோம், என்பது நம் சம்ப்ரதாயத்திலே தேறிய உண்மை. அப்படிப்பட்ட இராமனுசருடைய திருவடிகளுக்கு பல்லாண்டு பாடி அமைகிறேன். இக்குடும்பத்தாருடைய ஷேம லாபங்களுக்கு ப்ரார்த்தித்து,

    நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றினுலுள்ளும் தான் நிறைந்த
    அல்லிக் கமலக் கண்ணணை அந்தங்க்குருகூர் சடகோபன்
    சொல்லப்பட்ட வாயிரத்துள் எறியும்பத்து வல்லார்கள்
    நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே

    -ன்னு சொல்லி அமைகிறேன்.

    (முற்றும்)

    -- நன்றி ("இராமனுஜ வைபவம்” உபந்நியாசம்@SFO - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)

    ஸ்ரீஇராமானுஜ வைபவம் – பாகம் 6


    முந்தைய பாகம், பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5

    அப்ப, கோயில், திருமலை, பெருமாள் கோயில், திருநாராயணபுரம், நாலுமே இவர் பார்த்த பார்வை. இவர் பார்த்து கைங்கர்யம் பண்ணதுனாலதான் இன்னைக்கும் அங்க நடக்கிறது.

    திருமாலிருஞ்சோலைமலை அழகன், அந்த அழகனிடத்திலே கிடாம்பி ஆச்சான், இராமானுசருடைய சிஷ்யர்கள்லே ஒருத்தர். கிடாம்பி ஆச்சான் போய், ஸ்தோத்திர ரத்தின ஸ்லோகத்தைச் சொல்லிண்டு இருக்கார். ‘அபராத ஸஹஸ்ர பாஜனம் பதிதம்பிமபவார்னவோதரே அஹதிம் சரணாஹதம் ஹரே க்ருபையாகேவலம் ஆத்ம ஸாத்குரு’, நம்மால் இந்த சம்சார சாகரத்தைத் தாண்ட முடியாது. கண்ணனே நீயே சொன்னாய், தெய்வீசேஷா குணமயி மனமாயா துரத்தயா மாமேவ ஏ ப்ரபத்யந்தே மாயா மேதாந் தரந்திதே’. சம்சாரத்தில நான் அழுத்தி வச்சுருக்கேன் அர்ஜூனா, உன்னால மேல வர முடியாது. பின்னே வரவே முடியாதான்னு கேட்டான் அர்ஜூனன். மாமேவ ஏ ப்ரபத்யந்தே மாயாமேதாந் தரந்திதே, என் திருவடிகளையே எவன் பற்றுகிறானோ, அவன் மட்டும் தாண்டுகிறான். அந்த இடத்துலதான் இந்த ஸ்லோகம், ஆளவந்தார் அதப்பத்திதான் சொல்லிண்டிருக்கார். பதிதம் பீமபவார்ன வோதரே, இந்தப் பெரிய பவார்ணவம், பவார்ணவம்ன்னா சம்சார சாகரம், அதுல விழுந்துட்டேன். விழுந்துட்ட்டேன்னா, இப்ப முப்பது அடி கிணறா இருந்தா, விழுந்துட்டியான்னு கேட்டா விழுந்துட்டேன்லாம். அடியேன் தகப்பனார் சொல்லுவர், கோயம்புத்தூர் பக்கம் போனா, முந்நூறு அடி, நானூறு அடி கிணறு, ஒருத்தன் விழுந்துட்டான். விழுந்துட்டியான்னு கேட்டா, விழுந்துண்டே இருக்கென்னானாம். அந்த அளவுக்கு ஆழம். அப்ப ஒரு கிணத்துல விழுந்துண்டே இருக்கேன்னா, அப்ப சம்சார சாகரத்துல விழுந்துட்டு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுவோம்? விழுந்துண்டே, விழுந்துண்டே, விழுந்துண்டே இருக்க வேண்டியதுதான். அடியே தெரியாது, எந்த இடத்துல இருக்கேன்னுட்டே. ஆழ்வாரே, ‘தூராக்குழி தூத்து எனநாள் அகழ்ந்து இருப்பன்’னு திருக்குடந்தை பாசுரத்துல தெரிவித்தார். இது ஒரு தூராத குழி, இத என்னைக்குத் தூர்க்கறது, என்னைக்கு நாம கீழ போய் எது ஆழம்ன்னு தெரியறது? அப்ப, கீழ கிடக்கிறேன், அங்க இருந்து தூக்கி விடவேண்டாமா? அஹதிம் சரணாஹதம் ஹரே, அடியேன் அஹதி, கதி அற்றவன், அனாதன், என்று ஆளவந்தார் இந்த ஸ்லோகத்துல புலம்பறார். இந்த ஸ்லோகத்தை கிடாம்பி ஆச்சான் சொல்லிண்டிருக்கார் அந்த ஊரிலே.

    திருமாலிருஞ்சோலைமலையில் இந்த ஸ்லோகத்தை அவர் சொல்லிண்டு இருக்கார். பெருமாள் கிட்டக் கூப்பிட்டாரம், ‘ஆச்சான், இங்க வாரும்’. அர்ச்சகமுகே ஆவேசித்து, ‘என்ன ஸ்லோகம் சொன்னீர்?’, ‘ஆளவந்தாருடைய ஸ்தோத்திர ரத்தினம் சொன்னேன்’, ‘உண்டு, ஆனா ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினம் இராமானுசர் காலத்துக்கு முற்பட்டது. நாம் இராமானுசரைப் பிறப்பித்த பிற்பாடு அஹதி என்றோ, அனாதன் என்றோ யாரும் சொல்லிக் கொள்ளக்கூடாது. கதியற்றவர்களுக்கு கதியாய், நாதனற்றவனுக்கு நாதனாக எப்ப இராமானுசரைக் கொடுத்தோமோ, இனி இந்த ஸ்லோகத்தின் படி நீங்கள் கரையக்கூடாது, ஏங்கக் கூடாது’, என்று திருமாலிருஞ்சோலைமலை அழகர், கதியற்றவர்களுக்கெல்லாம் கதி இராமானுசனே என்று கிடாம்பி ஆச்சானிடத்தில காட்டிக் கொடுத்தார். அது ஒரு முக்கிய சரித்திரம்.

    திருக்குறுங்குடி நம்பி, அவனுக்கு வைஷ்ணவ நம்பின்னு பேர். மத்த எல்லா நம்பிகளும் விஷ்ணு, ஆனா திருக்குறுங்குடி நம்பி மட்டும் வைஷ்ணவர். அதெப்படி, விஷ்ணுவினுடைய தொண்டர்கள்தானே வைஷ்ணவர்களாக இருக்க முடியும், அவர்தான் விஷ்ணுவாச்சே, அவர் எப்ப தொண்டரானார்?ன்னா, வைஷ்ணவன்னு பேரு வேணும்ன்னா ராமானுச சம்பந்தம் வேணும். இந்த பெருமாளுக்கு அது நன்னாவே தெரியும். எப்படியாவது அதைப் பிடிச்சுடணும்ன்னு ஒரு நாடகமாடிப்பிட்டார் அவர். திருவனந்தபுரத்துக்கு இராமானுசர் சேவிக்கறதுக்காகப் போனார். அங்க சேவிச்சுட்டு, என்னமோ நடந்தது, அங்கேர்ந்து சட்டுன்னு திருக்குறுங்குடிக்கு வந்து சேர்ந்துட்டார். திருக்குறுங்குடில இருக்கார். இராமானுசரோட சிஷ்யர், ‘ஆந்த்ரபூர்ணர் வடுக நம்பிகள்’னு பேர். அவர்தான் எப்பவும் பால் காய்ச்சி, காய்ச்சி இராமானுசருக்கு கொடுப்பராம். வடுக நம்பிகள், அவர் ஒருநாள் உள்ளுக்குள்ள பால் காய்ச்சிண்டிருந்தார். பால் பொங்கற சமயம். வாசல்ல நம்பெருமாள் புறப்பாடு நடந்திண்டிருந்தது. அங்க இருக்கறவா எல்லாரும், ‘நம்பிகளே வாரும், நம்பெருமாள் புறப்பாடு நடக்கறது’ன்னா. உள்ளேர்ந்து அவர் சொன்னார், ‘உம்ம தெய்வத்தை நீங்க பார்த்துக்கோங்கோ, என் தெய்வத்தை நான் பார்த்துக்கறேன்’ன்னார் அவர். ‘நான் இப்ப இங்க விட்டுட்டுப் போய்ட்டா, பால் பொங்கிப் போய்டும், இராமானுசருக்கு பால் சமர்ப்பிக்கிறது எனக்கு முக்கியமே தவிர, உங்க நம்பெருமாளைச் சேவிக்கறது என் வேலை இல்லே, உங்க தெய்வம் நம்பெருமாள், என் தெய்வம் இராமானுசர். அதனால இவரோடயே நான் வச்சுக்கறேன். உங்க தெய்வமே எனக்கு வேண்டாம்’ன்னு இருந்த வடுகநம்பி நிலை. ஆர்த்திப் ப்ரபந்தத்தில மனவாள மாமுனிகள் ப்ராத்திக்கிறார்.

    உன்ன ஒழிய ஒரு தெய்வம் மத்தறியா வடுக நம்பி தன்னிலையை எனக்கருள் அரங்கா

    ‘எதிராசா, என்ன எனக்குப் பிரார்த்தனை தெரியுமா? உன்னத்தவிர மத்தொரு தெய்வம் கிடையாதுன்னு வடுக நம்பிகள் இருந்தாரோல்லையோ, அந்த நிலையை எனக்கு எப்போது அனுக்கிரகிக்கப் போகிறாய்?’, என்று ஆர்த்திப் ப்ரபந்தத்திலே பிராத்திக்கிறார். அதுனால இந்த வடுக நம்பிகள் பால் காய்ச்சிக் குடுக்கறவர், அவர்தான் கைங்கர்யத்துக்கு எப்பவும் கூடவே போவர். இவர் திடீர்ன்னு அங்க விட்டுட்டு, திருவனந்தபுரத்திலேர்ந்து திருக்குறுங்குடிக்கு வந்துட்டாரா, வடுக நம்பிகள் திருவனந்தபுரத்திலே இருக்கார். அவர் கூட வரலை. இந்த கூட வரலைங்கறதை ஒரு நிமிசம் இராமானுசர் மறந்து போய்ட்டார். வட்டப்பாறைன்னு இன்னிக்கும் அந்த இடம் இருக்கு. ஒரு சின்ன நதி, அந்த நதிக்குப் பக்கத்துலே வட்டப்பாறை. வட்டப்பாறைல உக்கார்ந்துதான் காத்தால திருமண் குழைக்கிறார் இவர். திருமண் காப்பு சாத்திக்கணுமோல்லையோ, அதுக்கு எப்பவும் எடுத்துக் குடுக்கிற வழக்கம் வடுக நம்பிகள்தான் எடுத்துக் குடுப்பர். இவர் அந்த நினைவிலே, திருமண் பெட்டகத்த வடுக நம்பிகள் கொண்டு வரணும்னுட்டு, ‘வடுகா, வடுகா’ அப்படின்னு கூப்பிட்டிருக்கார். வடுக நம்பிகள் இல்லே. பெருமாள் பார்த்தார், ‘இதுதான்னா சரியான சந்தர்ப்பம் நமக்கு.’, அப்படின்னு வடுக நம்பிகளா தானே வேஷம் போட்டுன்னுட்டார். பெருமாளே வடுக நம்பிகளாக பின்னாடி வந்து, இராமானுசருக்கு திருமண் குழைச்சுக் குடுத்துட்டு, அவர் அந்த திருமண் இட்டுனுட்டா, அந்த மிச்சத்துலதான் பிரசாதமா வடுக நம்பிகள் திருமண் இட்டுப்பராம். அதனால அந்த மிச்சப் பிரசாதத்த, இங்க வைஷ்ணவ நம்பி, பெருமாள், திருக்குறுங்குடி நம்பி வாங்கிண்டு, தான் திருமண் காப்பு சாத்திண்டு, ‘எனக்கு இராமானுச சம்பந்தம் கிடைச்சுடுத்து. இனிமே நானும் வைஷ்ணவன். என்னை விஷ்ணு, விஷ்ணுன்னு ஒதுக்கி வைச்சுடாதீங்கோ, நானும் இனிமே வைஷ்ணவன்தான்’, என்று திருக்குறுங்குடி நம்பி சொல்லிவிட்டு நேரே உள்ளே சென்றார்ன்னு சரித்திரம். பெருமாளைச் சேவிக்கறதுக்காக இராமானுசர் போறார். திருக்குறுங்குடி நம்பியை தண்டம் சமர்ப்பிச்சார். ஆயிடுத்து, மங்களாசாசனம் எல்லாம் முடிஞ்சு போயிடுச்சு. விடைப்பெற்றுக் கொண்டு புறப்படனுமோல்லையோ? போய்ட்டு வரேன்னார் இவர். அப்ப நம்பி கேட்கறார், ‘ஒரு நிமிஷம் இரேன். எனக்கு ரொம்ப நாளா தீராத ஒரு சந்தேகம். அது உம்மகிட்ட கேட்டுத் தெளிஞ்சுக்கலாம்ன்னு இருக்கேன்.’ ‘உமக்கே சந்தேகமா? நீதானே எல்லாருக்கும் தீர்த்து வைப்பீர்.. என்ன சந்தேகம்’ன்னு ஸ்வாமி கேட்கறார். ’நானும் பொறந்து பொறந்து என்னென்னமோ பண்ணிப் பார்த்தேன். ஒருத்தனையாவது திருத்த முடியலே. ஆனா நீ பொறந்த உடனே மொத்தப் பேரையும் திருத்திட்டீர். இது எப்படின்னு எனக்குத் தெரியலே. நான் கண்ணனா அவதரித்தேன், இராமனா அவதரித்தேன், வராகனா அவதரித்தேன். என்கிட்ட கேட்டுண்ட அர்ஜுனன்கூட சரணாகதி பண்ணலே. கடைசில இதுதான் கண்ட பலன். எழுநூறு ஸ்லோகத்த நேரடியா கேட்டுனுட்டு,

    சர்வதர்மான் பரிதச்ய மாமேகம் சரணம்வ்ரஜ
    அஹம்த்வா சர்வபாபேப்யோ மோஷயிஸ்வாமி மாசுச:

    -சரணாகதி பண்ணுன்னாராரோ இல்லையோ? இது பதினெட்டாவது அத்தியாயம், அறுவத்து ஆறாவது ஸ்லோகம். அப்ப அறுவத்தேழாவது ஸ்லோகம் என்னவா இருக்கணும்? ‘நாரயண சரணம் சரணெள ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயாணய நமக.’, இதானே இருந்திருக்கணும்? கடைசி வரைக்கும் சொல்லவே இல்லே அர்ஜுனன். இத்தனையும் கேட்டுனுட்டு ஒரு வார்த்தை சரணம்ன்னு சொல்லாமல், இன்னும் கேளுங்கோ. சண்டையே போடமாட்டேன், எனக்கு இது ஒண்ணுமே வேண்டாம்ன்னு பிடிவாதம் பிடிச்சானோல்லையோ? உன் கர்மா நீ சண்டை போடனும்ன்னு கண்ணன் சொல்லிட்டார். ஆயிடுத்து யுத்தம். இராஜ்ஜியத்த ஜெயிச்சாச்சு. அப்புறம் அர்ஜுனன் என்ன பண்ணியிருக்கனும்? எங்க அண்ணாகிட்ட இராஜ்ஜியத்த குடுத்துட்டேன், உன் வழி, என் வழி. எங்க போறீயோ பின்னாடி நான் கைங்கர்யத்துக்கு வரேன்’ன்னு வந்துருக்கணுமோல்லையோ? வரவே இல்லை, ரொம்ப நன்னா அனுபவிச்சுட்டு, ஒண்ணுமில்லாத சொர்க்கத்துக்குப் போய்ச் சேர்ந்துட்டான். இவ்வளவு அர்ஜுனன் கண்ட பலன். அதனால பெருமாள் பார்த்தார், ‘நம்ம பிறந்தெல்லாம் பிரயோஜனமேயில்லே. இவா நமக்காக திருந்தவே மாட்டேங்கறா. ஆனா இந்த இராமானுசர் பிறந்து மட்டும் திருந்திட்டா. ’

    மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து
    எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணுகில்லா உலகோர்கள் எல்லாம்
    அண்ணல் இராமானுசன் வந்து தோணிய அப்பொழுதே
    நன்னர் ஞானம் தலைக்கொண்டு நாரணனர்க்காயினரே.

    திரும்பத் திரும்ப பகவான் வந்து பிறந்தும் வியர்த்தம். ஆனா ஸ்வாமி அவதரித்து எப்படி சபலமடைஞ்சது? இது திருக்குறுங்குடி நம்பிக்கு சந்தேகம். இராமானுசர்கிட்ட கேட்டுட்டார். ‘எனக்கு இதுக்கு பதில் சொல்லிட்டு நீர் போலாம்’ன்னுட்டு. இராமானுசர் பதில் சொல்றார், ‘சொல்றேன், ஆனா நீ இவ்வளவு ஒசரத்துக்கு மேல நின்னுண்டு, என்ன கீழ நிக்க வச்சுட்டு, என்னப் போய் உபதேசம் பண்ணுன்னா நியாயமா? எனக்கு முதல்ல ஆச்சார்ய பீடத்தக் குடு. நீ கீழ சிஷ்யனா நில்லு. அப்ப உனக்கு நான் சொல்றேன்’ன்னார். ‘சரி’ன்னு ஒரு பெரிய நாற்காலியக் கொண்டு வந்து போட்டார். இன்னிக்கும் திருக்குறுங்குடி நம்பி கர்ப்பகிரஹத்துக்குள்ளே, உள்ளே நம்மால அப்படிப் போய் பார்த்துர முடியாது. ஆனா, அங்கப் பக்கத்துல ஓரத்துல ஒரு பெரிய ஆசனம் இருக்கும். அந்த ஆசனம் நம்பி அன்னைக்கு இராமானுசருக்குப் போட்ட ஆசனம், ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி. அதுல உக்காத்திட்டு, நம்பி பக்கத்துல உக்காந்துண்டு, இப்படி வாயப் பொத்திண்டு, ‘சொல்லும், கேட்டுக்கறேன்’, அப்படின்னு நின்னிருந்தார். இராமானுசர் சொன்னாராம், ‘இது ரொம்ப சுலபம். பெரிய விஷயம் எல்லாம் ஒண்ணுமே இல்லே. சின்ன சூட்சுமம். என்னதுன்னா, நீ பொறந்து பொறந்து என்ன போய்ச் சொன்னே? அதச் சொல்லு’ன்னார். ‘நாந்தான் புருஷோத்தமன்னு சொன்னேன். என் திருவடிகளையே பற்றுன்னு சொன்னேன்.’ ‘அதான் ஒருத்தருமே கேட்கலே. நான் தெய்வம்ன்னு சொன்னா ஒருத்தரும் கேட்டுக்க மாட்டான். அவன் தெய்வம்ன்னாத்தான் யாருமே கேட்பா. நான் பொறந்து நீ தெய்வம்ன்னு சொல்லுவேன். ஆனா நீ பொறந்து, ‘நானே தெய்வம், நானே தெய்வம்’ன்னுவே’. நம்பி கேட்டார், ‘வேற நான் என்ன சொல்ல முடியும்? நான்தானே தெய்வம். நான் ஒண்ணும் பொய் சொல்லலையே’ன்னார். ‘நீ பொய் சொன்னேன்னு நான் சொல்லலே. ஆனா எடுபடாதுன்னு சொன்னேன். நீ உண்மைதான் சொன்னே, வாஸ்தவந்தான். ஆனா அத நீ சொன்னா எடுபடாது. நான் சொன்னாத்தான் எடுபடும்.’ பாகவதர்கள் சொன்னாத்தான் பகவான ஸ்தாபிக்க முடியுமே தவிர, அவரே பொறந்து அவர ஸ்தாபிச்சுக்கறதுக்கே முடியாது. அத அப்பப்ப அவர் ப்ரயத்தனப்பட்டு பார்ப்பர், முடியாதுன்னு அவரே தெரிஞ்சுனுட்டு, இனிமே வேண்டாம் அப்படின்னு ஆழ்வார் ஆச்சார்யர்களைப் பிறப்பிச்சுடுடுவர். இந்த அர்த்தத்ததான் தெரிந்து கொண்டு, த்வயா அர்த்தத்தையும் சொல்லி, வைஷ்ணவ நம்பின்னு திருக்குறுங்குடி நம்பி பெயர் பெற்றான். அப்ப திருக்குறுங்குடி நம்பியும் ஸ்வாமி வைபவத்த வெளியிட்டான். திருவரங்கநாதனோ, திருவேங்கடமுடையானோ, காஞ்சீ தேவப்பெருமாளோ, திருநாராயணபுரத்து செல்லப்பிள்ளையோ, திருமாலிருஞ்சோலைமலை அழகனோ, திருக்குறுங்குடி நம்பியோ, யாரா இருப்பினும் இவரே புகல் என்றுதான் நமக்குக் காட்டிக் கொடுத்தார்கள். அதனால முற்பட்ட தெய்வங்களாக இருந்தாலும் சரி, பிற்பட்ட ஆச்சார்யர்களாக இருந்தாலும் சரி, அனைத்துப் பேரும் ஒன்றாகக் காட்டிக் கொடுத்தது, ’இவரே பாஷ்யக்காரர், பவிஷ்யதாச்சார்யர்’ என்பதைத்தான்.

