| sarvanan's profileKaatru (the wind)PhotosBlogLists | Help |
|
January 15 பிரளயம் & சிருஷ்டிஒரு பொருள் தன்னுடைய மூல (இயற்கை) நிலையை அடைவது ‘ளயம்’ எனப்படும். ஒரு குடம் உடைவது போலே இது ஏற்படுகிறது. மண்ணால் செய்யப்பட்ட ஒரு குடமானது உடைந்தால் அந்த குடத்தில் அடைபட்டுக் கிடந்த காற்று வெளியோடு கலக்கிறது. அதே சமயம் அந்த குடம் தன்னுடைய மூல நிலையை (மண்) அடைகிறது. பிரளயம் நான்கு வகைப்படும். நித்யப் பிரளயம்:
நைமித்திகப் பிரளயம்:
ப்ராகிருதப் பிரளயம்:
ஆத்யந்திகப் பிரளயம்:
சிருஷ்டி: ப்ராகிருதப் பிரளயம் ஏற்பட்டு, ஆத்மாக்களெல்லாம் ஞானமில்லாமல் அசித்தைப்போலே நாராயணனின் திருமேனியோடு ஒட்டிக் கிடக்கும். இதனால் நாராயணன் கவலை கொள்கிறார். இந்த ஆத்மாக்களெல்லாம் அவரோடு சேர்ந்து ஆனந்தத்தை அனுபவிக்க யோக்கியதை உள்ளவர்கள். ஆனால் இப்படி இருந்தால் ஆத்மாக்களுக்கு அந்த ஆனந்தத்தை அடைய எந்த வழியும் இல்லை. பெருமான் இதனாலேயே சிருஷ்டிக்கிறார். இவ்வுலகங்களையும் படைத்து, சரீரம் கொடுத்து, வேதங்கள் கொடுத்து, அவதாரமெடுத்து, கீதை அருளி, பாசுரங்கள் கொடுத்து, ஆச்சார்யார் கொடுத்து, இவ்வளவும் கொடுத்து இந்த ஆத்மாக்கள் இவற்றை உபயோகித்து பகவானை அடைந்து ஆனந்தத்தை அனுபவிக்க வாய்ப்புக் கொடுக்கிறார். இந்த சிருஷ்டிக்கு எல்லையில்லா கருணை தேவை. ஏனென்றால் இதை முழுக்க ஆத்மாக்களின் நன்மைக்காகவே செய்கிறார். அதோடு இதை திரும்பத் திரும்ப, ஆத்மாக்கள் என்னதான் வழி தவறிப் போனாலும், அலுப்பேயில்லாமல் செய்கிறார். சிருஷ்டி நடக்கும் போது பின்வருமாறு ஒவ்வொன்றும் தோன்றுகின்றன.
-- நன்றி ("புள்ளின் வாய்” பாசுரம் - திருப்பாவை - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள்) |
|
|