    இதிலே ஆழ்வார்களும் விதிவிலக்கே அல்ல. நம்மாழ்வார்தான் முதமுதல்ல இராமனுசர லோகத்துக்கு காட்டினவரே. ஆழ்வார், ‘கலியும் கெடும் கண்டுகொள்மின்’னு பாடினார். அதாவது,

    பொலிக பொலிக பொலிக, போயித்து வல்லுயிர்ச் சாபம்
    நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்னும் இல்லை
    கலியும் கெடும் கண்டுகொள்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
    மலியப் புகுந்திசைபாடி ஆடி உழுதறக் கண்டோம் கண்டோம் கண்டோம்
    கண்ணுக்கினியன கண்டோம் தொண்டீர் எல்லோரும் வாரீர்
    தொழுதொழுது நின் ஆர்த்து

    -ன்னு அஞ்சாம் பத்து, இரண்டாம் திருவாய்மொழி ஆரம்பத்தில நம்மாழ்வார் பாடறார். அது எத சொல்றார்ன்னா, கலியுகத்தில் எல்லாப் பாபங்களும் விலகி, கஷ்டங்கள் நீங்கி, ஓஹோன்னு ஸ்ரீவைஷ்ணவர்கள், பகவானை வாழ்த்தப் போறார்கள், இப்படின்னு எப்பவோ பாடறார் ஆழ்வார். அவர் கலியுகத்தோட ஆரம்பத்துல பிறந்தவர். ‘கலியும் கெடும் கண்டு கொள்மின்’, இந்த கலி கோலாகலம் ஒழிஞ்சு போய்டப்போறது பாருங்கோள், அப்படின்னு அவர் சொன்னார். எதத் திருவுள்ளத்துல வச்சுண்டுன்னால், இராமனுசர் அவதரிப்பார், கலி கோலாகலம் ஒழியும், பகவானுடைய வைபவம் தெரிந்து போகும், அப்படின்னு அன்னைக்கே அவர் சொன்னார். அதோட அல்ல, அவர்தான் இராமானுசருடைய விக்கிரகத்தை ஏற்படுத்தி, மதுரகவி ஆழ்வார் மூலமாக, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி, அதுல இராமானுசர் விக்ரகம் வர, அத நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகக் கொடுத்ததே, நம்மாழ்வார்தான். ’பவிஷ்யதாச்சார்ய வரசொரூபம் தம்காரீசூணு சரணம் ப்ரபத்யே’-ன்னு, ‘காரீசூணு’ன்னு நம்மாழ்வாருக்குப் பெயர். அவர்தான் இந்த பவிஷ்யதாச்சார்ய விக்கிரகத்தயே கொடுத்தார். அதனாலதான் இந்த முதல் பாசுரம் திருவரங்கத்தமுதனார் சாதித்தார்,

    பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
    பா மன்னு மாறன் அடிபணிந்துய்ந்தவன் பல்கலையோர்
    தாம் மன்ன வந்த இராமனுசன் சரணாரவிந்தம்
    நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
    .

    இராமானுசர் எப்படிப்பட்டவர்? இந்தப் பாட்டு ரொம்ப ஆச்சர்யமான பாசுரம். பூ மன்னு மாது, மாது பொருந்திய மார்பன், மார்பன் புகழ் மலிந்த பா, பா மன்னு மாறன், மாறன் அடிபணிந்துய்ந்தவன். இந்தப் பாட்டை நேர சொல்லிடக்கூடாது. பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த பா மன்னு மாறன் அடிபணிந்துய்ந்தவன், ஒரு வரிதான இருக்கு, ஆனா அதை அப்படியே பிரிச்சுக்கங்கோ. பூ மன்னு மாது – புஷ்பத்திலே எப்போதும் எழுந்தருளியிருக்கக்கூடிய மகாலக்ஷ்மி, மாது பொருந்திய மார்பன் – மகாலக்ஷ்மியை திருமார்பிலே கொண்டிருக்கிற ஸ்ரீமந் நாராயணன். மார்பன் புகழ் மலிந்த பா – ஸ்ரீமந் நாரயணனோட வைபவத்தைச் சொல்ற திருவாய்மொழி, பா மன்னு மாறன் – அந்த திருவாய்மொழியைப் பாடின நம்மாழ்வார், மாறன் அடி – நம்மாழ்வாருடைய திருவடி, அடிபணிந்துய்ந்தவர் – அந்தத் திருவடியைப் பற்றியே வாழ்ந்த இராமானுசர். அதனாலே பூ மன்னு மாது பொருந்திய மார்பன், புகழ் மலிந்த பா மன்னு மாறன் அடிபணிந்துய்ந்தவன், பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் சராணாரவிந்தம் நாம் மன்னி வாழ, நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே. அதனலே இராமானுசர்ன்னால், மற்ற யாரும் அல்ல, மாறன் அடிபணிந்துய்ந்தவர். நம்மாழ்வாரோட திருவடியையே பற்றி இருக்கறவர். இன்னிக்கும் நீங்க ஆழ்வார் திருநகரிக்கு போனேள்ன்னு வச்சுக்கங்கோ, இப்ப பெருமாளோட சடாரி வாங்கிக்கறோம்ன்னா, ‘ஸ்ரீசடகோபம்’, சடகோபம்தான் நம்மாழ்வார். நம்மாழ்வாரேதான் பாதுகை. நம்மாழ்வாரோட பாதுகையை வாங்கிக்கறதுன்னா என்னன்னு சொல்லணும்? அதுவும் போய் சடாரி குடுங்கோன்னு சொல்லப்படாது. ஏன்னா அவர்தான் சடாரி. அதுனால அவரோட பாதுகை எது தெரியுமோ? எல்லா ஊர்லயும் போனா மதுரகவிகள். ஆனா ஆழ்வார் திருநகரில மட்டும் ஸ்ரீஇராமானுசர். ஆழ்வாரோட திருவடியையே பற்றினவரோல்லையோ? அதனால ஆழ்வார் திருநகரில போய் அர்ச்சக ஸ்வாமிகிட்ட கேக்கணும்ன்னா, ‘அடியேன் ஸ்ரீஇராமனுசன் சாதிக்க வேணும்’, அப்படின்னு கேட்கணும். இப்ப இராமானுசருடைய பாதுகைக்கு என்ன பேர் அப்படி? எல்லாவிடத்திலயும் முதலியாண்டான், திருவேங்கடத்துல மட்டும் அனந்தாழ்வான். திருவேங்கடத்துல போனா, ஏன்னா, அனந்தாழ்வான் வைத்ததுதானே திருவேங்கடத்துல எல்லா கைங்கர்யமே. அங்க போனா அந்த இடத்துல அனந்தாழ்வான்னுவா. இப்படி சில விசயங்கள். இதெல்லாம் சம்ப்ரதாயத்திலே கொஞ்சம், அப்படியே ஒவ்வொரு திவ்ய தேசமாப் போய், என்ன ஏதுன்னு கொஞ்சம் நிதானமா பார்த்தோம்ன்னால் அப்ப விஷயம் என்னன்னு புரியும்.

    (தொடரும்)

    -- நன்றி ("இராமனுஜ வைபவம்” உபந்நியாசம்@SFO - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)

    ஸ்ரீஇராமானுஜ வைபவம் – பாகம் 5


    முந்தைய பாகம், பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4

    ஸ்ரீரங்கத்துப் பெருமாள், இராமானுசர் திருவரங்கத்துக்கு எழுந்தருளுகிறார், அப்ப அவரை அழைத்து கையில பொறுப்புத் தறார். ‘உடையவர்’, நீர்தான் இனி நித்ய விபூதி, லீலா விபூதி இரண்டையும் உடையவர். நீர் பார்த்து யாருக்கு மோட்சம் கொடுக்கிறீரோ, அவருக்குத்தான் மோட்சம். இதை அப்போதே கொடுத்தார். பங்குனி உத்திரத்தன்னிக்கு இராமானுசர் பெருமாள் திருவடியைப் பற்ற, மறுபடியும் ஒரு தடவை இதே வைபவத்தை இராமானுசர் ப்ராத்தித்துப் பெற்றார். அதனாலே ஸ்ரீரங்கத்துப் பெருமாள் கொடுத்ததுதான் முதல் உரிமை. அதனாலேதான் இன்னிக்கும், தேசிகர் தன்னுடைய எதிராஜ சப்ததியிலே சொல்லும்போது, இதம் அகிலதமக் கரிசனம் தரிசனம் நமஹ. த்ராதம் சம்யது யதீந்த்ரைஹி. சில பேர் வந்து உங்க இராமானுசரின் சம்ப்ரதாயம் புதுசு, அப்படின்னு புகார் பண்ணாளாம். ஸ்வாமி பதில் சொல்றார் அவர்களுக்கு இப்போ. நாங்க புதுசா இருந்த உங்களுக்கு என்ன, பழசா இருந்தா உங்களுக்கு என்ன? இப்ப போய் தங்கம் வாங்கப் போறோம், புதுத்தங்கமா, பழைய தங்கமா, அப்படின்னு யாராவது கேட்பளா என்ன? தங்கம், தங்கம். அது புது தங்கமா பழைய தங்கமான்னு பாக்க வேண்டாம். அதுக்கு அவர் சொல்றார், இத எங்க நீங்க உரசணுமோ, உரசிப் பாருங்கோ. விசிடாத்வைதம்ங்கிற தங்கம். தங்கம் வாங்கப் போறச்சே, பத்தரை மாத்து தங்கமா, இருபத்தி நாலா, இருபத்தி இரண்டா, பதினெட்டா. முன்னாடி இருபத்திநாலா இருந்தது, இப்ப அப்பபிப்டி பதினாறுக்கு கொண்டு வந்து விட்டான். இனிமே எத்த வாங்கப் போனாலும் பதினாறுதான். லோகமே இந்த மாதிரி கலப்படத்துல இருக்கறச்சே, வேற எங்க போப்போறோம். ஏன்னா, சாஸ்திரத்திலேர்ந்து, ஆழ்வார்களிலேர்ந்து ஒசத்தியானா தங்கம்தான் பெருமாளுக்கு திருஷ்டாந்தம்ன்னு எழுதி வச்சுட்டுப் போனா. இந்த காலத்துல என்ன பயமாயிருக்குன்னா, அவா சொன்ன உதாரணத்த சொல்றதுக்குள்ளே, எது உதாரணமாயிருந்ததோ அது மட்டமா போயிடுத்து இப்பொ. இத அதச் சொல்லிட்டு, எங்கயாவது இந்த மாதிரி தங்கம்தான் பெருமாள்ன்னு நினைச்சுக்கப் போறானேன்னுதான் தோணும். ஏன்னா அந்த நாள்லே இப்போ, ஜீவாத்மாவுக்கு சேஷத்துவம்ன்னு இருக்கோல்லையோ, ஆத்மா அடிமை, ஆத்மாவுக்கு அடிமை எப்படின்னா, புஷ்பத்துக்கு மணம் போலே, இரத்தினத்துக்கு ஒளி போலே, ஆத்மாவுக்கு அடிமைன்னா. இன்னிக்கு நிஜ புஷ்பத்தையே காணோம் மணத்துக்கு, காகித புஷ்பமா போச்சு. நிஜ கல்லையே காணோம், அது ஏதோ கண்ணாடி கல்லை வச்சுண்டு இருக்கான், அதுல ஒளியையும் காணோம். இப்ப அதையே இதுக்கு நம்ம த்ருஷ்டாந்தமா சொன்னா, சுவாமி, புஷ்பத்துல எப்படி மணம் இல்லையோ, இரத்தினத்துல எப்படி ஒளி இல்லையோ, அதப்போல ஆத்மாவுலயும் சேஷத்துவம் இல்லே. அதத்தானே நீர் சொல்ல வந்தீர்-னுடுவா. அதனாலே அந்த த்ருஷ்டாந்தத்தை இன்னைக்கு சொல்ல வந்தா, அதுவே இருக்குமாங்கறது தெரியலே. அதுக்காக சொல்ல வந்தேன். ஸ்ரீரங்கத்து எம்பெருமான் தான் அத்தை இவரிடத்தே ஒப்படைத்தார். ஒப்படைத்து, நீர் பார்த்து யாரை அனுப்பி வைக்கிறீரோ, அவருக்கு மோட்சமுண்டு. இது ஸ்ரீரங்கநாதனே சொன்னது. அதனாலதான் அன்று தொடங்கி இன்று வரைக்கும் அவரையே நாமும் பற்றி இருக்கிறோம். அதான் தேசிகன் தெரிவித்தார், இந்த சம்ப்ரதாயம் புதுசுன்னு சொல்ல வேண்டாம். உரைகல்லை வச்சுக்கங்கோ. வேதம்தான் உரைகல். தங்கம் விசிஷ்டாத்வைதம். உரைச்சுப் பாருங்கோ. பத்தரை மாத்து தங்கமா இருந்தா வாங்கிக்கோங்கோ. வேண்டாம்ன்னா தூக்கிப் போட்டுட்டுப் போங்கோ. வேதம் என்னும் உரைகல்லில் உரைத்தால்தான் தெரியும். மத்த சம்ப்ரதாயத்த கொண்டு வந்து வேதம்ங்கிற உரைகல்லே உரைச்சுப் பாருங்கோ. இருந்ததுன்னா எடுத்துக்கப்போறோம், இல்லேன்னா விட்டுடப் போறாம். இதத்தான் ‘நிஷ்கரிஷ நிகஷம்’ன்னு சொல்லுவர்கள். அத நாம உரைத்துப் பார்த்து தங்கமிதுன்னு தெரிந்து கொள்ள வேண்டுமாம். அதனாலே புதியதாகத் தோற்றலே, இராமானுசர்தான் இதை வளர்த்தார்ங்கிறதுக்காக நம்பெருமாள் பேர் கொடுக்கிறார். இத நாம இப்போ இராமானுச சித்தாந்தம், இராமானுச சித்தாந்தம்ங்கிறமோல்லையோ, இது யார் பேர் வச்சாள்ன்னா, நம்பெருமாளேதான் வச்சார்.

    எம்பெருமானார் தரிசனம் என்னே இதற்கு
    நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்
    அம்புவியோர் இந்த தரினத்தை
    எம்பெருமானார் வளர்த்த அந்தச்செயல் அறிகைக்கா.

    தரிசனத்தை இராமானுசர் தோற்றுவிக்கவில்லை. வளர்த்துக் கொடுத்தார். இந்த தரிசனத்தை இராமானுசர்தான் வளர்த்தார். அந்த நன்றி மக்களுக்கு ஞாபகம் இருக்கணுமோல்லையோ? அதுக்காகத்தான் ’இராமானுச சித்தாந்தம்’ என்று நம்பெருமாளே பேர் வைத்தாராம். அதனால இந்த சித்தாந்தத்துக்குப் பேர் வந்தது. நம்பெருமாள் என்னிக்கும் ரொம்ப இராஜா. அவர் தான் இஷ்டத்துக்கு எத வேணாலும் பண்ணிடுவர். பண்ணிட்டார்ன்னா மத்த பேர் எல்லாம் அவர் சொன்னபடிக்குத்தான் கேட்டுண்டே இருக்கணும். ஏன்னா அது ப்ரதான திவ்ய தேசமோல்லையோ. அவர் என்ன பண்ணிட்டாரோ, எல்லா சொத்தும் அவர்கிட்டதான் இருக்கணும். எல்லாம் தொண்டை நாட்டுல அவதரிச்சவா, பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருக்கச்சி நம்பிகள், தேசிகன், இராமனுசர், எம்பார், கூரத்தாழ்வான், முதலியாண்டான், இன்னும் எத்தனை பேர் வேணும்? இவா இத்தனை பேரும் தொண்டை நாட்ல அவதரிச்சவா. ஒருத்தரானும் அங்க இருந்தாளா பாத்தேளா, எல்லாம் ஸ்ரீரங்கத்துக்குப் போய்ட்டா. ஏன் ஸ்வாமி இங்க ஒருத்தரும் இல்லையேன்னா, ’சேராதனவுளவோ பெரும் செல்வர்க்கு’, ரொம்ப செல்வந்தனா இருந்தா சொத்து அவன்கிட்டயேதான் சேரும். ஏழையாயிருந்தா ஏழையாயிண்டே போக வேண்டியதுதான். பணக்காரனா இருந்தா பணக்காரானாயிண்டே போக வேண்டியதுதான். இந்த திருவரங்கத்துப் பெருமாள் பெரும் பணக்காரர். எந்த ஊர்ல எந்த நல்லது இருந்தாலும் இங்க வந்துடணும்ன்னுடுவர். அந்தந்தப் பெருமாள் கஷ்டப்பட்டு அந்த சொத்தை வளர்த்திருப்பா, வளர்த்து எங்க குடுக்கணும்ன்னா, தேவகி வளர்த்து யசோதைகிட்ட கொடுத்தாப்லதான். இவ வச்சுக்கவே முடியாது. அதப்போல தொண்ட நாடு பெறதுக்குத்தான் தெரியும். அதுக்கு பாக்கியம், வளர்க்கிற பாக்கியமே கிடையாது. மொத்தம் சோழநாட்டுக்குத்தான் லாபம் கிடைக்கும். அதனால திருவரங்கநாதனிடத்திலதான் எல்லாரும் போய் சேர்ந்தார்கள். ’பொன்னரங்கமென்னில் மயலே பெருகும் இவ்விராமானுசர்’. இராமானுசருக்கு அரங்கம்ன்னு சொல்லிட்டா போதுமாம், அவர் உள்ளம் நிக்காது தள்ளாடிப் உருகிப் போய் விழுகிறார். எத்தனைக்கெத்தனை பரம வேதாந்தியாய் இருந்தாரோ, அத்தனைக்கத்தனை பரம பக்தர் அவர். அது ரொம்ப முக்கியம். ஏன்னா, வேதாந்தின்னு சொல்லிட்டாலே ஒரு வறட்டுத்தனம் வந்திரும். வேதாந்தத்தப் படிச்சுப்பிட்டு, ’எல்லாம் ப்ரம்மம்’ அப்படின்னு சொல்லிடுவனே தவிர, ஒரு துளி ஈரம் மனசுல இருக்கவே இருக்காது. ஆனா இராமனுசருக்கு என்ன ஒரு சேர்க்கை வந்ததுன்னா, பரம ஞானியாகவும் இருந்தார், ப்ரம பக்தராகவும் இருந்தார். ஏன்னால், இராமனுஜ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின்படி, வைதிக முறைப்படி கேவல ஞானத்தாலோ, கேவல பக்தியாலோ, மோட்சமல்ல. பக்திரூபாபன்ன ஞானத்தாலே மோட்சம். உபாசனம்ங்கிறது என்னன்னா, ஞானம், ஞானம் முதிர்ந்த பக்தி. அதாலதான் மோட்சமே தவிர, கேவல கர்மத்தாலே, கேவல ஞானத்தாலே மோட்சமல்ல. அதத்தான் ’மதிநலம் அருளினன்’னு ஆழ்வார் சொன்னார். மதின்னா ஞானம், நலம்ன்னா பக்தி. மதிநலம்ன்னா பக்திரூபாபன்ன ஞானம்ன்னு அர்த்தம். அதாலே ஸ்வாமிக்கும் ரெண்டு கைல ரெண்டு. இந்தப் பக்கம் ஞானம், இந்தப் பக்கம் பக்தி. இவ்வளவு தூரம் வேதாந்தத்துக்குப் பாஷ்யம் எழுதி, கரடுமுரடான வாதங்களை வச்சு ஜெயிக்கறாரோல்லையோ, அவர் ஒரு தடவை நடந்தது சொல்றேன். இது நமக்கு சிரிக்கறதா, அழறதான்னே தெரியாது.

    ஒருநாள் பெரிய பெருமாளை சேவிக்கறதுக்காகப் போனார். போனா முகம் ரொம்ப வீங்கிப் போய், செவ செவன்னு செவந்து இருந்ததாம். என்ன பெரிய பெருமாள் முகம் ஏன் இப்படி ஆயிடுத்து? ஜலதோசம் பிடிச்சுடுத்து, அப்படின்னு தெரிஞ்சுனுட்டார். ஆருக்கு, ரங்கநாதருக்கு. சயனிச்சிண்டிருக்காரோல்லையோ, இந்த சயனிச்சிண்டிருக்கிற விக்கிரகப் பெருமாளுக்கு ஜலதோஷம் பிடிச்சுணுடுத்துன்னு இராமானுசர் தோணி, யாரோ என்னவோ தப்பா அம்ஷி பண்ணியிருக்கீள். ஏதோ கண்டருளப் பண்ணதுல தப்பான பதார்த்தம் குடுத்துருக்கீள், அதலாதான் பெருமாளுக்கு ஜலதோஷம். கூட இருந்த சிஷ்யாளெல்லாத்தையும் கூப்ட்டு நிறுத்திட்டார். நிறுத்திட்டு, யாரார் என்னென்ன சமர்ப்பிச்சேள்ன்னார். நா இல்லே, நா இல்லேன்னுட்டார் எல்லாரும். முதலியாண்டான் முன்னாடி வந்தார்.

    பாதுகே எதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
    தஸ்யதாஸரதே பாதவ் சிரஸா தாரயாம்யகம்

    - இராமனுசருக்கு மருமகனாய், அவருக்கு தண்ட பவித்ரங்களைப் போலிருந்த முதலியாண்டான், அவர் வந்தார். ‘ஸ்வாமி, அடியேந்தான் சமர்ப்பிச்சேன்’. ‘என்ன சமர்ப்பித்தீர்’ன்னு இராமனுசர் கேட்கறார். ‘தத்யோதன்னம் சமர்ப்பிச்சேன்’. ’அது ஒண்ணும் தப்பில்லையே, அது ஜலதோஷம் எல்லாம் பிடிச்சுராதே, வேற என்ன குடுத்தீர்’ன்னார். கண்ணனுக்கு நாகப்பழம் ரொம்பப் பிடிக்கும்ன்னு கேள்விப்பட்டிருந்தேன். கண்ணன்தான் பெரிய பெருமாள்ன்னு திருப்பாணாழ்வார் பாடினார், கொண்டல்வண்ணனை கோவலனை வெண்ணை உண்ட வாயன் –னுட்டு, அதனால நாகப்பழம் சமர்ப்பிச்சேன்’னார். ‘அதுவும் ஒண்ணும் தப்பில்லையே, அதுனாலயும் ஒண்ணும் ஜலதோஷம் பிடிச்சுராதே. ரெண்டையும் தனித்தனியாத்தானே குடுத்தீர்’ன்னார். ‘இல்லேல்லே, ஒரு இலைல ரெண்டையும் வச்சு சமர்ப்பிச்சேன்’ன்னார். ‘அதான் தப்புப் பண்ணிட்டீர். தத்யோதன்னத்தோட நாகப்பழம் சேர்த்து வச்சுட்டா ஜலதோஷம் பிடிச்சுருமாம். இது வைத்ய சாஸ்திரம் சொல்லியிருக்கு. நீர் ரெண்டையும் சேர்த்து குடுத்தீரோல்லையோ, பெரிய பெருமாளுக்கு ஜலதோஷம், பாரும்’, அப்படின்னு அந்த நாள்ல பெரிய வைத்தியர், ‘கருட வாகன பண்டிதர்’ன்னு பேரு. அந்த கருட வாகன பண்டிதர்தான் ‘திவ்யசூரி சரித்திரம்’ன்னு எழுதியிருக்கார். அதுதான் நம்மாழ்வார் முதலான ஆழ்வார்களின் சரித்திரம். அந்தப் பண்டிதரக் கூப்பிட்டு, ‘நீர் உடனே கஷாயம் காச்சு’ன்னார் இராமானுசர். ‘யாருக்கு’ன்னார் அவர். ‘பெரிய பெருமாளுக்கு ஜலதோஷம் பிடிச்சிருக்கு, அதனால் உடனே கஷாயம் காச்சும்’ன்னா, அவருக்கு புரியலை. ’பெரிய பெருமாளுக்கு நாங்க கஷாயம் எல்லாம் குடுக்க முடியுமா, அவரே விக்ரஹ ரூபத்துல ப்ரம்மம். அவருக்கு குடு..’, ‘கஷாயம் காச்சும், குடுத்தாத்தான் சரியாகும்’னுட்டு, கஷாயம் காச்சி தானே கொண்டு போய் அர்ச்சகர் ஸ்வாமிகிட்ட கொண்டு போய் கொடுத்து சமர்ப்பிச்சு, ‘இப்பதான் சரியாப் போச்சு’, அப்படின்னு ரொம்ப திருப்திப்பட்டார்ன்னு குரு பரம்பரையில இருக்கு. இவரா இந்த வேதாந்தத்துக்கு பாஷ்யம் பண்ணார்ன்னு நாம சந்தேகப்படுவோம். ஒரு பக்கத்திலே, ‘ப்ரம்மம் ப்ரம்மம் ப்ரம்மம் ஐததாத்மவிதம் சர்வம்’ன்னு எங்கயோ பேசறது. இன்னொரு பக்கத்திலே அந்த ப்ரம்மம் விக்ரஹ ரூபத்துல இருக்கறச்சே, ஜலதோசம் பிடிச்சுரும்ன்னு சொல்றாரேன்னா, இது பக்திரூபாபன்னஞானம். ஒரு பக்கத்துல ஆழ்வார் பாசுரம் இருக்கறதுன்னால இப்படி உருகுறார். மற்றொரு பக்கத்திலே ப்ரம்ம சூத்திரம் இருக்கிறதினாலே பெருமிதத்தோடே நிற்கிறார். இரண்டும் ஸ்வாமிக்கு இருக்கிற இயல்புங்கிறதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதனாலே, ஒரோரு நாளும் உள்ளுக்குள்ளே பிரசாதம் போகுமாம். பிரசாதம் போய்ட்டு வெளியே போறோதோல்லையோ? நிறைய பிரசாதம் ஸ்ரீரங்கத்துலே சமர்ப்பிப்பா. உள்ளே போகும், கால் மணி, மணி சேவிக்கிறா, ஆயிடுத்து அமுது செய்தாடுச்சு, வெளில போறது. வெளில போறச்சே போற பிரசாதத்த திறந்து பார்ப்பராம். திறந்து பார்த்துட்டு, அது குறையுமா? பெருமாள் ஒண்ணும் எடுத்துக்கமாட்டார், போனா திரும்பிப் போயிடுமோல்லையோ, அது குறைஞ்சிருந்ததை அப்படியே பரிசாரகனை நிறுத்திண்டார். அழைச்சிண்டு நேரா பெரிய பெருமாள் சன்னிதிக்குள்ள போய், ’நானும் மூணு மாசமா பாத்துண்டிருக்கேன் நித்தியம், ஒரே ஒரு படி கூட அரிசி குறையவே இல்லே. யசோதை உனக்கு என்ன ஊட்டிவிட்டு மொசு மொசுன்னு திருமேனி ஏத்தி வச்சுருக்கா, அத கடைசில நான் வந்து இந்த கோயில் நிர்வாகத்தப் பார்த்து உன்னை இளைக்கப் பண்ணிட்டேன்ங்கிற பேர் எனக்கு வேண்டாம். ஒழுங்கா அமுது செய்வாய்’, என்று அந்தப் பெருமாள்கிட்ட ப்ராத்தித்தார்ன்னு எழுதி வச்சுருக்கா. இந்த பெருமாள் சாப்பிடப்போறாரா, இல்லே அன்னைக்கி குடுத்த யசோதை இன்னைக்கு இருக்கிற பெரிய பெருமாளா? அன்னைக்கு விபவா அவதாரத்துல வெண்ணை சாப்பிட்டவர் இன்னைக்கு எங்கயாவது சாப்பிடுவரா? இதெல்லாம் அவருக்குத் தெரியாதா? எங்களுக்கே தெரியறதேன்னா, அதனாலதான் நாம நாமா இருக்கோம், அவர் அவரா இருக்கார். அவர் ஏன் அப்படி இருக்கார்ன்னா, இதெல்லாம் அவருக்கு தெரியாததுதான் காரணம். நம்ம மகாக்ஞானிகள், இதெல்லாம் ரொம்ப நன்னா தெரிஞ்சு வச்சுண்டிருப்போம். அதனாலதான் நமக்கு ஞானிகள்ன்னு பட்டம். என்னிக்கும் ஒரு பக்தனாயிருந்தா, கலங்கினாத்தான் பக்தி. தெளிவு இருந்தா பக்தி அல்ல. உலக விஷயத்துல ரொம்பத் தெளிவா இருக்கணும். அது பக்கமே பக்தன் போமாட்டான். பகவத் விஷயத்துல கலங்கி இருக்கிறான். என்ன நடக்குமோ பெருமாளுக்குன்னு கலங்குகிறானோ இல்லையோ, அந்த கலக்கம் ஆழ்வார்கள் குடுத்த சொத்தாக இராமானுசரிடத்திலே இருந்தது. அது மற்ற பேரிடத்திலே கிடையாது. அதனாலதான் லோகம் முழுக்க இவர் பின்னாடி போச்சு. மற்ற பேரெல்லாம் புஸ்தகம் எழுதின வேதாந்திகளா இருக்கலாமே தவிர, உலகத்தாருடைய நன்மை கருதினவர்களாக இருக்க மாட்டார்கள்.

    இப்படி திருவரங்கநாதன் உடையவர்ன்னு பட்டம் குடுத்தார். அவர் சொன்னா மத்த பேர் நான் நடத்திக் காட்ட வேண்டாமா? நடத்தினார், திருவேங்கடமுடையான் நடத்தினார். ’தும்பையூர்க் கொண்டி’ன்னு ஒருத்தி இருந்தாள். அவள் நித்யப்படி இராமானுசரோட மடத்துக்கு பாலும், மோரும், தயிரும் குடுப்பள். முப்பது நாள் தயிர், பால், மோர் குடுத்துட்டா. ஒண்ணாம் தேதி வந்ததுன்னா பணம் குடுக்கணுமோல்லையோ? அதனால அதுக்கு வேண்டியவளப் பாத்து ’பணம் பட்டுவாடா பண்ணு’ன்னு ஸ்வாமி சொல்லிட்டார். கூப்ட்டு பணம் குடுக்கப் போறச்சே தும்பையூர்க் கொண்டி சொல்றா, ‘நான் இந்த பணத்த வாங்கிக்கறதுக்காக குடுக்கலே’ன்னா அவள். ‘பின்ன வேற என்ன வேணும்?’, ‘இராமானுசர் ஒரு சீட்டு எழுதிக் குடுப்பராம், அந்த சீட்ட எடுத்துட்டுப் போய் திருவேங்கடமுடையான்கிட்ட குடுத்த உடனே மோட்சம் கிடைச்சுருமாம், அந்த சீட்டுக்குத்தான் முப்பதுநாள் மோர் குடுத்தேன்’னாள் அவள். தூக்கிவாரிப் போட்டது முதலியாண்டானுக்கு. ‘இந்த ரகஸியத்தை நீ எப்படி தெரிஞ்சிண்டே? எங்களுக்கே அது சரிவரப் புரியலையே, இரு’, அப்படியே நிறுத்தி உள்ள போய், ஸ்வாமியினிடத்தில ப்ராத்தித்தார், அவரும் ஓலைச்சுவடி முறி எழுதிக் குடுக்க, இந்த மோர்க்காரி அப்போதே ஸ்ரீரங்கத்தத் துறந்து நேர திருவேங்கடமுடையானிடத்தில போனாள். போய் அவள் வாசல்ல நின்னதுதான் தாமதம், திரு திரை அறுந்து விழுந்து, உள்ளே நேரே அவளைக் கூப்பிட்டு, ’இந்தாரும் பிடி, போ’, என்று திருவேங்கடமுடையான் மோட்சம் குடுத்து அதே வினாடி போய்ச் சேர்ந்தாள், என்பது சரித்திரம். அப்ப திருவரங்கநாதன் குடுத்தேன்னு சொல்றார், திருவேங்கடமுடையான், ‘அவர் வாயால சொன்னார் நான் குடுத்துறேன், இந்தாரும்’,ன்னு குடுத்தார். அதனால இராமானுசர் சீட்டெழுதிக் குடுத்தால் முக்தி கிடைக்கும்ங்கிறத மோர்க்காரி தெரிஞ்சிண்டா. இது மகாவித்வானுக்குத் தெரியுமான்னுகூட நமக்குத் தெரியாது. ஆனா ஒரு தயிர், பால், மோர் விக்கிறவ அந்த அர்த்தத்த தெரிஞ்சிண்டாளோல்லையோ?

    அந்த திருவேங்கடமுடையானுக்கே தகப்பனார், ஆச்சார்ய ஸ்தானம் இராமானுசருக்கு. ஏனெனில் ’அப்பனுக்குச் சங்காழி அளித்தவன்’ன்னு சொல்லுவர்கள். சங்க சக்கரத்தை நம் போன்ற சிஷ்யர்களுக்கு இராமானுசர் ஒத்தறது ஆச்சர்யம் இல்லே. திருவேங்கடமுடையானுக்கே திருப்பிக் குடுத்தார் அதை. அந்தப் பெருமாள்கிட்ட ஒரு பழக்கம். பெருமாளே ரொம்ப வேண்டியவர்களாக இருந்தால், அவாள தலைக்கு மேல தூக்கி வச்சுண்டுடுவர். எங்க எவ்வளவு தூரத்துல வைக்கணும்ன்னு அவர் பார்க்க மாட்டார். தொண்டமான் சக்கரவர்த்தி ரொம்ப வேண்டியவன். துளந்தினில் முடி, அரசர்தம் குருசில் தொண்ட மன்னவன் தீண்டின ஒருவர்க்கு’ன்னு திருமங்கையாழ்வாருடைய பாசுரம். தொண்டமான் சக்கரவர்த்தி திருவேங்கடமுடையானுக்கு ரொம்ப நெருங்கினவர். அதனால தான் சங்க சக்கரங்களைக் கழட்டி அவன்கிட்ட குடுத்து வச்சுட்டார். இதுனால என்ன ஆச்சு, பெருமாள் கைல சங்க சக்கரங்கள் இல்லையோல்லையோ? லோகத்துல யாரா இருந்தாலும் இருக்கறபடி இருந்தாதான் மக்கள் நம்புவா. இப்ப நான் திருமண் இட்டிட்டிந்தா, சரி இவாள்ல்லாம் திருமண் இட்டிண்டிருக்கா, வைஷ்ணவாள். கச்சம் உடுத்திருந்தா, சரி ஏதோ வைதிகர் போலருக்கு, இத ஏதானும் மாத்திண்டு நா வேற ஏதாவது போட்டுண்டு மட்டும் போனேன், அவ்வளவுதான், அத்தோட மறுநாள்ல இருந்து ஒருத்தருமே மதிக்க மாட்டான். இது பெருமாளாவே இருந்தாலும் அவ்வளவுதான். அவர் ஒழுங்கா சங்க சக்கரங்களைப் பிடிச்சிண்டு இருக்க வேண்டியதுதானே? அத விட்டுட்டு இதை யாரிட்டயோ குடுத்தா, ஓ, இது திருமாலே இல்லே, சிவன்னுட்டான். அவர் கைல இல்லையோல்லையோ? அடையாளம் இருந்தாத்தான் இது திருமாலா, யாருன்னு சொல்ல முடியும். கைல சங்க சக்கரத்தக் காணோம், கடைசில இங்க இருந்து ஓடினார் இராமானுசர், ’இதென்ன புதுக்குழப்பமா இருக்கே, பெருமாளே இல்லேன்னு ஆரம்பிச்சுட்டாளே இப்போ’ன்னுட்டு, ரிக் வேதத்திலேர்ந்து எல்லாத்தையும் எடுத்துச் சொன்னார், சாம வேதத்திலேர்ந்து எல்லாத்தையும் எடுத்துச் சொன்னார். வேதத்தை எல்லாம் கேட்டு ஒத்துக்கறவனாயிருந்தா, அவன் இதை முதல்ல பண்ணியே இருக்க மாட்டான். வேதம் கேட்கற மக்களெல்லாம் அது இல்லே. ஸ்வாமி பார்த்தார், ‘இவனுக்கு தர்க்கமெல்லாம் பண்ணிப் பிரயோஜனம் இல்லே, கொண்டா சிவனுடைய ஆயுதம் எதெதோ கொண்டா. திருமாலோட ஆயுதம் எதோ கொண்டா. ரெண்டையும் இந்த சன்னிதிக்குள்ள வைக்கறேன், கதவைச் சாத்தறேன், வெளில வருவோம், இந்தப் பெருமாள் யாரோ, அந்த ஆயுதத்தை அவர் எடுத்துக்கட்டும்’ன்னுட்டார் அவர். நல்லவேளை உள்ளே எல்லாத்தையும், மழு அவரோட ஆயுதம், மான்பிஞ்சு, மழுவும், மான்குட்டியும்தான் அவரது ஆயுதம். அந்த ரெண்டையும் உள்ள வச்சுட்டு, இந்த ரெண்டு சங்க சக்கரங்களையும் உள்ள வச்சுட்டு வெளியே வந்தார். நல்லவேளை கதவைத் திறந்த உடனே,

    திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழு
    மருக்க னணிநிறமுங் கண்டேன் – சேருக்கிளரும்
    பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்
    என்னாழி வண்ணன்பா லின்று
    .

    -ன்னு இராமானுசர் சேவித்தார், ஓ, திருமால்தான். பெருமாள் சங்க சக்கரங்களை எடுத்துப் பிடிச்சுனுட்டார். அன்னிலேர்ந்து இவருக்கு ஒரு பட்டம் கிடைச்சது, ’அப்பனுக்குச் சங்காழி அளித்தவன்’, அப்பனான திருவேங்கடமுடையானுக்கே சங்க சக்கரங்களை இவர் குடுத்தாரோல்லையோ? ஆச்சார்யன்தானே சிஷ்யனுக்குக் குடுக்கணும்? இப்ப யார் சிஷ்யன்? திருவேங்கடமுடையான்தான். அதனால இராமனுசருக்கே சிஷ்யனாக இருந்தார், இது திருவேங்கடவனின் பெருமை.

    தேவப் பெருமாள் இதே விஷயத்தக் காட்டினார். திருக்கச்சி நம்பிகள் நித்ய கைங்கர்யம் பண்ணிண்டிருக்கார் தேவப் பெருமாளுக்கு. ஒருநாள் அவர் கேட்டாராம், ‘நான் விசிறிண்டேயிருந்திருக்கேன், எனக்கு மோட்சம் உண்டோல்லையோ?’. அவர் திரும்பச் சொன்னார், ‘உமக்கு இராமானுச சம்பந்தம் உண்டா’ன்னார். ‘நான் எனக்கு மோட்சம் உண்டான்னு தேவரீர்கிட்ட கேட்கிறேன், எனக்கு இராமனுச சம்பந்தம் உண்டான்னு கேட்டா என்ன அர்த்தம்’ன்னா, ’நாம்தான் சொல்லிட்டமே, யாருக்கெல்லாம் இராமானுச சம்பந்தம் உண்டோ, அவருக்கெல்லாம் மோட்சம்னுட்டு’. ‘அடியேன்தான் இராமானுசருக்கே ஆச்சார்யன்’. ‘என்ன அப்படி சொல்லிட்டீர், அப்ப மோட்சம் உண்டு, இராமானுச சம்பந்தம் இருக்கறதுனாலே’ன்னார். ‘நான் அவருக்கு ஆச்சார்யன், எனக்கு எது…’, ‘ஏதோ சம்பந்தம், ஆச்சார்ய சம்பந்தமா, சிஷ்ய சம்பந்தமான்றதெல்லாம் இல்லே, உமக்கு சம்பந்தம் உண்டா?’, ‘உண்டு’, ‘அப்ப போய்ட்டு வாரும், உமக்கு மோட்சமுண்டு’ன்னார். அப்ப புரிஞ்சிண்டார் திருக்கச்சி நம்பிகள், ஓ, எதுவா இருந்தாலும் இவர் சம்பந்தத்தாலே மோட்சம் போலருக்கு, நாமதான் இவருக்கு ஆச்சார்ய ஸ்தானத்திலிருந்து ஆறு வார்த்தையை பெற்றுக் கொடுத்ததே இவர்தான். அப்ப திருக்கச்சி நம்பிகள் கேட்கறாராம், ‘உமக்கு இத்தனை நாள் ஆடினேனே, பாடினேனே, விசிறினேனே, இத்தனையும் உனக்கு கைங்கர்யம் பண்ணினேனெ, எனக்கு இல்லையா’ன்னார். ‘நீர் பண்ணது எல்லாத்தையும் நான் ஏத்துண்டேனே, அதுக்கும் இதுக்கும் சரியாப் போயிடுத்து’னுட்டார் பெருமாள். ‘நீர் இத்தனையும் பண்ணீரோல்லையோ, நான் ஏத்துண்டேனோல்லையோ, மாட்டேன்னு சொல்லியிருந்தேன்னா? அதனால இத வச்சுண்டெல்லாம் மோட்சம் கேட்காதீரும். நீ ஆடினீர்ன்னா, நான் பாடினேன். நான் பாடினேன்னா, நீர் ஆடினீர், சரியாப் போச்சு. இராமனுஜ சம்பந்தம் இருந்ததுன்னா உமக்கு மோட்சம்.’, என்று தேவப்பெருமாளும் சொல்லிக்காட்டினார்.

    திருநாராயணபுரத்து செல்லப்பிள்ளை எம்பெருமானே, இராமனுஜருடைய புதல்வன் என்றே சொல்லலாம். ’எதிராஜ சம்பத் குமாரன்’னு அவனுக்குத் திருநாமமோல்லையோ? எதிராஜரான இராமானுஜருக்கு, சம்பத் குமாரார். அந்த இராமானுசருடைய குமாரராகவே செல்லப்பிள்ளை எழுந்தருளியிருந்தார். அந்த திவ்யதேசத்துக்கு இவர் போனார். ஏதோ ஆபத்தாலே, கிருமி கண்ட சோழன் ஆபத்தாலே, மேலக்கோட்டைக்குப் போய் பன்னிரெண்டு ஆண்டு காலம் அந்த திவ்ய தேசத்திலே எழுந்தருளி இருந்தார். அப்போது அந்த ஊருலே பெருமாளே இல்லே, காடு, புல்லு மண்டி போச்சு. மொத்த சன்னிதியே கிடையாது. கீழ தொண்டனூரிலேதான் ரொம்ப வருஷம் இவர் இருந்தார். இந்த தொண்டனூரிலேர்ந்து பார்க்கறச்சே, அந்த மலை மட்டும் தெரியும். ‘யாதவாத்ரி’, ‘யெதுகிரி’ன்னு அதுக்குப் பேர். மலை மட்டும் தெரியும், ஒண்ணுமே அங்கு கிடையாது. ஒருநாள் பெருமாள் இவருடைய சொப்பனத்திலே எழுந்தருளி, ’நாம் ஒரு இடத்துக்குள்ளே இருக்கோம், மேலே வாரும்’, என்று கூப்பிட்டார். எப்படி மேல போறதுன்னா, ‘பிட்ட தேவராயன் விட்டல தேவன்’ன்னு அவருக்கு சிஷ்யன் இருந்தான். அவன்தான் ராஜா. அவனை வைத்துக் காட்டையெல்லாம் திருத்திக் கொண்டு, நேரா மேல்நோக்கிப் போனார். போனா, கல்யாணி புஷ்கரணிக் கரை, அந்தக் கரையில ஒரு இடத்துக்குக் கீழ நாம் இருக்கிறோம்ன்னு திருநாராயணப் பெருமாள் காட்டிக் கொடுத்தார். அங்க உள்ளுக்குள்ள தோண்டி பெருமாள வெளிய எடுத்தா. அவர்தான் இன்னைக்கு மூல மூர்த்தி, ‘திருநாராயணன், திருநாராயணன்’ங்கிற பேரோட இருக்கார். அதுக்கடுத்தது எங்கேயோ தில்லியில போய் ‘இராமப்பிரியன்’, உத்ஸவ மூர்த்திக்கு இராமப்பிரியன்னு பேர் அங்க, அவர் இங்கே இல்லே, யாரோ பாதுஷா தூக்கிண்டு போய்ட்டா, அப்படின்னு சொல்லிட்டு இங்கேர்ந்து அங்க போனார். போய் அந்த இராமப்பிரியனையும் திரும்ப எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து, ஏறியருளப் பண்ணார். அப்ப மூலவர் திருநாராயணப் பெருமாள், உத்ஸவர் இராமப்பிரியன் ரெண்டு பேருமே, இவர் இட்ட சொத்து. இராமானுசர் பார்த்து அங்க எழுந்தருளப் பண்ணவேதான நடந்தது?

    (தொடரும்)

    -- நன்றி ("இராமனுஜ வைபவம்” உபந்நியாசம்@SFO - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)

    ஸ்ரீஇராமானுஜ வைபவம் – பாகம் 4


    முந்தைய பாகம், பாகம் 1, பாகம் 2, பாகம் 3

    காஷ்மீரத்தில் சாரதாதேவி ஸ்ரீபண்டாரம்ன்னு இருக்கு. அந்த இடத்துல இருக்கு போதாயன வ்ருத்தி க்ரந்தம். ஓலைச்சுவடி ரூபத்துல இருக்கும், அதை எடுத்துண்டு வந்தால்தான், நாம மேற்கொண்டு க்ரந்த நிர்மாணம் பண்ணமுடியும்ன்னு தெரிஞ்சுணுட்டார். எங்க போறது? என்ன ஆகாய விமானாமா? புடிச்சுண்டு போய் எறங்கி அது எங்க இருக்குன்னு பார்த்து எடுத்துண்டு வந்துரதுக்கு? இல்லே, அங்கிருந்து நீங்க போட்டு, இந்த ஒரு எந்திரம் வச்சுருக்கால்லையோ, அதுல குடுத்து எடுத்தோம்னா, மொத்தமும் நம்மகிட்ட வந்து சேர்ந்துரும். அப்படிங்கறாப்லல்லாம் அன்னைக்கு இல்லே. கஷ்டப்பட்டுத்தான் போயாகணும், கஷ்டப்பட்டுத்தான் கொண்டு வந்தாகணும். அதனாலே கூரத்தாழ்வானைக் கூடே கூட்டிக்கொண்டார். கூரத்தாழ்வானை அழைத்துக் கொண்டு இருவரும் வடதேசை யாத்திரைக்குப் போனார்கள். அங்கு போய் தேடிக் கண்டுபிடிச்சு சரஸ்வதி பண்டாராத்துக்குப் போய்ச் சேர்ந்தா. அங்க போய் சரஸ்வதி தேவியினிடத்துல கேட்கறார், எனக்கு இந்த போதாயன வ்ருத்திக் க்ரந்தம் வேணும்னுட்டு. அவ சொன்னா, இந்தந்த வாக்கியத்துக்கு அர்த்தம் சொல்லும், எப்படி இருக்குன்னு பரீட்சை பண்ணிட்டு உம்மிடத்திலே வ்ருத்திக் க்ரந்தத்தைத் தரேன். அப்ப சில வாக்கியங்கள், ஐததாத்மிதம் இதம் சர்வம் தத்சத்யம்ச ஆத்மா தத்மவசிஸ் வேத கேதோ, என்றும், இது இத்தனையும் ஒண்ணு, நேகநா நாஸ்தி கிஞ்சன, என்றும், ததேவ செளம்ய இதம் அக்ர ஆஸீது ஏக மேவ அத்விதீயம் என்றும், இதுக்கெல்லாம் அத்வைத மகா வாக்கியங்கள்ன்னு பேர். அதென்னன்னு இப்ப அடியேன் சொல்லப் போறதில்லே. இந்த மகா வாக்கியங்களுக்கெல்லாம் அர்த்தம் சொல்லுன்னு சொல்ல, அதற்குரிய அர்த்தமெல்லாம் சொன்னர். தசயதா கப்யாசம் புண்டரீக மேவமக்சனீ-ங்கற உபநிஷத் வாக்கியம், அர்த்தம் சொன்னார். பார்த்த சாரதாதேவி. ’இது இத்தனையும் வியாசர் என் உள்ளத்துக்கு உகந்ததாக இருக்கும். ஆகையால் உம்மிடத்திலே அந்த புஸ்தகத்த கொடுக்கிறோம்’ என்று அந்த சரஸ்வதிதேவி புஸ்தகத்த எடுத்து இவரிடத்திலே குடுத்துட்டா. வாங்கிண்டார். வாங்கிண்டு தெற்கு நோக்கி கூரத்தாழ்வானோட பிரயாணம் பண்ணிண்டே இருக்கார். மூணு நாளாச்சு, நாலு நாளாச்சு, அஞ்சு நாளாச்சு, மத்த பேரு விட்டுவாளா?

    ஏன்னா இவரிடத்திலே அந்த புஸ்தகம் போயிடுச்சுன்னு வச்சுக்கங்கோ, உயர்ந்த ஸ்ரீபாஷ்ய க்ரந்தம் பொறந்துருமோல்லையோ, அப்ப எங்க நம்ம மதங்களெல்லாம் ஆட்டம் கண்டுடப் போறதேங்கற பயம். ஆகையாலே பின்னாடியே வந்தார்கள், புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டார்கள். இவரையும் தள்ளிட்டு புஸ்தகத்தையும் பிடுங்கிட்டு போய்ட்டா, ரொம்ப வருத்தம் இவருக்கு. ‘இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துட்டு வந்தோமே, அப்ப ஆளவந்தாருக்கு குடுத்த பிரதிக்ஞை போச்சா, நம்மால் இதைப் பண்ணவே முடியாதா’ன்னு வருத்தப்பட்டார். கூரத்தாழ்வான் விழுந்து தண்டம் சமர்ப்பிச்சுட்டு, பக்கத்துல அமர்ந்து, ‘சுவாமின், தேவரீர் இந்த மாதிரி சோகப்படப்படாது. தேவரீர்க்கு திருவுள்ளமானா அந்தப் புத்தகத்துல என்ன இருந்ததுன்னு அடியேன் ஒப்பிக்கிறேன்’னார். அதெப்படி, ரெண்டு பேரும் சேர்ந்து வந்துதானே புஸ்தகத்தையே போய் எடுத்துண்டு வந்தோம்? அதுக்குள்ள உமக்கு என்னமா தெரிஞ்சது? தெரிஞ்சிருந்ததுன்னா அங்கேயே சொல்லியிருக்கமாட்டீரோ? இவ்வளவுதூரம் வந்தமே’ன்னா, ‘இல்லே, இல்லே, சுவாமி தினப்படி இரவு பன்னிரெண்டு மணிக்கு நித்திரைக்கு எழுந்தருள்ரதோல்லையோ, விடியக்கார்த்தால நாலு மணிக்கு எழுந்திருமோல்லையோ, திருவடிய வருடி, அப்புறம் அவரை நித்திரைக்கு அனுப்பிச்சுட்டு, அந்தப் பன்னெண்டிலேர்ந்து நாலு மணி வரைக்கும் இருக்கற அவகாசத்துக்குள்ள இந்த புஸ்தகத்த புரட்டினேன், அதுல ஏதோ ஞாபகம் இருக்கு, விண்ணப்பிக்கட்டுமா’ன்னு ஆழ்வான் கேட்டார். ‘சரி, சொல்லும்’ன்னு இராமானுசர் சொன்னார். முதல் பக்கத்துல ‘அ’காரத்துலருந்து ஆரம்பித்து, கடைசிப் பக்கத்துல முடிஞ்சிருக்கற எழுத்து வரைக்கும் தழைகீழ் ஒப்பித்தார், ஒண்ணுகூட மிச்சமில்லாமல். சுவாமி ரொம்ப ஆச்சரியப்பட்டு, கூரத்தாழ்வானைக் கட்டித் தழுவிக்கொண்டு, ‘உம்மைப் பெற்றோமோ, நாம் பாக்கியம் பண்ணினோம்’, இல்லேன்னா இது யாருக்குத் தெரிஞ்சிருக்கப்போறது? ராத்திரி கிடைச்ச நாலு மணி நேரத்துக்குள்ள அந்த க்ரந்தம் முழுக்க மனசில போகணும்னால், அது போனது ஆச்சர்யமில்லே, அது போனது என் வைபவத்தாலே அல்ல, இராமானுசர் திருவடி சம்பந்தத்தாலேன்னு அவர் உண்மையா நினைச்சிண்டிருந்தார் பாருங்கோ, அதுதான் கூரத்தாழ்வானுக்கு இருந்த பெருமை.

    மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
    குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்
    பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா
    வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்த அன்றே.

    -ன்னு அமுதனார் தெரிவிக்கிறார். அதனாலே, கூரத்தாழ்வான், அவர்தான். அர்த்தத்தை எல்லாம் தெரிவித்தார். திரும்பி வந்துட்டுத்தான், ஸ்ரீபாஷ்ய க்ரந்தம் நிர்மாணிக்கப்பட்டது. சுவாமி விசயங்களைச் சொல்லிண்டே இருப்பர், ஆழ்வான்தான் அதை எழுதுவர். இந்த எடத்துல ஆச்சரியமான செய்தி ஒண்ண நாம தெரிஞ்சுக்கணும். ஏன், இவரே எழுத மாட்டாரான்னா, இராமானுசர் எழுதினது கிடையாது. அவர் விசயங்களைச் சொல்லத்தான் சொல்லுவர். ஆனா அதற்கு வேண்டிய சொற்களைப் போட்டு எழுதியது கூரத்தாழ்வான்தான். அது எழுதினார்ங்கறதை எப்படி தெரிஞ்சுக்கலாம்ன்னா, போதாயன வ்ருத்திக் க்ரந்தத்தில் இருக்க வேண்டிய மேற்கோள் எல்லாம் அப்படியே இருக்கும். அப்படியே இருக்கும்ன்னா அது இராமனுசருக்குத் தெரியாது. அது கூரத்தாழ்வானுக்குத்தான் தெரியும். தெரியாதுன்னு நான் ஏன் சொல்றேன்னா, ஆழ்வான் சொல்லி இராமானுசருக்கு கத்துண்டு தெரியும், அது தெரியாமலல்ல. ஆனா அத நேர படிச்சுப் பார்த்து ஞாபகம் வச்சுண்டு இருக்கறது கூரத்தாழ்வானோல்லையோ, அதனால அவர வைத்தேதான் அத்த அவர் எழுதி இருப்பர். அதனாலே ஆழ்வானேதான் மேற்கொண்டு ஸ்ரீபாஷ்ய க்ரந்தத்தையும் எழுதினார்னு சொல்லுவர்கள். ஸ்ரீபாஷ்யம்ங்கிறது பிறந்தது எதற்கு? அதத்தான் கீழ பார்த்தோம். பிரம்ம சூத்திரத்தினோட அர்த்தத்தை தப்புத்தப்பா, அவரவர் மதி விகற்பாலே எங்கேயோ கொண்டு போய் போட, அத அத்தனையும் சரிப்படுத்தி, இதோ இதுதான் ப்ரம்ம சூத்திரத்தின் அர்த்தம், என்று ஸ்ரீபாஷ்யத்தாலே தெரிவித்தார்.

    இதிலே இருக்கக்கூடியது 545 சூத்திரம். ப்ரம்ம சூத்திரத்திலே, 545 சூத்திரங்கள், 156 அதிகரணங்கள், 16 பாதங்கள், 4 அத்தியாயங்கள். முதல் அத்தியாயம் (சமந்வயா அத்தியாயம்), இரண்டாவது அத்தியாயம் (அவிரோதா அத்தியாயம்) இது ரெண்டும் ப்ரம்மமே ஜகத்காரணம்ன்னு சொல்லும் (உ-ம், இராமன் வில்லாளியே, இராமனே வில்லாளி). அடுத்து மூணாவது அத்தியாயம் (ஸாதனா அத்தியாயம்) எது பகவானை அடைவதற்கு உபாயம்ன்னு சொல்லும்நாலாவது அத்தியாயம் (பலா அத்தியாயம்) எங்கு அடையப் போகிறோம்ன்னு சொல்லும். அதனாலே இந்த நாலு அத்தியாயங்கள்தான் ப்ரம்ம சூத்திரம். ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நாலு நாலு பாதங்கள் இருக்கும். ஓரோரு பாதத்துக்கும் பல அதிகரணங்கள் இருக்கும். அது மொத்தம் 156 அதிகரணம். இத தெரிஞ்சுக்கரதுக்குத்தான் ‘அதிகரண சாராவளி’ அப்படின்னு வேதாந்த தேசிகன் ஒரு க்ரந்தம் பண்ணியிருக்கார். ஓரோரு அதிகரணத்துக்கும் எது சாரம், இதுதான் சாரம் அப்படின்னு அந்த க்ரந்தத்தைப் பார்த்தா நாம தெரிஞ்சுக்கலாம். அதேபோல இந்த சூத்திரங்களைப் பத்தி கணக்குச் சொல்லியிருக்கார். 545 சூத்திரம்ங்கறது விசிஷ்டாத்வைதத்தின்படி, அத்வைதத்தின்படி 555 சூத்திரம். அது 545 அல்ல, அவர் 555 எழுதினார். இத தேசிகனே எழுதினார்.  செளத்ரீ சங்க்யா சுபாஷீஹி, இந்த சூத்திர கணக்கு வேணும்ன்னா, செளத்ரீ சங்க்யா – சூத்திர சங்க்கை. சுபாஷீஹின்னா, சு பா ஷா, சு-ங்க்கறது அஞ்சு, ய ர ல வ ச, அஞ்சாவது எழுத்தால்லையோ? ப, ப, ப, பா, நாலோல்லையோ, மறுபடியும் ச, அஞ்சாவது எழுத்து. 545. அதனால செளத்ரீ சங்க்யா சுபாஷீஹின்னு சொல்லுவர்கள்.

    இப்படி 156 அதிகரணங்கள், 545 சூத்திரம் இருக்கற க்ரந்தத்துக்கு ரொம்ப ஆச்சர்யமான பாஷ்யம் சாதித்தார். அந்த பாஷ்யம் எல்லாரும்தான் எழுதியிருப்பாளே, இவர் மட்டும்தான் ப்ரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினாரான்னா, இராமானுசருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. என்னவெனில், அவர் சமஸ்கிருத வேதாந்தத்த மட்டும் படிச்சுட்டு இத்த எழுதலை. பின்ன எத மற்றொரு கைவிளக்காகக் கொண்டார்ன்னால், அழகிய மணவாளப் பெருமாள்ங்கிற ஆச்சார்யன், ஓரிடத்தில ஆச்சர்யாமாய் சாதிக்கிறார். ‘பாஷ்யகாரர் இதுகொண்டு சூத்திர வாக்கியங்களை ஒருங்கவிடுவர்’. பாஷ்யகாரர்ன்னா இராமனுசர். இதுகொண்டுன்னா நாலாயிரம் திவ்யப் பிரபந்தங்களைக் கொண்டு, சூத்திர வாக்கியங்களை ஒருங்க விடுவர். இந்த சூத்திர வாக்கியங்களுக்கு அர்த்தம் சொல்லச்சே, ஒரு பக்கம் ப்ரம்ம சூத்திரத்தையும், வேதாந்தத்தையும் வச்சுப்பர், மற்றொரு பக்கம் ஆழ்வார்களுடைய தமிழ்ப் பாசுரங்களை வச்சுப்பர். இந்த ரெண்டையும் கோர்த்துக் கோர்த்துத்தான் இராமானுசர் அர்த்தமே சொல்லுவர். இந்த லாபம் மத்த ரெண்டு பேருக்கு கிடையாது. அப்ப சங்கரர் வியாக்யானம் பண்ணியிருக்கார்ன்னா, ஆழ்வார் பாசுரம் கிடைக்குமா? மத்வர் வியாக்யானம் பண்ணியிருக்கார்ன்னா, ஆழ்வார் பாசுரம் கிடைக்குமா? அந்த ரெண்டு சம்ப்ரதாயத்திலயுமே வேற ப்ரபந்தங்களே கிடையாது. சமஸ்கிருத வேதம் மட்டும்தான் உண்டு. ஆனா இந்த சம்பிரதாயத்திலதான் திராவிட வேதமும் இருந்தது. தேசிகன் தெரிவித்தது, ”தெளியாத மறை நிலங்கள் தெளிகின்னோமே’, சாஸ்திரத்த வாசிச்சு புரியாத இடத்திலெல்லாம், தமிழ் வேதத்த படிச்சுத்தான் அர்த்தமே தெரிஞ்சுண்டேன்ங்கிறார். அதனாலே இவ்விரண்டையும் இரண்டு கைகளிலே கொண்டு, ஒன்றாகத் திரித்து இராமானுசர் எழுதினார். இதையே அமுதனாரும் தெரிவித்தார்.

    வருத்தும் புறவிருள் மாற்ற எம்பொய்கைப் பிரான் மறையின்
    குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
    திரித்தன்றெரித்த திருவிளக்கைத் தன் திருவுளத்தே
    இருத்தும் பரமன் இராமனுசன் என் இறையவனே.

    - ஒரு திரி போட்டு ஏத்தினா சுமாரா முணுமுணுன்னு எரியும் விளக்கு.  அத ரெண்டு பிரியா போட்டு ஒரு சுத்தினோம்னா நன்னா எரியுமோல்லையோ? அதப்போலத்தான், இந்த பக்கம் சம்ஸ்கிருத வேதாந்தம், இந்தப் பக்கம் திராவிட வேதாந்தம், இரண்டையும் சேர்த்து உயர்ந்த திரியாகப் போட்டுத்தான் ஸ்ரீபாஷ்யம் என்னும் விளக்கை இராமனுசரே சாதித்தார். அதில் இல்லாத அர்த்தங்களே இல்லை. சகலார்த்தங்களையும் நமக்கு கொடுத்துப் போனார். ஒரு பக்கத்தில் இராமானுசருக்குப் பெருமை என்னன்னு பார்த்தால், ப்ரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் அனுக்கிரகித்து, வைதிக முறை மாறாமல் சரிவர ஸ்தாபித்துக் கொடுத்தார். வேதமார்க்கப் பிரதிஷ்டாபனம் பண்ணினார். ஸ்ரீமத் வேதமார்க்கப் பிரதிஷ்டாபனாச்சார்ய, இந்த ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திலே குழந்தை பிறந்தாலே இதப் போட்டுருவா. ஸ்ரீ.உ.வே, அப்படின்னு போட்டுக்கறமோல்லையோ எல்லாரும். ஸ்ரீமத் வேதமார்க்கப் பிரதிஷ்டாபனாச்சார்ய, உபய வேதாந்தச்சார்யராய், சாந்த சமதமாதி அனந்த கல்யாண குண பரிபூர்ணராய், அஸ்மத் ப்ராப்யப் ப்ராபக பூதராய் எழுந்தருளியிருக்கும் சுவாமியினுடைய தேனே மலரும் திருவடித் தாமரைகளுக்கு அடியே தாளும் தடக்கையும் கூப்பி தண்டனிட்டுச் செய்யும் விண்ணப்பம், உபய குசலோபரி, பத்திரிக்கையில பாதி முடிஞ்சு போயிரும். இத மூச்சு விட்டு எழுதறதுக்குள்ளே, அப்புறம் விஷயம் என்ன இருக்கும்ன்னா, நாளன்னிக்கு வரேன், அப்படின்னு இருக்கும். இத்தன நாழி ஏதோ ரொம்ப எழுதியிருந்தாரே, கடைசில என்ன செய்தி அனுப்பிச்சுருக்கார்ன்னு பார்த்தா, செய்தி ஒரே வரில முடிஞ்சு போயிரும், ஆனா இந்த முன்னாடி இருக்கறத விட்டுடவே கூடாது. கோபம் வந்துரும் அந்த பக்கம் போறவருக்கு. அதெப்படி, என்னுடைய விருதுகள்லே ஒண்ண நீ குறைச்சுருப்பே? அப்படின்னு சொல்லிடுவர்களாம். இதுல முதல்ல போடுறோமோல்லையோ, ‘ஸ்ரீமத் வேதமார்க்கப் பிரதிஷ்டாபனாச்சார்ய, உபய வேதாந்தச்சார்ய’ன்னு போடறோமோல்லையோ, இத நம்ம போட்டுக்கறோம்னா அது இராமானுசர் இட்ட பிச்சை. ஏன்னா இந்த ஸ்ரீமத் வேத மார்க்கத்தை நன்றாக ஸ்தாபித்து, உபய வேதந்தத்தையும் மிக உயர்த்தியாகக் கொண்டுவந்து இன்னிக்கும் நாம் அவற்றை கேட்டும், வாசித்தும், பூசித்தும் களிக்கும்படிக்கு சுவாமிதான் நமக்குன்னு ஆக்கிக் கொடுத்தார். அப்ப ஒரு பக்கம் ஸ்ரீபாஷ்யம் நிர்மாணம் பண்ணினார்ங்கறது அவர் பெருமை.

    எத்தனையோ பேர் வேதாந்திகளா இருந்திருக்கலாம். ஸ்வாமி வேதாந்தியா, அவ்வளவுதானா? வேதாந்தின்னாலே, அவருக்கு தான் உண்டு, தாம் ப்ரம்மம் உண்டு, இதந்தான் தெரியும். இராமானுசருக்கும் அவ்வளவுதான் தெரியுமோ? தனக்கும், தன் ப்ரம்மமும்தானோன்னா, இல்லையே. அந்தப் ப்ரம்மத்த சரிவர உணர்ந்தவரோல்லையோ, அதனால மொத்த ஆத்மாக்களும் ப்ரம்மத்தின் சொத்து என்று தெரிந்து கொண்டு, இவ்வாத்மாக்கள் அனைவரும் உஜ்ஜீவனம் அடைய வேண்டும், அவன் யாரும் பிறந்திருக்கட்டும், எங்கும் பிறந்திருக்கட்டும், பகவானுக்கு உரியவன், அப்படிங்கறதை நன்னா ஸ்தாபித்துக் கொண்டு, அதுக்கு எப்பெப்படியெல்லாம் கைங்கர்யம் பண்ணி வைக்கணுமோ, அத்தனையும் செய்தார். அவர் அவதரித்ததே ஆதிசேஷனுடைய அம்சமாக. பஞ்சாயுதங்களே வந்து பிறந்தார்கள்.

    அடையார் கமலத்தலர்மகள் கேள்வன் கை ஆழி என்னும்
    படையொடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
    புடை ஆர் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
    இடையே இராமானுச முனி ஆயின இந்நிலத்தே
    .

    -ன்னு இராமானுச நூத்தந்தாதில தெரிவிக்கிறார். அப்ப பஞ்சாயுதங்களும் சேர்த்துப் பிறந்தன. ஆதிசேசனே வந்து பிறந்தார். கைங்கர்யம்ன்னாலே ஆதிசேஷனோல்லையோ? சென்னால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம், நின்னால் மரவுடியாம், எங்கே தமிழ்ப் பாசுரத்தின் படியோ, நிவாஸ, ஆஸ, பாதுக, அம்ஸுக, உபதான, வருஷ, ஆத வாரதானவி, சரீர பேதைஹீதவ சேஷதாங்கதைஹீ –ன்னு ஆளவந்தார் சொன்னதானபடிக்கு எல்லா கைங்கர்யத்தையும் ஆதிசேஷன் பண்றார். அவரே இராமானுசர்ன்னா, பண்ணாத கைங்கர்யம் இருந்திருக்கப்போறதா? ஒரு கைங்கர்யம் வேதாந்தத்திற்கு வியாக்யானம் பண்ணது. மத்தோர் கைங்கர்யம் உலகோர் அனைவரும் பகவானுடைய திருவடிகளை அடைய வேண்டும், அப்படிங்கறதுக்காக தீராத காதலோடே அனைவருக்கும் நல்லத்தை எடுத்துச் சொன்னது. போகாத திவ்ய தேசமில்லே. வடக்குக் கோடியிலேருந்து, தெற்குக் கோடி வரைக்கும் அத்தனை இடத்துக்கும் போயிருக்கார்.

    ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
    ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
    ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
    சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

    ஓரோர் இடத்துலயும் போய் ஆனந்தமா கைங்கர்யம் பண்றாராம். திருவரங்கத்திலயாகட்டும், திருவேங்கடத்திலயாகட்டும், காஞ்சீபுரத்திலயாகட்டும், திருநாரயணபுரத்திலயாகட்டும், சிம்மாசலத்திலயாகட்டும், ஸ்ரீகூர்மமாகட்டும், சாளக்கிராமமாகட்டும், பதரீயாகட்டும், நைமிசாரமாகட்டும், புஷ்கரமாகட்டும், துவாரகையாகட்டும், பிருந்தாவனமாகட்டும், எங்கு சென்றாலும் ஸ்வாமி புகழ் பாடுகிறார்கள். எங்கும் போய் ஆங்காங்காங்கு ஓரோரு கைங்கர்யத்தை நிகழ்த்தினார். அது அவருக்கு இன்னொரு தனிப்பெருமை. உலகோர் வாழ வேண்டும்ங்கிறதுக்கு உழைத்தார், ஸ்ரீபாஷ்யத்தை ஸ்தாபித்துக் கொடுத்தார். திவ்ய தேசங்களுக்கு கைங்கர்யம் பண்ணினார். இப்படி ஓரோரு பெருமை இராமானுசருக்கு இருக்கு. இதெல்லாத்தவிட என்ன அவருக்கு பெருமைன்னா, அவர் சொன்னா மோட்சம் போலாம்.

    இதுதான் பெரிய பெருமை. மற்ற பெருமைகள் இருக்கொ, இல்லையோ. ஸ்வாமி பார்த்து வைகுண்டத்துக்கு போன்னுட்டால், நிக்கவே வேண்டாம். அடுத்தது அங்க போய் நின்னுட வேண்டியதுதான். அப்படிக்கூட நடக்குமான்னா, நடந்ததே. இப்ப சில சில திவ்ய தேசத்து எம்பெருமான்கள் இராமானுசரோட பெருமை எப்படி வெளியிட்டார்கள்ன்னு சொல்றேன். கதை சொல்லுவதற்காக இராமானுச வைபவம் பேசப்படுவதில்லை. உண்மையிலும் உண்மை.

    ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
    நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

    கூரத்தாழ்வான் ஒரு தடவை காவிரிக்கரையில உக்காந்திண்டிருந்தார். சுத்தி சிஷ்யர்களெல்லாம் இருந்தாளாம். அப்ப கேக்கச்சே, ’இன்னிக்கு லோகத்துக்கே ஆச்சார்யன் யாரா இருக்கலாம்?’, அப்படின்னு ஒரு கேள்வி கேட்டா, ஆழ்வானுக்கு மனசு பொறுக்கலே. இராமனுசர் வாழ்ற காலத்துல, யாரா இருக்கலாம்ன்னு ஒருத்தன் கேக்கற அளவுக்குப் போயிடுத்தா உலகம்ன்னு நினைச்சிண்டு, காவிரில போய் கழுத்தளவு ஜலத்துல இறங்கினார். இறங்கி கையத் தூக்கி சத்யம் பண்ணாராம். ‘ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் எதிராஜோ ஜகத்குருஹூ’, இதோ சத்யமிட்டுச் சொல்றேன், எதிராஜர்தான் ஜகத்கு. ‘சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா’, அவர் ஒருத்தர்தான் இந்த சம்சாரிகளை இந்த சேரும் சகதியிலிருந்து வெளியே கொண்டுவர முடியும். இதில எந்த சந்தேகமுமில்லை.’ என்று பிரதிக்ஞையிட்டுச் சொல்லியிருக்கிறார். அதனாலே ஸ்வாமி பார்த்துத்தான் மோட்சத்தைக் குடுக்கிறார். ’விஷ்ணுலோக மணி மண்டப மார்க்கதாயி’ன்னு பேரே குடுத்தார்கள். விஷ்ணுலோகமான மணி மண்டபத்துக்குப் போக வழி காட்டறார். இந்த ஒரு பெருமையை, உரிமையை யார் கொடுத்தார்களென்னால், திருவரங்கநாதந்தான் கொடுத்தார். இப்போ சில கதைகள் மட்டும் சொல்றேன். ஸ்ரீரங்கத்துப் பெருமாள் என்ன பண்ணார், திருவேங்கடத்துப் பெருமாள் என்ன பண்ணார், காஞ்சீபுரத்துப் பெருமாள் என்ன பண்ணார், திருநாராயணபுரத்துப் பெருமாள் என்ன பண்ணார், திருமாலிருஞ்சோலைமலை அழகர் என்ன பண்ணார், திருகுறுங்குடி பெருமாள் என்ன பண்ணார். ஒரு ஆறு கதை சொல்றேன்.

    (தொடரும்)

    -- நன்றி ("இராமனுஜ வைபவம்” உபந்நியாசம்@SFO - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)

    ஸ்ரீஇராமானுஜ வைபவம் – பாகம் 3

     

    முந்தைய பாகம், பாகம் 1, பாகம் 2

    அவர் பிறந்தது ஸ்ரீபெரும்புதூர். பிறந்தது ஸ்ரீபெரும்புதூர்ங்கிறதோட சரி. இன்னைக்கு ஸ்வாமி அங்கதான் எழுந்தருளியிருக்கார், அதுல ஒரு குறைவும் இல்லே இப்போ. ஆனா, அவர் என்ன, எங்க கைங்கர்யம் பண்ணியிருப்பர்ன்னு பார்த்தா, எங்க பண்ணலேன்னு கேட்க வேண்டியதுதான். அத்தனை திவ்ய தேசத்துக்குச் சென்று நம் சம்ப்ரதாயத்தை இரட்சித்துக் கொடுத்தார். இராமானுசர் தனியா சம்ப்ரதாயம் தோற்றுவித்தாரா, என்ன பண்ணார்னா, அவர் ஒண்ணும் புதுசா சம்ப்ரதாயம் ஏற்படுத்தறதுக்கெல்லாம் பிறந்தவரே அல்லர். இப்பதானே பார்த்தோம், எங்கங்கேயோ மூலைல கொண்டு போய் ப்ரம்ம சூத்திரத்தோட அர்த்தத்த கொண்டு போய் போட்டுட்டா, அந்த அர்த்தத்தை திரும்பக் கொண்டு வந்து வைக்கறதுக்குத்தான் இவர் பாடுபட்டாரே தவிர, புதுசா எழுதறதுக்கே அல்ல. அதுவும் அவராக அல்ல. அவருடைய ஆச்சார்யன் பெரிய நம்பிகள். பெரிய நம்பிகளுக்கும் ஆச்சார்யன் ஆளவந்தார். அவருக்கு யாமுனாச்சார்யர்ன்னு திருநாமம். நாதமுனிகளுக்கு ‘ரங்கநாதமுனி’ன்னு பேர். முழுப்பேர் அது. நாம ’நாதமுனிகள், நாதமுனிகள்’ன்னு சொல்லிடறோம். பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமி, திருவரங்கத்தமுதனாருடைய இராமானுஜ நூற்றந்தாதிக்கு வ்யாக்யானம் பண்ணியிருக்கார். அந்த இடத்துல, ‘சீலங்கொள் நாதமுனிகள் நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்’னு வருதோல்லையோ, அந்த இடத்துலே, ‘இவருக்கு ரங்கநாத முனிகள்னு பேரு, நாம சத்யபாமவைப் பாமா, பாமானு கூப்பிடறாப்போலே இவரை நாதமுனிகள்னு சொல்றோம்னு’ எழுதியிருக்கார். ஆனா சாதாரணமா இவா வேடிக்கையெல்லாம் பண்ணவே மாட்டா, வ்யாக்யானத்திலே எங்கயாவது ஒரு ரெண்டு எடம் வேணா சிரிக்கிறாப்பலே வருமே தவிர, அவர்களுக்கு மற்றபடிக்கு விசயத்த நேரச் சொல்றதுக்குத்தான் தெரியும். பல இடங்கள்லே பார்த்தீங்கன்னா, உபந்நியாசம் ஒரே சிரிப்பு அலையா இருக்கும். எதோ தெரிஞ்சத எல்லாம் சொல்லிண்டிருந்தோம்னா, நமக்கு இருக்கற நாழிக்குள்ள எந்த வ்யாக்யானத்த சொல்லிடுவமோ, விட்டுவமோன்னு பயமா இருக்கு. அதுக்கு நடுவுலே இந்த சிரிப்பெல்லாம் சொல்லிண்டிருக்கறதுக்கு நாழி இருக்கமாட்டேங்கறது. அதனாலே நாதமுனிகள்னு சொல்றது ரங்கநாதமுனிகள். ரங்கநாதமுனிகளோட திருக்குமாரருக்கு ‘ஈஸ்வரமுனிகள்’னு பேர். ஈஸ்வரமுனிகளோட திருக்குமாரர்தான், யாமுனாச்சார்யர். அவருக்கு ஏன் ‘யாமுனாச்சார்யர்’ன்னு பேர் வந்ததுன்னா, நாதமுனிகள் வெகுநாட்கள் வடக்கே யமுனை ஆற்றங்கரையில் பெருமாளுக்கு கைங்கர்யம் பண்ணிண்டிருந்துருக்கார். அதுக்குப் பிற்பாடுதான் ஆளவந்தார் திருவவதாரம் பண்ணியிருக்கார். நாதமுனிகள் அங்க கைங்கர்யம் பண்ணிண்டிருந்த நினைவாகத்தான், இந்த குழந்தைக்கு, பேரனோல்லையோ, அவரோட பேரன்கறதாலே ‘யாமுனாச்சார்யர்’ அப்படின்னு இவருக்குப் பட்டம் சூட்டப்பட்டது.

    நாதமுனிகளும் சரி, யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் சரி, இந்த இருவரையும் பெற்றுக் கொடுத்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. காட்டுமன்னார் கோயிலென்னும், வீரநாராயணபுரம் என்னும், இன்னைக்கும் வைபவத்தோட விளங்குகிற கோயில்.

    லக்ஷ்மிநாத சமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்
    அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

    - இது கூரத்தாழ்வோனோடே அற்புத ஸ்லோகம். லக்ஷ்மிநாதனைத் தொடக்கமாகக் கொண்டு, நாதயாமுனர்களை நடுவாகக் கொண்டிருக்கிற சம்ப்ரதாயம். நாதமுனிகள், ஆளவந்தார், ரெண்டு பேரையுமே காட்டுமன்னார் கோவில்தான் கொடுத்தது. ராஜ மன்னார் கோவில் கேள்விப்பட்டிருப்பேள், இது காட்டு மன்னார் கோவில். சிதம்பரத்துக்கு பக்கத்திலே இருக்கறது காட்டு மன்னார். ’இவரை, காட்டுக்கு மன்னார் = காட்டு மன்னார்’ன்னுவா, அதோட மட்டுமல்ல, ‘காட்டும் மன்னார்’. அடியேன் தகப்பனார் சொல்லுவர், காட்டு மன்னார்ன்னு மட்டும் வச்சுக்காதே, காட்டும் மன்னார், எதை அப்படின்னா, ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தை காட்டும் அன்னார். அவர்தான் காட்டிக் கொடுத்தாராம். ஏன்னா, இந்த இரண்டு பேரை மட்டும் அந்த ஊர் பெற்றுக் கொடுக்காமே போயிருந்ததுன்னா, இன்னைக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்துல என்னன்னே தெரிஞ்சுக்காமே போயிருப்போமோல்லையோ? அதனாலா ‘காட்டும் மன்னார்’ன்னும் கொள்ளலாம்னு சொல்லுவர்கள். அப்படி ஆளவந்தார் எழுந்தருளியிருந்தார். அவருடைய சிஷ்யருக்கு பெரியநம்பிகள்ன்னு திருநாமம். அவருடைய நேர் சிஷ்யர். ஆளவந்தாருக்கு நெறய சிஷ்யர்கள் உண்டு. ‘பெரிய நம்பிகள், திருக்கோட்டியூர் நம்பிகள், பெரிய திருமலை நம்பிகள், திருமாலையாண்டான், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர், திருக்கச்சி நம்பிகள்’, இன்னும் எத்தனையோ பேர். அடியேன் பிரதானர்களை மட்டும் தெரிவித்தேன். ஆளவந்தாருக்கு இவர் எல்லாரும் சிஷ்யர்களா இருந்திருக்கா. அதில் முக்கிய சிஷ்யர் பெரிய நம்பிகள்.

    இந்த பெரிய நம்பிகளை ஓர் முறை ஆளவந்தார், ‘நீ நேராக காஞ்சீபுரத்துக்குப் போம். ஸ்ரீபெரும்புதூரிலே அவதரித்த ராமானுசர், காஞ்சியிலே இருப்பதாகத்தான் கேள்விப்பட்டோம்.’ அப்படின்னு ஊர் முழுக்கச் சொல்லச் சொல்ல, தெரிஞ்சுணுட்டார் ஆளவந்தார், பெரிய நம்பிகளை அனுப்பனும், அனுப்பி கூட்டினுவர வைக்கணும். இதுக்கு முன்னாடி நடந்த ஒரு செயல் என்னன்னு சொல்றேன்.

    ஆளவந்தாரே ஒரு தடவை காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளுகிறார். யாமுனாச்சர்யர் ஒருதடவை காஞ்சீபுரத்துக்கு வந்து, அப்படியே திவ்யதேசத்தை ப்ரதக்ஷ்சணமா வரார். காஞ்சி தேவப் பெருமாளையும் சேவை பண்ணினார். மங்களாசாசனம் பண்ணினார்.

    ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
    நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
    ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
    சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே


    - எல்லாருக்கும் ஒரே கடவுளாய், தேவாதி ராஜனாய், ’அகமேவ பரந்தத்வம்’னு வெளியிட்ட தேவப்பெருமாள், ஹஸ்திகிரீசனாய், வேழ மலைக்கு மேலே இன்றும் நின்று சேவை சாதிக்கிறான். அவனப்போய் ஆளவந்தார் திருவடி தொழுதார், ப்ரதட்சணமா வந்துண்டிருக்கார். அந்த இடத்துல ‘கரிய மாணிக்கப் பெருமாள்’ சன்னிதின்னு இருக்கு. இது ஒரு பக்கம் இருக்கட்டும். மற்றொரு பக்கத்திலே ஒரு குட்டிக்கதையைச் சொல்லிட்டு அப்புறம் இதுக்கு வரேன்.

    இராமானுசர் ஸ்ரீபெதும்புதூரிலே அவதாரித்தாரோல்லையோ, அவருக்கும் மெதுவே வயது வந்தது. வந்த பிற்பாடு, ‘கேசவ சோமயாச்சியார்’ அப்படின்னு அவருடைய திருத்தகப்பனாருக்கு பேர். ஆசூரி வம்சத்தவர்கள். ஆசூரி கேசவ சோமயாச்சியார் அப்படின்னு அவருடைய திருத்தகப்பனாருக்குப் பேர். அவர் கொண்டு போய், ‘யாதவப் ப்ரகாசர்’னு ஒரு அத்வைத சன்னியாசி, அவரிடத்திலே முதல்ல சாமான்ய சாஸ்திரங்கள் கற்கட்டும், அப்படின்னு விட்டார். ஏன், இவா என்னத்துக்கு அத்வைத சன்னியாசியினிடத்தில இராமானுசர போய் படிக்க விடணும்? ஆகையால் ஒருவேளை இராமானுசர் முதல்ல அப்படி இருந்தாரோ, அப்படிங்கற ஒரு கேள்வி வரும். அது பலபேரு மனசிலயும் இன்னிக்கும் அந்தக் கேள்வி இருக்கும். அப்புறம் மாறிட்டார் போலருக்கு இராமானுசர், ஆனா அவர் பிறக்கும் போது அத்வைதியாகத்தான் இருந்திருக்கணும்ன்னால், அப்படி அல்ல. பின்ன என்னத்துக்காக அங்க கொண்டுபோய் விட்டாள்ன்னா, நம்முடைய சித்தாந்தத்தப்பத்தி எடுத்துரைக்கணும்ன்னா, முதல்ல உங்க வாதம் என்னன்னு தெரிஞ்சுண்டாத்தானே, என் வாதம் என்னன்னு சொல்றதுக்கு? இதுக்குத்தான் பூர்வ பக்‌ஷ க்ரந்தத்தை வாசிக்கறதுன்னு அர்த்தம். இராமானுசரோட க்ரந்தத்தை எங்க படிச்சுப் பார்த்தேள்னாலும் ஒரு நல்ல பெருமை என்ன தெரியுமா கிடைக்கும்? அத்வைதிகளுக்கு அத்வைதம் தெரிஞ்சதவிட நாம தெரிஞ்சுண்டுடலாம். இராமானுஜர் க்ரந்தத்த ஒழுங்கா ஒருதடவை வாசிச்சு முடிச்சோம்னா, சங்கரரோட க்ரந்தத்தைப் படிச்சு அத்வைதம் தெரிஞ்சுக்கறதவிட, இன்னும் தெளிவாவே இராமனுஜரோட க்ரந்தத்திலிருந்து தெரிஞ்சுக்கலாம். ஏதானும் ஒன்னு ரெண்டு அவரே விட்டிருந்தாக்கூட, இதுவும் உன் வாதமா இருக்கணுமேன்னு இவரே சொல்லிடுவர். அதுக்கு அப்புறம்தான் அது தப்புன்னே சொல்லுவர். அவர் ஏதானும் ஒருவேளை மறந்தாப்பல இருந்தாக்கூட, ரொம்பத் தெளிவா சொல்லிடுவர். சங்கரருடைய க்ரந்தத்தைப் படிக்கறச்சே, ஏற்கனவே அத்வைதம் ரொம்ப குழம்பும், ஏன்னா, எதுவும் இல்லே இல்லேன்னு சொல்லிண்டிருக்கறதுனாலே. அதுவும் அவர் ரொம்ப ஒசத்தியான நடையிலே எழுதிடுவர். அதனால படிக்கிறவனுக்கு அதுவும் புரியாது போயிடும். சுவாமி பார்த்து, ’நான் இப்படியே இதுக்கு பதில் சொல்லிட்டுப் போயிடுவேன், ஆனா நாளைக்கு ரெண்டுமே புரியாத பின்னாடி வரவா கஷ்டப்படுவா. அதனால ஒம்ம மதம் என்னன்னு விளக்கமா, சுலபமாச் சொல்றேன்.’ அப்படின்னு மூணு பக்கம் அத்வைதத்த எழுதுவர், எழுதிட்டு ஒரே பக்கத்துல விஷிஷ்டாத்வைதம் இதுதான்னு பதில் சொல்லி முடிச்சுடுவர். கடைசியிலே, இப்போ ஒரு இரண்டாயிரம் பக்கம் ஸ்ரீபாஷ்யம்ன்னு வச்சுக்கங்கோ, அதிலே புறத்தியாரோட பக்ஷம் சொன்னது, ஆயிரம், ஆயிரத்து இருநூறு பக்கம் இருக்கும். ஸ்வமதத்தை இவர் எழுதினது என்னூறு பக்கம்தான் இருக்கும். ஏன்னு கேட்டால், என் மதம் உண்மை, உண்மையைச் சொல்றதுக்கு ஒரு வரிதான் வேணும். இதுக்கு பத்து வரியும் தேவையில்லை, இருவது வரியும் தேவையில்லை. எது இல்லையோ அத விளக்கறதுக்குத்தான் நெறய வரிகள் தேவைப்படும். அதனாலே இவர் கொண்டுபோய் யாதவப்பிரகாசர்கிட்ட காலக்ஷேபம் பண்றார்ன்னா, பூர்வ பக்ஷம் தெரிஞ்சுக்கணும்ங்கிறதுக்காக. அவருடைய வாதம் என்னன்னு தெரிஞ்சுக்காம, நம்ம வாதத்தை வைக்கவே கூடாதோல்லையோ? அதனாலதான் அவரிடத்திலே போய் காலக்ஷேபம் பண்றதுக்கு ஆரம்பித்தார்.

    அங்கு படிச்சிண்டிருந்தார். யாதவப் ப்ரகாசர் ஒருநாள் பெருமாளெல்லாம் சேவிச்சுட்டு, இந்த கரிய மாணிக்கப் பெருமாள் சன்னிதிக்குப் பக்கத்திலே இருக்கார். அப்ப எல்லாரும் கோஷ்டியா வந்துண்டிருக்கா. அதே சமயத்தில் ஆளவந்தார், தன்னுடைய சிஷ்யர்கள் புடைசூழ, திருக்கச்சி நம்பிகள் ஒவ்வொரு இடமா கூட்டிண்டு போக வந்துண்டேயிருக்கார். அப்படித் தள்ளி இராமானுசர், அவருடைய கோஷ்டி ஆளெல்லாம் போயிண்டிருக்கா, இராமனுசருக்கு பிறந்தபோது அது இயற்பெயர் அல்ல. இளையாழ்வார்ன்னு அவருக்குத் திருநாமம். இந்த கதை நடக்கறச்சே அவர் பேர், இளையாழ்வார். ஆளவந்தார் பிரதட்சிணமா வர்றார், பக்கத்திலே திருக்கச்சி நம்பிகள் ஒவ்வொரு சன்னிதியாக அழைச்சுண்டு போயிண்டிருக்கார். திருக்கச்சி நம்பிகள் மாசி மாசம் மிருகசீரிச நட்சத்திரத்திலே, பூவிருந்தமல்லியிலே திருவவதாரம் பண்ணி நித்யப்படி தேவப் பெருமாளுக்கு திருவாலவட்டம் கைகர்யம் பண்ணிண்டிருந்தவர். விசிற கைங்கர்யத்தப் பண்ணா, தேவப் பெருமாள் வாயத்திறந்து இவர்கிட்ட பேசுவராம். அர்ச்சா சமாதி குலைச்சுட்டு பெருமாள் பேசுவரா, ஒருத்தர்கிட்டயும் பேச மாட்டார். விக்கிரகம் பேசாது, ஆனா இந்த திருக்கச்சி நம்பிகள் பண்ணியிருக்கிற பாக்கியம், அவரிடத்திலே தேவப் பெருமாள் நித்யம் பேசுவராம். அவர்தான் இப்ப மெதுவா ஆளவந்தாரைக் கூட்டிண்டு வந்துண்டிருக்கார். வந்தவர் அந்த தூரத்தில இருக்கற கோஷ்டியப் பார்த்தார். ‘திருக்கச்சி நம்பிகளே, அதற்குள் யார் இளையாழ்வார்?’ அப்படின்னு வயசுல முதிர்ந்த ஞான வ்ருத்தராய், வயோவ்ருத்தராய், சகலத்திலும் வ்ருத்தராய் இருந்த ஆளவந்தார், அருகிலே இருக்கிற திருக்கச்சி நம்பிகளைக் கேட்டார். திருக்கச்சி நம்பிகள் அடையாளம் காட்டறார், ‘அதோ, நெடுநெடுன்னு செகப்பான திருமேனியோடே, அகலமான திருமுதுகோடே, சிறுத்திருக்கிற இடையோடேகூட, நீண்டு இழுத்து முடிந்திருக்கிற திருக்குடுமியோடேகூட அந்த சிகாவானாக ஒருத்தர் இருக்கார் பாரும், அவர்தான் இளையாழ்வார்’ அப்படிங்கறதை இவர் காட்டிக் கொடுத்தார். தன் கண்களை இடுக்கிக் கொண்டு ஆளவந்தார் தள்ளிப் பார்க்கறார். பார்த்துக் கடாக்ஷிக்கிறார்.

    ஆமுதல்வன் இவனென்னு தத்தேத்தி
    என்நா முதல் வந்து புகுந்த நல் ஈங்கவி
    தூமுதல் பத்தர்க்கு தான் தன்னைச் சொன்ன
    என்வாய் முதல் அப்பனை என் சொல்லி மறப்பனோ


    என்னுடைய வாய் முதல் அப்பன் – நம்மாழ்வார் சொல்லிக்கிறார் இந்தப் பாசுரத்தை. இது ஒன்னுமில்லாத வாய், கண்டதைப் பேசிண்டிருந்த நாக்கு, இந்த நாக்குல பகவான் வந்து எழுந்தருளியிருந்து, ‘ஆழ்வீர், ஆயிரத்தி நூத்திரெண்டு பாடும்’ என்று சொன்னானல்லவா? அவனத்தவிர இந்த நாக்க நான் ஒருத்தருக்கும் கொடுக்கப் போறதில்லே, என்று நம்மாழ்வார் சொல்லிக்கறார். ‘என் வாய் முதல் வந்து புகுந்து என் நா முதல் அப்பன்’, என் நாக்குல உக்காந்துண்டு நம்மாழ்வார கடாக்ஷிக்கறானாம் பெருமாள். நா முதல்வன் – ’நீதான் இனிமே நம் ஆழ்வார்’, ஆழ்வார்களுக்குத் தலைவன் நீர், அப்படின்னு பெருமாள் கடாக்ஷித்தாரோ இல்லையோ, அதப்போல இப்ப ஆளவந்தார் கடாக்ஷிச்சுட்டார் இளையாழ்வாரை. ‘இனி நீரே சம்ப்ரதாயத்துக்காக இருப்பீர்’. கடாக்ஷித்தவர் ஒருமுறை தேவப் பெருமாளைச் சேவிக்கறதுக்கு உள்ள போனார், அவனோட திருவடியைப் பிடிச்சுண்டார், ‘அடியேன் தேவரீர்கிட்ட எதையுமே பிராத்திச்சது கிடையாது.’ ஏன்னா ஸ்ரீவைஷ்ணவர்கள் ப்ராத்திக்கிற வழக்கமும் இல்லை. ஆனா அப்போ பிராத்திக்காதவர் பிராத்திக்கிறார். ஆளவந்தார் தேவப் பெருமாளிடம் வந்து, ’உம்மிடத்தில் கேட்டுக் கொள்ளுகிறோம், இவரைத் தயாராக்கி சம்ப்ரதாயத்துக்குத் தலைவராக ஆக்க வேண்டியது உம் பொறுப்பு. இந்த பொறுப்பை தேவரீர் திருவடிகளிலே சமர்ப்பிக்கிறேன்’, அப்படின்னு சொல்லிட்டு திரும்பக் கிளம்பி காவேரிக்கரைக்கு போய்ட்டார். அவர் ஸ்ரீரங்கத்துக்கே போய் எழுந்தருளியிருந்துட்டார். இது ஒரு பக்கம் நடந்து போச்சு.

    கொஞ்ச நாள் கழிச்சு, மெதுவா திருமேனி தளர்ந்து போயிடுத்து ஆளவந்தாருக்கு. இன்னும் கொஞ்ச நாள்தான் ஜீவித்திருக்கப் போகிறார்ங்கறது தெரிஞ்சு போச்சு. அப்போது பெரிய நம்பிகளை அனுப்பி, ‘நீ நேர போம், யாதவப் பிரகாசரிடத்தில அவர் காலக்ஷேபம் பண்ணிண்டிருப்பர். சொல்லி அவர அங்கேயிருந்து இங்க கூட்டிண்டு வந்திரும். அடுத்து அவரிடத்திலதான் நான் ஒப்படைக்க வேண்டும்’. அஞ்சு பேர் சிஷ்யர்கள் யானை யானையா நிக்கிறா, ஆனா அதைத்தாண்டி எங்கேயோ இருக்கிற சின்னப்பிள்ளையைப் போய் கூட்டிண்டு வாங்கறார். நாமா இருந்திருந்தா என்ன நினைச்சுண்டிருப்போம்? நாங்க அஞ்சு பேர் இருக்கறச்சே, எங்கள விட்டுட்டு என்ன இங்கேர்ந்து அங்க போய் கூட்டிண்டு வரது? நாங்கள்ல்லாம் ஆளாத் தெரியலையா? அடுத்த கேள்வி கேட்போமோ இல்லையோ? அவா அதைப்பத்தி நினைக்கக்கூட இல்லை. சுவாமி யாரைக் கடாக்ஷிக்கிறாரோ, அவர்தான் அடுத்து வர வேண்டும் என்று உடனே ஏத்துனுட்டு, பெரிய நம்பிகள் அங்கேர்ந்து கிளம்பி இங்கே வந்தார். வந்து இராமானுசரையும் அழைச்சிண்டார். ஆளவந்தார் யாருன்னே இராமனுசருக்குத் தெரியாது. பெரிய நம்பிகள் வந்து இராமனுசர் போய்ட்டு வந்துண்டிருக்கற இடத்துலே, ஸ்தோத்திர ரத்தினத்தில இருந்து சில ஸ்லோகங்கள்ல்லாம் எடுத்துச் சொல்றார். எங்க பார்த்துச் சொல்லுவர்? ‘சாலைக் கிணறு’ன்னு காஞ்சீபுரத்துல ஒரு இடம் இருக்கு. அங்கேர்ந்து தீர்த்தம் எடுத்து, தேவப் பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் பண்ணிண்டுருந்தார் இராமானுசர். என்னிக்கும் மாமா பண்ணத்த மருமான் பண்ணுவான். எதுக்குச் சொன்னேன் கேட்கறேன், மாமா ஒரு கைங்கர்யம் பண்ணியிருந்தா அதை மருமான் பாக்கணுமாம். மாமா, பெரிய திருமலை நம்பிகள், இராமானுசருக்கு மாமா. ஏன்னா பெரிய திருமலை நம்பிகளுக்கு ஒரு மருமகன் இராமானுசர், மற்றொரு மருமகன்தான் எம்பார். பெரிய திருமலை நம்பிகள் ஆகாச கங்கைல போய் தீர்த்தம் கொண்டு வந்து திருவேங்கடமுடையானுக்கு கைங்கர்யம் பண்ணிண்டிருந்தார். மாமாவுக்கு ஏத்த மருமா. ஆனா இவர் சாலை கிணத்துல போய் தீர்த்தம் கொண்டு வந்து தேவப்பெருமாளுக்கு கைங்கர்யம் பண்ணிண்டிருந்தார். சுவாமி ஒண்ணே ஒண்ண வச்சுண்டு நீர் எப்பவும் சொல்லலாமான்னு கேட்கப்படாது, இன்னொன்னும் சொல்லிடுறேன். கம்சன் தேரோட்டினாரோ இல்லையோ, மருமான் கண்ணன் தேரோட்டிட்டாரோ இல்லையோ?

    அதனாலே, இராமானுசர் சாலை கிணத்துல இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கைங்கர்யம் பண்ணிண்டிருக்கார். அந்த இடத்துல பெரிய நம்பிகள் போய் ஸ்தோத்திர ரத்தினத்திலருந்து சில ஸ்லோகங்கள் சொல்லுகிறார்.

    கஸ்ஸ்ரீஸ்ரீயஹா பரமசத்த சாமாஸ்ரயஹ்கஹா
    கஹா புண்டரீக நயனஹா கஃப்புண்டரீக நயனஹா
    கஃப் புருஷோத்தமஹா


    யார் புருஷன், யார் புண்டரீக நயனன். யாராவது ஒருத்தன் வைதீகனாக இருந்தால் உன் பெருமையைப் பேசாது இருப்பனா? அனுகுலாசல யோகோகோ விசேசஹா. மலைக்கும் மடுவுக்கும் என்ன வித்தியாசம்? என்ன இருந்தாலும் நாராயணன் நாராயணனே, அப்படின்னு ஆளவந்தார் பல அர்த்தங்களைச் சொல்லியிருக்கார். இது இத்தனையும் எடுத்து எடுத்து இப்போ பெரிய நம்பிகள் இந்த ஸ்தோத்திர்ங்களைச் சொல்றார். இராமானுசர் இப்பத்தான் முதல்தரம் காதுலயே படறது. ஆளவந்தார் யாருன்னே தெரியாது, ஸ்தோத்திர ரத்தினம் என்னதுன்னே தெரியாது. இத்தனை நாளும் யாதவப் ப்ரகாசர்கிட்டதான் காலக்ஷேபம். அதுமாறி இப்போ குணானுபவத்தப்பத்தி, ஸ்தோத்திர ரத்தினத்துல காதுபடறதோல்லையோ, ஏன்னா யாதவப் ப்ரகாசர், அத்வைதிகள் எல்லாம் குணத்தப்பத்தி பேசவே மாட்டா. எல்லாம் நிர்க்குணம் ப்ரம்மம், அது சுத்த ப்ரம்மம், அதுனால அதுக்கு குணத்தப்பத்தி இவர் கேள்வியேபட்டதில்லை. இப்ப சட்டுன்னு குணங்களைப்பத்திப் பாடுகிற ஸ்தோத்திர ரத்தினம் காதுல பட்டவுடனே, இது ரொம்ப இனிமையா இருக்கே, நாம இதுவரைக்கும் கேட்டதவிட இது ரொம்ப ஆனந்தத்தைக் கொடுக்கறதுன்னு தோணி, பெரிய நம்பிகளிடம் வந்து, ‘ஸ்லோகங்கள் இனிமையாக உள்ளன. இதைச் சொன்னவர் ஆர்? இதாலே சொல்லப்பட்ட வஸ்து ஏது? காட்டுவீரா?’ என்று சுவாமி கேட்டார். காட்டிக் கூட்டிப் போகத்தான் அழைக்க வந்தோம், வாரும், என்று பெரிய நம்பிகள் கூட்டிண்டு, நேர ஸ்ரீரங்கத்தை நோக்கித் திரும்பப் போகிறார். ஆனா, அவா காவிரிக்கரையை அடையறச்சேவே ஆளவந்தார் பரமபதித்துவிட்டார். இவர் நேரப்பார்த்து அவரிடத்திலே தண்டம் சமர்ப்பிச்சு, அர்த்தங்களை கேட்டுக்கறதுக்கு பாக்கியம் இல்லாமப் போயிடுத்து. அப்போதே கரம்பனூர் துறையிலே, காவிரிக்கரையிலே திருப்பள்ளிபடுத்தறதுக்கு, கடைசிக் கடன்களை பண்றதுக்கே ஏளப்பண்ணிண்டு வந்துட்டா. சரம விமல திருமேனியைத்தான் அந்த இடத்துல கண்டார். அழுதார், புரண்டார், பாக்கியம் இழந்து போனோம் என்று மிகவும் வருத்தப்பட்டார். அப்போது கடைசி க்ருத்தயங்களைப் பண்றதுக்கு முன்னாடி, ஆளவந்தாருடைய மூன்று விரல்கள் மடங்கி இருந்தன. அதெப்படி, ஏன் விரல் மடங்கி இருக்குன்னு இராமானுசர் கேட்கிறார். பக்கத்துல இருக்கவா சொல்றா, அவருக்கு ஏதோ ஆசை, அதனாலதான் விரல் மடங்கி இருக்கு. என்ன ஆசைன்னு இவர் கேட்டார். ஒன்னு, பராசர மகரிஷி, சம்ப்ரதாயத்துக்காக எத்தனையோ கைங்கர்யம், விஷ்ணு புராணத்தைச் சாதித்துச் செய்தார், அவருடைய பெயரை நம் சம்ப்ரதாயத்தில் ஒரு முக்கிய வித்வானுக்கு வைக்க வேண்டும், குழந்தைக்கு வைக்க வேண்டும்ன்னார். சரி, ஏற்றுக் கொள்ளுகிறேன், இது நடக்கும் என்று இராமானுசர் ஒத்துண்டார். அடுத்தது, பராசரர் அன்று பண்ணியிருக்கலாம், ஆனால் பராங்குசர் நாமறியச் செய்தார். நம்மாழ்வாரோட பெயர் நம்முடைய வம்சத்திலே ஒருத்தருக்கு வைக்க வேண்டும். இரண்டாவது ஆசைன்னார். சரி, ஒத்துணுட்டார். மூணாவது ஆசை, ப்ரம்ம சூத்திரத்துக்கு பழுதில்லாத ஒரு வ்யாக்யான க்ரந்தம் சாதிக்க வேண்டும், இது நெடுநாள் ஆசை ஆளவந்தாருக்குன்னார். சரி, அத்தையும் செய்கிறோம், என்று இராமானுசர் ஏற்றுக்கொள்ள, மூன்று மடங்கிய விரல்களும் நிமிர்ந்தன. அதற்குப் பிற்பாடுதான், கடைசி க்ருத்ய காரியங்களெல்லாம் முடிஞ்சு போச்சு, உள்ளுக்குள்ள போய் ஸ்ரீரங்கப் பெருமாளை சேவிச்சுட்டு வந்திருக்கணுமோல்லையோ? இராமானுசருக்கு இருந்த வைராக்கியம் பார்க்கணும், எப்ப ஆசார்யனை சேவிக்கிற பாக்கியத்த இழந்தேனோ, இந்த பெருமாளை சேவிக்க வேண்டிய தேவையில்லை, என்று ஸ்ரீரங்கத்துல கோவிலுக்குள்ளேயே போகாமல் திரும்ப காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளிட்டார். அங்கேயேதான் இருந்துண்டிருக்கார். எதுக்காக இந்த கதையைச் சொன்னேன்னா இப்போ, கதாபாகம் சொல்றதுக்காக அல்ல. ஆளவந்தாருடைய ஆசைப்படிதான் ஸ்ரீபாஷ்யம் சாதித்தார்ங்கறதுக்காக. ஏன்னா அவரிடத்தில வாக்கு கொடுத்திட்டார், அதற்காகத்தான் ஸ்ரீபாஷ்யம் எழுதறார்.

    எழுதறார்ன்னா எழுதிற முடியுமா, நாம நினைச்சுண்டிருப்போம் உக்கார்ந்து எழுத வேண்டியதுதானே. நம்மல்லாம் ஏதாவொரு புஸ்தகத்தப் பார்ப்போம், பாத்துட்டு அதை ஆங்கிலத்துல மாத்தி எழுதிரு, ஹிந்தியில மாத்தி எழுதிரு, மாத்தி எழுதிருவோம். தெரியும் தெரியாது தப்பு தவறு ஏதோ. அந்த நாள்ல அப்படி எல்லாம் க்ரந்தம் எழுதிற முடியுமா? உண்மைக்குப் புறம்பாக ஓர் வார்த்தை எழுத முடியாது. எத்தனையோ வாதப்பிரதிவாதங்களெல்லாம் இருக்கும். அத்தனைக்கும் பதில் சொல்லியாக வேண்டும். இந்த க்ரந்தத்தைச் சரிவர நிர்மாணம் பண்ணனும்ன்னால் போதாயன வ்ருத்தி க்ரந்தம் வேணும். அது இருந்தாத்தான் இந்த புஸ்தகத்த எழுத முடியும். ஏன்னா வெறும் ப்ரம்ம சூத்திரம் போறாது, சூத்திர க்ரந்தத்துக்கு வ்ருத்தி க்ரந்தம்ன்னு சொன்னேனோல்லையோ? அதான் குறிப்பு. அந்த குறிப்ப வச்சுண்டுதான் பாஷ்யம். விரிவுரை. அப்போ சூத்திரம் ரொம்ப சுருக்கமா இருக்கும், குறிப்பு அதவிட விரிவா இருக்கும், உரை அதவிட விரிவா இருக்கும். இதுக்குத்தான் சூத்திரம்-வ்ருத்தி-பாஷ்யம்ன்னு மூணு சொல்லுவர்கள். இப்ப இந்த போதாயன வ்ருத்தி க்ரந்தம் வேணும்ன்னா எங்க போய் தேட?

    (தொடரும்)

    -- நன்றி ("இராமனுஜ வைபவம்” உபந்நியாசம்@SFO - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)

    ஸ்ரீஇராமானுஜ வைபவம் – பாகம் 2

     

    முந்தைய பாகம், பாகம் 1

    சூத்திர க்ரந்தமும் இருக்கு, வ்ருத்தி க்ரந்தமும் இருக்கு. இதை பெரியோர்கள் நன்னா இரட்சித்தார்கள். ஆனா என்னைக்குமே லோகத்துக்கு என்ன மரபுன்னா, காலம் போகப் போக எதுவும் தேயும்.  எந்த உயர்ந்த விசயமானாலும், அவனவன் தலையெடுத்து தான் சொன்னதே என்று பேச ஆரம்பிக்கிறான். மணவாளமாமுனிகள் ஒரு பாசுரத்தில தெரிவிக்கிறார்,

    முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
    பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே
    தன்னெஞ்சில் தோத்தினதே சொல்லி
    இது சுத்த உபதேசவர வார்த்த என்பவர் மூர்க்கராவார்.

     

    - முன்னாடி யார் என்ன சொல்லியிருக்கார்களோ அதை அப்படியே வரி மாறாமல் கேட்க வேண்டும்.  நம் சம்பிரதாயத்திலே, ‘என் புத்திக்கு இது தோணித்து, நான் சொல்றேன்’னு சொன்னால், அவன் வித்வானே இல்லே.  எந்த சதஸ்லேயும் உள்ளேயே சேர்க்க மாட்டா.  நாம ஏதாவது ஒரு சதஸ்ல வாயத் திறந்து பேசறோம்னா, இந்த புஸ்தகத்துல, இன்ன வரில இருக்கு, சொன்னாத்தான் இவனுக்கு எடமே இருக்குமே தவிர, இது எனக்கு தோணித்துன்னு சொன்னா, அது, பலபேர் அந்த மாதிரி ஆரம்பிச்சுட்டா இப்போ.  அந்த மாதிரி காலக்ஷேபத்துக்கு நாம போகாம இருக்கறதுதான் நலம்.  முன்னாடி என்ன சொல்லியிருக்கார்களோ அதைத்தான் கேட்கணும்.

    ஒரே ஒரு விசயம் ஆனந்தமா இருக்கும், அதுக்காக சொல்றேன்.  ஆழ்வார்கள் பாசுரங்களிலே ஏன் குயிலைப் பத்தி பாடாம, ஏன் கிளியையே பாடறா?  மடக்கிளியை கைகூப்பி வணங்கினாளே, திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்துல பாடினாரா?  அதேபோல, மென்கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே, அதே திருமங்கையாழ்வார் பாடினார்.  எல்லே, இளங்கிளியே இன்னம் உறங்குதியோ, பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில், ஒருத்தரானும் குயிலைப் பாட மாட்டேங்கறா.  ஆண்டாள் கைல வச்சுண்டிருக்கறது, குயிலை வச்சுக்க மாட்டேங்கறா, கிளியைத்தான் ஆண்டாள் வச்சுண்டிருக்கா.  என்ன ஸ்வாமி கிளிக்கு பாக்கியம்? குயிலுக்கு பாக்கியம் இல்லையா? பாட்டு கிளி நன்னா பாடுமா, குயில் நன்னா பாடுமா சொல்லுங்கோ?  கிளி கர கரன்னும், தொண்டை ஓஹோன்னு ஒண்ணும் ஒசத்தியால்லாம் இருக்காது. குயில்லனா, பாட்டுக்கு எடுத்தது குயில்தானே.  அப்ப ஆழ்வார்களெல்லாம் குயில் பாட்டுன்னு சொல்லாமல் ஏன் கிளிப்பேச்சுங்கறா? ஏன் அப்படி சொன்னேன்னா, கிளி பேச்சுதான், கிளி பாடாது.  அதுக்கு பேசறதுக்குதான் தெரியும்.  ஆனா கிளிக்கு ஒரு பெருமை, சொல்லிக் கொடுத்தததான் திருப்பிச் சொல்லும்.  தானாகச் சொல்லவே சொல்லாது. ஆனா குயில் எப்போதும் தானாகத்தான் பேசும். ஆச்சார்யகளுக்கு ஆசையே, சொன்னத்த திரும்பச் சொல்ல வேண்டும். அதனாலதான் இங்க உபதேச ரத்ன மாலையில், ‘முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு’ - முன்னோர் சொன்னத முறை தப்பாமல் கேட்கணும், பின்னோர்ந்து தாம் அதனை பேசணும். சொன்னத்த திருப்பி விளக்கமாச் சொல்லலாம். அவ்வளவுதான் நம்மால முடியுமே தவிர, மாற்றுவதற்கு நமக்கு யோக்கியதை கிடையாது. அப்படி இல்லே, ‘எனக்குத் தோணித்து, நான் சொன்னேன்’-னாவது சொல்லிட்டு போயிடணுமாம். மணவாள் மாமுனிகள் என்ன அங்க கோபம்ன்னா, இவன் நெஞ்சில தோணித சொல்லிப்பிட்டு, இதத்தான் பூர்வாச்சார்யார்கள் சொல்லியிருக்கான்னு வேற சொல்லிட்டானாம். அதத் திசை திருப்பாமல் இருந்திருக்கலாமோல்லையோ? உனக்குத் தோணித நீ சொன்னேன்னு வேணா சொல்லிட்டுப் போ, இது ராமானுஜர் சொல்லியிருக்கார், இது நாதமுனிகள் சொல்லியிருக்கான்னு சொல்லிட்டேன்னா, தெரியாத ஜனங்கள் திசை திருப்பப்படும். ஓ, இவர் ஏதோ பெரிய வித்வான் போலருக்குன்னு கேட்க வந்தவர்களுக்குப் போய், இதில்லே, அவரே இதத்தான் சொல்லியிருக்கார்ன்னு நான் தப்பாச் சொல்லிட்டேன்னா, அது கூடாது. அதைத்தான் முன்னோர்களுடைய வழியாகச் சொல்லுவர்கள்.

    அதனாலே, பூர்வாச்சார்யர்கள் நன்றா ரட்சித்து வச்சிருந்தா. அவனவன் தனக்கு தனக்கு தோணின அர்த்தங்களையெல்லாம் ப்ரம்ம சூத்திரத்துக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டான். உபநிஷத்துக்களுக்கும் தப்பான அர்த்தங்களைச் சொல்ல ஆரம்பிச்சு, ப்ரம்ம சூத்திரத்துக்கும் தப்பான அர்த்தத்தைச் சொல்ல ஆரம்பிச்சு, கடைசில இந்த ப்ரம்ம சூத்திரத்தினுடைய உண்மையான அர்த்தம் எங்க தெரியுமோ போச்சு? அந்த மூலைல கொண்டு போய் போட்டாச்சு. பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் - பூர்வாச்சார்யார்கள் நன்றாக ரட்சித்து வைத்திருந்தார்கள், ஆனால் அய்யகோ என்ன நடந்தது தெரியுமா? பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம் - அவனவனுக்கு மதி, ஒரு இடத்துல ஐம்பது பேர் இங்க உட்கார்ந்திருக்கிறீர்கள்னு வச்சுக்கங்கோ, எத்தனை கட்சி தெரியுமோ இருக்கும்? ஐம்பத்திரெண்டு இருக்கும். ஸ்வாமி, ஐம்பது பேர்தான இருக்கா, ஐம்பதுக்கு மேல இருக்குமான்னா, என்ன அப்படி சொல்லிட்டீள்? இந்த இரண்டு பேரும் சேரலாம் அந்த இரண்டு பேரும் சேரலாம், கொஞ்ச நேரம் கழிச்சு இதை வெட்டி விட்டுட்டு இன்னொன்னுல சேரலாம். இப்படித்தான் நம்ம கட்சி. ஒன்னொன்னுக்கு நாம எப்படி வச்சுண்டிருக்கோம்னா, அம்பது ஆளிருந்தோம்னா, நூறு கட்சி. அவனவன் தனக்குத் தோணித அத்தனையும் புதுசுன்னு சொல்லிண்டிருக்கான். அதனால, ’பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்’. கடைசிலே உண்மை எங்கேன்னு தேடப்போனால் ப்ரம்ம சூத்திரத்தக் காணோம். எங்கோ மூலையடியிலே கொண்டுபோய் போடப்பட்டது. அப்பதான் பகவத் இராமானுஜர் சூரியனைப் போலே இப்பூவுலகத்திலே உதித்தார். அவனவன் ஏதேதோ அர்த்தத்தைச் சொல்லிவிட்டுப் போயிடறான். அது கூடாது என்பதற்காக, ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம், ஆநீதாம் - மூலையிலே போடப்பட்ட ப்ரம்ம சூத்திரத்தின் உண்மையான அர்த்தங்கள் அத்தனையும், மறுபடியும் இராஜ தர்பாருக்கு கொண்டு வரப்பட்டன. சிம்மாசனத்திலே ஏற்றி அமர்த்தப்பட்டன. இதுதான் ப்ரம்ம சூத்திரத்துனுடைய உண்மையான பொருள் என்று உலகத்தார் அத்தனை பேரும் அறியும்படிக்கு, ஸ்ரீபாஷ்யம் என்கிற உயர்ந்த சாஸ்திரத்தை, வ்யாக்யான க்ரந்தத்தை பகவத் இராமனுஜர் அனுக்கிரகித்தார். அப்போ பகவத் இராமானுஜர் அவதரித்தாரே, எதுக்குன்னு கேட்டா, ஓர் காரணம், ப்ரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் பண்ணி, வேத வேதாந்தத்துக்கு அர்த்தம் இதத்தான் சொல்ல வந்தன என்பதை லோகத்திலே நாட்டுவதற்காக. இதைத் திருவரங்கத்தமுதனார் சாதிக்கிறார்,

    நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
    நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது
    தென்குறுகவள்ளல் வாட்டமில்லா வண்டமிழ் மறை வாழ்ந்தது
    மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமனுஜன் தோன்றினார்


    - ஈட்டிய சீலத்து இராமானுஜர் பூவுலகத்தில் தோன்றினார், என்னென்ன நடந்தது பாருங்கோ. நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, அவனவன் ஓரொரு சித்தாந்தத்தை ஏற்படுத்திண்டு இதுதான் என்னுது இதுதான் என்னுதுன்னானே, அத்தனையும் மாண்டன. நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது – நாரணனை இதோ என்று காட்டிக் கொடுத்த வேதாந்தத்துக்குப் பரம திருப்தி. ‘நல்லவேளை எனக்கு மறுபடியும் உயிர் ஊட்டினீர், நான் எங்கு கிடந்தேனோ தெரியாது.’ சமஸ்கிருத வேதத்துக்கு மட்டுமா ஆனந்தம் ஏற்பட்டது? தென்குறுக வள்ளல் வாட்டமில்லா வண்டமிழ் மறை வாழ்ந்தது – குறுகை வள்ளலான நம்மாழ்வார், அவருடைய வாட்டமே இல்லாத வண் தமிழ் மறை, ஆயிரத்து நூத்திரெண்டு பாசுரங்களான, திருவாய்மொழியும், நான்கு பிரபந்தங்களும், நாலாயிர திவ்யப் ப்ரபந்தங்களும், அத்தனையும் வீறு பெற்று விளங்கின. எல்லாம் இழந்த பொலிவை மறுபடியும் திரும்பப் பெற்றன.

    அப்போ, உபய வேதாந்த ப்ரவர்த்த ஆச்சார்யராய், தரிசன ஸ்தாபகராய், சாஸ்திர நிர்த்தாரகராய், ஸ்வசித்தாந்தத்தை ஸ்தாபிப்பவராய், பரமதங்களை நிரசனம் பண்ணினவராய், கைங்கர்ய சீலராய், எப்போதும் காரேகருணையே படைத்தவராய், தன் திருமேனி அழகாலும் கடாட்ச வைபவத்தாலும், லோகாத்தார் அடையத் திருத்தக்கூடியவராய், திவ்ய தேசங்களிலே ப்ராவண்யம் படைத்தவராய், அனைவரும் முக்தி அடைய வேண்டும்ங்கிற ஆசையே உருக்கொண்டவராக, பகவத் இராமானுஜர் இப்பூவுலகத்திலே திருவவதாரம் பண்ணினார். ஆக, இங்க பிறந்தார்னு சொன்னால், ”புண்யாம்போஜ விகாஸாய பாபத்தாம் தக்ஸயாயச ஸ்ரீமான் ஆவிர பூத்பூமவ் ராமானுஜ திவாகரஹ”, இராமானுஜர் என்னும் சூர்யன் இப்பூவுலகத்திலே உதித்தது. சூரியன் உதித்தால் வெளி இருட்டு ஓடும். ஆனால் ராமானுஜர் என்னும் சூரியன் உதித்தால் அக இருட்டாகிற, உள் இருட்டாகிற அஞ்ஞானம் விலகிப் போகிறது. அந்தந்தமஹா - இருட்டுங்கிறது ரொம்ப கஷ்டம். நாம காட்டுல போய் மாட்டினுட்டோம், ஒரே மழையா கொட்டுறதுன்னு வச்சுக்கங்கோ, எப்படி போறதுன்னே தெரியாதோல்லையோ?

    ஆளவந்தார் தெரிவித்தார், அவிவேக கணாந்த திண்முகே - நான் அவிவேகம், விவேக ஞானம்ங்கிறது பகுத்தறிவு. இன்னைக்கு பகுத்தறிவுங்கறதுக்கு எத்தையோ தப்பா அர்த்தம் சொல்லிட்டான். பகுத்தறிவுன்னா, கடவுளே இல்லைன்னா பகுத்தறிவு, இப்படின்னு வச்சுண்ட்டான். பகுத்தறிவுன்னா, இது சரி, இது தப்புன்னு பகுத்து அறிதல், அவ்வளவுதானே தவிர, நம்ம இஷ்டத்துக்கு தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் பண்ணிக்க ஆரம்பிச்சோம்னா. அதனால பகுத்தறிவத்தான் விவேக ஞானம்ன்னு சொல்லுவா. விவேகம்ங்கிறது இது நல்லது, இது தீயது என்று தெரிஞ்சுக்கறதுதான். அந்த விவேக ஞானம் இருக்க வேண்டும். அவிவேக கணாந்த திண்முகே – இருட்டான காட்டில் அகப்பட்டிருக்கறது, எது தெரியுமா? விவேக ஞானம் இல்லாது போயிடுத்துன்னா இருட்டுக் காடுன்னு அர்த்தம். சம்சாரம் பெரிய காடு, அதிலே வெளிச்சம் விவேக ஞானம். வெளிச்சம் போயிடுத்து, அப்போ அவிவேகம்ங்கிற இருட்டு இருக்குன்னு அர்த்தம். ஆளவந்தார் இன்னும் விளக்கறார், ‘பகுதாசந்தத துக்கவர்ஷினி’, அதுக்கு கூடவே, என்னைக்குமே நீங்க பார்த்தேள்னு வச்சுக்கங்கோ, இந்த நாடகமெல்லாம் பாத்தேள்னா, ஏதாவது ஒரு ராத்திரி வேளை, ஏதானும் கொஞ்சம் பயமா இருக்காப்ல இருந்தா, உடனே மின்னல் வெட்டி மழை பெய்ய ஆரம்பிச்சுரும். அது ஏன்னே தெரியாது. ஒருவேளை அது இருந்தாத்தான் பயம் நமக்கு நன்னா வருமோ என்னமோ? அதப்போலே இந்த சம்சாரத்திலே என்ன தெரியுமா இன்னும் பயம்? சுகம் துக்கம்னு மாறி மாறி வருதல்தான் மின்னல் வெட்டி மழை பொழிதல். நம்ம பாட்டுக்கு சம்சாரத்திலே இருந்துட்டாகூட தேவலை. ஒரு பக்கம் சுகம், ஒரு பக்கம் துக்கம், ‘அவிவேக கணாந்த திண்முகே பகுதாசந்தத துக்கவர்ஷினி’ – விடாமல் சந்தத துக்கம் வேற கொட்டிக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கறதுக்குள்ள நாம இருட்டுல தவிச்சுண்டு இருக்கோம். யாரேனும் ஒரு ஒளி கொடுப்பார்களான்னு தேடுகிறோம். அதற்குத்தான் சூரியனைப் போலே இராமானுசர் இப்பூவுலகத்திலே திருவவதாரம் பண்ணினார்.

    சித்திரை மாசத்திலே, திருவாதிரை நட்சத்திரத்திலே ஸ்ரீபெரும்புதூர் என்னும் திவ்ய தேசத்திலே ஆச்சர்யமாய் திருவவதாரம் பண்ணினார். அவர் அவதரித்து பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்தார். 120 சம்வத்ஸரங்கள் இப்பூவுலகத்திலே இருந்தார். அவர் என்ன செய்தார் என்று கேட்டால், என்ன செய்யவில்லை என்று கேட்பதுதான் சரியாக இருக்குமே தவிர, என்ன செய்தார் என்பதற்கு பதில் சொல்லுவதற்கு இயலாது, கண்டிப்பா ஒரு மணி நேரத்துல பதில் சொல்லுவதற்கு இயலாது. முக்கியாமகச் செய்தது கீழே சொன்னாப் போலே, பகவத் போதாயனர், அவர் எழுதிய வ்ருத்திக் க்ரந்தம், அதையும் எடுத்துக் கொண்டு, வேத வியாசருடைய சூத்திரங்களுக்கு பாஷ்யமிட்டருளினார். வேதத்தினுடைய அர்த்தம், வேதாந்தத்தினுடைய அர்த்தம் இதுதான், இதுவே சரியான பொருள் அப்படிங்கறதை உலகோருக்காக விளக்கினார். அதனாலதான் அவருக்கு ஒரு முக்கியப் பெயர், ’ஸ்ரீபாஷ்யக்காரர்’, அப்படின்னு திருநாமம் ஏற்பட்டது. ஸ்ரீபாஷ்ய க்ரந்தத்தைச் சாதித்தது. ஆனா அத்தோட நிறுத்திடலாமா? அதை எழுதினதே அவர் ஆசைப்பட்டு அல்ல, அவரோட ஆசார்யனுக்கு ஆசார்யனான ஸ்ரீஆளவந்தார் ஆசைப்பட்டார். இப்போ இராமானுசர்ன்னு அடியேன் சொல்றேன்னா, இவர் ஒரு குரு பரம்பரையிலே நடுநாயகமாக இருப்பவர். ஸ்ரீ வேதாந்த தேசிகன், ‘எதிராஜ சப்ததி’ன்னு ஒரு ஆச்சர்யமான க்ரந்தம் சாதிச்சிருக்கார், இராமனுசருடைய பெருமைகள், அருமைகள் ஆகியவற்றை விளக்குவதற்காக. அதிலே தெரிவிக்கிறார், இராமானுசர் ஆருன்னு பாருங்கோ.

    அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
    மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

    - இது ஒரு ஹாரம். நாம வந்து, அட்டியல்லாம் வாங்கிக்கறோம் பாருங்கோ. வைர அட்டியல், சிகப்பு அட்டியல், கெம்பு அட்டியல், பச்சை அட்டியல் எல்லாம். அதெல்லாம் போட்டோம்னா காசு செலவு. அதெல்லாம்விட காசு செலவில்லாதா ஒசத்தியான ஒரு அட்டியல் தேசிகன் சொல்றாரு இப்போ. இந்த அட்டியல போய் வாங்கிக்கோங்கோ. எந்தக் கடையிலன்னு கேட்டோம். இந்த அட்டியல் கடையிலலேல்லாம் கிடைக்காது, எங்க ஆச்சார்யரோட உபதேசத்துல கிடைக்கும். வேணும்ன்னா அங்க வந்து வாங்கிக்கோங்கோ. அட்டியல்ல வரிசையா மாணிக்கங்கள்லாம் இப்படி பதிச்சிருக்கும். மாணிக்கங்களுக்கு நடுவில் ஒரு பதக்கம் இருக்கும், நடுநாயகக் கல். முதல் மாணிக்கம்தான் ஸ்ரீமந் நாராயணன். அடுத்த மாணிக்கம்தான் லக்ஷ்மி. அடுத்த மாணிக்கம்தான் விஷ்வக்ஷேனர். அடுத்தவர்தான் நம்மாழ்வார். அடுத்தவர் நாதமுனிகள். அடுத்தவர், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள், இராமானுசர். நடுநாயகக் கல். நாயக இரத்தினமாக இராமானுசர் இருக்காராம். இதை காஞ்சி ஸ்வாமி எழுந்தருளியிருந்தாரோ இல்லையோ, மகா வித்வான் பிரதிவாதி பயங்கர ஸ்வாமி, அந்த ஸ்வாமி தெரிவிப்பர். ஆண்டாள் ‘நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே’ன்னு பாடினதே இராமானுசர தன் திருவுள்ளத்தில வச்சுண்டுதான். ஏன்னா, அவர்தான் நாயகன். இந்த நாயகன் நந்தகோபாலனுடைய கோயில்ல இருந்தானோ இல்லையோ, நான் பார்த்ததில்லை, ஆனா நாமறிந்த நாயகன் இராமனுசரோ இல்லையோ? அதைத்தான் தேசிகன் சொல்றார், அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி - எதிராஜரை நடுநாயகக் கல்லாக வைத்துத்தான் இந்த அட்டியல், இந்த ஹாரமே பின்னப்பட்டிருக்கிறது. நாயகக் கல்லுக்கு என்ன தெரியுமா பெருமை? ஹார மத்யமணி நியாயம்ன்னு ஒரு நியாயம். லோகத்துலே நியாயம், நியாய சாஸ்திரம் சொல்றால்லையோ? இந்த ஹார மத்யமணி நியாயம்ன்னா, நடுநாயகக் கல்லு இருந்தால், ஹாரத்தினுடைய இந்த பக்கத்துக்கும் அது ஒளி கொடுக்கும், பெருமை. ஹாரத்தினுடைய இந்தப் பக்கத்துக்கும் அது ஒளி கொடுக்கும், பெருமை. நடுவுல இருக்கறதுக்கு அதுதானே ஏற்றம். ஒன்னும் இல்லே, விளக்கேத்தறோம். ரேழில வச்சாத்தான நல்லா வெளிச்சம் கிடைக்கும்னுவா. நடுவுல வச்சாத்தான் அந்த பக்கமும் வெளிச்சம் போகும், இந்த பக்கமும் வெளிச்சம் போகும். இதுக்கு ‘தேகழி தீபந் நியாயம்’னு பேரு. தேகழி – இடைகழி, தேகழி தீபம்-னா, இடைகழியிலே வைக்கப்பட்ட தீபம். அப்படின்னா என்னன்னா, இராமானுஜரோடே சம்பந்தத்தினாலேதான் அவருக்கு முற்பட்ட மாணிக்கங்களுக்கும் ஏற்றம். அவரோட சம்பந்தத்தினாலேதான் அவருக்கு பிற்பட்ட மாணிக்கங்களுக்கும் ஏற்றம். தேசிகன் என்ன தெரிவிக்கிறார்ன்னா, அவருக்கு பிற்பட்ட எங்களுக்கு மட்டும்தான் அவரால பிரபாவம்ன்னு நினைச்சுக்க வேண்டாம், அவரோட ஆச்சார்யர்களுக்கும் இவராலதான் பிரபாவன்னுட்டார். அதென்னமா சுவாமி, திருவடி சம்பந்த்தினாலதான் எங்களுக்கெல்லாம், அதெப்படி ஆளவந்தாருக்குப் போய் இராமானுசர்னாலேன்னா, ஒன்னும் குழம்பிப் போய்டாதேங்கோ, இராமானுசரோடே திருவடி சம்பந்தத்தினாலே பிற்பட்டோருக்கு ஏற்றம். இராமானுசரோடே திருமுடி சம்பந்தத்தினாலே முற்பட்டோருக்கு ஏற்றம். இப்ப குழப்பமேயில்லையே? பெருமான் என்ன கேட்பாராம், இராமானுசரோட சம்பந்தப்பட்டானா, இதைத்தான் கேட்பராம். திருவடில சம்பந்தப்பட்டானா, திருமுடில சம்பந்தப்பட்டானான்னு கேட்க மாட்டாராம். ’தத்பாதகோடிரயோஹோ சம்பந்தேன’னு ஸ்லோகம் வைத்தார் அவர். பாதத்தாலேயோ, அல்லது பெருமானுடைய திருமுடி சம்பந்தமாகவோ வாழ்ச்சி பெருகிறார்கள். ஆக, பிற்பட்டாரும் வாழ, முற்பட்டாரும் வாழ்ச்சி பெற நடு நாயகமாக இராமானுசர் அவதரித்தார்.

    (தொடரும்)

    -- நன்றி ("இராமனுஜ வைபவம்” உபந்நியாசம்@SFO - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)

    February 03

    ஸ்ரீஇராமனுஜ வைபவம் – பாகம் 1

    யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
    வ்யாமோஹதஸ் ததித்ராணி த்ருணாய மேநே.
    அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
    ராமாநுஜஸ்ய சரணம் சரணெள ப்ரபத்யே.

                                                        - (பொது தனியன்)

    தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
    யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

    பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
    பா மன்னு மாறன் அடிபணிந்துய்ந்தவன் பல்கலையோர்
    தாம் மன்ன வந்த இராமனுசன் சரணாரவிந்தம்
    நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
                           - (இராமனுச நூற்றந்தாதி – திருவரங்கத்தமுதனார்)

    ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
    ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
    காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
    ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா.

              - (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)


    வேதங்கள் பாரத தேசத்தினுடைய உயிர் நாடியாக விளங்குபவை.  வேதங்களையும், அவற்றின் உத்தர பாகமான, வேதாந்தமான உபநிஷத்துக்களையும், ரிஷிகள் பேணிப் பாதுகாத்தார்கள்.  நம் வாழ்க்கை முறை, நாம் யார், எதற்காக பிறவி எடுத்தோம், இதைப் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உபநிஷத்துக்களிலே உண்டு.  அவற்றைப் பிரித்துப் பார்த்தோமென்றால், வேதம் என்றும், வேதாந்தம் என்றும் இரண்டு பகுதிகளாக உள்ளன.  வேதம்ங்கிறது ‘பூர்வ’ பாகம்.  வேதாந்தம்ங்கிறது ‘உத்தர’ பாகம்.  பூர்வ பாகம்ங்கிறது நாம் செய்ய வேண்டிய கர்மங்களை விசாரிக்கும்.  எப்படி ஒவ்வொரு கர்மத்தையும் செய்ய வேண்டும் என்று விளக்கும்.  உத்தர பாகம்ங்கிற வேதாந்தம், கர்மங்களால் ஆராதிக்கப்படுகின்ற ப்ரம்மத்தைப் பற்றி விளக்கும்.  அதனாலதான் இது ரெண்டுதுக்கும் ‘கர்ம காண்டம்’னுட்டும், ‘ப்ரம்ம காண்டம்’னுட்டும் பேர்.  கர்மத்த விசாரிக்கிறது, பூர்வ பாகம், கர்ம காண்டம்.  ப்ரம்மத்தை விளக்குவது, ப்ரம்ம காண்டம், உத்தர பாகம்.  இது வேதங்கள், வேதாந்தங்கள்.

    இதிலெ ரிக், யஜுர், சாம, அதர்வன என்பன நான்கு வேதங்கள்.  இந்த ஓரொரு வேதத்துக்கும் பல உபநிஷத்துக்கள் உண்டு.  அதிலே பிரதானமாக பத்து உபநிஷத்துக்களை எடுக்கிறார்கள்.  ஈஷா, கேன, கட, ப்ரஸ்ன, முண்ட, மாண்டூக்ய, தித்திரிகி, ஐத்ரேயெ, சாந்தோக்ய, ப்ரகதாரண்யக, என்று 10 உபநிஷத்துக்கள்.  வேதங்களையும், வேதாந்தத்தையும் தெரிந்து கொண்டால்தான் ப்ரம்மத்தை நாம் அறிந்து கொள்ள இயலும்.  ப்ரம்மத்தை ப்ரத்யக்ஷ்யமாக பார்த்தோ, கேட்டோ, தொட்டோ, சுவைத்தோ, முகர்ந்தோ அறிந்து கொள்ள முடியாது.  ப்ரம்மத்தை அநுமானம் பண்ணித் தெரிஞ்சுக்கவும் முடியாது.  அப்ப ப்ரம்மத்தை எது கொண்டுதான் தெரிந்து கொள்ள?  ஒரே புகல், வேதங்கள், வேதாந்தங்கள்தான்.  இதை கண்ணன் கீதையிலே சொல்லும் போது, ’வேதைச்ய சர்வைகி அஹமேவ வேத்யஹா.  வேதாந்தகிருது வேத விதேவ சாகம்’; ‘எல்லா வேத வேதாந்தங்களாலும் நானே சொல்லப்படுகிறேன்’, என்று சொல்கிறார்.  வேதாந்தம் பகவானைச் சொல்லாமலிராது; பகவானைச் சொல்லியே தீரும்.  அவனை அடைவதற்கு ஒரே வழி வேதாந்தம்தான் என்று கண்ணனே கீதையிலே சொல்றார்.  அதனால்தான் வேதத்துக்கும், வேதாந்தத்துக்கும் இத்தனை முக்கியத்துவம் ஏற்படுகிறது.  ப்ரம்மத்தைச் சொல்றதுன்னுட்டு வேதாந்தத்துக்கு வைபவம்.  வேதாந்தத்தினாலே சொல்லப்படுகிறான்னுட்டு ப்ரம்மத்துக்கு ஏற்றம்.  ஒருத்தர்க்கு ஒருத்தர்.  ஸ்ரீரங்கத்துல இருக்கிறார்னுட்டு ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்றம்; திருவரங்கநாதனை தன்னிடத்தே கொண்டிருக்குனுட்டுதான் திருவரங்கத்துக்கே ஏற்றம்.  அதப்போலே பகவானை விளக்கறதுன்னுட்டுதான் வேதாந்தத்துக்கு வைபவம்.  வேதாந்தத்தினாலேயே கொண்டாடப்படுகிறானுட்டுதான் பகவானுக்கே ஏற்றம்.

    இந்த வேதத்துக்கும் வேதாந்தத்துக்கும் மேலே ‘உப ப்ரம்மனங்கள்’ அப்படினுட்டு பல தோன்றின.  உபப்ரம்மனம்னால், ப்ரம்மத்தப் பத்திதானே வேதாந்தம் சொல்ல வந்தது? அதனுடைய அர்த்தத்தை இன்னும் விளக்குவதற்காகவும், நடைமுறைப் படுத்தி காட்டுவதற்காகவும், யாரும் அறிந்து கொள்ளும் வண்ணம் செய்வதற்காகவும் இந்த உபப்ரம்மனங்கள் ஏற்பட்டன.   அவை யாவையெனில், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள்.  இவற்றுக்குத்தான் உபப்ரம்மனங்கள்னு பேரு.  ஸ்மிருதி இதிகாச புராணம்,னு சொல்லுவர்கள். 

    இதிலே ஸ்மிருதிங்கறது,

    சாஸ்திரம்ங்கிறதுக்கு ஸ்ருதின்னு பேர்.  ஏன்னா அது காதால கேட்டுப்பட்டு, கேட்டுப்பட்டே வந்தது.  ஆசார்யன் ஒருத்தர் சொல்லிக் கொடுப்பர், சிஷ்யன் காதால கேட்டு திரும்பச் சொல்லுகிறான்.  இப்படியேதான் வேதங்களும், உபநிஷத்துக்களும் வளர்ந்துள்ளன.  ஆகையாலே அதற்கு ‘ஸ்ருதி’ அப்படிங்கிற பேர் வந்தது.  ஷ்ரவணத்தின் மூலமே வளர்ந்திருக்கோல்லையோ, அதனாலே ’ஸ்ருதி’ன்னு பேர்.  அந்த ஸ்ருதியை ஞாபகத்திலே கொண்டு, நாம் எப்படி வாழ வேண்டும் அப்படின்னுட்டு எழுதப்பட்டவைகளுக்கு ‘ஸ்மிருதி’னு பேர்.  ’ஸ்மரணம்’ என்பது ஞாபகத்திலே கொள்ளுதல் அல்லவா?  நினைவுதானே ஸ்மரணம்.  ஸ்ருதியை நினைச்சு நினைச்சு எழுதியிருக்கறதுனாலே ‘ஸ்மிருதி’ன்னு சொல்றார்கள்.   உதாரணத்துக்கு, ‘மனு ஸ்மிருதி’, ‘யாக்ஞவல்க்ய ஸ்மிருதி’, இது முதலான ஸ்மிருதிகள்.  அதுல இருக்கறத வச்சுத்தான் நாம நித்யப்படி கர்மங்களையே செய்ய முடியும்.  மனு பகவான் எப்படி சொல்லியிருக்கிறாரோ அப்படித்தான் வர்ணாஸ்ரமத்தினுடைய தர்மங்கள் இருக்கும்.  யாக்ஞவல்க்யர் எப்படி சொல்றாரோ, அப்படித்தான் இருக்கும்.  இப்ப ஒரு கல்யாணம் பண்றோம்னு வச்சுக்கோங்கோ, ஸ்மிருதிகளிலுள்ள சூத்திரங்களைச் சேர்த்துதான் இப்படி கல்யாணம் பண்றது என்பதையே வைத்துள்ளார்கள்.  அதனாலே ஸ்மிருதிகள் அத்தனையும் பூர்வ பாகமான வேதத்துக்கு உப ப்ரம்மனங்கள்.  அப்ப பூர்வ பாகம் எதப்பத்தி சொல்லும்? கர்மத்தை.  அப்ப ஸ்மிருதிகள் எதைப் பற்றி விளக்கும்? கர்மத்தைப் பற்றியேதான் இன்னும் நன்றாக விளக்கும். 

    வேதங்கள், அதனுடைய உபப்ரம்மனங்களான ஸ்மிருதிகள், இது ஒரு பகுதி.  அடுத்த பகுதி வேதாந்தம், உபநிஷத்து.  அது ப்ரம்மத்தைப்பத்தி விசாரித்ததோல்லையோ?  அப்போ அந்த வேதாந்தத்துக்கு உபப்ரம்மனங்கள் உண்டா என்றால், அவைதான் இதிகாசங்களும், புராணங்களும்.

    இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
    விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி

    - இது ஒரு புராண ஸ்லோகம்.  வேதம் பயப்படுமாம்.  இதிகாச புராணங்களைத் தெரிஞ்சுக்காமல் என்னோட அர்த்தத்த ஒருத்தன் புரிஞ்ச்சுக்கப் பார்த்தான்னால் தப்புதப்பா தெரிஞ்சுனுடுவானே, என்னாயிருமோ, என்னப்பத்தி தப்பா பேசிருவனோ, அப்படின்னு வேதமே பயப்படுமாம்.  அதனால இதிகாச புராணங்களைத் தெரிஞ்சுண்டால்தான் வேதாந்தத்தின் அர்த்தம் நன்றாகப் புரியும்.  அப்ப வேதாந்தத்துக்கு உபப்ரம்மனம், இதிகாச புராணங்கள்.  ஏன் அப்படி சொல்றான்னா, ப்ரம்மத்தப் பத்திதானே வேதாந்தம் விளக்க வந்தது?  அந்த ப்ரம்மமே அவதரித்து என்னன்ன பண்ணிக் காட்டியிருக்காரோ, அந்த சரித்திரங்களைக் கொண்டதுதான் இதிகாசங்களும், புராணங்களும்.  அதனாலே உபநிஷத்துக்களுக்கு இதிகாச புராணங்கள், உபப்ரம்மனங்கள்.  வேதங்களுக்கு ஸ்மிருதி உபப்ரம்மனம்.  அப்போ மொத்தமா சேர்த்து எது நமக்கு இப்போ ஆதாரமா கிடைச்சது?  எது நம்முடைய ஞானத்தை வளர்க்கப் போகிறது?  வேதங்களும், ஸ்மிருதிகளும்; உபநிஷத்துக்களும், இதிகாச புராணங்களும்.  இவைகள் சேர்ந்துதான் ஞானத்துக்கு ஊற்றுவாய். 

    ரொம்ப நன்னாத்தான் இருந்தது.  எத்தனையோ வருஷங்களாய், எப்படியெல்லாம் ரிஷிகள் வளர்க்கணுமோ, அப்படித்தான் வளர்த்துக்கொண்டு வந்தார்கள்.  ஆனால் அவ்வப்போது பகவானுக்கு சில லீலைகள் புரியவேணும் என்கிற ஆசை ஏற்படுகிறது.  அதனாலே இந்த வேத வேதாந்தங்களுக்கு சில ஆபத்துக்களெல்லாம் நேரும்.  அந்த ஆபத்துக்களை அவ்வப்போது யுக புருஷர்களைப் பிறப்பித்து, பெரிய மகாத்மாக்களைப் பிறப்பித்து, அவர்களைக் கொண்டு மறுபடியும், இதுதான் வேதாந்தத்தின் அர்த்தம், என்று பகவான் உலகத்துக்கு எடுத்துரைக்கிறார்.

    பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
    சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
    பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
    ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்


    - இது ரொம்ப முக்கியமான ஸ்லோகம்.  இந்த வேத வேதாந்தங்கள் அத்தனையும் நன்றாகத்தானே இருந்தன?  மேற்கொண்டு பல ரிஷிகளைப் பகவான் பிறப்பித்து, ’இதனுடைய அர்த்தங்களை இன்னும் விளக்குவதற்கு, இன்னும் க்ரந்தங்களையெல்லாம் நீங்கள் எழுத வேணும்’, அப்படின்னு பெருமாள் சொல்றார்.  அதிலே ரொம்ப முக்கியமானவர், பகவத் அவதாரமாகவே கொண்டாடப்படுகிற வேத வ்யாசர்.  அவருக்கு ’பகவத் பாதராயணர்’னு பேர்.  அவருக்கு மற்றொரு பேர், ‘க்ருஷ்ணத் த்வைபாயணர்’னு பேர்.  உலகமறிந்த பேர், ‘வேத வியாசர்’.

    வியாசம் வஷிஷ்ட நப்தாரம்  சக்தே பெளத்ரம கல்மஸம்
    பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

    - அப்படின்னு சொல்றோமோல்லையோ? அவர்தான் வியாச பகவான்.  வியாசம் பண்ணுவதுன்னால், இந்த சப்தத்துக்கு அர்த்தம் பார்த்தோம்னா, பகுத்தல், பிரித்தல் அப்படின்னு அர்த்தம்.  வியாசர் பண்ணியிருக்கற வேலை அதுதான்.  முதல் மூன்று யுகங்களிலேயும் ரிக் வேதமும், யஜூர் வேதமும், சாம வேதமும், அதர்வண வேதமும் ஒன்றாகக் கிடக்கும்.  இது ரிக், யஜுஸு, சாம, அதர்வம், பிரிவினை இருக்காது.  இது பஞ்சாதி, இது ப்ரஸ்ணம், இது காண்டம், இது ஆரண்யம், இது சாகை, பிரிவு இருக்காது.  அத்தனையும் ஒன்றாகக் கிடக்கும்.  அப்பதான் வேத வியாசர் அவதரிக்கிறார்.  முதல் மூன்று யுகங்களிலே மக்களுக்கு இருந்த சிரத்தை, அவர்களுக்கு இருந்த ஞானம், சக்தி, இதை வச்சுண்டு ஒன்னா இருந்தாக்கூட அவளாலே படிச்சு தெரிஞ்சுக்க முடிஞ்சது.  ஆனா இப்ப கலியுகம் வந்துடுச்சுன்னு வச்சுக்கங்கோ, அதப்போல இருந்தா படிச்சு நம்மால புரிஞ்சுக்க முடியாது.  முன்னாடில்லாம் நம்ம பெரியோர்கள் எழுதின புஸ்தகமே எப்படி இருக்கும்? இப்ப எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ.  முன்னாடி ஒரு பக்கத்துல ஒரு வரி எழுத ஆரம்பிச்சா மூணு பக்கத்துக்கு அதே வரி போகும்.  அரைப்புள்ளி, காப்புள்ளி ஒண்ணும் குத்தவே வேண்டாம்.  அது நேரா படிச்சுண்டு போறாப்பல இருக்கும்.  பத்தி பிரிச்சுருக்க மாட்டா, ஒண்ணும் உப தலைப்புக்களெல்லாம் இருக்காது.  கொட்டை எழுத்துல ஒண்ணு, மத்த எழுத்துல ஒண்ணு, அப்படியெல்லாம் இருக்காது.  ஒரேமாதிரிதான் ஓடும்.  அதக் கண்ண கவிச்சு வச்சுண்டு படிச்சுண்டு இருந்துதான் நாம புரிஞ்சுண்டு இருந்தோம்.  நாம இல்லே, நம்ம முன்னோர்கள்.  ஏன்னா நாம புரிஞ்சுக்க மாட்டோம்ன்னு வச்சுக்கோங்கோ.  ஆனா அவர்கள் அப்படி புரிஞ்சுண்டிருந்தா. இப்போ அதப்போல ஒரு புஸ்தகத்த குடுத்தேள்னா, வாசிக்க மாட்டோம்.  ஏன்னா, இது மூணு பக்கத்துக்கு ஒரே வரி ஓடிண்டிருந்தா, படிக்கறதுக்கு நமக்கு ஸிரத்தை இல்லேன்றது ஒரு பக்கம்.   புத்தி அவர்களுக்கு இருந்ததுன்னா, புத்தின்னுகூட சொல்ல முடியாது.  கத்துண்டுதான் தீரணும்ங்கிற ஸிரத்தை இருக்கவே புத்தி வந்தது. அததான் நாம சொல்லனுமே தவிர, அதனாலே, இன்னிக்கு எப்படி புஸ்தகம் அச்சுப் போடறா?  பக்கமா பிரிக்கணும், சின்னச் சின்ன தலைப்பா பிரிக்கணும்,  பத்து வரிக்கு ஒரு தரம் பத்திய மாத்திடனும், அதுக்கு ஏதானும் தலைப்பு எல்லாருக்கும் ஆசையை தூண்டுறாப்பல குடுக்கணும், ஒரு நாளைக்குப் படிக்கறதுக்கு நாலு பக்கம் போறும், அப்புறம் தொடரும் போட்டு அடுத்த பக்கம் தொடரணும், இது இத்தனையும் பண்ணாத்தான் இவன் இன்னைக்கு படிக்க வரப்போறான்.  இது இவா மட்டும் இன்னைக்கு பண்ணலே, வியாசரே இதத்தான் பண்ணினார்.

    மொத்தமும் வேதங்கள் ஒண்ணா இருக்கா.  இத இனிமேல் இவன் படிச்சுக்க முடியாதுங்கறதுனாலதான், வேதங்கள் அத்தனையையும் பிரித்தார்.  பிரித்ததோடே இல்லாமல் ரொம்ப முக்கியமான ஒரு கைங்கர்யத்தை வியாசர் நமக்கு செய்தார்.

    சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
    உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

    - விஷ்ணுவின் அவதாரமான வியாசரை வணங்குகிறேன்.  இவர் நமக்குச் செய்த உபகாரம், சம்யங் ஞாய கலாபேந, மகதா பாரதேநச, பாரதம்ங்கிற பெரிய சாஸ்திரத்தக் கொடுத்தார்.   பாரதப் பஞ்சமோ வேதஹா, னு சொல்லுவர்கள்.  நான்கு வேதங்களுக்கு மேலே ஐந்தாவது வேதமாகவே மகாபாரதம் கொண்டாடப்படுகிறது.  அதில் இல்லாதது எதிலும் கிடைக்காது.  அதில் இருந்தால் எதிலும் தேட வேண்டிய தேவையில்லை.  எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப, எதுவும் இதற்குள் உண்டு என்பதைத்தான் வைசம்பாயனர், ஜனமேஜயன் என்னும் ராஜாவுக்குச் சொல்லுகிறார்.  அப்படி ஒரு மகாபாரதத்த குடுத்தார்.  ஆனா அதற்கு முன்னாடி ஆச்சர்யமான ஒரு க்ரந்த நிர்மாணம் பண்ணார் அவர்.  பாரதம் குடுத்ததுங்கிறது ஒண்ணு.  ஆனா அது ஏன் குடுத்தார்ன்னு சொல்றேன்.  அதுக்கு முன்னாடி மத்தொரு க்ரந்தம் எழுதினார்.  அதற்கு ’ப்ரம்ம சூத்திரம்’னு பேர்.  அதாவது, பாராசர்ய வசஸ்ஸுதாம், இப்ப இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்றேன்.  இந்த ஸ்லோகம் எழுதியிருக்கறது இராமானுசர்.  அத மட்டும் ஞாபகம் வச்சுக்கங்கோ.  இன்னும் இராமானுசர் என்னங்கிற விசயத்தப்பத்தி அடியேன் இன்னும் சொல்லலை. அவர் எழுதின ஸ்லோகத்துக்கு மட்டும் அர்த்தம் சொல்றேன்.  பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம், பராசரர், பராசரருடைய திருக்குமாரருக்கு பாராசர்யர், அவர்தான் வியாசர்.  வியாசர் வந்திருக்கிற வழிமுறை எது என்று பார்த்தோம்னால், ப்ரம்மா, ப்ரம்மாவினுடைய பிள்ளை வசிஷ்டர், வசிஷ்டரோட பிள்ளை ஷக்தி, ஷக்தியினோட பிள்ளை பராசரர், பராசரரோட பிள்ளை வியாசர், வியாசருடைய திருக்குமாரர் சுகர்.  இது ஒண்ணும் சாதாரணப்பட்ட குரு பரம்பரை இல்லே.  ஒத்தொருத்தரும் நமக்கு கொடுத்திருக்கிற அர்த்தங்களைப் பார்த்தோம்னா, வாழ்நாள் இல்லே, எத்தனை ஜென்மம் எடுத்து கைங்கர்யம் பண்ணினாலும் போதவே போதாது.  அப்பேர்ப்பட்ட சாஸ்திரத்த நமக்கு குடுத்திருக்கா.  தன்னலம் கருதாத கைங்கர்யம்.  அவர்களுக்கு எந்த தேவையுமே கிடையாது. ஆனா மக்கள் நலம் பெற வேணுங்கிற ஒரே காரணத்துக்காக, பகவத் விசயத்தை நமக்குன்னு குடுத்தார்கள்.

    அவர்தான் ப்ரம்ம சூத்திரம் எழுதுகிறார். பாராசர்யர் - வியாசர்; வசஸுதா - அவருடைய திருவாக்காகிற அமுதம். அந்த அமுதம் எங்கேர்ந்து எடுக்கப்பட்டது தெரியுமா? உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம் - உபநிஷது என்கிற பாற்கடல். பாற்கடலை கண்ணன் கடைந்தார். ஆனா இப்ப நாம பார்க்கறது அந்த பாற்கடலை இல்லே. உபநிஷத்துகளாகிற கடல், உபநிஷத் துக்தாத்பி மத்ய உத்ருதாம் - துக்தாத்பியான பாற்கடலில் நடுவிலிருந்து எடுத்தார். கண்ணன் கடைந்தது பாற்கடலை. ஆனால் க்ருஷ்ணத் துவைபாயனராண வியாசர் கடைந்தது மறைப் பாற்கடலை. மறைன்னா தமிழ்லே வேதம்னு அர்த்தமோல்லையோ? அதனாலே வியாசர் கடைந்தது வேதம் என்னும் கடலை. கடையணும்னா மத்து வேணுமோல்லையோ? பெருமாள் மந்தர பர்வதத்த நட்டுட்டார். இங்க எத நடறதுன்னா, மதி மந்தானம் ஆவித்ய, ஏனாசெள ஸ்ருதி சாகராது ஜகத்ஹிதாய ஜனிதஹா மகாபாரத சந்த்ரமாஹா - வியாசர் எப்ப உபநிஷத் கடலை கடைவதற்காக பார்த்தாலும், தன்னுடைய மதி, ஞானத்தையே மத்தாக நாட்டிடுவர். தன்னுடைய ஞானத்தை மத்தாக நாட்டி, உபநிஷத்துக்களாகிய கடலைக் கடைந்து, ‘பாராசார்ய வசஸ்ஸுதாம் உபநிஷது துக்தாத்பி மத்யோத்க்ருதாம், சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி’, இப்பேர்ப்பட்ட அமிர்தத்த கடைஞ்சு குடுத்துட்டார். அப்ப உபநிஷத்துக்களாகிற கடலைக் கடைந்து அமிர்தம் கிளர்ந்தது. அந்த அமுதம்தான் ப்ரம்ம சூத்திரம்ங்கிற க்ரந்தம். அத நமக்கு குடுத்தாரே, இதனால என்ன லாபம்ன்னா, சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனிம் - சம்சாரமென்னும் அக்னியாலே தவித்துப் போய் கிடக்கிற நம் அனைவருக்கும், தாபத்ரேயத்தாலே தத்தர்களாய், ஆத்யாத்மிக, ஆதி தெய்விக, ஆதி பெளதிகங்களாகிற மூன்று சூடு; சம்சாரம்கிற பெரும் வெப்பம், அந்த வெப்பத்திலே தவிச்சுட்டு இருக்கிற நமக்கு அமிர்தமாக, அருமருந்தாக ப்ரம்ம சூத்திரத்த குடுத்தார். இந்த ஆத்மாவிற்கு சஞ்சீவனி மருந்தாட்டம் நமக்கு அதைக் குடுத்தார். அதை நெறய ஆச்சார்யர்களெல்லாம் போற்றிப் பாதுகாத்தார்கள். பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் - இந்த பூர்வாச்சார்யகளெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாத்தினார்கள் தெரியுமா? இவருடைய சிஷ்யப் பரம்பரை இருக்கு, தங்க்கர், த்ரமிடர், போதாயனர், இவாள்லாம் வியாசருடைய பரம்பரையில வர்றவா. இவர்களெல்லாம் பரம வைதிகர்கள். சாஸ்திரம் கற்றவர்கள்.

    போதாயனர் வேதவியாசருடைய ப்ரம்ம சூத்திரத்துக்கு நல்ல டிப்பனி எழுதினார். டிப்பனின்னா, உரைன்னு சொல்றோமோல்லையோ, அதப்போல ஒரு உரை எழுதினார். அதுக்கு ’போதாயன வ்ருத்திக் கிரந்தம்’னு பேரு. வ்ருத்தின்றது எதுன்னா, ஒரு சூத்திரம், மூணு வச்சுக்கங்கோ. சூத்திர க்ரந்தம், வ்ருத்திக் க்ரந்தம், பாஷ்யக் க்ரந்தம், அப்படின்னு எப்பவுமே மூணு இருக்கும். முதல்ல சூத்திர க்ரந்தம். சூத்திரம்ங்கிறது, சொற்கள் குறைவாகவும், பொருள் நிறைவாகவும் இருக்கும். இப்ப ப்ரம்ம சூத்திரம்ங்கிறது அப்படித்தான். ரொம்ப குறைச்சலா இருக்கும். குறைச்சல்னா என்ன, பக்கம் குறைச்சல்லாம் இல்லே. ஒரு எழுத்து இருக்கும், ஒரு சொல் இருக்கும், ரெண்டே ரெண்டு சொல் மட்டும் இருக்கும். அதாதோ ப்ரம்மதிக்யாஸா, ஜென்மாத்யஸ்ய யதஹா, சாஸ்திரயோநித்வாத், தத்துசமந்வயாத், ஈக்ஸதே நாசத்தம், இதெல்லாம் ஒன்னொன்னும் ஒவ்வொரு சூத்திரம். ப்ரம்ம சூத்திரத்திலுள்ள ஆரம்பத்திலுள்ள சில சூத்திரங்கள் இவை. அவ்வளவுதான் ஒரு சூத்திரம், அதாதோ ப்ரம்மதிக்யாஸா, இதுக்கு வ்யாக்யானம் நூறு பக்கம் இருக்கும். ஜென்மாத்யஸ்ய யதஹா, இதுக்கு வ்யாக்யானம் நூறு பக்கம் இருக்கும். முதல் முதல்ல சூத்திரமா இந்த மாதிரி வேத வியாசர் எழுதிட்டார். அது ரொம்ப குறைவா இருக்கறதுனாலே, ஓ! இது புரியாம போயிடுமோ, அது பயம். அதனால அப்புறம் போதாயனர் என்ன பண்ணார், அதற்கு வ்ருத்திக்ரந்தம் சாதித்தார். இதை கொஞ்சம் விளக்குவோம் அப்படிங்கறதுக்காக ‘போதாயன வ்ருத்திக்ரந்தம்’ பிறந்தது.

    (தொடரும்)

    -- நன்றி ("இராமனுஜ வைபவம்” உபந்நியாசம்@SFO - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்)